திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 300 ஆண்டு பழைமை வாய்ந்த எந்திரக் கல் வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முருகனின் 3ஆம் படைவீடான திரு ஆவி னன்குடி கோவிலில் பங்குனி உத்திர திருக் கல்யாண மண்டபம் உள்ளது. பங்குனி உத் திரத்தின் 6ஆம் நாளில் இந்த மண்டபத்தில் தான் முருகனின் திருக்கல்யாணம் நடை பெறும். இதற்காக இந்த மண்டபத்தை புதுப் பிக்கும் பணி நடைபெறுகிறது. 11 ஊர் 24 மனை சாந்தகுல சவுமிய நாராயண கவிராய நாயக்கமார் டிரஸ்டி வி.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் இந்த சீரமைப்புப் பணியின் போது மண்டபத்தின் ஒரு தூணில் பழைமையான கல்வெட்டு இருப்பது கண் டறிப்பட்டது.
இந்த கல்வெட்டை, தொல்லியல் ஆய்வா ளர் நாராயணமூர்த்தி, ஸ்தபதி கார்த்தி மற்றும் பழனியாண்டவர் கலைக்கல்லூரி பண்பாட்டுத் துறை பேராசிரியர்கள் அசோகன், கோபால கிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- இந்தக் கல்வெட்டு கண்டறியப்பட்ட கல்யாண மண்டபம் கி.பி.13ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி.18ஆம் நூற்றாண்டு வரை தொடர்ச்சியாக சீரமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக அல்லா மல் அறிவியல் முறைப்படி மண்டபம் சீர மைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்தே இந்தக் கல்வெட்டு தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டின் காலம் கி.பி.17முதல் கி.பி.18ஆம் நூற்றாண்டாகும். கல்வெட்டில் எண்கள் பொறிக்கப் பட்டுள்ளன. 9 சதுரக் கட்டங்களை அமைத்து கட்டத்திற்குள் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. இதில் சிறப்பு என்னவென்றால் இந்தத் தமிழ் எண்களை மேலிருந்து கீழாகவோ, கீழ் இருந்து மேலா கவோ, இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என எப்படி கூட்டினாலும் 15 என்ற எண் ணின் கூட்டுத்தொகை வருமாறு அமைக் கப்பட்டுள்ளது.
சுடோகு விளையாட்டை போல இந்த அமைப்பு முருகனின் எந்திர எண்ணான 6அய் குறிக்கிறது. 15 என்ற எண்ணில் ஒன்றையும், அய்ந்தையும் கூட்டினால் ஆறுமுகக் கடவுள் என்பதை குறிக்கும் எண்ணாக 6 வரும். பங்குனி உத்திரத்தின் 6ஆம் நாள் என்பதை குறிக்கவும் 6 கூட் டுத்தொகை வருகிறது. மேலும் மண்ட பத்தின் கூரைப்பகுதி யில் நாட்டியப் பெண்களின் சிற்பங்களும், தூண்களில் மன்னர் களின் உருவச் சிற்பங்களும், மண் டப வெளிக்கூரையில் யாழி வரிகளும், வெளித்தூணில் ஆண், பெண் உறவு காட் சிகளும் புதிதாக கண்டறியப்பட்டுள்ளன என்றனர். நன்றி: தீக்கதிர், 25.3.2018
- விடுதலை ஞாயிறு மலர், 7.4.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக