பக்கங்கள்

வியாழன், 9 மார்ச், 2023

பார்ப்பன பனியாக்களுக்காக உருவாக்கப்பட்டதே ஹிந்தி


ஆண்டுதோறும் செப்டம்பர் 14ஆம் தேதியில்  ஹிந்தி நாள் என்று கொண்டாடி வருகின்றனர். இன்றுவரை ஹிந்தி நாள் கொண்டாட்டத்திற்கு ஏன் செப்டம்பர் 14ஆம் தேதியை தேர்ந்தெடுத்தார்கள் என்ற விபரம் எங்கும் கிடைக்கவில்லை. 

ஹிந்தியை வலுக்கட்டாயமாக திணிக்க வாஜ்பாயை விட அதிவேகத்தில் அச்சுறுத் தும் விதமாக மோடி அரசு நடந்து வருகிறது.  மோடி மற்றும் அமித்ஷா ஒரே குரலில் கூறு வது பல்வேறு மொழிகள், எழுத்து வடிவங் கள் மற்றும் பேச்சுவழக்குகளைக் கொண்ட நாட்டில் ஒருங்கிணைக்கும் சக்தியாக ஹிந்தி வேண்டும் என்று -  பழைய தேய்ந்த இசைத்தட்டுப் போல் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்

ஹிந்தியின் ஆதிக்கம் பற்றிய விவாதம் புதிதல்ல. 1800-களின் நடுப்பகுதி யில் இருந்து, இந்திய துணைக்கண்டத்தில் அம்மொழி பேசப்படும் பகுதிகளில் உருதுவு டன் முரண்பட்டது. இன்று நாம் அதை ‘ஹிந்தி பகுதி’ என்று அழைக்கிறோம்

வரலாற்றாசிரியர் சுமித் சர்க்கார், ‘நவீன இந்தியா'  என்ற தனது புத்தகத்தில், “உருது வட இந்தியாவின் பெரும்பகுதியில், இஸ்லா மியர்களுக்கு கண்ணியமான கலாச்சாரத் தின் மொழியாக இருந்த அளவுக்கு ஹிந்துக் களுக்கு இல்லை” என்று குறிப்பிட்டார்.  1800-1880-க்கு இடைப்பட்ட காலத்தில் ஹிந்தியை விட இரண்டு மடங்கு உருது புத்தகங்கள் வெளியிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். பத்திரிகைகளுக்கும் இதே நிலைதான் இருந்தது. ஹிந்தியில் வெளியான 8002 செய்தித்தாள்களுடன் ஒப்பிடுகையில் 16,256 உருது செய்தித்தாள்கள் வெளியானது.

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி இந்திய துணைக்கண்டத்தில் காலடி எடுத்து வைத்த வுடன் விஷயங்கள் மாறத் தொடங்கின. 

19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வட இந்தியாவில் ஏற்பட்ட சமூக-அரசியல் மாற்றங்கள், ஹிந்தி மற்றும் உருது ஆகிய இரு வட்டார மொழிகளின் பிளவுகளுடன் அரசாங்கக் கல்வி முறையின் விரைவான விரிவாக்கத்துடன் சேர்ந்து கொண்டது.   பார்ப்பனர், ராஜ்புத் மற்றும் பனியா பிரிவு களை சேர்ந்தவர்கள் ஹிந்தி பள்ளிகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என் றும், பாரசீக மற்றும் உருது பள்ளிகள் முஸ் லீம்கள் மற்றும் இதர ஜாதியினர் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்ததாகவும் அக் கால ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 

நிர்வாகத்தில் ஒரு வேலையைப் பெறு வதற்கான ஆசை, ஹிந்தியின் பல ஆதர வாளர்களை அதன் தகுதிகளை பேசத் தூண்டியது. அது துணைக்கண்டத்தின் பூர்வீக குடிகளின் மொழி என்பதும், முக லாய ஆட்சியின் போக்கில் அது அடக்கப் பட்டது என்பது உள்பட பேசப்பட்டது. ஹிந்தி இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பரதேந்து ஹரிச்சந்திரா மற்றும் அகில பாரதிய ஹிந்து பரிஷத்தை நிறுவிய பண்டிட் மதன் மோகன் மாளவியா போன்றவர்கள் ஹிந்தியை பிரபலப்படுத்து வதற்கான இயக்கத்தின் முக்கிய நபர்களாக இருந்தனர்.

கே.எம்.முன்ஷி மற்றும் என்.கோபால சுவாமி அய்யங்கார் குழு ஹிந்தி ஆதரவா ளர்கள் மற்றும் ஆங்கிலத்திற்கு அரசமைப்பு தகுதி வேண்டும் என்று விரும்பிய தென்னிந் தியாவில் இருந்து வந்த பிரதிநிதிகளின் கோரிக்கைகளை கணக்கில் எடுத்துக் கொண்டது.

இறுதியாக ஒரு சமரசம் எட்டப்பட்டது, அதில் ஹிந்தியுடன் ஆங்கிலமும் 15 ஆண்டு களுக்கு இந்தியாவின் அலுவல் மொழியாக மாற்றப்பட்டது. பிறகு, அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஒரே மொழியாக ஆங்கிலத்துக்கு பதிலாக ஹிந்தி மாறும் என்றனர்.

15 ஆண்டு காலம் முடிவடைந்தபோது, ஹிந்தி பேசாத இந்தியாவின் பெரும் பகுதி களில், குறிப்பாக தமிழ்நாட்டில் ஹிந்தி திணிக்கப்படும் என்ற அச்சத்தில் போராட் டங்கள் வெடித்தன.  1965 ஜனவரியில் மதுரையில் தொடங்கிய கலவரம், விரைவில் சென்னைக்கும் பரவியது. போராட்டங் களின் விளைவாக, அலுவல் மொழிச் சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றியது. அதில் ஹிந்தியுடன் ஆங்கிலம் தொடர்ந்து அதிகாரப்பூர்வ மொழியாக நிலைநிறுத்தப் படும் என்று கூறியது.

அடுத்தடுத்த ஆண்டுகளில், ஹிந்தி மொழியை இந்தியாவின் ஒருங்கிணைக்கும் மொழியாகப் பிரச்சாரம் செய்ய அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டது. அவற் றில் ஹிந்தி தினம் கொண்டாட்டமும் ஒன்று. 2011 மொழிவாரி மக்கள்தொகை கணக் கெடுப்பின்படி, அரசமைப்பின் 8ஆவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகள் உட்பட 121 தாய்மொழிகள் உள்ளன.

52.8 கோடி தனிநபர்கள் அல்லது 43.6% மக்கள் ஹிந்தி மொழியைத் தங்கள் தாய் மொழியாக அறிவிக்க வலிந்து கட்டாயப் படுத்தப் படுகின்றனர் . அடுத்ததாக அதிகபட்சமாக பெங்காலியை 9.7 கோடி மக்கள் (8%) தாய்மொழியாக அறிவித்துள் ளனர் - இது ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கையில் அய்ந்தில் ஒரு பங்கிற்கும் குறைவானது.

ஹிந்தி தெரிந்தவர்களின் எண்ணிக்கை யைப் பொறுத்தவரை, இந்த எண்ணிக்கை நாட்டின் பாதிக்கு மேல் உள்ளது. ஏறக் குறைய 13.9 கோடிக்கும் அதிகமானோர்) ஹிந்தியை இரண்டாவது மொழியாக அறி வித்துள்ளனர். மக்கள்தொகையில் கிட்டத் தட்ட 55% பேருக்கு ஹிந்தி மொழி தாய் மொழி அல்லது இரண்டாவது மொழியாக வலிந்து திணிக்கப்பட்டுள்ளது.

ஹிந்தி கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு களாக வட இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் தாய்மொழி போல் உயர்ஜாதியினர் நடத்தும் ஊடகங்களின் வழியே மக்களி டையே கொண்டு செல்லப்பட்டது.  அடுத் தடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் மக்கள்தொகையில் ஹிந்தி பேசுவோரின் விகிதம் அதிகமாவது போல் பார்த்துக் கொள்ளப் படுகிறது.

1971 இல், 37% இந்தியர்கள் ஹிந்தி மொழி யைத் தங்கள் தாய் மொழியாக அறிவித் ததுபோல் அறிக்கை வெளியிடப்பட்டது. இது அடுத்த நான்கு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 38.7%, 39.2%, 41% மற்றும் 43.6% ஆக உயர்ந்துள்ளது. 1971 மற்றும் 2011 க்கு இடையில், தங்கள் தாய்மொழியை ஹிந்தி என்று அறிவித்த தனிநபர்களின் எண்ணிக்கை 2.6 மடங்கு அதிகரித்து 20.2 கோடியிலிருந்து 52.8 கோடியாக உயர்ந் துள்ளது. பஞ்சாபி, மய்திலி, பெங்காலி, குஜராத்தி மற்றும் கன்னடம் ஆகியவற்றில் இந்த எண்ணிக்கை இருமடங்காகவும், மராத்தியில் கிட்டத்தட்ட இரு மடங்காகவும் அதிகரித்தது. ஹிந்தி ஒன்றிய அரசின் இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாகும்.

 2011 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண் டாடுபவர்களின் எண்ணிக்கை 2.6 லட்சம் மட்டுமே.

2011-இல் இரண்டாவது மொழியாக ஹிந்தி மொழி பேசுவதாக 13.9 கோடி பேர் தெரிவித்தனர். அதற்கு அடுத்தபடியாக, 8.3 கோடி பேர் ஆங்கிலத்தை பேசுவதாக தெரிவித்தனர். 1880-களின் நடுப்பகுதியில் இருந்தே இங்கே பார்ப்பன பனியாக்களுக்கு என்று தனிக்கலாச்சாரத்தை உருவாக்க வலுக் கட்டாயமாக திணிக்கப்பட்ட மொழியே ஹிந்தி என்று தெளிவாக இதன் மூலம் தெரியவருகிறது. 

 இன்று அதிகாரத்தில் இருக்கும் பாஜக அரசு ஹிந்தி பேசாத கடற்கரைப் பகுதி மாநிலங்களில் ஹிந்தியை சர்வாதிகாரப் பாணியில் திணிக்கும் வேலையை ஜரூராக நடத்திக்கொண்டு வருகிறது.   எத்தனை வேடங்கள் போட்டு வந்தாலும் தமிழ்நாட் டில் பெரிதும் உள்ள ஹிந்தி எதிர்ப்பு உணர்வு ”சாயம் வெளுத்த நரிக்கதைபோல்” ஹிந்தித் திணிப்பின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டிவிடும்.

- பாணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக