வெள்ளி, 26 ஜனவரி, 2018
மொழி துவேஷம் - இனத் துவேஷம் இரண்டும் சங்கர மடத்தின் இரு விழிகள்!
திங்கள், 22 ஜனவரி, 2018
மூத்த மொழி தமிழ்
டாக்டர் மு.வரதராசனார் அவர்கள், ‘மொழியியற் கட்டுரைகள்’ என்னும் நூலில், "இந்தி முதலிய வடநாட்டு மொழிகள் திராவிட மொழியைப் பின்பற்றி அமைந் திருக்கின்றன” என்றும், “இந்தி முதலிய மொழிகள் வட சொற்பெருக்கம் மிகவாக உடையனவேனும், அவற்றின் அமைப்புக்குக் காரணமான தாய்மொழி, திராவிடமொழியே என்பது நன்கு விளங்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் மு.வ. அவர்கள் ‘மொழிவரலாறு' என்னும் நூலில், ‘வடநாட்டில் பண்டைக் காலத்தில் மக்களின் மொழியாக வளர்ந்த பிராகிருதமொழிகளில், வடமொழிக் கூறுகள் தவிர, திராவிட மொழிக் கூறுகளும் இருந்தன’ என்றும், “ஆரியர்கள் இந்தியாவிற்குள் புகுந்தபோது, திராவிட மொழிகளின் செல்வாக்கால், அவர்களின் மொழியில் மாறுதல்கள் பல ஏற்பட்டன என்னும் கொள்கை, மொழி நூலார் பலரும் உடன்பட்ட ஒரு கொள்கையாகும்” என்றும், “வட இந்தியாவில் வாழ்ந்த பழங்காலத்து மக்கள் வழங்கிய பிராகிருதம், சமத்கிருதம், பாலி போன்றவற்றில் திராவிடமொழிச் சொற்கள் பல கலந்திருப்பதைத் தெளிவாகக் காணலாம்” என்றும் கூறியுள்ளார்.
மொழிநூல் அறிஞர் அலெக்சாண்டர் கொந்தரத்தோவு என்பார், “உபெய்துமொழி, மெசபொடோமியா மொழி, ஏலம்மொழி, ஆத்திரேலியப் பழங்குடியினர் மொழி போன்றவைகள், திராவிட மொழியின் வேர்ச் சொற்கள் சிலவற்றைப் பெற்றிருக்கின்றன” என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆராய்ச்சி அறிஞர் திரு ஞானகிரியார், ‘Latin words of Tamil origin’ ËL½‹ ‘Greek words of Tamil Origin’
என்ற நூலிலும் முறையே இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிச் சொற்கள் பல தமிழ் மூலத்திலிருந்துதான் பிறந்தவை என்பதற்கான காரணகாரிய விளக்கங்களைத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.
‘காசுசியன் பல்கலைக்கழகத்தைச்’ சேர்ந்த பேராசிரியர் சுசுமு ஓனோ என்னும் அறிஞரும், தென்கொரியாவின் ‘கேமிப் பல்கலைக்கழகத்தைச்’ சேர்ந்த பேராசிரியர் மத்துபாரா என்னும் அறிஞரும் சப்பானிய மொழித் தோற்றத்திற்குத் திராவிட மொழிகள் அடிப்படையாக அமைந்திருக்க வேண்டும் என்னும் கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள், திராவிட-சப்பானிய மொழிகளுக் கிடையே அமைந்துள்ள இலக்கண ஒற்றுமை யையும், உடலுறுப்புப் பெயர்கள், எண்கள் ஆகியவை இரு மொழிகளிலும் பெற்றுள்ள ஒற்றுமையையும் சிறப்பாக எடுத்துக் காட்டி யுள்ளனர். அறிஞர் பர் குலாம் அலி அல்லானா என்பவர், சிந்தி மொழிக்கும், திராவிட மொழிக்கும் உள்ள ஒப்புமைகளை எடுத்துக் காட்டியுள்ளார்.
திரு மீ.மனோகரன் என்பவர், தென் அமெரிக்காவில் வாழும் பழங்குடி மக்களின் மொழிகளில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன என்றும், அவர்களுடைய நாகரிகமாகக் குறிப்பிடப்படும் ‘பெரு’ என்பதே, பெருமைக்குரிய தமிழ்ச்சொல் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
- நாவலர் இரா.நெடுஞ்செழியன்
(திராவிட இயக்க வரலாறு, பக்கம் 99-100)
-விடுதலை ஞா.ம., 13.1.18
சங்கராந்தி’ ஆக்கிய பார்ப்பன இந்துமதம்
திராவிடர் திருநாளை ‘சங்கராந்தி’
ஆக்கிய பார்ப்பன இந்துமதம்
பொங்கல் விழாவைத் தமிழர் திருநாள் என்றும், உழைப்பின் உயர்வை உலகுக்கு அறிவிக்கும் நாள்என்றும் தந்தை பெரியார் அவர்கள் அறிவித்து, அவ்விழாவிற்கு நாட்டில் ஒரு புது மரியாதையை ஏற்படுத்தினார்கள்.
ஆனால் அதையும் விட்டுவைத்தார்களா இந்தப் பார்ப்பனத் திமிங்கலக் கூட்டம்? அதனிலும் மதச்சேற்றைப் போட்டுக் குழப்பி, ‘சங்கராந்தி’ என்றும் பெயரிட்டு, தங்கள் முத்திரையைக் குத்தி வைத்துஇருக்கின்றனர். அந்த மதநாற்றத்தை இதோ கேளுங்கள்:
‘சூரியன் தனு ராசியில் சஞ்சரிக்குங் காலம். இது தேவர்களுக்கு விடியற் காலம். மகாசங்கிராமே சக்தி எனும் சக்தி தக்சிணாயனம் ஆறு மாதத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்தபடியினால், அத்துன்பம் ஈஸ்வரானுக்கிரகத்தால் நீங்கினதால், தை மாதம் முதல் தேதி ஜனங்கள் அக்காலத்து விளைந்த புதுப் பொருள்களால் சூரியனை ஆராதித்தனர். அச்சக்தி பசுக்களைப் புலியுருவாய் அதஞ்செய்திருந்த படியால், அப்பசுக்களைக் கொண்டு, அப்புலியுருக் கொண்ட சக்தியை ஓட்டின நாள். இதனை மாட்டுப் பொங்கல் என்பர்.
இவ்வாறு அன்றி, இந்திரன் மழை வருஷிப்பவன் ஆதலால், அவன் செய்த நன்மையின் பொருட்டு தைமாதம் முதலில் அறுத்த, முதற் பயிரை மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு ஆராதித்து வந்தனர் எனவும், அது கிருஷ்ண மூர்த்தி அவதரித்தபின், அவர் அதை நாராயணனுக்குப் படைக்கக் கட்டளை இட்டனர் எனவும், அதனால் இந்திரன் கோபித்துப் பெருமழை பெய்விக்க, குடிகள் நிலைகுலைந்து மாடுகள் கன்றுகளை இழந்து தடுமாற, கண்ணன் கோவர்த்தனம் எடுத்துக் குடிமக்களைக் காத்தான் எனவும், அதனால் இந்திரன் வெட்கி வேண்ட, சங்கிராந்திக்கு முன்னால் அவன் பெயரால் பண்டிகை அமைந்ததாம். அது போகிப் பண்டிகை எனவும், மறுநாள் சங்கிராந்திப் பண்டிகை எனவும், மறுநாள் மழையால் வருந்திய மாடு கன்றுகளைத் தளை அவிழ்த்து விட்டுக் களித்தமையால் மாட்டுப் பொங்கல்எனவும், மறுநாள் மழையால் உண்டாகிய சுகாசுகங்களை ஒருவரை யொருவர் விசாரித்ததால் காண் பொங்கல் எனவும் கூறுவர். இவ்வாறு அறிவுக்குப் பொருத்தமற்றவைகளை எல்லாம் புராணங்களின் பேரால் புளுகித் தள்ளியுள்ளனர் இந்தப் பார்ப்பனர்கள். மழை பொழிவதாம் - அதை மலையைக் குடையாக்கித் தடுப்பதாம்! கேழ்வரகில் நெய் வடிகிறதாம் - பார்ப்பனர்கள் சொல்லுகிறார்கள்! தமிழர்களே அதை நம்பப் போகிறீர்களா? - (இந்துமதப் பண்டிகைகள் - பக்கம் 35-36)
-விடுதலை ஞா.ம., 13.1.18
பொங்கல் குறித்து தமிழர் தலைவர்!
பொங்கல் குறித்து தமிழர் தலைவர்!
பெரும்பாலான பண்டி கைகளின் கதைகள் எல் லாம் தேவர்கள், அசுரர் களை அழித்து ஒழித் தார்கள் என்பதை மய்யப் பொருளைக் கொண்ட தாகவே இருக்கும்.
பிரபலமாகக் கொண் டாடப்படும் தீபாவளியை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைதான்.
தேவர்கள் என்று சொல் லப்படுவோர் எல்லாம் ஆரியப் பார்ப்பனர் கள்தான் என்பதும், அசுரர்கள், அரக்கர்கள், ராட்சதர்கள் என்று சொல்லப்படுவோர் எல்லாம் அவர்களை எதிர்த்த திராவிடர்கள் என்றும், வரலாற்றுப் பேராசிரியர்கள் ஆதாரத்துடன் எழுதியுள்ளனர். (அண்ணா வின் ஆரியமாயை நூலிலும் விரிவாகக் காணலாம்)
தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்று திராவிட இயக்கம் முழக்கம் கொடுத் ததும் திராவிட இனத்தின் தன்மானங் கருதித்தான்.
தீபாவளி கொண்டாடாத தீரர்கள் பட்டி யலை விடுதலை ஏடு வெளியிட்டதுண்டு.
தைத் திங்கள் முதல் நாள் வரும் பொங்கல்தான் தமிழர்களின் திருநாள் - தை முதல் நாள்தான் தமிழர் புத்தாண்டு என்பதை திராவிட இயக்கம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறது.
பொங்கல் விழாவை புதுப்பொலிவுடன், தமிழர் பண்பாடு மறுமலர்ச்சிக் கண்ணோட் டத்தோடு புதுத்திருப்பத்தைக் கொடுத்ததும் நம் இயக்கம் தான். இதன் மூலம் தீபாவளிக்கு என்று இருந்த மகிமை இருளில் தள்ளப் பட்டது. உலகம் பூராவும் அறுவடைத் திருவிழாக்கள் கொண்டாடப்படுவதுண்டு. அதுபோன்ற தமிழினத்தின் தனிப் பெரும் விழா பொங்கலாகும்.
இதிலும்கூடப் பார்ப்பனர்கள் தங் களுக்கே உரித்தான புராண சரக்குகளை வேண்டிய மட்டும் திணித்துள்ளனர். தந்தைபெரியார் இதுகுறித்தும் ஆழமான கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதனையும் இந்த இடத்தில் எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
ஒரு பொங்கல் நாளில் தந்தை பெரியார் எழுதி யுள்ள அந்தக் கருத்து தமிழர்களின் சிந்தனைக்கு இங்குத் தரப் படுகிறது.
பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலி யவை எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் தேதி என்பதாகத் தை மாதத்தையும் முதல் தேதியையுமே ஆதாரமாகக் கொண் டதாகும்.
இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்தப் பாகத்திற்கும் எந்த மக்களுக்கும் உரிமை யுள்ள பண்டிகையாகும். என்றாலும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண் டாடப்படுவதாகும்.
இக் கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன வென்றால், விவசாயத்தையும் வேளாண்மை யையும் அடிப்படையாகக் கொண்டு அறு வடைப் பண்டிகையென்று சொல்லப்படு வதாகும். ஆங்கிலத்தில் ஹார்வெஸ்ட் பெஸ்டிவல் என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுதான்.
என்றாலும், பார்ப்பனர் இதை மத சம்பந்தம் ஆக்குவதற்காக விவசாயம், வெள்ளாண்மை, அறுவடை ஆகிய கருத்தையே அடிப்படையாகக் கொண்டு இதற்கு இந்திரன் பண்டிகை என்றும் அதற்குக் காரணம் வெள்ளாண்மைக்கு முக்கிய ஆதாரமான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன் ஆதலால் இந்தி ரனைக் குறிப்பாய் வைத்து, விவசாயத்தில் விளைந்து வெள்ளாண்மையாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு வைத்துப் படைத்து பூசிப்பது என்றும் கதை கட்டி விட்டார்கள்.
- கி. வீரமணி
(விடுதலை 13.1.1970)
- விடுதலை ஞா.ம. 13.1.18
வியாழன், 18 ஜனவரி, 2018
தமிழர்களின் மொழி சிறந்த மொழியாகும்.
தந்தை பெரியார் பொன்மொழிகள்
* தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் முன்னேறுவதற்கு இயற்கையான தடை எதுவும் இல்லை. தமிழர்கள் வாழும் நாடு எல்லா நல்வளங்களையும் கொண்ட நாடாகும். தமிழர்களின் மொழி தமிழர் அல்லாதவர்களுடைய மொழிகளைவிடச் சிறந்த மொழியாகும். தமிழர்களின் இயற்கை அறிவுத் திறன் தமிழரல்லாத மற்ற மக்கள் பல்லோரையும் விட வளர்ச்சிக் கேற்ற நல்ல அறிவுத் திறன் ஆகும். ஆனால், உலகில் தமிழன் கீழ் மகனாகவும் அறி வாராய்ச்சி அற்ற மூடநம்பிக்கையுடைய காட்டுமிராண்டி யாகவும் இருந்து வருகின்றான்.
* தமிழன் சுயமரியாதை உணர்ச்சி பெற்ற பிறகு, தமிழர்களை இழிவுபடுத்திக் கீழ் ஜாதி மக்களாக்கிய ஆரியர் சின்னங்களையும், ஆரியக் கடவுள்கள் என்பதான உருவங்களையும் அழித்து ஒழிக்க வேண்டியது சுத்த ரத்த ஓட்டமுள்ள தமிழன் கடமையாகும்.
* சுதந்திர நாடு என்றால் அங்குப் பார்ப்பான், பறையன், சூத்திரன் மற்ற எந்த ஜாதியுமே இருக்கக்கூடாது. மனிதன் தானிருக்க வேண்டும். எப்படிக் கடவுளும், மதமும், கோயிலும் நம்மை மடையர்களாக்கி, இழி மக்களாக்கி வைத்திருக்கிறதோ அது போன்றதுதான் சுயராஜ்ஜியம், சுதந்திரம், ஜனநாயகம் என்பதும் நம்மை இழிவுபடுத்தி வைத்திருக்கிறது.
- விடுதலை நாளேடு, 30.12.17
திங்கள், 8 ஜனவரி, 2018
இசைக்கு மொழி உண்டு சாதி உண்டு
Anbu mani
இசைக்கு சாதி கிடையாது- பாடகர் ஸ்ரீநிவாஸ்.
முன்பு இசைக்கு மொழி கிடையாது என்று சொல்லிக்கொண்டு இருந்தீர்கள்.
ஆனால் உங்கள் பாட்டன் கள் இசைக்கு மொழி உண்டு சாதி உண்டு என்றல்லவா செய்து காட்டிவிட்டு சென்றுள்ளார்கள்.
முன்பு திருவையாறு தியாகப் பிரம்ம உற்சவத்தில், தியாகய்யர் அஞ்சலியில் பாட்டுப் பாடிய தண்ட பாணி தேசிகர் - அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைக் கல்லூரி பேராசிரியர், சித்தி விநாயகனே என்ற பக்தித் தமிழ்ப் பாட்டுப்பாடி மேடையை அசுத்தப்படுத்தி தீட்டாக்கி விட்டார் என்றுகூறி, அடுத்துப் பாட வந்த பார்ப்பன சங்கீத வித்துவான் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் மேடையை சாணம் போட்டு மெழுகி சுத்தம் செய்த பிறகே பாடுவேன் என்று அடம் பிடித்ததை மறுக்க முடியுமா?
இதுபற்றி குடிஅரசில் (9.2.1946) "தீட்டாயிடுத்து" என்று கலைஞர் எழுதியதுண்டே!
ராகவேந்திரா மண்டபத்தில் எப்படி மட்டன் பிரியாணி கூட போட முடியாதோ, அதுபோல மியூசிக் அகாதமி யில் கானா கன்சர்ட் பண்ண முடியாது. இரண்டிலும் மொழி, சாதி, அரசியல் எல்லாம் உள்ளது.
-சி.கிருஷ்ணகுமார் MA, முகநூல் பதிவு, 9.1.18
செவ்வாய், 2 ஜனவரி, 2018
ஆபிரகாம் பண்டிதர்
பிரபல தமிழிசைக் கலைஞரும் சித்த மருத்துவருமான ஆபிரகாம் பண்டிதர் திருநெல்வேலி மாவட்டத்தில் சாம்பவர் வடகரை என்ற சிற்றூரில் பிறந்தார்(1859). ஆசிரியர் பயிற்சி முடித்து, தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.
தமிழ் மருத்துவத்தில் அளவு கடந்த ஆர்வம் கொண்டிருந்ததால், தஞ்சாவூரின் புறநகர்ப் பகுதியில் 100 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் பெரிய மூலிகைப் பண்ணையை உருவாக்கினார். உள்ளூர் மக்களிடையே அது பண்டிதர் தோட்டம் எனப் பிரபலமடைந்தது.
மூலிகைகளைப் பயன்படுத்தி பல்வேறு சித்த மருந்துகளைத் தயாரித்தார். இவர் தயாரித்த கோரசனை மாத்திரை இந்தியாவில் மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரிட்டிஷ் அரசு இவரது சேவையைப் பாராட்டி ராவ் பகதூர் பட்டம் வழங்கியது.
சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசை குறித்த செய்திகள் இன்றைய கர்னாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதைப் பண்டிதர் சுட்டிக் காட்டினார். இதன்மூலம் தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்தார்.
பழந்தமிழ் இசை வடிவமே இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் இசைக்கப் படுகிறது என்பதை நிரூபிப்பதற்காக முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டை தஞ்சாவூரில் நடத்தினார். 1912ஆம் ஆண்டு சங்கீத வித்யா மகாஜன சங்கத்தை நிறுவினார்.
தனது பல்லாண்டு கால தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை கருணாமிர்த சாகரத் திரட்டு என்ற இசை நூலாகத் தொகுத்து 1917இல் வெளியிட்டார். தமிழிசை வரலாறு, தமிழ் மருத்துவம், இசையாளர்கள் குறித்த ஒரு கலைக்களஞ்சியமாக இது போற்றப்படுகிறது. சுமார் 1,400 பக்கங்கள் கொண்ட இந்நூல் இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கான மூலநூலாக அமைந்துள்ளது.
ஆசிரியர், தமிழிசைக் கலைஞர், படைப்பாளி, சித்த மருத்துவர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டிருந்த ஆபிரகாம் பண்டிதர் 1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் நாள் தமது 60ஆவது வயதில் மறைந்தார்.
- உண்மை இதழ்,16-31.8.17