பக்கங்கள்

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

6,000 ஆண்டுகள் பழைமையான புதிய கற்காலக் கருவிகள் கண்டெடுப்பு

ஏற்காடு, ஆக.5 சேலம் மாவட்டம், சேர்வராயன் மலை ஏற்காடு அருகே மாரமங்கலம், கேளையூர் மலைக் கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய கற்காலக் கருவி களும், காட்டுப்பன்றி குத்திப் பட்டான் நடுகல் கல்வெட்டும் சேலம் வரலாற்று ஆய்வு மய்யக் குழுவினரால் கண்டறியப்பட்டுள் ளது.
சேலம் வரலாற்று ஆய்வு மய்யத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீர ராகவன், ஆறகழூர் பொன்.வெங் கடேசன், பெருமாள், கலைச் செல்வன், சீனிவாசன், பொன்னம் பலம், ஜீவநாராயணன், கிருட் டிணமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர், சேர்வராயன் மலைத் தொடர் ஏற்காடு அருகே மார மங்கலம், வடக்கு மலையான், கேளையூர் மலைக் கிராமங்களில் தொல்லியல் ஆய்வை மேற் கொண்டனர்.
அப்போது வடக்குமலையான் கோயிலில் 50- -க்கும் மேற்பட்ட புதிய கற்காலக் கருவிகளும், கேளையூர் கிராம பிள்ளையார் கோயிலில் 50-க்கும் மேற்பட்ட புதிய கற்காலக் கருவிகளும், மாரமங்கலம் கிராமத்தில் கல் வெட்டுடன் கூடிய காட்டுப்பன்றி குத்திப் பட்டான் நடுக்கல்லும் கண்டறியப்பட்டன.
ஏற்காடு மலையில் கண்டறி யப்பட்டுள்ளவை 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமை யான புதிய கற்காலக் கருவிகள் என்பது தெரியவந்துள்ளது. புதிய கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் கரடுமுரடான கற்கருவிகளைச் செதுக்கியதோடு மட்டுமல்லாது, அவற்றை தேவைக்கு ஏற்ப தேய்த்து வழவழப்பாகச் செய்து கொண்டனர். இந்தக் கிராமங் களில் கண்டறியப்பட்டுள்ள புதிய கற்காலக் கருவிகளை பல நூற்றாண்டுகளுக்கு முன் ஓடை ஓரங்களிலும், விளை நிலங்களி லும் கண்டெடுக்கப்பட்டு, கோயி லில் வைத்து பாதுகாத்து வழி பட்டு வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மாரமங்கலம் கிராமத்தில் வாணிக்கொம்பை என்ற இடத் தில் கந்தன் என்பவரின் தோட் டத்தில், 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுடன் கூடிய காட்டுப்பன்றி குத்திப் பட்டான் நடுகல் ஒன்றும் கண்டறியப்பட் டது. ஒரு வீரன், தனது வேட்டை நாய்களுடன் சென்று நீண்ட ஈட்டியால் ஒரு காட்டுப் பன் றியை குத்திக் கொல்வதைப் போல் சிற்பம் உள்ளது.
அந்த நடுகல்லில் 19 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட் டில், அந்த நடுகல்லை மாரமங் கலம் அண்ணாமலை வைத் துள்ளதும், வாணிக் கொம்பை பகுதியில் விளை நிலங்களை நாசம் செய்த காட் டுப்பன்றியைக் கொன்று தானும் இறந்துபோன காத்தா மகன் நக்க என்பவரின் நினைவாக வைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.-
-விடுதலை,5.8.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக