பக்கங்கள்

திங்கள், 14 அக்டோபர், 2019

சமஸ்கிருதத்தைவிட தமிழ்மொழியின் சிறப்பு

இனிச் சமஸ்கிருத மொழியின் கண்ணே பால் வகுப்புக் சொன்னோக்கத்தாலேற்பட்டுளதே யன்றிப் பொருணோக்கத்தாலேற்பட்டிலது. உதாரணமாக, கையெனப் பொருள்படும் ‘கரம்‘ என்ற சொல் ஆண்பால்; மனைவியெனப் பொருள்படுஞ் சொற்களிலே ‘தாரம்‘ என்பது ஆண்பால்.

களத்திரம் என்பது அலிப்பால், அஃதாவது ஒன்றன்பால் என ஆராற்றனமைக்கலாம். இவ்வாறுளது வடமொழிப் பால் வகுப்பின் சிறப்பு. மற்றுத் தமிழ்மொழியிலோ பால் வகுப்பெல்லாம் பொருணோக்கத்தாலேற்பட்டுளவேயன்றிச் சொன் னோக்கத்தாலேற்படவேயில்லை.

இது தமிழ்மொழியின் சிறப்புகளுள் ஒன்று. வட நூன்முறை குறைபாடுடையது. ஆரிய பாஷைகளோடியைபுபட்ட பாஷைகளெல்லாம் சொன்னோக்கப் பால் வகுப்புக் குறைபாடுடை யனவாமாறு காண்க. தமிழ்மொழியின் வழிமொழிகளெல்லாம் பொருணோக்கப் பால் வகுப்பு சிறப்புடையன. இவ்வுண்மையொன்றே தமிழ்மொழியின் தனி நிலையை நன்கு விளங்குவதற்குத் தக்கச் சான்று பகரும்“

வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் பி.ஏ.,

நூல், தமிழ்மொழியின் வரலாறு

பக்கம் -333

- விடுதலை ஞாயிறு மலர், 28.9.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக