பக்கங்கள்

திங்கள், 20 ஜூலை, 2015

தொல்காப்பியர் காலத்தில் சமஸ்கிருதம் இருந்ததா?


-பொறியாளர்
ப. கோவிந்தராசன்
BE,MBA,MA (H),MA (Ling)
தொல்காப்பியம் மற்றும் அய்ம்பெரும் காப்பியங்கள் போன்ற  சங்ககாலத்தைச் சேர்ந்த நூல்களின் பொழிப் புரையாளர் பலரால் வடமொழி என்று சொல் லப்படுகின்ற சமஸ்கிருதம் பற்றியும் புராணம் இதிகாசம் பற்றியும் சொல்கின்ற பாடல்கள் இடம் பெற்றிருப்பதாக பலரால் கூறப்படுகின்றது.
இத்தகைய நிலைப்பாட்டைக் குறித்து வரலாற்றிலும் மற்றும் தமிழ் இலக்கியங்களில் காணப் படும் செய்திகளை கீழ்க்கண்டவாறு தொகுத்து அளிக்கப்படுகின்றது.
வேதங்கள்:- சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் வேதங்கள் கடலில் ஏற் பட்ட ஆழிப் பெருவெள்ளத்தால் அழி வுற்ற தமிழ் வேதங்களைக் (நான் மறைகளை) குறிப்பதாகும்.
நான் மறை என்றால் கடலில் மறைந்த நான்கு நூல்கள் என்பதாகவும் பொருள் கொள் ளலாம். ஆனால்,  மறைநூல் என்றால் மறைவான கருத்துக்களைக் கொண்டதும் மற்றும் ஒருசில மனிதர்கள் மட்டும் படிக்கும் புனித நூல் என்றும்  பொருள் கொள்வது ஏற்புடையதல்ல. ஏனென் றால் மறைநூல் என்பது எல்லா மனி தர்களும்  எந்தவித பாகுபாடும் இல் லாமல் எளிதில் படித்துப் பயன் அடைவதற்காகத்தான் செய்யப்பட்டது.
2. மேலும், நச்சினார்க்கினியரால் எழுதப்பட்ட தொல்காப்பிய உரை நூலின் பாயிரத்தில் வேதவியாசர் ஒன் றாக இருந்த ஆரியர் வேதத்தை நான்கு வேதங்களாகப் பிரிப்பதற்கு முன்பேயே தொல்காப்பியம் செய்யப்பட்டது எனக் கூறியுள்ளார். இதைச் சொல்லுபவர் தமிழ் தாத்தா உவேசா. (நூல்-: சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்). எனவே தொல்காப்பி-யம் என்ற நூல் ஆரியர் வருகைக்கு முன்னர் எழுதப்பட்டது ஆகும்.
3. ஆரியர் வேதங்களில் பல தமிழ் சொற்கள் காணப்படுவதாக பல சமஸ் கிருத அறிஞர்களே ஏற்றுக் கொண்டுள் ளனர். (மாதவ தேஷ்பாண்டே மாலதி செண்டகே). வேதங்களில் உள்ள தமிழ் சொற்கள்---  அச்சு, ஆணி, உலக்கை ஊசி, கச்சை, ஓடம், கணக்கன் காலம், குடி, தட்டான் ஆகும்.
4. ஆரிய வேதங்கள் சமஸ்கிருத மொழியில் செய்யப்படவில்லை. சந்தஸி என்ற மொழியில் ஆரிய வேதங்கள் எழுதப்பட்டன.(ஆதாரம்: -1. யக்ஞ வல்கியர் பிரியா எழுதிய இந்துமத வேதத்தின் மகிமை என்ற நூல் பக்கம்-13-லும் மற்றும்  2. பாணினி செய்த அஷ்டதாயி என்ற இலக்கண நூல் (கிமு 300) இந்த நூலின் தமிழாக்கம் முனைவர் கு. மீனாட்சி என்பவரால் எழுதப்பட்டது.
வெளியீடு -உலகத் தமிழ் ஆராய்ச்சி நிலையம் சென்னை. இந்த நூலில் சுமார் 300 (மொத்தம் 3995) சூத்திரங்களில் சந்தஸி என்ற சொல்லுக்கு வேதமொழி என்று பொருள் என சொல்லி யிருக்கிறார்). மேலும், வேத பாஷைக்கு சமஸ்கிருதம் என்ற பெயர் இல்லை. அதற்கு பெயர் சந்தஸ் என்பது தான். சந்தஸ் என்றால் சந்தம் மட்டுமில்லை சந்தங்களில் அமைந்த வேதங்களுக்கும் வேதபாஷைக்கும் கூட சந்தஸ் என்றே பெயர்.
வேதம் தவிர மற்ற எல்லா விஷயங் களிலும் -லௌகிகமான பேச்சு எழுத்து காவியங்களில் மட்டுமன்றி தர்ம சாஸ் திரம் புராணம் இதிகாசம் உள்பட எல்லா விஷயங்களிலும் பிரயோகித்த பாஷைக்குத்தான் சமஸ்கிருதம் என்று பெயர். இவை இந்துமத வேதத்தின் மகிமை என்ற நூலில் பக்கம் 14ல் கூறப் பட்டவை. மேலே உள்ளபடி வேத காலத்தில் சமஸ்கிருத மொழி தோன் றவே இல்லை. மேலும் கடவுளால் தோற் றுவிக்கப்படவில்லை எனத் தெளிவாக உணரலாம்.
புராணங்களும் இதிகாசங்களும்:
புத்த சமண மதங்கள் உருவானதால் வீழ்ச்சிஅடைந்த ஆரியர்களின் வேத மதம் கி.பி.250-ல் இருந்து எழுதப்பட்ட பல புராணங்களாலும் இதிகாசங்களா லும் மீண்டும் மறுமலரச்சி அடைந்தது. இந்த நூல்கள் எல்லாம் சமஸ்கிருத்தில் எழுதப்பட்டவை.
ஆனால், ஆரியரின் வேதங்கள் சந்தஸி மொழி (வேதமொழி) இல் எழுதப்பட்டவையானதால் ஆரி யரின்  வேதமதம் பெரும்பாலான மக் களைச் சென்று அடையவில்லை. எனவே ஆரியரகள் வேத மொழியைக் (சந்தஸி) கை விட்டார்கள். பெரும் பாலான மக்களைக் கவர்வதற்காக பலமொழிகளைக் கலந்து ஒரு புதிய மொழியை உருவாக்கினார்கள்.
அந்த மொழிதான் சமஸ்கிருதம். இது நடந்த காலம் ஏறக்குறைய கிபி 150-ல் ஆண்ட ருத்ரவர்மன் காலம் ஆகும். இந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட கல்வெட் டில் தான் ஜூனாகட் அருகே (திராவி டஸ்தானில் இருந்த குஜராத்) முதன் முதலாக சமஸ்கிருதம் பயன்பட்டதை வரலாற்று அறிஞரகள் கண்டறிந்தார்கள்
புராணங்கள் மற்றும் இதிகா சங்கள்:-
ஆங்கிலம் மற்றும் தத்துவத் திலும்  பேராசியராக பல கல்லூரி களில் பணியாற்றிய எம்.எஸ். பூரண லிங்கம் பிள்ளை பிராமணரல்லாதார் நடத்திய (ஜஸ்டிஸ் கட்சியின்) ஜஸ்டிஸ் என்ற பத்திரிக்கையில் துணையாசிரி யராகப் பணிபுரிந்தவர். இவர் எழுதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட தமிழ் இந்தியா என்ற நூலில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.
காலமுறை வரிசைப்படி திராவிட மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் அந்த மொழிகள் எல்லாம் இந்துஸ்தான் முழுவதும் பரவி இருந்தன. (ஆதாரம் மேனுவல் ஆப் அட்மினிஸ்டிரேசன் ஆப் மெட்ராஸ் பிரெஸிடென்சி பாகம் 1 பக்கம்43)
மேலும் சமஸ்கிருத அறிஞர் மேக்ஸ் முல்லர் ரிக் வேத காலத்தை 4 பகுதி களாகப் பிரித்தார். அவை 1. சந்தஸ்காலம் 2. மந்த்ர காலம் 3. பிராமணகாலம்  4. சூத்ர காலம். ஆகும். இந்த  நான்கு பகுதிகளையும் உருவாக்க  சுமார் 200 ஆண்டுகள் ஆனது. இதில் சூத்ர காலம் கி.மு.600 ஆகும். ஆக ரிக் வேதகாலத்தை கிமு 1200 (சுமார் 3200 ஆண்டுகள் முன்பு) என கூறியிருக்கிறார்.
(ஆதாரம் பக்கம்74 நூல்-இந்து மதவேதத்தின் மகிமை). ரிக் வேதம் இயற்றிய பின் பல நூறு ஆண்டுகள் சென்ற பின்னர் தான் மற்ற வேதங்கள் இயற்றப்பட்டன. எனவே, சமஸ்கிருதம் புத்தர் காலத்திலும் இல்லை மற்றும் பாணினி காலத்திலும் (கிமு300) இல்லை என உறுதிபடக் கூறலாம்.
மேலே கூறியவாறு சமஸ்கிருதம் கி.பி.150-ல் கல்வெட்டில் தோன்றியது. பின்னர் புராண காலத்திலும் இதிகாச காலத்திலும் அதிகப் பயன்பாட்டிற்கு வந்தது. சமஸ்கிருதம் வளர்வதற்கு கிபி 350-ல் ஆண்ட குப்தவம்ச மன்னர்கள் பெரிதும் உதவினார்கள். இந்த புராண காலம் கி.பி.250_-400-ல் துவங்கியதாக வரலாற்று அறிஞர்கள் (வென்டி ட்ரோனிகர்) கூறுகிறார்கள்.
ஏனென் றால் முதன் முதலாக தோன்றிய மார் கண்டேய புராணம் இயற்றியகாலம் கிபி.250_-400 ஆகும். ஆனால் சங்க காலத்தை கிமு400 முதல் கிபி400 வரை என வரலாற்று ஆய்வாளரகள் கூறுகிறார்கள். தொல்காப்பியர் காலத் தில் சமஸ்கிருதம் உருவாகாத காரணத் தால் வட மொழி அல்லது வடசொல் என்று பொதுவாக அழைக்கப்பட்டது. இதை வலியுறுத்த சில சான்றுகள் கிடைத்துள்ளன அவைகளில் சிலவற்றை தமிழ் அகராதிகள் தருகின்ற அர்த்தம் அல்லது பொருள் மூலம் கண்டறியலாம்.
1.வடமொழி என்பதற்கு பொருள் 1.ஆரியம் 2.பிராகிருதம் 3.தற்சமம் அல்லது வடமொழிக்கும் பிறபாடைக் கும் பொதுச் சொல் 4. தற்பவம் அல்லது வடமொழியிலிருந்து திரிந்த மொழி-. (பக்கம் 299 வீரமாமுனிவரின் சதுரகராதி)
2.வடமொழி என்பதற்குப் பொருள் ----கிரந்த மொழி, வடசொல், சமஸ்கிருதம் (பக். 516 மதுரைத்தமிழ் பேரகராதி முன்னுரை தமிழ் தாத்தா உவேசா)
3. பிராகிருதம்------ இயற்கையானது அழி யக் கூடியது வடமொழி திரிபாயுள்ளது (பக்கம் 839 மெய்யப்பன் தமிழ் அகராதி)
மேலே கூறியுள்ளபடி வட மொழி என்றால் 1.பிராகிருத மொழி, 2. சமஸ் கிருத மொழி, 3. தமிழகத்திற்கு வெளியே பேசப்படும் மொழி,
4.வடமொழி யிலிருந்து பிரிந்த மொழிகள், 5.வட மொழியின் திரிபு மொழி என்று பல வகையான பொருள்களை தமிழ் அகராதிகள் தருகின்றன.
பிராகிருதம் (இயற்கை மொழி) என்றால் செம்மை செய்யப்படாத மொழி அல்லது முதல் மொழி என்று பொருள். சமஸ்கிருதம் (செயற்கை மொழி) என்றால் செம்மை செய்யப்பட்ட மொழி என்று பொருள்.
மேலே விவரித்தபடி பிராகிருத மொழி  என்றால் முதலில் தோன்றிய மொழி என்று பொருள். எனவே  பிரா கிருத மொழியிலிருந்து சமஸ்கிருதமொழி உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனவே வடமொழி என்றால் ஆதி மொழியான பிராகிருதத்தைக் குறிப்ப தாகக் கூறலாம்.
4. மேலும், மதுரை பேரகராதியில் வடதமிழ் என்ற சொல்லுக்கு சமஸ் கிருதம் வடமொழி கிரந்த மொழி என்று பொருள் கூறப்பட்டுள்ளது. எனவே, வட இந்தியாவில் தமிழ் வழக்கில், இருந்தது எனவும் பின்னர் அந்த வடதமிழ் மொழியே சமஸ்கிருதமாக மாறியது என கூற வாய்ப்புள்ளது.
தொல்காப்பியர்:-தொல்காப்பியர் காலத்தை தொல்லியல் வல்லுநர்கள் அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்த நாணயங்கள் மற்றும் நீத்தார் நினைவுச் சின்னங்களான முதுமக்கள் தாழி, கற்படுக்கை நெடுங்கல், நடுகல், வீரக்கல் ஆகியவற்றின் அடிப்படையில் -பெருங் கற்படைகாலம் -என்று -கூறுகிறாரகள். இந்தப் பெருங்கற்படைகாலம் -கிமு.
1000-ல் தொடங்கி சங்க காலம் வரை நீடித்தது. இந்த பெருங்கற்படை பண்பாட்டின் சிறப்பினை தொல்லியல் நோக்கில் சங்ககாலம் என்ற நூல் விளக்குகின்றது
1. -------சமண, புத்த, வைதீக சமயங்களின்  தாக்குதலுக்கு உட்பட்டபோதிலும் தமிழ்ச் சமூகம் தனது சமூகக் கட்ட மைப்பை தொடர்ந்து கட்டிக் காக்கவும் தமிழகம் முழுவதும் எழுத்து வரிவடிவம் பெறுவதற்கும் இப்பெருங்கற்படைப் பண்பாடு அடித்தளமாக விளங்கியது-.---
2.--- தமிழகத்தின் வரலாற்றை எழுத முனைபவர்கள்  யாராக இருந்தாலும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நின்று நிலவிய திராவிடப் பண்பாட்டின் முக்கிய கூறான நீத்தார் நினைவுச் சின்னங்களை ஒதுக்கிட முடியாது.----
3.---பெருங்கற்படை பண்பாட்டின் இறுதிக் காலத்தில் தமிழகத்தில் எழுத் தறிவு பரவி விட்டது என்று கொடு மணல் (இன்றைய திருப்பூர் அருகே) பெருங்கற்படையில் இருந்து கிடைத்த தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற பானை ஓடுகளும் வாழ்விடத்தில்  கிடைத்த எழுத்துப் பொறிப்புப் பெற்ற பானை ஓடுகளும் காட்டுகின்றன.
இம்மக்கள் சங்க காலத்திற்குள் நுழைந்து விட்டார்கள் என்பதையும் இவை பறை சாற்றுகின்றன.--- ----(கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் காணப்பட்ட)
இவ்வாழ்விடம் கிமு 3-ஆம் நூற்றாண்டின் அரிய கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமாகவும் இரும்பு தாதுவிலிருந்து இரும்பை உருக்கி எஃகு உருவாக்கும் உலைக்கலன்களைக் கொண்ட தொழிற்கூகூடமாகவும் ரோமநாட்டுடனும் இலங்கையுடனும் இந்தியாவின் பிறபகுதிகளுடனும் வாணிபத் தொடர்பு கொண்ட ஊராகவும் கல்வியறிவுப் பெற்ற ஊராகவும் விளங்கியது
(ஆதாரம்: நூல்-தொல்லியல் நோக்கில் சங்ககாலம் ஆசிரியர் -முனைவர் கா.ராஜன் வெளியீடு-உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பக்கம் 34,35,48,49)
5. மேற்கண்ட நூலில் நீத்தோர் நினைவுச் சின்னங்களான பதுக்கை நெடுங்கல் நடுகல் வீரக்கல் போன்ற வற்றைப் பற்றிய செய்திகள் மணிமேகலை நற்றிணை அகநானூறு புறநானூறு தக்கயாகப் பரணி குலோத்துங்க சோழன் உலா முதலான நூல்களில் காணலாம். இதற்கு எடுத்துக்காட்டாக தொல் காப்பியத்தில் உள்ள ஒரு பாடலைக் (பொருளதிகாரம் பாடல் -63) கூறலாம்.
அந்த பாடல் கீழ்வருமாறு- காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்
முடிவுரை:- இந்தக் கட்டுரையின் மூலம் கீழ்க்கண்டவற்றை அறியலாம்.
1. தொல்காப்பியர் காலத்தில் சமஸ்கிருதம் தோன்றவில்லை.
2. திராவிடர்களின் வரலாற்றினை அறிய நீத்தார் சின்னங்கள் உதவுகின்றன.
3. வடமொழி என்றால் சமஸ்கிருதம் தோன்றுவதற்கு முன்பு தமிழகத்திற்கு வெளியே பேசப்பட்ட மொழி ஆகும்.
4 வடதமிழ் என்ற சொல் சமஸ் கிருதம் என்ற பொருளைக் கொண்டது.
5. திருப்பூர் அருகே கொடுமணல் என்ற இடத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட அகழாய்வுகளில் காணப்பட்ட நீத்தார் நினைவு சின்னங்கள் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தது. அதாவது சங்ககாலத்தைச் சார்ந்தது. அங்கு கிடைத்த முதுமக்கள்தாழியில் பொறிக்கப் பட்ட தமிழ்பிராமி  எழுத்துக்கள் மூலம் மக்கள் கல்வியறிவு பெற்றிருந்தார்கள் என அறியலாம்.
மேலும் வாணிபத்திலும் இரும்பு தாதுவிலிருது எஃகு தயாரிக்கும் தொழிலிலும் சிறந்து விளங்கினார்கள் என அறியலாம்.
6. அய்ம்பெரும் காவியங்கள் அனைத் தும் புத்த, சமண மதங்களை சாரந்தவை. எனவே, ஆரிய மதப் புராணங்களைப் பற்றிய செய்திகள் பிற்காலத்தில் சேர்க் கப்பட்டவை என கருத வாய்ப்பு உள்ளது
-விடுதலை ஞாயிறுமலர் 11.4.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக