பக்கங்கள்

வியாழன், 26 ஜனவரி, 2017

தமிழரின் பொருளைப் பறிக்க பதினாறு தானங்கள் வகுக்கப்பட்டன.

பதினாறு தானங்கள்



பழங்காலத்தில் மக்களைத் தொழில் வகையில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று பிரித்திருந்த பாகு பாட்டை மாற்றி நிறவேறுபாடு, பிறப்பு அடிப்படையில் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நால்வர்ணங் களாக்கினார்கள்.
அப்பிரிவுகளுக்குத் தனித்தனியே தொழிலும், ஆசாரமும் கற்பித்து அவை முறையே ஒன்றினுக்கு ஒன்று தாழ்ந்தவை எனவுமாக்கி, இவ்வேறுபாடு இறைவன் படைப்பென நம்பச் செய்து, இச்சாதிக் கோபுரத்தின் உச்சியில் ஏறிக் கொண்டனர் பிராமணர்கள்.
இந்தக் குமுகாய அமைப்பில் தமிழர்கள் நிரந்தரமாய்த் தாழ்த்தப்பட்டார்கள். எத் தகைய கல்விச் சிறப்புப் பெற்றிருந்தாலும், குணக்குன்றானாலும், பட்டம் பதவி வகிக் கினும் சூத்திரர் மற்ற வர்ணத்தாருக்கு குற்றேவல் செய்யப் பிறந்தவர்களே.
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று வாழ்ந்து வந்த மக்களைப் பல குலங் களாக்கி, பாழ்செய்யும் உட்பகையைப் புகுத்தி அவர்களைச் சின்னாபின்னப் படுத்தித் தங்கள் மேலாதிக்கத்தை நிலை நாட்டினர். இவ்வாறு ஏமாளி மக்கள் மீது ஏற்றங்கண்ட பிராமணர் கல்வித்துறையை தமக்கே உரியதாக்கிக் கொண்டு ஏனைய ரோடு கலந்து வாழாது தனித்தெருவில் வாழ்ந்து, இறப்பவருக்குத் தனிச்சுடலையும் ஏற்படுத்திக்கொண்டார்கள்.
பிராமணரல்லாதாரை அசுரர் எனக் குறிப்பிட்டனர். கொல்லேறடக்கல் முதலிய மறவினை செய்து மணத்தலை அசுர மணமாக்கினர். பாட்டியல் இலக்கணத்தில் பிராமணரைப் பாட வெண்பா, வேளா ளரைப் பாட வஞ்சிப்பா எனவும் வகுத்தனர். பாட்டெழுதும் ஓலை நறுக்கின் அளவு பிராமணருக்கு 24 விரல், வேளாளர்க்கு அதில் பாதியென வரையறுத்திருந்தனர்.
எழுத்துகட்கும் பாக்கட்கும் தெய்வமும் குலமும் வகுப்பப்பட்டன. பிராமணரை வணங்குமாறு காரிகிழார் வேண்டினார். தமிழரின் பொருளைப் பறிக்க பதினாறு தானங்கள் வகுக்கப்பட்டன.
சமஸ்கிருத நூல் ஆதிக்கம், ப: 21


-விடுதலை ஞா.ம.,3.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக