பக்கங்கள்

வியாழன், 9 பிப்ரவரி, 2017

மொரீசியஸ் நாட்டின் அருகே ஆழ்கடலுக்குள் மூழ்கிக் கிடக்கும் லெமூரியா கண்டத்திட்டுகள் கண்டுபிடிப்பு!



போர்ட்லூயிஸ், பிப்.4 பல்லாயிரம் கோடி ஆண்டு களுக்கு முற்பட்டது, லெமூ ரியா கண்டம். உலகிலேயே முதல் முறையாக இந்த கண் டத்தில்தான் மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் பேசிய மொழி தமிழ் என்ற நம்பிக்கை நெடுங்காலமாக உயிர்ப்புடன் இருந்துவருகிறது. எனினும் அறிவியல் ஆய்வுகள் வாயிலாக இது உறுதிப்படுத்தப் படவில்லை.

சங்க இலக்கியத்தில் குமரிக் கண்டம் கடல் கோளால் விழுங் கப்பட்டது என்பது தொடர்பாக பதிவுகள் காணப்படுகின்றன. பரந்து விரிந்திருந்த தமிழர் களின் நிலப்பரப்பு கால மாற் றத்தால் படிப்படியாக அருகி விட்டது. இப்போது உலகில் முழுக்க முழுக்க தமிழர்களுக் கென ஒரு நாடு கூட இல்லாமல் போய்விட்டது. ஆனால் பன் னெடுங்காலத்திற்கு முன்பு 49 நாடுகளில் தமிழர்கள் செம்மை யாகவும், செழுமையாகவும் வாழ்ந்து வந்தனர் என்பதை இலக்கியப் பதிவுகள் உணர்த்து கின்றன. இல்லாத சரஸ்வதி நதியை கண்டுபிடிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டுள்ளது.   இதைப் போல குமரிக்கண்டம் குறித் தும் கடல் பகுதியில் அறிவியல் ஆய்வு மேற்கொள் ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து ஒலித்து வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக் காவில் உள்ள விட்வாட்டர்ஸ் ராண்டு பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லூயிஸ் ஆஷ்வால் மொரீசியஸ் நாட் டின் அருகே உள்ள ஆழ்கடல் பகுதியில் ஆய்வு நடத்தினார். ஆய்வாளர்கள் சிலர் அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட னர். இந்த ஆய்வின் வாயிலாக, ஆழ்கடல் பகு தியில் கோண்ட் வானா கண்டத் திட்டுகள் மூழ்கிக்கிடக்கின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. கோண்டுவானா, லெமூரியா, குமரிக்கண்டம் ஆகிய யாவும் ஒன்றே. இவை வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படு கின்றன. மொரீசியஸ் நாட் டின் பாறைப்பகுதியில் சிலிகான் படிவுகள் காணப்பட்டன. இப் படிவுகள் 300 கோடி ஆண்டு களுக்கும் முற்பட்டவை என் பது தெரியவந்துள்ளது. இதை மய்யப்புள்ளியாக கொண்டே ஆழ்கடலில் ஆய்வுநடத்தப்பட் டது. இதன் வாயிலாக பய னுள்ள தகவல்கள் பெறப்பட் டுள்ளன. ஆய்வை மேலும் விரிவாகவும், ஆழமாகவும் நடத்தினால் லெமூரியா கண் டம் பற்றி இன்னும் பல முக்கிய தகவல்களை சேகரிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-விடுதலை,4.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக