பக்கங்கள்

திங்கள், 8 ஜனவரி, 2018

இசைக்கு மொழி உண்டு சாதி உண்டு

Anbu mani
இசைக்கு சாதி கிடையாது- பாடகர் ஸ்ரீநிவாஸ்.
முன்பு இசைக்கு மொழி கிடையாது என்று சொல்லிக்கொண்டு இருந்தீர்கள்.
ஆனால் உங்கள் பாட்டன் கள் இசைக்கு மொழி உண்டு சாதி உண்டு என்றல்லவா செய்து காட்டிவிட்டு சென்றுள்ளார்கள்.

முன்பு திருவையாறு தியாகப் பிரம்ம உற்சவத்தில், தியாகய்யர் அஞ்சலியில் பாட்டுப் பாடிய தண்ட பாணி தேசிகர் - அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைக் கல்லூரி பேராசிரியர்,  சித்தி விநாயகனே என்ற பக்தித் தமிழ்ப் பாட்டுப்பாடி மேடையை அசுத்தப்படுத்தி தீட்டாக்கி விட்டார் என்றுகூறி, அடுத்துப் பாட வந்த பார்ப்பன சங்கீத வித்துவான் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் மேடையை சாணம் போட்டு மெழுகி சுத்தம் செய்த பிறகே பாடுவேன் என்று அடம் பிடித்ததை மறுக்க முடியுமா?

இதுபற்றி குடிஅரசில் (9.2.1946) "தீட்டாயிடுத்து"  என்று கலைஞர் எழுதியதுண்டே!

ராகவேந்திரா மண்டபத்தில் எப்படி மட்டன் பிரியாணி கூட போட முடியாதோ, அதுபோல மியூசிக் அகாதமி யில் கானா கன்சர்ட் பண்ண முடியாது. இரண்டிலும் மொழி, சாதி, அரசியல் எல்லாம் உள்ளது.

-சி.கிருஷ்ணகுமார் MA, முகநூல் பதிவு, 9.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக