வாசிங்டன், அக்.6 அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் தமிழுக்கு 5ஆவது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் அமெரிக்காவில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 55.4% அளவிற்கு அதிகரித்துள்ளது.
அமெரிக்கன் கம்யூனிட்டி சர்வே என்ற அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி, அமெரிக்காவில் வாழும் 5 வயதுக்கும் மேற்பட்டவர்கள், சட்டத்துக்கு புறம்பாக குடியே றியவர்களில் 21.8 சதவீதம் பேர் அவர்களது வீடுகளில் ஆங் கிலம் தவிர்த்து பிறமொழி பேசுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதிலும், அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் இந்தி முதல் இடத்தையும், தமிழ் அய்ந்தாம் இடத்தையும் பெற்றுள்ளது. அதாவது, அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையான 30.5 கோடியில், வெளிநாட்டு மொழி பேசுபவர் களின் எண்ணிக்கை 6.7 கோடியாகும். இந்த எண்ணிக்கை 1990ஆம் ஆண்டை விட இருமடங்காகவும், 1980ஆம் ஆண்டை விட மும்மடங்காகவும் அதிகரித்துள்ளது.
2010ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் இந்த ஆய்வறிக்கை ஒப்பிடுகையில் 50 ஆயிரம் இந்தி யர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். இந்த எட்டு ஆண்டில் 80 ஆயிரம், இந்தியர்கள் அமெரிக்காவுக்கு சென்று குடியேறி யுள்ளனர்.
அமெரிக்காவில் பேசப்படும் இந்திய மொழிகளில் இந்தியை 8.63 லட்சம் பேர் பேசுவதாக குறிப்பிட்டுள்ளது அவ்வறிக்கை. இதற்கு அடுத்தப்படியாக குஜராத்தியை 4.34லட்சம் பேரும், தெலுங்கினை 4.15லட்சம் பேரும் பேசுகின்றனர்.
இதையடுத்து பெங்காலியும் அய்ந்தாவது இடத்தில் தமிழும் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் குடியேறுதல் ஆய்வு களுக்கான மய்யம் 2010ஆம் ஆண்டு புள்ளி விவரங்களை 2017ஆம் ஆண்டு புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டு பகுப்பாய்வு செய்துள்ளது. அதன்படி, கடந்த 8 ஆண்டுகளில் அமெரிக்காவில் வசிக்கும் தெலுங்கு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளது. பெங்காலி மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை 57 சதவீதமும், தமிழ் மொழி பேசுவோரின் எண்ணிக்கை 55 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது 2லட்சத்து 23 ஆயிரம் பேர் பெங்காலியையும், ஒரு லட்சத்து 83 ஆயிரம் பேர் தமிழ் மொழியையும் பேசுகின்றனர். ஆனால், பட்டியலில் இடம்பெற்றுள்ள பெங்காலி, தமிழ் மற்றும் உருது மொழிகள் இந்தியாவை தவிர்த்து வேறு நாடு களிலும் பேசப்படுகின்றது. இந்தியாவை தவிர்த்து தமிழ், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் பரவலாக பேசப்படுகிறது.
- விடுதலை நாளேடு, 6.10.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக