பக்கங்கள்

திங்கள், 9 ஏப்ரல், 2018

பெங்களூரு தமிழ்ச் சங்கத்துக்கு 2 ஏக்கர் நிலம் முதல்வர் சித்தராமையா உத்தரவு



 


பெங்களூரு, மார்ச் 27 பெங்களூருத் தமிழ்ச் சங்கத் துக்கு 2 ஏக்கர் நிலம் வழங்க கர்நாடக முதல்வர் சித்தரா மையா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பெங்களூருத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் தி.கோ.தாமோதரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பல்வேறு காலகட்டங்களில் தமிழ்ச் சங்கத்திற்கு வருகை புரிந்த கருநாடக தலைவர் களிடம், பெங்களூரு தமிழ்ச் சங்க விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் வேண்டும் என்று சங்கம் வேண்டுகோள் வைக்கப்பட் டது. நிகழாண்டு திருவள்ளுவர் பேரணியை துவக்கி வைக்க வந்த கருநாடக முதல்வர் சித்த ராமையாவிடமும், அமைச் சர்கள் கே.ஜே.ஜார்ஜ் ,ரோஷன் பெய்க் ஆகியோரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அப்போது பத்திரிகை யாளர்களிடம் பதில் அளித்த முதல்வர் சித்தராமையா, தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் சங்கப் பணி களை விரிவாக்கம் செய்வதற்கு 10 ஏக்கர் நிலம் கேட்டு இருக் கிறார்கள். அந்தக் கோரிக் கையை ஏற்று நிலம் ஒதுக்கித் தருவோம். ஆனால், எவ்வளவு நிலம் தரப்படும் என்பதை இப்போது கூற முடியாது. நிலத்தை அடையாளம் காண உத்தர விட்டு இருக்கிறேன். நிலம் அடையாளம் காணப்பட்டதும் நிலம் ஒதுக்கப்படும் என்று கூறி இருந்தார். அதன்படி நிலம் அடையாளம் காணப் பட்டு, 2 ஏக்கர் நிலம் பெங் களூரு தமிழ்ச் சங்கத்துக்கு வழங்க அமைச்சரவையில் ஒப் புதல் வழங்கப்பட்டுள்ள செய்தி அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் மூலமாக தெரிவிக்கப்பட் டது. 65 ஆண்டு கால சங்கப் பணிகளுக்கு கிடைத்த இந்தக் கொடையை ஒரு கோடி கருநாடக வாழ் தமிழர்களின் சார்பில் பெங்களூரு தமிழ்ச் சங்கம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இதற்கு ஒத் துழைத்த அனைவருக்கும் விரைவில் பாராட்டு விழா நடத்த சங்கம் தீர்மானித்துள்ளது  என்றார் தாமோதரன்.


- விடுதலை நாளேடு, 27.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக