13.11.1948-குடி அரசிலிருந்து...
ராவணனை விட்டு விபீஷணன் நீங்கிய தற்கும், சுயமரியாதைக் கட்சியை விட்டு ராம நாதன் நீங்கியதற்கும் ஒப்புதல் காட்டிவிட்டாரே ராஜகோ பாலாச்சாரியார். இது போலவே வெங்கிடசாமி நாயுடு விஷயத்திலும் சொன் னார். இந்த ராமாயண சம்பிரதாயந்தானே அன்று முதல் இன்று வரைக்கும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
கீதையை ஆரியர்கள் போற்றுவதேன்?
நீங்களே சிந்தித்துப் பாருங்கள், பார்ப்ப னர்கள் குறளுக்கு எவ்வளவு மரியாதை செய்கிறார்கள். கீதைக்கு எவ்வளவு மரியாதை செய்கிறார்கள். அவர்கள் பகவத்கீதையை அச்சுப் போட்டு இனாமாக வழங்கி வருவதும் அதைப்பற்றிப் பெருமையோடு எங்கும் பேசிவருவதும் உங்களுக்குத் தெரியாத தல்லவே! இது ஏன் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? கிருஷ்ணன் கீதையின் மூலம் 4 ஜாதிமுறை உண்டென்பதையும், அதில் பார்ப்பனர்களே முதல் ஜாதியினர் என்பதையும் - கடவுளுக்கும் பெரியவர்கள் பார்ப்பனர்கள் என்ற தத்துவம் இருப்பதோடு, எப்படியும் அதர்மம் செய்தவர்களுக்கு மன்னிப்பு உண்டு, வர்ண அதர்மம் செய்பவர்களுக்கு மன்னிப்பு இல்லை என்று ஒப்புக் கொண்டிருப்பதுதான் அதற்குக் காரணம் என்பதை உணருக! வேதாந்தி களுக்கும், பார்ப்பனர்களுக்கும் கீதையில் 1000 வரி தெரிந்திருப்பது ஏன்? குறளில் 2 வரி கூடத் தெரியாதது ஏன்? என்பதையும் சிலர் காவி வேட்டி கட்டிக்கொண்டு திராவிடர் கூடக் கீதைப் பிரசாரம் செய்துவருவது ஏன்? என்பதையும் யோசித்துப் பாருங்கள். கீதை எவ்வளவு அக்கிரமத்துக்கும் முக்காடுபோட்டு விடும் காவி உடையைப் போல் ஏன்? கீதைக்குத் தலைவனான கிருஷ்ணனே அக்கிரமத்தின் தலைவனான காரணத்தால்.
பித்தலாட்ட போர்வை கீதை! அதற்கு பெரிய நெருப்பு குறள்!
தோழர்களே! நாம் எதிர்க்கும் நான்கு ஜாதிமுறையைக் கடவுளின் பேரால் வலி யுறுத்தத்தான் கீதையும் கிருஷ்ண பஜனையும் என்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும்.
கீதை படிப்பவர்கள் எத்தகைய தர்மத் தையும், ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசிய மில்லை. ஏனெனில் பகவானே இதைச் செய்துள்ள போது சாதாரண மனிதனான நான் எம்மாத்திரம் என்றோ, எல்லாம் பகவான் செயல் என்றோ, நான் ஏன் பார்ப்பான் என்பதைக் கிருஷ்ண னிடம் கேட்டுத் தெரிந்துக் கொள் என்றோ சுலப மாகப் பதில் கூறிவிடலாம். ஆனால் குறளைப் படித்தாலோ தர்மத்தின் படி நடக்க வேண் டும். பித்தலாட்டம் செய்ய முடியாது. பித்த லாட்டம் செய்பவரைக் கண்டாலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. குறளிலும் இன்றைய நிலைக்குப் புறம்பான கருத்துக்கள் சில இருக்கலாம். அவற்றை மாற்றிவிட வேண்டியதுதான். அத்தகைய மாற்றத்திற்கு இடம் தருவதுதான் குறள்.
மனித சமுதாயத்திற்கே வழிகாட்டி குறள்!
குறளை முசுலிம்கள், கிறிஸ்தவர்கள் உட் பட யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். மாமி சம் சாப்பிடுவது மறுக்கப்பட்டிருக்கிறது என்னலாம். காய்கனி தானியம் இவை அபரி தமாகக் கிடைக்குமானால், மாமிசம் தின்ன வேண்டிய அவசியம்தான் என்ன இருக்கிறது.
முகம்மது நபியவர்களால் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களைக் குறளில் அப்படியே காணலாம். முசுலிம்களுக்கு எதிராக அதில் ஒன்றுமே காணமுடியாது. அது மனு தர்மத்துக்கு உண்மையான விரோதி நூல் என்று திடமாகவே சொல்லலாம். மனுதர்ம சூத்திரங்களுக்கு நேர்மாறான கருத்துக் களைக் கொண்ட குறள் அடிகளை ஏராள மாகத் திருக்குறளிலிருந்து எடுத்துக்காட்ட லாம்.
மனித சமுதாயத்திற்கே நல்வழிகாட்டி, நன்னெறி யூட்டி, நற்பண்புகளையும் ஒழுக் கங்களையும் கற்பிக்கும் வகையில் எழுதப் பட்ட நூல்தான் திருக்குறள். எனவேதான், எல்லா மக்களும் எல்லா மதத்தவரும் எங்கள் குறள், எங்கள் மதக்கருத்தை ஒப்புக் கொள்ளும் குறள் என்றெல்லாம் அதைப் போற்றி வருகிறார்கள்.
எனவேதான், அதன் ஆசிரியரைக் கூட சில மதத்தினர் தம்மவர் என்று உரிமைப் பாராட்டிக் கொள்கிறார்கள். ஜைனர் தம்மவர் என்று கூறி அவரை மொட்டைத் தலையராகக் காட்டுகிறார்கள். சைவர்கள் அவரை தம்மவர் என்று கூறி ஜடாமுடி யுடன் விபூதிப் பட்டையுடன் காட்டு கிறார்கள். அவரோ எம்மதமும் இல்லா தவராகவே தோற்று கிறார். ஒரு இடத்தில் மயிரும் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. மொட்டையும் அடித்துக்கொள்ள வேண் டியதில்லை. யோக்கியனாய் இருக்க வேண்டு மானால் என்று கூறியிருக்கிறார். அப்படியான பெரியாரை வைணவர்கள் தம்மவர்தான் என்று கூறிக்கொண்டு வடகலை நாமம் போட்டுக் காட்டு கிறார்கள். அவரை ஆழ்வாரில் ஒருவராகவும் ஆக்கிவிடுகிறார்கள். அவருக்கு வடகலை நாமம் போட்டது மகாமகாக் கொலைபாதகத்தனமாகும்.
இராமாயணக் கூத்து ஏன்?
திருவள்ளுவர் தவிர்த்த வேறு யாரையும் மற்ற மதத்தவர்கள் இம்மாதிரி மதிப்ப தில்லையே. இதிலிருந்தே தெரியவில்லையா, குறளில் காணப்படும் திராவிடப் பண்பு எத்தகையது என்று? இப்படிப்பட்ட திருக் குறளை விரும்புவதை விட்டு நம் நாட்டவர்கள் இராமாயணத்தை வைத்துக் கொண்டு கூத்தடிக்கிறார்களே அது நியாயமா?
எவளோ ஒருத்தி சொன்னாளாம் பன்னாடைக்குப் பிறந்ததெல்லாம் பந்தம் பிடிக்குது. பண்டாரத்துக்கு பிறந்ததெல்லாம் மணியம் பார்க்குது என்று. அதாவது மதிக்கப்பட வேண்டியது மதிக்கப்படாமல், மதிக்கப்படக் கூடாதன மதிக்கப்படுகின்றன என்று அர்த்தம். மேற்படி பழமொழி எப்படி வந்ததென்றால், முன்பெல்லாம் மிராசு தாரர்கள் கூத்திகளை வைத்துக் கொள் வார்கள். அவர்கள் கூத்தியோடு இருந்தால் அவர்கள் மனைவிமார் ஊர் பண் டாரத்தைத் துணைக்கு வைத்துக் கொள்வார்கள்.
தொடரும்
ஆரியரின் ஆத்திரம்
வள்ளுவரை ஆரிய மதத்தோடு சேர்த்துக் கொண்டு எப்படி அவர் மறைக்கப்பட்டு வந்தாரோ, அப்படியே புத்தரையும் பார்ப்பனர் மறைத்து வந்ததை வெட்ட வெளிச்சமாக்கு கிறோமே என்கின்ற ஆத்திரத்தின் காரண மாகப் பார்ப்பனர் கண்டபடிப் பேசுகிறார்கள். நமக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. மேலெல்லாம் மலம் பூசிக் கொண்டு திரிபவன் மற்றொருவ னைப் பார்த்து, 'உன்மேல், கெட்ட நாற்றம்; அடிக்கிறது' என்பது போல்தான் அது.
("புரட்சிக்கு அழைப்பு", என்ற நூலிலிருந்து)
- விடுதலை நாளேடு, 13 .9 .19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக