பக்கங்கள்

செவ்வாய், 21 ஜூலை, 2015

தர்மபுரி அருகே பெருங்கற்கால புதிர்நிலை கண்டுபிடிப்பு

தர்மபுரி அருகே பெருங்கற்கால புதிர்நிலை கண்டுபிடிப்பு



தர்மபுரி மாவட்டம் கம்பை நல்லூரில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருங்கற்கால புதிர்நிலையை கிருஷ்ணகிரி மாவட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள் ளார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மய்யம் மற்றும் பெண்ணையாறு தொல்லியல் சங்கம் சார்பில் கிருஷ்ண கிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தொல்லியல் குறித்து அகழாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
தொல்லியல் ஆய்வாளர்களான கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மய்யத்தை சேர்ந்த சுகவன முருகன் மற்றும் பெண்ணையாறு தொல்லியல் சங்கத்தை சேர்ந்த சதானந்தம் கிருஷ்ணகுமார் ஆகியோர் தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருங்கற்கால புதிர்நிலையை கண்டுபிடித்துள்ளார்கள்.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வா ளர் சுகவன முருகன் கூறியதாவது:-
புதிர்நிலைகள் என்பது மய்யத்தில் விடையை கொண்டு உள் மற்றும் வெளிச்செல்ல இயலாத பல்வேறு சூழ்நிலைப் பாதைகளுடன் விளங்கு பவையாகும். இத்தகைய புதிர்நிலைகள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக் கின்றன என்பது புதிய கற்காலத்தில் இருந்தே தொல்லியல் ஆய்வாளர்கள் பதிவு செய்து வருகிறார்கள். இதில் வட்டப்புதிர் வழிகள் ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும்.  தென்னிந்தியாவில் முதன் முதலில் கிருஷ்ணகிரி பகுதியில் வட்டப்புதிர் நிலை கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 30 ஆண்டுகள் கழித்து தற்போது தர்மபுரி மாவட்டம் கம்பை நல்லூரில் சதுர புதிர்நிலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது உலகில் கண்டுபிடிக்கப்பட்ட புதிர்நிலைகளிலேயே பெரியதாகும். ஏறத்தாழ 80-க்கு 80 அடி பரப்பில் உள்ளது. இன்றும் மக்கள் வழிபாட்டில் உள்ளது. இது பழமையான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இருக்கக்கூடும்.
இந்த புதிர்நிலை குறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது, அரசனால் சிறைபடுத்தப்பட்ட கணவனை உயி ருடன் மீட்ட மனைவியின் கதை என் கிறார்கள்.
இந்த புதிர்நிலையில் உள்ள ஏழு பட்டை தளப்பாதையில் நடைபயின்று வெற்றி அடைபவர் மனதில் நினைத் ததைப் பெறுவர் என்பதும், கற்களைத் தாண்டிச் செல்பவர்கள் நற்பலன்களை இழப்பர் என்பதும் இப்பகுதி மக்களின் மூடநம்பிக்கை.
-விடுதலை,11.10.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக