பக்கங்கள்

சனி, 5 டிசம்பர், 2015

பிரிட்டனில் தமிழர்களுக்கு ஆளும் கட்சியில் தனித்துவ தகுதி!


இலண்டன், அக்.12- பிரிட்டனில் பிரித்தானியாவின் ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சி (Conservative) தனது கட்சிக்கான உப கட்சியாக பிரிட்டானியத் தமிழர் களைக் கொண்ட உபகட்சியாக British Tamils Conservative (BTC) எனும் அமைப்பை அதிகாரப் பூர்வமாக பிரிட்டானியா அறிவித்துள்ளது.
இப்புதிய கட்சியில் பிரித்தானியத் தமிழர்கள் மட்டு மல்லாது ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அய்ரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் அங்கம் வகிக்கின்றனர். கடந்த செவ்வாய்க் கிழமை (09.10.2012) நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். குறிப்பாக Rt. Hon. Thersa Villeris, MP & Minister (Secretary of Stae for Northern Ireland), Lee Scott MP (Chairman, All party group for Tamils), Dr. Syed Kamal  MEP,  Rt Hon. Grant Shapps, MP (Conservative party Chairman), Jackie Doyle-Price MP,  Robert Halfon, MP for Harlow, Rt. Hon., Dr. Rachel Joyce,  Roger Evans (GLA member),  Dr. Charles Tannock, MEP, Liam Fox, MP  ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
இந் நிகழ்வில் தமிழர் தரப்பு British Tamils Conservative பிரதிநிதிகளாக.
Mr. Karan Paul, Dr. Rajah, Dr. Archuna Sivanthan, Mr. patrick Ratnaraja, Mr. Vijay Jeyanthan, Mrs. Thaksha Ravikulan, Mr. Ruthirapathy Seker, Mr. Vasi ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.  பல்லின மக்கள் வாழும் பிரிட்டனில் தமிழர்தரப்பிற்கு கிடைத்த முதலாவது உரிமை என்று இதனை சொல்லலாம்.
இவ்வாறான கட்சியை உருவாக்குவதற்கும், அதனூடான தமிழர்கள் தரப்பு விடையங்களை பிரிட்டன் பாராளுமன்றம் வரை கொண்டுசென்று அதனூடாக இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதியை தடுத்து நிறுத்தவும், அரசியல் தீர்விற்கான பிரிட்டன் அரசின் அழுத்தத்தைக் கொடுக்கும் முயற்சிக் காகவும் நீண்ட காலமாக அயராது உழைத்து வந்த MRS. Hazel Weinberg  k‰W« MR. KARAN PAUL  ஆகியோரின் முயற்சிக்கு கிடைத்த பெரு வெற்றியாகவும் இக் கட்சியின் அங்கீகார அறிவிப்பு  அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறீலங்கா அரசோடு கூட்டுச் சேர்ந்து இதுவரை காலமும் தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டுவந்த   Liam Fox - MP  -    தற்போது இக்கட்சியில் இணைந்திருப்பது அனை வரையும் நண்பர்களாக மாற்றி தமிழர்களின் இனப்பிரச் சனைக்கு தீர்வுகாண முனையும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் முயற்சிக்கு வலுச்சேர்த்துள்ளது எனலாம்.

பிரிட்டனில் வாழும் தமிழர்கள், குறிப்பாக இளையோர் கட்சி வேறுபாடுகளைக் கடந்து இப் புதிய  British Tamils Conservative (BTC) குழுவில் இணைந்து செயற்படவும், தமது சிந்தனை, செயற்திறன் ஊடாக சர்வதேச நாடுகளை வென்று அதனூடாக இலங்கையில் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க வைக்க முன்வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டானியாவில் கன்சர்வேடிவ் கட்சியினருடன் ஈழத் தமிழர் பிரதிநிதிகள்
-விடுதலை,12.10.12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக