பக்கங்கள்

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

ஆதிபகவான் யார்?



திருக்குறளுக்கு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உரை எழுதத் துவங்கி - தனது குயில் ஏட்டில் அதனை வெளியிட்டு வந்தார்; பரிமேலழகரின் பார்ப்பனக் கண்ணோட்டமின்றி, அறிவார்ந்த  கண்ணோட்டத்தில் புரட்சிக்கவிஞர் எழுதிய உரை 85 குறட்பாக்களோடு நின்று விட்டது; டாக்டர் ச.சு.இளங்கோ அவர்களால் தொகுக்கப்பட்டு - பாரி நிலையத்தால் வெளியிடப்பட்ட  குறளை வெளியிடுகிறோம்.


"அகர முதல வெழுத்தெல்லா மாதி

பகவன் முதற்றே யுலகு" என்பது பாட்டு.

"அகரம் முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்று உலகு" என்பது அப்பாட்டின் சொற்களைப் பிரித்துரைத்தது.

அகரம் முதல, எழுத்து எல்லாம் ஆதி

உலகு பகவன் முதற்று ஏ என்பது சொற்களைப் பிரித்து,  மொழி மாற்றி யமைத்தது. மேற்செய்யுட்களுக்கெல்லாம் சொற்பிரித்தலை மட்டும் குறிக்க பி என்பதையும், அதனோடு மொழி மாற் றையும் குறிக்க பி.மா என்பதையும் குறிக்கப்படும்.

பொருள்: அகரம் முதல - அகரத்தை முதலாக உடைய, எழுத்து - எழுத்துக்களும், எல்லாம் - அவ்வெழுத்துக் களாலாகிய சொற்களும், அச்சொற்களால் பெறப்படும் பொருள்களுமாகிய  எல்லாம். ஆதி முதன்மையினின்று தோன்றியவை. உலகு பகவன் முதற்று - மக்கள் பகவனை முதல்வனாகக் கொள்ளத்தக்கவர்.

கருத்து: உலகும், உயிர்களும், மற்றுள்ள வைகளும் ஆதி என்பதினின்று தோன்றி யவை, ஆயினும் உலக மக்கள் பெறத்தக்க பேறு மெய்யுணர்வு ஒன்றே. ,

ஏ-ஈற்றசை, முதல - குறிப்புப் பெயரெச்சம். மலர, காய (அகம்) என வந்தன காண்க. ஆதி வட சொல்லன்று. தூய தமிழ்ச்சொல்லே. அஃது ஆதல் எனப் பொருள்படும். தொழிற்பெயர். ஆ - முதல் நிலை, தி - இறுதி நிலை. செய்தி, உய்தி என்பவற்றிற்போல். ஆதி - முதன்மை ஒரு பொருட் சொற்கள். இதை வடவர் மூலப் பிரகி ருதி என்பர்.

ஆதியாவது எல்லாப் பொருளும் தோன்றுதற்கிடமாவது. இதை,

"தனையறிவரிதாய்த் தாமுக் குணமாய்

மனநிகழ் வின்றி மாண்பமைப் பொரு ளாய்

எல்லாப் பொருளும் தோன் முதற் கிடமெனச்

சொல்லுதல் மூலப் பகுதி.

(மணி -சமய 203-206)

என்பதாலும் அறிக.

காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று பண்புகளும் ஒன்றுபட்ட நிலை ஆதி என்று உணரப்படும். அவற்றின் கலங்கிய நிலையே இவ்வுலக மெல்லாம் என்க. எல்லாம் ஆதி என்றதால், உலகம் ஆதி அல்லது முதன்மையினின்று தோன்றியது என்றவாறாயிற்று. எல்லாம் ஆதியினின்று தோன்றின என்னாது, எல்லாம் ஆதி என்றது என்னையெனில் காரணத்தில் உள்ளதே காரியத்திலும் உள்ளது என்னும் உள்ளது சிறத்தல் (சற்காரியவாதம்) ஆனதோர் முறை கொண்டு, மகனறிவு, தந்தையறிவு (நாலடி) என்பது போல. எல்லாம் எழுவாய். ஆதி. பயனிலை.

பகவன் வட சொல் அன்று; பகல் எனப் பொருள்படும் பகவு ஆண்பால் இறுதிநிலை பெற்றது. பகல் அறிவு, ஆகுபெயர், உணர்வு எனலும் அஃது. பகவன் ஆண்பாலாற் சொல்லப் படினும், பகவு அஃதாவது உணர்வு என்றே கொள்க.

இக்குறட்பாவுக்குப் பலரெல்லாம் பலவாறு பொருள் கூறினர். அவையனைத்தும் தத்தம் சமயத்தை அடிப் படையாகக் கொண்டவை. திருவள்ளுவர் சமயக் கணக்கர் மதிவழியே நூல் செய்தாரிலர்.

ஆத்திகன்: பகவன் என்பதற்கு மெய்யுணர்வு, அதாவது அறிவு என்று பொருள் கூறிக் கடவுள் என ஒருவர் இல்லை என்று ஆக்க எண்ணுகின்றீரா?

உரை ஆசிரியர்: ஆமாம் - அறிவான தெய்வமே என்று. தாயுமானாரும், அறிவை அறிவது பொருளென அருளிய குருநாதா என்று அருணகிரிநாதரும் அய்யுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வில்லாதவர்க்கு என்று இந்நூலாசிரியரும் போல.

நாத்திகன்: அறிவு ஒன்றே பெறத்தக்கது என்று கூறிக் கடவுள் ஒருவர் உண்டு என்பதை உறுதி செய்கின்றீர்களா? உரை ஆசிரியர்: பெறத்தக்கது அறிவு என்று நான், உண்மை உரை. கூறினேன். அதனால் கடவுள் ஒருவர் உண்டு என்று ஆய்விடாது. அப்படி ஆய்விடுமானால் ஆய்விடட்டும். அதனால் உமக்கென்ன முழுகிப்போகும்?

ஆத்திகன்: மக்கள் பெறத்தக்கது அறிவு என்று மட்டும் கூறிய நீவிர் அறிவாகிய கடவுள். என்று ஏன் கூற

வில்லை?

உரை ஆசிரியர்: கடவுள் என்ற சொல் மக்கள் அறிவு பெறாத காலத்தில் ஏற்பட்ட தாய் இருக்கலாம். கடவுள் - கடந்தது; அறிவுக்கு எட்டாதது என்ற அதன் பொருளையும் நோக்குக. எட்டாத ஒன்றுக்குப் பெயர் எப்படி எட்டியிருக்கும்?, இவைகளைக் கருதியன்றோ வள்ளுவர் தம் நூலில் கடவுள் என்ற பெயரையே எடுத்தாளாது விட்டார்.

நாத்திகன்: சாங்கியம் என்பது ஒரு மதமா?

உரை ஆசிரியர்: இல்லை . தமிழர்பால் தொன்றுதொட்டு இருந்துவரும் பண்பாடு. இடையில் திருவாரூர்க் கபிலர் எண்ணூல் என்ற பெயரால் நூலாக இயற்றியருளினார்,

நாத்திகன்; அந்தப் பண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே அக்கால நூல்கள் உண்டாகும் என்பதை விளக்க முடியுமா? உரை ஆசிரியர்: மேல் என்றால் வானத்தை நோக்கி அண்ணாந்து பார்ப்பது இந்நாள் வழக்கம். இந்நாளில் ஏற்படும். நூற்களும் அதை அடிப்படையாகக் கொண்டு தான் உண்டாகும். கீழ்ப்புறத்திற்கும் மேல் என்பது பொருந்தும் என்று கொண்டு கீழ்நோக்கார். அதுபோலவே அக்காலத் தமிழர்கள் இந்த உலகம் என்றைக்கு உண்டானது என்று ஆராய்வது பயனற்ற வேலை என்பார், உலகம் ஆதியினின்று முதன்மையினின்று தோன்றிற்று என்பார்! அந்தக் கருத்தின், பண்பாட்டின் அடிப்படையில்தான் அக்கால நூற்களும் அமைந்தன, உலகம் ஒருவனால்  உண்டாக்கப்பட்டது என்பதை அடிப்படையாகக் கொண்டு நூல் அமையாது. இதுதான் சாங்கியத்தின் அடிப்ப டையில் குறள் உண்டாயிற்று எனப்பட்டது. சாங்கியம் மதமன்று. அது எவராலும் உண்டாக்கப்பட்டது அன்று, அக்கருத்துக் களின் தொகுதியே எழுதாக்கிளவி எனப்பட்டது. எழுதியபின் எண்ணூல் என்றார்கள்.

எண்ணூல் பல மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. ஆரியர் - திபேத்தியர் முதலியவர்களால் பலவாறு திரித்து எழுதப்பட்டது, சாங்கியக் கருத்துக்கள் இயற்கையோடு இயைந்தவை, பகுத்தறிவுக்கு ஒத்தவை. ஆதலால்தான் அக்கருத்துக்கள் தத்துவ நூற்கள் என எழுந்த அனைத்திற்கும் அடிப்படையாகி மிளிர்கின்றன.

மதம், சமயம் என்று சொல்லப்படுவன அனைத்தும் ஒருவனால் - ஒரு கொள்கையை நோக்கி மக்களை இழுக்க உண்டாக்கப்படுவன, சாங்கியம் - கருத்துக்கள் - பண்பாடுகள் எவராலும் - எவரைத் தம்பக்கம் இழுக்கவும் ஆக்கப்பட்டன அல்ல என்பதை உணர்வார். அதை மதம் என்றார் என்பதை நீவிர் இங்கு நினைவிற் கொள்க.

ஆத்திகன்: எழுத்தெல்லாம், அகரத்தை முதலாகக் - காரணமாகக் கொண்டவை. அதாவது. அகரத்தினின்றே மற்ற எழுத்துக்கள் உண்டாயின, இது பெரியோர் கொள்கையல்லவா?

உரை ஆசிரியர்: எழுத்துக்கள் அனைத்தும் ஓம் என்றதினின்று தோன்றியவை என்று விளக்கிய மாணிக்க நாயக்கர் சிறியோரா? அன்றியும், அ முதல் ஔ வரைக்குமுள்ள உயிர்கள் பனிரண்டு. அவற்றில் ஓர் எழுத்திலிருந்து: மற்றவை தோன்றின என்பது எப்படிப் பொருந்தும்? காலில் விலங்கும் கையில் விலங்கும் உடல் மறைய ஒரே வகைச் சட்டையுமாயச் சிறையில் இருக்கும் பனிரண்டு குற்றவாளிகளில் ஒருவன் மற்றவரை ஆக்கினாள் எனில் அதற்கு என்ன அடையாளம்? என்ன ஆதாரம்? சொல் லத்தான் வேண்டும் என்று மத, மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் ஊற்றுக்கு நிற்காது.

ஆத்திகன்: எழுத்துக்களில் நான் அகரமாய் இருக்கிறேன் என்று கண்ணபிரானே சொல்லவில்லையா?

உரை ஆசிரியர்: ஆமாம் கண்ணபிரான் மக்களை இருட்டில் வருக என்று அழைக்கிறான். நாம் ஏன் போகவேண்டும்? வள்ளுவரைப் பின்பற்றவேண்டுவது வையத்தின் கடனன்றோ?

ஆத்திகன்: இந்த அதிகாரத்திற்குக் கடவுள் வாழ்த்து என்று இருந்ததை நீவிர் உலகின் தோற்றம் என்றது என்ன?

உரை ஆசிரியர்: இதுதான் வள்ளுவர் உள்ளம். கடவுள் வாழ்த்து இடையில் ஏற்பட்ட வேலை...

நாத்திகன்: முதல் நான்கு அதிகாரங்கள் வள்ளுவர் அருளிச் செய்தனவா?

உரை ஆசிரியர்: இல்லை என்று வ.உ. சிதம்பரனார் எண் ணுகின்றார். நான் அவ்வாறு எண்ணவில்லை. உரை முழுவ தும் நீர் படித்த பின் நான் சொல் லுவது உண்மை என்று உமக்கே தோன்றலாம்.

(குயில் 1-12-1959)

- விடுதலை ஞாயிறு மலர், 17 .8 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக