1966-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பஞ்சாப் மாநிலத்திலிருந்து ஹரியானா பிரிந்தது. ஹரியானாவில் பஞ்சாபிகளும் அதிகமாக வசித்தனர். இவர்களின் தாய் மொழி பஞ்சாபி.
சண்டிகர் நகரம் சண்டிகர் நகரம்
பங்காளிகள் பிரிந்தால் சச்சரவுகள்தானே ஏற்படும். தண்ணீர் பங்கீட்டிலிருந்து பல பிரச்னைகளுக்காக இரு மாநிலங்களும் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டன. இப்போது வரைக்கும் இரு மாநிலங்களுக்கும் சண்டிகர் நகரம்தான் பொதுவான தலைநகராக உள்ளது. ஹரியானா தனக்கென்று தனியாகத் தனி தலைநகரை உருவாக்கிக் கொள்ளவில்லை.
ஹரியானா மாநிலத்தில் பெரும்பாலான மக்கள் இந்தி பேசுபவர்கள். இதனால், அலுவல மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டதில் எந்தப் பிரச்னையும் இல்லை. பஞ்சாபி பேசும் மக்கள், தங்கள் மொழியை இரண்டாவது அலுவல் மொழியாக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்த போதுதான் பிரச்னை எழுந்தது. பஞ்சாபியை அலுவல் மொழியாக்கினால், இந்தி மொழியின் வளர்ச்சிக்குத் தடையாக, இருக்கும் என அப்போதைய ஹரியானா முதல்வர் பன்சி லால் கருதினார். இதனால், பஞ்சாபிக்கு முக்கியத்துவம் கொடுக்க பன்சி லால் விரும்பவில்லை. உடனடியாக, அவரின் நினைவுக்கு வந்தது உலகின் மூத்த மொழியான தமிழ்தான். தயக்கமே இல்லாமல் ஹரியானா மாநிலத்தின் இரண்டாவது அலுவல் மொழியாகத் தமிழை அறிவித்தார் பன்சிலால்.
அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு உச்சத்தில் இருந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் பெரிய அளவில் நடந்து கொண்டிருந்தன. `ஹரியானாவில் தமிழை அலுவல் மொழியாக்கினால், வட இந்திய மாநிலம் ஒன்றில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட்டிருக்கிறது. நாமும் இந்தியை எதிர்க்கக் கூடாது எனத் தமிழர்கள் கருதுவார்கள்' என்றும் பன்சி லால் நினைத்தார். இதுவும் ஹரியானாவில் தமிழ் அலுவல் மொழியாக ஒரு காரணமாக இருந்தது. ஹரியானாவில் பன்சி லாலுக்குப் பிறகு பல முதல்வர்கள் மாறினாலும், கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஹரியானாவில் தமிழ் இரண்டாவது அலுவல் மொழியாக இருந்தது. கடந்த 2010-ம் ஆண்டு ஹரியானா முதல்வராகப் பதவியேற்ற பூபிந்தர் சிங் ஹூடா, தமிழை நீக்கிவிட்டு, பஞ்சாபியை இரண்டாவது அலுவல் மொழியாக்கினார்.
இந்தி மொழியைப் பாதுகாக்கத் தமிழ் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது பார்த்தீர்களா?
- பகிரி வழியாக வந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக