பக்கங்கள்

திங்கள், 20 பிப்ரவரி, 2017

பெரும்புலவர் கா.நமச்சிவாயர்




பொங்கல் புத்தாண்டு விழா

சாதி, மதம், நிறம், கடவுள், கட்சி, அரசி யல், நாடு ஆகியன கடந்து மொழி, பண் பாட்டு அடிப்படையில் உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் கொண்டாடுகின்ற ஒரே விழா, ஒப்பற்ற விழா, ஒப்புரவு விழா பொங்கல் புத்தாண்டு விழா!

மார்கழி இறுதிநாள் தொடங்கி தை 6ஆம் நாள் வரை ஒரு கிழமை (வாரம்) விழாவாகக் கொண்டாடப்படுகிறது. போகி, பொங்கல் புத்தாண்டு இரண்டும் வீட்டு விழா; திருவள்ளுவர் திருநாள், உழவர் திருநாள் இரண்டும் சமுதாய, நாட்டு விழா; இயல் தமிழ் விழா, இசைத் தமிழ் விழா, நாடகத்தமிழ் விழா மூன்றும் முத்தமிழ் விழா.     
Christmas and New Year என்பது போல் பொங்கல் புத்தாண்டு Merry Christmas and Happy New Year  பொங்கல் இனிய தமிழ்ப் புத்தாண்டு; Christmas week என்பது போல் பொங்கல் கிழமை (வாரம்) விழா என்று அழைத்து நாட்டில் நடை முறைப்படுத்த வேண்டுகின்றோம்.

இந்தப் பொங்கல் பெருவிழாவில் பெரும்புலவர் கா.நமச்சிவாயர் அவர்களின் வாழ்வும் தொண்டும் பற்றி எண்ணிப் பார்ப்போம்; ஏற்றம் பெறுவோம்.

முன்னுரை:

"தமிழ்ப் புலவர்க்கும் மற்றவர்க்கும் உதவி வந்த சான்றோரில் வள்ளல் கா. நமச்சிவாயரும் ஒருவர்; அவர் சிறந்த பேராசிரியராய் விளங்கியவர்; பிறர் நலம் பேணி வாழ்ந்தவர்; இனிய நடையில் நூல்கள் எழுதும் ஆற்றல் உடையவர்; அன்பு நிறைந்த பேருள்ளம் கொண்ட கா. நமச்சிவாயரின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழர்கள் அறிந்திருத்தல் இன்றியமையாத ஒன்றாகும்." என்கிறார் முனைவர் புலவர் சோ. கருப்பசாமி.

பிறப்பு

வட ஆற்காடு மாவட்டம் காவேரிப் பாக்கம் என்னும் ஊரில் 1876 பிப்ரவரி 20ஆம் நாள் பிறந்தார். பெற்றோர் திரு. இராமசாமி - அகிலாண்டவல்லி.

படிப்பு

தம் தந்தையார் நடத்திவந்த தொடக்கப் பள்ளியில் இளமையில் கல்வி கற்றார். 1891ஆம் ஆண்டு சென்னை தண்டையார் பேட்டையில் ஓர் ஆரம்பப்பள்ளியில் ஆசிரியராகப் பணியேற்றார். தமிழில் பெரும்புலமை பெறவிரும்பினார். அந் நாளில் பெரும்புலவராக விளங்கிய திருமயிலை சண்முகம் பிள்ளையிடம் 1892 முதல் 1905 வரை 13 ஆண்டுகள் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்றார்.

பணி

1895-96 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓர் ஆண்டு காலம் எழுத்தராகப் பணியாற்றினார். 1896ஆம் ஆண்டு, பிராட்வே செயிண்ட் சேவியர் பள்ளியில் தமிழாசிரியராக நான்கு ஆண்டு கள் பணியாற்றினார். அந்நாளில் அவர் எழுதிய முதல் நூல் ‘வாக்கிய இலக்கணம்’ என்னும் சிறுவர் இலக்கண நூலாகும்.

பின்னர், நார்த்விக் மகளிர் மேல் நிலைப்பள்ளி என வழங்கப்படும் யுனை டெட் பிரீசர்ச்சு மிசன் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் பணியாற்றி னார். சிங்களர் கல்லூரியில் ஆறு மாதங்கள் பேராசிரியராகப் பணியாற்றினார்.

1902 முதல் 1914 வரை சென்னை வேப்பேரி புனித பவுல் மேல்நிலைப் பள்ளி யில் பணியாற்றினார். 1914ஆம் ஆண்டு முதல் அரசி மேரி ராணி மகளிர் கல்லூரி யில் பணியாற்றினார். இறுதியில், சென்னை மாநிலக் கல்லூரியில் சில ஆண்டுகள் பணி யாற்றினார். கல்வியறிஞர் நெ.து. சுந்தர வடிவேலுவின் ஆசிரியர் நமச்சிவாயர்.

குடும்பம்

1906ஆம் ஆண்டு செல்வி சுந்தரம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண் டார். இந்த இணையருக்கு தணிகைவேல், தணிகைமணி, பட்டம்மாள், மங்கையர்க் கரசி என்னும் நால்வர் பிறந்தனர்.

கடலகம்

சென்னை சாந்தோம் கடற்கரை ஓரம் மாளிகை ஒன்று கட்டினார். அதற்குக் கட லகம் என்று பெயர் சூட்டினார். உதகை யில் குறிஞ்சியகம் என்னும் வீடு வாங்கி னார்.
அந்த வீடு தமிழ்ப்புலவர்களின் கோடைக்கால இருப்பிடமாக விளங்கியது.

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் 1928 முதல் செயலுக்கு வந்தது. முதல் பொங் கல் வாழ்த்து அனுப்பியவர் திரு. பெ.தூரன்.

தமிழர் திருநாள்

1934 தை முதல் நாள் பொங்கல் திரு நாள் அன்று தம் வீடான கடலகத்தில், புல வர்களை அழைத்துப் பொங்கல்விழா கொண்டாடினார். அனைவருக்கும் சர்க் கரைப் பொங்கலுடன் ஆப்பிள் முதலிய பழங்களும் பொங்கல் வாழ்த்தும் வழங்கி னார். அப்பொழுது அவர் பாடிய பொங்கல் வாழ்த்தின் சில அடிகள் :

பொங்குக பொங்கல் பொங்குக எங்ஙனும்
பொங்குக பொங்கல் இன்பமே எய்துக!
நந்தம்மொழி நலம்பெற்றோங்கிட 
எந்தக் காலும் இன்புற வாழ்த்துக!

பொங்கல் திருநாளை இன்று முதல் தமிழ்த் திருநாள், தமிழர் திருநாள், தமிழகத் திருநாள், தமிழ்ப்புத்தாண்டுத் திருநாள் என்று அழைத்துக் கொண்டாடல் வேண் டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அன்று முதல் பொங்கல் தமிழர் திருநாள் என்று தமிழர்கள் கொண்டாடி வருகிறார் கள்.

தமிழ்ப் பணி

பாடநூல் பணி, இலக்கியப்பணி, நாட கப் பணி, உரை நடைப்பணி, கவிதைப் பணி, கட்டுரைப்பணி, சிற்றிலக்கியப் பணி, குழந்தைப் பாடல்கள் பணி, பதிப்பாசிரியர் பணி, இதழாசிரியர் பணி, பேச்சாளர் பணி என்று பல துறைகளிலும் ஓய்வின்றி உழைத் தார்.

பண்பாளர்

நகைச்சுவையாகப் பேசுவதிலும் எழுது வதிலும் வல்லவர்; அன்பே உருவானவர்; தீமை செய்தவர்க்கும் நன்மை செய்யும் நற்குணம் வாய்ந்தவர்; குணம் கண்ட விடத்து மகிழும் குணசீலர்; விருந்தோம்பும் உயர் பண்புடையவர்; வறுமையால் வாடி யோர்க்குப் பொருள் கொடுத்து உதவியவர்; புலவர் வள்ளல் என்று போற்றப்பட்டவர்.

சிறப்புப் பணிகள்

1910ஆம் ஆண்டில் S.S.L.C.. தேர்வு உதவிப் பரிசோதகர் பணி ஆற்றியுள்ளார்; 1917 முதல் 1934 வரை சென்னைப் பல் கலைக்கழகம் தமிழ்க்கல்வி வாரியத்தில் (Board of Studies in Tamil) உறுப்பினராக வும் 1920 முதல் 1934 வரை அதன் தலைவராகவும் இருந்தார். 1920 முதல் 1934 வரை சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் தேர்வு வாரியத்தின் (Board of Examiner inTamil) தலைவராக இருந்தார். 17.1.1935இல் திருவள்ளுவர் திருநாள் கழகம் தொடங்கப்பட்டது. அதன் முதல் தலை வராக இருந்தார். 1935ஆம் ஆண்டு சென்னை பண்டித சங்கத்தின் தலைவராக இருந்தார்.

புகழுடம்பு எய்தல்

27.2.1936ஆம் நாளன்று 60 ஆண்டு நிறைவு விழாக் கொண்டாடத் திட்டமிட்டு மலர் வெளியிடப்பட்டது. நோய் வாய்ப் பட்டார் அதனால் விழா நடைபெற வில்லை. சின்னாளில் 13.3.1936இல் புகழுடம்பு எய்தினார்.

நினைவேந்தல் - படத்திறப்பு

தமிழ்ப் புலவர்க்கென வாழ்ந்த கா. நமச்சிவாயரின் நினைவேந்தல் கூட்டம் 29.3.1936 இல் நடைபெற்றது. தமிழ்த் தென்றல் திரு.வி.க. தலைமை தாங்கினார். 4.6.1936இல் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் திருவள்ளுவர் திருநாள் கழகம் தம் தலைவருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது. 20.3.1937இல் சென்னைப் பல்கலைக்கழக மன்றத்தில் கா. நமச்சிவாயரின் படம் திறந்து வைக்கப்பட் டது. சென்னை மாநிலக் கல்லூரியில் இவரின் படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

எழுதிய நூல்கள்

நாடகம் 7, உரைநடை 7, புராண இதிகாச பழங்கதைகள் 23, வரலாற்றுக் கதைகள் 4, இலக்கண உரை, ஆராய்ச்சி நூல் 1, செய்யுள் 11, செய்யுள் தொகுப்பு 4. செய்யுள் கதைகள் 1 ஆக மொத்தம் 59 நூல்கள் 60 வயதில் எழுதியுள்ளார்.

பாட நூல்கள்

1901 முதல் 1935 வரை நூற்றுக்கு மேற் பட்ட தமிழ்ப்பாட நூல்கள், இலக்கணப் பாட நூல்கள், கட்டுரை நூல்கள், வரலாறு, பூகோளம், கணிதம், இயற்பியல் போன்ற பாடநூல்கள் பலவற்றை, முதல் வகுப்பு முதல் - கல்லூரி வகுப்பு வரை உள்ள மாணாக்கர்களுக்கு எழுதியுள்ளார். நல்லா சிரியர் இதழ் அச்சகம் 15 ஆண்டுகள் நடத்தியுள்ளார்.

பெரும்புலவர்

60 வயதிற்குள் 59 நூல்களும் நூற்றுக்கு மேற்பட்ட பாட நூல்களும் எழுதியுள்ளார். ஓர் இதழும் அச்சகமும் 15 ஆண்டுகள் நடத்தியுள்ளார். அரிய சாதனைகள் ஆற்றி, ‘பெரும்புலவர்’ என்பதை மெய்ப்பித்துள் ளார்.

கா.நமச்சிவாயர் வழியில் நற்றமிழ் வளர்ப்போம்.
அறிவுக்கு அறிகுறி இடைவிடாத முயற்சி;
வெற்றிக்கு அறிகுறி சோர்வடையாத உழைப்பு.
- இத்தாலி நாட்டின் விடுதலை வீரன் மாஜினி.
தமிழால் ஒன்று சேர்வோம்
குறளால் நன்று செய்வோம்

குறிப்பு: சென்னை மாநிலக் கல்லூரி யில் பணியாற்றிய பெரும்புலவர் நமச் சிவாயனார் அவர்கட்கு மாதச் சம்பளம் ரூபாய் 81, சமஸ்கிருத பேராசிரியர் குப்பு சாமி சாஸ்திரிக்கு ரூ. 300. இந்தப் பேதம் நீதிக்கட்சி ஆட்சியில் நீக்கப்பட்டது.

- வ.வேம்பையன்
கல்பாக்கம்
-விடுதலை ஞா.ம.18.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக