"எங்கள் மனதைப் புண்படுத்த வேண்டவே வேண்டாம்!"
ஆஸ்திரேலிய அரசுக்கு ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள் கோரிக்கை
சிட்னி,அக்.27 எங்கள் மூதாதையர் இராவணனை எரித்து எங்களைப் புண் படுத்த வேண்டாம் என்று ஆஸ்திரேலிய அரசுக்கு ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இராவணன் தமிழர்களின் மரியாதைக் குரிய வணங்கும் மூதாதையர்களில் ஒருவ ராக இருப்பதால் அவரது உருவ பொம் மையை எரிக்கும் நிகழ்வு தமிழர்களை வேதனை கொள்ளவைக்கிறது, தசரா நிகழ்விற்கு எதிராக ஆஸ்திரேலியா நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆஸ் திரேலிய தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அரசுக்கு ஆஸ்திரேலிய தமிழர்கள் அனுப்பியுள்ள கோரிக்கை மனு வருமாறு:
"உலகம் முழுவதிலும் வாழும் தமி ழர்கள் இராவணனை தங்களின் முன் னோர் என்றே பார்க்கின்றனர். தமிழர் களின் வாழ்க்கையில் இராவணனுக்கு என்று மரியாதை என்றுமே உள்ளது. அவர் மதிப்பிற்குரியவராகக் கருதப்படு கிறார். தமிழ் இனத்தின் மரியாதைக்குரிய மூதாதையர்களில் ஒருவராக இருப்பதால் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அவருக்கு மிகுந்த மரியாதை செலுத்து கிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பல பகுதிகளில் தசரா என்னும் திருவிழா கொண்டாட்டத்தின் போது தீமைக்கு எதிரான வெற்றியைக் குறிக்க இராவணன் உருவ பொம்மை எரிக்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் அங்கு வாழும் மக்கள் இராவணனை கடவுளாக வணங்குகிறார்கள். இந்தியா வின் பூர்வகுடிகளுக்கான பல பழமையான கோவில்களில் இராவணன் முக்கிய தெய்வமாக வணங்கப்பட்டு வருகின்றார். தமிழகம், ஆந்திரா, கேரளா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஒடிசா மற்றும் சத்தீஸ்கரிலும், தென்கிழக்கு மராட்டியப் பகுதிகளிலும் இராவணனுக்கு கோவில் கள் உள்ளன. இராவணனை சமத்துவத்தின் அடையாளமாகத் தமிழர்கள் கருதுகின்றனர்.
'இராவணன் தகனம்' என்ற பெயரில் தீமைக்கு எதிரான வெற்றியைக் குறிக்கும் அடையாளம் என்று கூறி இராவணன் வடிவத்தை எரித்து வருகின்றனர். இது தமிழர்களின் வாழ்வியலோடு வேரூன்றிய உணர்வுகளை அவமானப்படுத்தும் கொடுஞ் செயல்களில் ஒன்றாகும். ஆஸ்திரேலியா போன்ற ஒரு பன்முக கலாச்சார நாடு தமிழர்கள் உட்பட பல இனக்குழுக்கள் அளித்த பங்களிப்புகளால் வளர்ச்சி பெற்றுள்ளது. இங்கு 'இராவணன் தகனம்' என்ற பெயரில் தசரா அன்று இராவணன் பொம்மையை எரிப்பது மற்றும் பட் டாசுகள் வெடித்து மாசு ஏற்படுத்தும் தீபாவளி போன்ற மூடப்பழக்க வழக்க கதைகள் அடிப்படையிலான திருவிழாக் களை அனுமதிப்பது ஆஸ்திரேலியாவின் பன்முக கலாச்சாரத்திற்கு எதிரானது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், ஆஸ்திரேலிய அரசாங்கம் இதுபோன்ற ஒரு முட்டாள்தனமான திருவிழாக்கள் கொண்டாட அனுமதிக்கக் கூடாது. இனி வரும் காலங்களில் மற்றும் எதிர்காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத் திலும் இராவணனின் உருவப் பொம் மையை எரிப்பதை தடுத்து நிறுத்துமாறும், இது போன்ற செயலுக்கு ஊக்கமளிப்பதை நிறுத்துமாறும் ஆஸ்திரேலிய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
உலகெங்கிலும் உள்ள மிகச் சிறந்த இனக்குழுக்களில் ஒன்றான தமிழர்களை வேதனைக்குள்ளாக்கும் நோக்கில் எங்கள் மூதாதையர் இராவணன் உருவப் பொம் மையை எரிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழர்களின் மனதை வேதனைப் படுத்தும் இத்தீய கொண்டாட்டம் தடை செய்யப்பட்டு நிறுத்தப்பட வேண்டும், ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களின் உள்ளத்தை இது புண்படுத்துகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள அரசப் பிரதிநிதிகள் இந்தி பேசும் மக்கள் கொண்டாடும் இந்த விழாவை ஆதரிக்கவும் ஊக்கு விக்கவும் கூடாது. நாங்கள் இந்துக்களை இந்தியர்களை எங்கள் சகோதரர்களாகப் பார்க்கிறோம், ஆனால் அவர்கள் விழா என்ற பெயரில் எங்களின் மரியாதைக்குரிய மூதாதையரை தீயவர் என்று கூறி எரித்துக் கொண்டாடுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்; இராவணனை எரிக்கும் நிகழ்வைத் தவிர வேறு எந்த விழாவிற்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்.
மத நம்பிக்கை என்ற பெயரில் மரணத்தையும் கொண்டாடுவது என்பது மனிதாபிமானமா? நீங்கள் கொண்டாடும் நபரின் மீது மரியாதை உள்ளவர்களின் தலைமுறைகள் வேதனைப்படுமல்லவா? உங்களின் செயல் நியாமா? நாங்கள், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்கள், அனைத்து இனத்தவர்களையும் நேசிக் கிறோம், பிற கலாச்சாரங்களையும் மதிக் கிறோம், அதே போல் நீங்களும் எங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த கோரிக்கைக்கு ஆஸ்திரேலிய அரசின் அனைத்து அரசப் பிரதிநிதிகளும் ஆதரவு தர வேண்டும்" என்றும் கூறி கோரிக்கை மனுவை ஆஸ்திரேலிய தமி ழர்கள் அளித்துள்ளனர். மேலும் இணை யம் வழியாக உலகம் முழுவதிலும் அவர் களது கோரிக்கைக்கு ஆதரவும் கோரியுள்ளனர்.
- விடுதலை நாளேடு 27 10 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக