திங்கள், 4 அக்டோபர், 2021
உ.வே.சா அய்யர் எனும் உடைபட்ட பர்னிச்சர்..
வியாழன், 2 செப்டம்பர், 2021
பாராட்டத்தக்க அறிவிப்பு சிலம்பொலி செல்லப்பன், தொ.பரமசிவன் உள்ளிட்ட 6 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை
அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
சென்னை,செப்.1- சிலம்பொலி செல்லப்பன், பரமசிவன் உள்ளிட்ட 6 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
சட்டப்பேரவையில் தமிழ்வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துப் பேசிய பின்னர் வெளியிட்ட அறிவிப்புகள்: இன்றைய தலைமுறையினரை திருக்குறள் சென்றடையும் வகையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ‘தீராக் காதல் திருக்குறள்’ என்ற பெயரில் கலை வடிவங்களுடன் ஊடகங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். வெளிநாடு, வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க ரூ.1 கோடியில் தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும்.
பள்ளிகளில் திறனறி தேர்வு நடத்தி ஆண்டுதோறும் 1,500 மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,500 ஊக்கத்தொகை 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
தமிழ் அறிஞர்கள் சிலம்பொலி செல்லப்பன், தொ.பரமசிவன், இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம், செ.ராசுஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை யாக்கப்பட்டு பரிவுத்தொகை வழங்கப்படும்.
சங்க இலக்கிய வாழ்வியல், ஓவியங்களாகவும், எளிய விளக்கத்துடனும் ‘காபி டேபிள்’ புத்தகமாக வெளியிடப் படும். கோயில்களில் தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம் ஆகியவற்றுடன் திருக்குறள் வகுப்புகளும் நடத்தப்படும்.
தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களின் பிறந்த நாளன்று இலக்கியக் கூட்டங்கள் நடத்த ரூ.15 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத் தையும் (இனிஷியல்) தமிழிலேயே எழுதும் நடைமுறை ஊக்குவிக்கப்படும்.
முனைவர் ஆய்வு (பிஎச்.டி)சுருக்கம் மற்றும் ஆய்வுத் தொகுப்புகள் தமிழில் தொகுக்கப்பட்டு தமிழ் இணையக்கல்வி கழகத்தின் வாயிலாக இணையதளத்தில் வெளியிடப்படும்..
திங்கள், 23 ஆகஸ்ட், 2021
பழந்தமிழர்_அளவைகளில் சில
வியாழன், 22 ஜூலை, 2021
நீச பாஷைகள் ஆக்கப்பட்ட மொழிகளுக்கு இருக்கும் ஒரே சுடரொளி திராவிடமே!
2017 - முதல் 2020 வரையிலான மூன்று ஆண்டுகளில் ஒன்றிய அரசு சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்காக மட்டும் ரூ.683.84 கோடி செலவிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையா ளம், கன்னடம் மற்றும் ஒடியா ஆகிய மற்ற செம்மொழிகளின் வளர்ச்சிக்கு மொத்தமாக ரூ.29 கோடி செலவிட்டுள்ளது. இந்தப் புள்ளி விவரம் அரசாலேயே வெளியிடப்பட்டிருக்கிறது.
இது நம் கண் முன் தெரிகிற கணக்கு. ஆனால் கண்ணுக்குத் தெரியாத கணக்கிற்கு அளவே இல்லை. இது புதிய வழக்கமும் அல்ல. வரலாற்றுக் காலந்தொட்டு யார் ஆட்சியில் இருந்தாலும் சமஸ்கிருத வளர்ச்சியும், அதன்மூலம் பார்ப்பனர்கள் வளர்ச்சியுமே வழக்கமான ஒன்றாக இருக்கிறது.
அரசர்கள் காலத்தில் இவர்கள் வேத பாடசாலைகளுக்குப் பெற்ற தானங்களும், நிலங்களும் செல்வமும் கல்வெட்டுகளில் காணக் கிடைக்கின்றன.
கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் சொல்லப்படும் கணக்கே மலைப்பைத் தருகிறதென்றால், கிடைக்கப்பெறாத கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கணக்கின்றி கொடுக்கப் பட்ட தானங்களும் எவ்வளவு இருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே கடினமாக இருக்கிறது.
முகலாயர் ஆட்சி ஆகட்டும், ஆங்கிலேயேர் ஆட்சி ஆகட்டும் பார்ப்பனர்கள் காட்டில் மழைதான். அன்றாவது அரசர்களிடமிருந்தோ, செல்வந்தர்களிடமிருந்தோ தானமோ, தர்மமோ பெற வேண்டிய நிலை இருந்தது. அது அவர்களுக்குக் கை வந்த கலை என்றாலும், இன்னொருவர் கையைத்தான் எதிர்பார்க்க வேண்டியிருந்தது.
ஆனால், இன்று அவர்களே ஆட்சி அதிகாரங்களை நேரடியாகத் தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள். இனி அவர்களுக்கு ஏன் மற்றவர்கள் தானமும் தர்மமும் கொடுக்க வேண்டும்?
இது கடவுளின் பெயரால், தேவ பாஷை என்னும் மாய பிம்பம் உருவாக்கப்பட்டுத் தொடரும் கொள்ளையாகும். இதில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுவது மட்டுமன்று, சுரண்டப்பட்ட மக்கள் இழிவுக்கும் உள்ளாகின்றனர். மக்கள் மொழி நீச பாஷையாக இருக்கிறது. தங்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டே தங்கள் மொழியையே இழிவுபடுத்தும் அவலநிலை உலகில் எந்த சமூகத்திலும் காணப்பெறாதது.
தமிழுக்காக மட்டுமல்ல, இந்திய ஒன்றியத்தின் அனைத்து மொழிகளின் உரிமைகளுக்காகவும் திராவிட இயக்கம்தான் தொடர்ந்து மொழிப்போர்களை நடத்தி வருகிறது. திராவிடமே, நீச பாஷைகள் ஆக்கப்பட்ட மொழிகளுக்கு இருக்கும் ஒரே சுடரொளி!
- மா.உதயகுமார்
நன்றி: கருஞ்சட்டை தமிழர்
தொல்காப்பிய பூங்கா என மீண்டும் பெயர் மாற்றம்
சென்னை, ஜூலை 19- முத்தமிழறிஞர் கலைஞர், கடந்த 2007ஆம் ஆண்டு அடையாறு உப்பங்கழி யில் 58 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடியில் தொல் காப்பிய பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார். பின்னர் 2011ஆம் ஆண் டில் அதைத் திறந்துவைத் தார்.
பின்னர் வந்த அதிமுக அரசு, அப்பூங்காவை அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா என அழைத்து வந்தது. அங்கு தொல்காப் பிய பூங்கா என வைக்கப் பட்டிருந்த பெயர் பலகை யும் அகற்றப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலை யில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு அண்மையில் இப் பூங்காவை பார்வையிட் டார்.
கடந்த 10 ஆண்டுகளில் இப்பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டிய அவர், அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் தெரிவித்து இருந்தார். இப்பூங்கா வுக்கு முத்தமிழறிஞர் கலை ஞர் பெயரிட்டிருந்தவாறு மீண்டும் பெயரிடுமாறு சென்னை ஆறுகள் சீர மைப்பு அறக்கட்டளைக்கு உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அந்த பூங்காவுக்கு மீண் டும் தொல்காப்பிய பூங்கா என பெயரிடப்பட்டுள்ளது. அந்த பெயரில் பெயர் பலகையும் பூங்காவின் நுழைவு வாயிலில் வைக் கப்பட்டுள்ளது.


