பக்கங்கள்

புதன், 31 ஆகஸ்ட், 2016

‘மெட்ராஸ் ஹை கோர்ட்’ முதல் ‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ வரை


1967ஆம் ஆண்டு ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று அறிஞர் அண்ணா மாற்றினார் அப்போதிருந்தே மெட்ராஸ் ஹை கோர்ட் என்பது சென்னை உயர்நீதிமன்றம் என்று அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது, ஆனால் நூற்றாண்டு கால பாரம்பரியம் என்று கூறி மத்திய அரசும்,
நீதித்துறையைச் சார்ந்தவர்களும், தமிழார்வலர்களின் கோரிக்கையை புறக்கணித்து வந்தனர். இந்த நிலையில் ஜூலை அய்ந்தாம் தேதி கூடிய மத்திய அமைச்சரவை மெட்ராஸ் ஹை கோர்ட் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. வர வேற்கத்தக்க மாற்றம் இது.  இதுகுறித்து திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வந்திருக்கிறது. குறிப்பாக 2010 மார்ச்சு 4ஆம் தேதி   தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை முக்கியமானது.
‘‘நமது தமிழ்நாட்டில் இயங்கிவரும் உயர்நீதிமன்றம் குறித்து இரண்டு பிரச் சினைகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன.
ஒன்று, சென்னை மாநிலம் (விணீபீக்ஷீணீs ஷிtணீtமீ) என்றிருந்த பெயர் அதிகார பூர்வமாக சட்ட ரீதியாக தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டும்கூட, மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்று வழங்கப்படுவது மாற்றப்படவேண்டும். தமிழ்நாடு உயர்நீதி மன்றம் என்று மாற்றம் செய்யப்படவேண் டும் என்பதாகும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், உயர்நீதிமன்றத்தின் வாயிலில் உள்ள விளம்பரப் பலகையில் ஓவியர் ஒருவர் மூலம் மாற்றம் செய்யப் படவேண்டிய மிக எளிதான செயல் இது. ஆனால், இதுகூட இதுவரை செய்யப்பட வில்லை.
2008 ஆம் ஆண்டிலேயே இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் தமிழ் மன்றம் தங்களது கோரிக்கையை எழுத்து மூலமாகக் கொடுத்திருந்தும் இது வரை அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை. ஆர்ப்பாட்டங்கள்  மதுரையிலும், சென்னையிலும் இதற்காக நடத்தப்பட்ட துண்டு. மற்ற மற்ற மாநிலங்களில் எல்லாம் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழியில் மாநிலப் பெயரை முன்னிறுத்தி விளம்பரம் செய்யும்பொழுது,
தமிழ்நாட்டில் மட்டும் பெயர்ப் பலகை தமிழில் எழுதப்பட அனுமதி மறுப்பதும், அதிகாரபூர்வமான தமிழ்நாடு மாநிலப் பெயரில் உயர்நீதி மன்றம் அழைக்கப்படத் தயக்கம் காட்டு வதும் ஏன் என்று விளங்கவில்லை. கடு மையான போராட்டத்தை கைக்கொண் டால்தான் காரியம் நடக்கும் என்று கருதுகிறார்கள் என்று நினைக்க இடம் இருக்கிறது. அதுபோலவே, உயர்நீதிமன் றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கவேண்டும் என்ற வேண்டு கோளாகும். இதுகுறித்தும் 2000ஆம் ஆண்டுமுதலே குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல் கூட்டம் சென்னை-பெரியார் திடலில் 30.7.2016அன்று நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்
1) இரங்கல் தீர்மானம்: திருநெல்வேலி வழக்குரைஞர் சங்கத்தலைவர் முத்துராம லிங்கம் அவர்களின் மறைவையொட்டி ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
2) மெட்ராஸ் அய்க்கோர்ட் என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டின் உயர் நீதிமன்றம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக் கான உயர்நீதிமன்றமாகும். ஆங்கிலேயர் காலத்தில் பேரரசரின் ஆணையினால் உருவாக்கப்பட்டதால் இந்நீதிமன்றம் சார்ட்டட் அய்க்கோர்ட் என்ற சிறப்பு சலுகை பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவில் அமைக்கப் பட்ட முதல் நீதிமன்றமானதால் அன்றைய தலைநகரமான மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரில் நிறுவப்பட்டது.
இந்தியா விடுதலை பெற்று மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு மாநிலத் தின் உயர்நீதிமன்றமும் அம்மாநிலத்தின் பெயருடன் அழைக்கப்படுகிறது. எனவே சென்னை உயர்நீதிமன்றமும், அதன் மதுரை கிளையும் இனி தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்றும் தமிழ்நாடு உயர்நீதி மன்ற மதுரை கிளை என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
3) சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலத்தோடு தமிழ்மொழியும் வழக்காடு மொழியாக சட்டப்படியாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டு களாக வழக்குரைஞர்களாலும், பொதுமக் களாலும், தமிழக அரசாலும், தமிழ்மொழி பாதுகாப்பு அமைப்புகளாலும் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளாலும் வைக் கப்பட்ட கோரிக்கையானது  குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறாத நிலையில் இன்னமும் நிலுவையில் உள்ளது.
இதனால் ஆங்கிலம் தெரியாத வழக்காடிகளும், தாய் மொழியில் வாதிட விரும்பும் வழக்குரை ஞர்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகி றார்கள். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தமிழில் தன் வழக்கை வழக்காட வந்த ஒரு வழக்காடியை, தமிழில் வழக்கு நடத்த சட்டத்தில் இடமில்லை என்று கூறி இரக்க மற்ற முறையில் அவ்வழக்கைத் தள்ளுபடி செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
எனவே குடியரசுத் தலைவர் அலுவல கத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழ் வழக்காடு மொழி கோரிக்கைக்கு அவசர, அவசியம் கருதி, உடனடியாக ஒப்புதல் வழங்குமாறு குடியரசுத் தலைவரையும், அதற்கு விரைந்து ஆவன செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளையும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர்களையும் இப்பிரச்சினையில் ஆக்கபூர் வமாக செயல்படுமாறும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தமிழ்நாடு உயர்நீதிமன்றம் பெயர் மாற்ற தீர்மானம் - தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்
ஆகஸ்ட் 1 சென்னை உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று மாற்றக் கோரி, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தனித் தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட் டது. சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதா தனி தீர்மானம் கொண்டு வந்து பேசினார். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி! உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்றன.
இருந்தாலும், பல்வேறு மொழிகளுக்கு இல்லாத சிறப்பு அன்னைத் தமிழ் மொழிக்கு உண்டு. வார்த்தைக்கு பஞ்சமில்லா மொழி, தமிழ் மொழி. தமிழ்ச் சொல்லுக்கு தனி ஓசையுண்டு! எண்ண மெல்லாம் ஈர்க்கும் திறனுண்டு! இன்னும் எத்தனையோ சிறப்புகள் உண்டு! இயல், இசை, நாடகம் என்று முத்தமிழாய்ப் பிரித்து மொழியில் தனித் தன்மையை பழந்தமிழ் பெரியோர்கள் உண்டாக்கினர். யாழின் இனிமையோ, குழலின் நாதமோ என்று வியந்திடும் வண்ணம் அழகிய சொற் களைக் கொண்ட மொழி தமிழ் மொழி. மெட்ராஸ் மாநகர் என்பது 1996-ஆம் ஆண்டைய சட்டத்தின் மூலம் சென்னை மாநகர் என பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அதன்படி, சென்னை என்பது சென்னை மாநகரை மட்டுமே குறிக்கும்.
சென்னை மாநகரில் அமைந்துள்ள உயர் நீதிமன்றம் தமிழ்நாடு முழுமைக்குமான உயர்நீதிமன்றமாக விளங்குவதாலும்; 1956ஆம் ஆண்டு மொழிவாரி அடிப்படை யில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, பெயரிடப் பட்டதன் காரணமாக, அந்தந்த மாநிலங் களில் உள்ள உயர்நீதிமன்றங்கள் அந்தந்த மாநிலங்களின் பெயரிலேயே அழைக்கப் படுவதாலும், தற்போது மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என அழைக்கப்படும் உயர்நீதி மன்றத்தின் கிளை மதுரையில் செயல்பட்டு வருவதாலும்;
தமிழ்நாடு முழுமைக்குமான உயர்நீதிமன்றத்தை சென்னை உயர்நீதி மன்றம் என அழைக்கப்படுவது பொருத்த மற்றதாக இருக்கும் என்பதாலும், தற்போது மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என அழைக் கப்படும் உயர்நீதிமன்றம், 'தமிழ்நாடு உயர்நீதிமன்றம்'  என அழைக்கப்படுவதே சரியானது என்பதால், மக்களவையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட முன்வடிவில் சென்னை உயர்நீதி மன்றம் என்பதற்குப் பதிலாக தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மாற்றம் செய்யப்பட வேண்டுமென மத்திய அரசை இந்த மாமன்றம் கேட்டுக் கொள்கிறது.
இந்தத் தீர்மானத்தை இம்மாமன்றம் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று அனைத்து மாண்புமிகு உறுப்பினர் களையும், பேரவைத் தலைவர் வாயிலாகக் கேட்டுக் கொண்டு அமைகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்று உறுப்பினர்கள் பேசினார்கள். இந்தத் தீர்மானத்தை தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆதரித்தன. இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று மாற்றக் கோரி சட்ட சபையில் இயற்றிய சிறப்புத் தீர்மானத்தின் மீது நடவடிக்கை தேவை என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தமிழக சட்டசபையில் இயற்றிய தீர்மானத்தின் நகலையும் இணைத்துள்ளார். இதன் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஜெயலலிதா, தனது கடிதத் தில் வலியுறுத்தியுள்ளார்.
-விடுதலை ஞா.ம.20.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக