பக்கங்கள்

புதன், 4 செப்டம்பர், 2019

குறள்மீது கக்கும் நஞ்சு

1796 இல் சென்னைக்கு அரசுத் துறையில் பணியாற்ற வந்த எல்லீஸ் துரையவர்கள் தமிழ் படிக்க விரும்பினார்.

அவருக்குத் திருக்குறள் ஏட்டுச் சுவடியொன்றைத் தாம் வேலை பார்த்து வந்த வெள்ளைக்காரர் வழி சேர்ப்பித்தவர் அயோத்திதாசரின் பாட்டனாரான கந்தசாமி என்பவர்.

எல்லீஸ் தனக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க வந்த பிராமணர்களிடம், கந்தசாமி திருக்குறள் கொடுத்தா ரென்றார். அதற்கு அவர்கள், தீண்டத்தகாதவர், அவர் கொடுத்த திருக்குறள் தீண்டத்தகாதது'' என்ற னர்! காரணம், வள்ளுவர் புலச்சி யின் மகன் என்பது அவர்கள் எண்ணம்.

ஏன் இப்படி பிராமணர்கள் கருதுகிறார்கள்'' என்று கந்தசாமியை அழைத்து எல்லீஸ் துரை கேட்க, எங்களுக்கும், இவர்களுக்கும் விரோதம். எங்கள் வீதிக்குள் பிராம ணர்கள் வந்தால், உங்கள் பாதம் பட்ட இடம் பழுதாகிவிடும்'' என்று சொல்லிக் கொண்டு இவர்களைத் துரத்தி பிராமணர்கள் வந்த வழியிலும், சென்ற வழியிலும் சாணத்தைக் கரைத்துத் தெளித்து சாணச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள்'' என்று கூறினாராம்.

உண்மையான காரணத்தைப் புரிந்துகொண்ட எல்லீஸ் துரை திருக்குறளை ஆழமாகப் படித்து அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார்.

1819 இல் துரை திடுமென மறைய நேர்ந்ததால், நூல் முழுவதும் மொழி பெயர்க்காமல் போயிற்று.''

இவ்வாறு செந்தமிழ்ச் செல்வி'' கூறுகிறது.

திருக்குறள் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தக்க தருணத்தில் தலைநகரமாம் சென்னையில் ஒருங்கிணைத்து போற்றத் தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது (12.8.2019).

அம்மாநாட்டில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் குறள்மீது பார்ப்பனர்கள் கக்கும் நஞ்சினைத் தக்க எடுத்துக்காட்டுடன் விளக்கினார்.

1892 இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் சிவநாம சாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது, வள்ளுவர் பார்ப்பன விந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக் குறளைப் பாடினார். சுக்கில - சுரோனிதம்'' கலப்பறியாது'' என்று குறிப்பிட்டபோது, அந்தக் கூட்டத்தில் இருந்த திரு.க.அயோத்திதாச பண்டிதர் சில கேள்விகளை எழுப்பினார்.

நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவுபடுத்தப்படும் பறையர்கள் என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் எம்.ஏ.', பி.ஏ., படித்துப் பட்டங்களைப் பெற்று உயர்பதவிகளில் அமர்ந்தி ருக்கிறார்களே அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்கள்?''

சிவநாத சாஸ்திரியிடமிருந்து பதில் இல்லை; நெடுமரமாக நின்றார்.

அதோடு அயோத்திதாசர் விட்டுவிடவில்லை. தொடர்ந்து பெருங்குற்றங்களைச் செய்து சிறைச்சாலைகளில் அடைபட்டிருக்கும் பார்ப்பனர் கள் யார் விந்துக்குப் பிறந்தி ருப்பார்களென்று நீர் நினைக்கிறீர்?' என்று நேருக்கு நேர் நெற்றியடியாக வினா அம்பைத் தொடுத்தார் திரு.அயோத்திதாசர்.

அவ்வளவுதான் சிவநாம சாஸ்திரி ஆடிப்போய் விட்டார். ஆனரபிள் திரு.பி.அரங்கையா நாயுடுவும், எம்.விஜயராகவாச்சாரியும் அயோத்திதாசரை அமைதிப் படுத்தினர். மெல்ல கூட் டத்தைவிட்டு நழுவினார் சிவநாம சாஸ்திரி.'' இந்தத் தகவலை திராவி டர் கழகத் தலைவர் எடுத்துக் கூறினார். (அவரது உரை 4 ஆம் பக்கம் காண்க).

மேலே எடுத்துக்காட்டப்பட் டுள்ள இரு தகவல்களையும் எண்ணிப் பார்த்தால், பார்ப்பனர்கள் திருக்குறள்மீதும், தமிழ்மீதும் அடக்கி வைத்திருக்கும் வஞ்சக நஞ்சின் வக்கிரம் எத்தகையது என்பது நன்கு புரியுமே!

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 14. 8 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக