தமிழ் மொழியின் மறுமலர்ச்சி, 1916ஆம் ஆண்டிலிருந்து, பல் லவபுரத்தைச் சேர்ந்த மறைந்த மறைமலை அடிகளால் தொடங் கப்பட்டது. தமது வாழ்நாளில் மிகச்சிறந்த தமிழ்க் காப்பா ளராக விளங்கிய அடிகள், ஆரியர் வருகைக்கு முன்பிருந்த தமிழை, தூய்மை யான தமிழை, மறுபடியும் அரங் கேற்றத் தொடங்கினார்.
மயக்கமும், அய்யப்பாடு களும் மறைந்தொழிய, தமிழை, தற்காலப் புதிய சிந்தனைகளை வெளிப் படுத்தப் பயன்படுத்தினார். கருத்தாழம் கொண்ட தமது வளமையான பல்வேறு இலக்கியப் படைப்புகளை தனித்தமிழால் மட்டுமே எழுதி, தமிழின் தகுதியை உயர்த்தினார். மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், திணிவு வேகத் தைக் கொடுத்தாலும், அரசு அம்முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்காததால், இணைக்கமான தாங்கு பயன் கிடைக்கவில்லை. உண்மையான முரண்கள் என்னவெனில், சூழ்நிலைகள், தமிழுக்கு எதிரானவையாகவே மாறின.
குறிப்பாக, இந்திய விடு தலைக்குப் பின் முரண்பட்ட சிந்தனையுள்ள தமிழறிஞர்கள், தொல் மரபுகளை மீறி மேல்நிலை பெற்றனர். இதன் வெளிப்பாடு, கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் மெய்யானது. அம்மாநாட்டை நடத்தியவர்கள், மறைமலையடிகளின் தனித்தமிழ்ப் பற்றாளர்கள், அம்மாநாட்டில் பங்கேற்க விடாமல், தடுத்து விட்டனர்.
மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணரின் The Primary Classical Language of the World உலகின் முதல் செம்மொழி தமிழில் டாக்டர் ம.சோ.விக்டர், யாத்திசைப் பதிப்பகம், அரியலூர்-621713.
- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி
- விடுதலை ஞாயிறுமலர், 24.11.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக