'சிவனே'ன்னு இருக்க வேண்டுமா?
93 வயதைத் தொட்டும் போராட்ட குணத்தில் தளராத முத்தமிழ் அறிஞர் கலைஞர், சமஸ்கிருத திணிப்பில் மத்திய மனிதவளத்துறை அவ்வப் போது எல்லை மீறும் போது கடிவாளம் போட்டு சவுக்கை எடுத்துச் சுழற்றும் அறிக்கையால் தமிழக பாஜகவினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் போலும்! கேரளப் பாசம் கொண்ட பொன்னார், நான் சமஸ்கிருதம் படிக்காமல் இருந்ததற்காக வருத்தப் படுகிறேன் என்று கூறுகிறார்.
இல. கணேசனோ சிவனின் உடுக்கையின் ஒரு புற ஓசையில் - சமஸ்கிருதமும், மறுபுறஓசையில், தமிழும் பிறந்தன. சிவனை ஏற்காதவர்கள் சிவனே என்று இருப்பது நல்லது என்று மதுரையில் பேசியிருக்கிறார்.
உடுக்கையில் இருந்து பிறந்ததா சமஸ்கிருதமும், தமிழும்?
சமஸ்கிருதம் குறித்த ஒரு பதிவு: சமஸ்கிருத மொழியில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப் பட்டது, மகேஷ்வர் சூத்திரம் என்னும் நூலில் இந்த சமஸ்கிருதம் குறித்த பதிவு கிடைக்கிறது, இதை வைத்துத்தான் சமஸ்கிருதம் சிவனின் உடுக்கையில் இருந்து பிறந்தது என்ற நம்பிக் கையை பார்ப்பனர்கள் மக்களிடையே பரப்பி வருகின்றனர்.
அப்படி என்ன அந்த நூலில் உள்ளது? உலகைப் படைத்த பிரம்மன், சரஸ்வதியிடம் ஓசை உருவாக்கும் படி கேட்டுக்கொண்டாராம், சரஸ்வதி ஓசையை மட்டும் படைத்தாராம், ஓசையை 'த்வனி' என்று சமஸ்கிருதத்தில் அழைப் பார்கள். இந்த 'த்வனி' எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி ஒலித்துக் கொண்டே இருந்ததாம், இதை அறிந்த சிவன், தனது தாண்டவத்தை ஆரம்பித் தாராம், அப்போது உடுக்கையின் ஒரு பகுதியில் இருந்து, ஓசை வடிவம் எடுத்து சமஸ்கிருதமாக பிறந்தது, மறுபக்கத்தில் இருந்து அதன் இலக்கணம் பிறந்தது, அதனை சரஸ்வதி எழுத்தில் எழுதிவைத்தாராம்.
உடனே ரிஷிகள் அந்த எழுத்தை ஞானத்தால் உணர்ந்து வேதங்களை இயற்றினார்களாம், சரஸ்வதி இந்த வேதங்கள் இயற்றிய மொழியை வகைப்படுத்த முடியாமல் திணறியபோது, சிவன், தான் படைத்த சமஸ்கிருதத்தை முறைப்படுத்தி அதாவது பிழை திருத்திக் கொடுத்தாராம், (ஃப்ரூப் ரீடரோ!) இப் போது தான் ஒரு டுவிஸ்ட் வருகிறது, பிரம்மனிடம் சரஸ்வதி ஒரு சந்தேகம் கேட்கிறார், அதாவது சிவனின் உடுக்கையில் இருந்து பிறந்த மொழி புனிதமானது; ஆகவே இதை சூத்திரர் களும் படிக்க நேரிடுமே, அப்போது இம்மொழியின் தூய்மை குலைந்துவிடாதா என்று கேட்டார். கலைமகளின் இந்தச் சந்தேகத்தை சிவனிடம் எடுத்துக் கூற, மீண்டும் சிவன் தாண்டவமாட அவரது பாதங்களில் இருந்து ஓசைகள் உருவா யின; அதுவே சமஸ்கிருதம் அல்லாத பிற மொழி கள் ஆகும் (தமிழும் இதில் அடங்கும்) இந்த மகேஷ்வர சூத்திரத்தில் எந்த ஒரு சந்தேகமென் றாலும் வாரணாசிப் பார்ப்பனர் களிடம் விளக்கம் கேட்டால் இதைவிட தெளி வாகக் கூறுவார்கள்.
பிரம்மனின் முகத்திலிருந்து பிறந்தவர்கள் பார்ப்பனர்கள் என்றும் பாதத்தில் பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும் எழுதி வைத்தவர்கள், மொழிகள் மட்டும் ஒரே உடுக்கையில் பிறந்தவை என்று எழுதிவைப்பார்களா? இந்தக்கேள்வி சூத்திரர்களின் மனதில் எழவில்லையே ஏன்?
தமிழர்கள் 19-ஆம் நூற்றாண்டில் இருப்பார்கள் என்ற நினைப்பில் இல. கணேசன் வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டு திரிகிறார். தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் சமஸ்கிருத புராணங்களில் இருக்கும் பொய்களை தங்களது எழுத்துக்கள் மூலம் வெட்ட வெளிக்குக் கொண்டு வந்தனர்.
இன்று அந்த உண்மையை மறைத்து பொய் யுரைகளைப் பரப்பி வருகிறார்கள். மத்தியில் காவி வெறியர்கள் ஆட்சிபீடத்தில் அமர்ந்ததும், மக்கள் இவர்கள் கூறும் பொய்யை எல்லாம் நம்பி விடுவார்கள் என்று நினைத்து இப்படிஎல்லாம் பொய்களை அவிழ்த்துக் கொட்டுகிறார்கள். இல. கணேசன், இப்படியெல்லாம் பொய்களை அவிழ்த்து விட்டு அவமானப்படுவதைவிட 'சிவனே'ன்னு இருந்திருக்கலாம்.
சரி அப்படி சிவனின் உடுக்கையில் இருந்து பிறந்தது தமிழ் என்றால் அது எந்த ஊர்த் தமிழாக இருக்கும்? திருநெல்வேலி தமிழா? மதுரைத் தமிழா? கோவைத் தமிழா? அல்லது சிங்கார சென்னைத் தமிழா? அதையும் சேர்த்துச் சொல் லுங்கள். இல கணேசனாரே!
சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்துக் கலைஞர், சவுக்கை எடுக்கச் சொன்னதை வைத்து, சிவனை ஏற்காதவர்கள் சிவனேன்னு இருக்க வேண்டியது தானே என்று கேலி பேசுகிறார்.

இதன் பொருள் என்ன? சிவனேன்னு இருக்க வேண்டும் என்பதன் பொருள் என்ன? சுத்த வெத்து வேட்டு சிவன் என்று ஒப்புக் கொண்டு விட்டாரே!
கொசுறு: மொழிஞானம் சிறிதாவது உள்ளவர் கள்கூட, ஒரு கடவுளின் உடுக்கில் இருந்து மொழி பிறந்தது என்று சொல்லுவார்களா?
சிவனால் உண்டாக்கப்பட்ட சமஸ்கிருதம் ஏன் செத்தமொழி ஆயிற்றாம்?
- கருஞ்சட்டை
- கருஞ்சட்டை
-விடுதலை,19.6.16
தமிழ்க்கு சம்பந்தம் இல்லதா கிருந்துவ குஞ்சுகளின் பொலம்பல்
பதிலளிநீக்குகாட்டுமிராண்டியாக திரிந்துக்கொண்டு இருந்த வள்ளுவர்க்கு ஞான உபதேசம் செய்துவைத்தார் தாமஸ்.... அதன்பின் தான் அவர் திருக்குறளை இயற்றினார். போன்ற கட்டு கதைகளை திட்டமிட்டு பரப்பும் கிருந்துவ திரவிட குஞ்சுகள்
பதிலளிநீக்கு