பக்கங்கள்

திங்கள், 13 ஜனவரி, 2020

தந்தை பெரியாரும் திருக்குறளும்

திருக்குறளை பரப்புவதில் தந்தை பெரியார் 1929 முதல் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.

எட்டணாவுக்குத் திருக்குறள் (மூல நூல்) 'திராவிடன் பதிப்பகம், 14

மவுண்ட் ரோட், சென்னை' என்னும் முகவரியில் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யப் பட் டது. ('குடிஅரசு' : 24.12.1929)

அதுபோன்றே 1953 ஜனவரி வாக்கில் திருக்குறள் மலிவுப் பதிப்புக் கிடைக்கும் என்று விளம்பரம் செய்தார் பெரியார்.

1953இல் 170 பக்கமுள்ள பாக்கெட் சைஸ் திருக்குறள் புத்தகம் திராவிடன் அச்சகத்தில் பதிப்பித்தது. விலை அணா 6. தேவை உள்ளோர் முந்திக் கொள்ளவும் என்னும் விளம்பரம் 'விடுதலை செயலகம்' எனும் பெயரில் வெளியானது (07.01.1953)

பத்து நாள் சென்று குறிப்பு எனப் போட்டு 'விடுதலை'யில் வெளிவந்த விளம்பரம் புதிய செய்தியொன்றை அறிவித்தது. நேற்று வரையில் விளம் பரத்தில் குறள் விலை 6 அணா என்று போடப்பட்டிருந்தது. பிறகு கொள்முதல் பார்த்ததில் விலையில் சிறிது குறைக்கலாம் என்று தெரிய வந்தது. ஆகவே விலையை இப்போது 5 அணாவாகக் குறைத்திருக்கிறோம்.

5 அணாவுக்குத்தான் ஏஜண்டுகள் விற்க வேண்டும் என்பதே அது. ('விடுதலை', 17.01.1953) சான்றாண்மை நிரம்பிய இவ்விந்தைச் செய்தி, பெரியாருக்கு குறளைப் பரப்புவதில் இருந்த ஆர்வத்தை அறிந்து நம்மை மலைக்க வைக்கிறது.

தகவல் : இறைவி இறையன்

- விடுதலை நாளேடு, 11.1.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக