பக்கங்கள்

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக பயன்படுத்திய குற்றவாளிகளைத் தண்டிக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்


தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை, பிப். 21- ஈழப் போரின் போது ராஜபக்ச ஆட்சியின்போ தும் அதன்பின்னர் அமைந்த மைத்ரிபால சிறிசேன அரசின் கீழும் கைதுசெய்யப்பட்ட சர ணடைந்த தமிழ்ப் பெண்களை சிங்கள ராணுவத்தினர் பல் வேறு முகாம்களில் அடைத்து வைத்து பாலியல் அடிமைகளா கப் பயன்படுத்தினர் என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மை இப்போது வெளியாகியுள்ளது.

இந்தக் கொடுங்குற்றத்தைச் செய்த குற்றவாளிகளை தண் டிப்பதற்கு இந்திய அரசு இலங் கையை வலியுறுத்தவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திரு மாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை போரின்போதும் அதற்குப்பின் னாலும் சரணடைந்த தமிழ்ப் பெண்களை பாலியல் அடிமை களாக சிங்கள ராணுவத்தினர் பயன்படுத்தினர் என்ற அதிர்ச் சியளிக்கும் உண்மை வெளியா கியுள்ளது.

அய்நா அவையின் பெண்க ளுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றும் குழுவின்  (சிணிஞிகிகீ) முன்னர் தாக்கல் செய்யப்பட் டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் (மிஜியிறி) சார்பில் 55 பெண்களின் வாக்குமூலங்கள் தொகுக்கப் பட்டு அறிக்கையாக சமர்ப்பிக் கப்பட்டிருக்கிறது. அவர்களில் நாற்பத்தெட்டு பேர் ராஜபக்ச ஆட்சியின்போது கைதுசெய்யப் பட்டவர்கள், ஏழு பேர் தற்போது நடைபெறும் சிறிசேனவின் ஆட்சியில் கைதுசெய்யப்பட்ட வர்கள்.

வாக்குமூலம் அளித்திருக் கும் 29 பெண்கள் பலவந்தமாக வாகனங்களில் கடத்தப்பட்டு கண்கள் கட்டப்பட்டு அடையா ளம் தெரியாத இடங்களில் அடைத்துவைக்கப்பட்டு பாலி யல் வன்முறைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர். பத்து பேர் மறு வாழ்வு முகாம்களிலிருந்து கடத் திச்செல்லப்பட்டுள்ளனர். தம்மை அடைத்துவைத்திருந்த வர்களுக்கு லஞ்சம் கொடுத்தே இந்தப் பெண்கள் தப்பித்து வந்துள்ளனர். இந்தக் கொடு மைகளில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளின் பெயர், பதவி உள்ளிட்ட விவரங்களும் சாட் சிகளின் வாக்குமூலங்களோடு இணைத்து சமர்ப்பிக்கப்பட்டி ருக்கின்றன.

தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் இந் தக் கொடுமை இனப்படு கொலையைவிட மோசமானது. இப்போதாவது சர்வதேச சமூக மும் அய்நா அவையும், இலங்கை போர்க் குற்றங்களிலும், இனப் படுகொலையிலும் ஈடுபட்ட வர்களைத் தண்டிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக வைத்திருந்த சிங்கள ராணுவத்தினரைக் கைது செய்து தண்டிக்க வேண்டும் என இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்தவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
-விடுதலை,21.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக