பக்கங்கள்

திங்கள், 22 ஜனவரி, 2018

பொங்கல் குறித்து தமிழர் தலைவர்!


பொங்கல் குறித்து தமிழர் தலைவர்!



பெரும்பாலான பண்டி கைகளின் கதைகள் எல் லாம் தேவர்கள், அசுரர் களை அழித்து ஒழித் தார்கள் என்பதை மய்யப் பொருளைக் கொண்ட தாகவே இருக்கும்.

பிரபலமாகக் கொண் டாடப்படும் தீபாவளியை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைதான்.

தேவர்கள் என்று சொல் லப்படுவோர் எல்லாம் ஆரியப் பார்ப்பனர் கள்தான் என்பதும், அசுரர்கள், அரக்கர்கள், ராட்சதர்கள் என்று சொல்லப்படுவோர் எல்லாம் அவர்களை எதிர்த்த திராவிடர்கள் என்றும், வரலாற்றுப் பேராசிரியர்கள் ஆதாரத்துடன் எழுதியுள்ளனர். (அண்ணா வின் ஆரியமாயை நூலிலும் விரிவாகக் காணலாம்)

தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்று திராவிட இயக்கம் முழக்கம் கொடுத் ததும் திராவிட இனத்தின் தன்மானங் கருதித்தான்.

தீபாவளி கொண்டாடாத தீரர்கள் பட்டி யலை விடுதலை ஏடு வெளியிட்டதுண்டு.

தைத் திங்கள் முதல் நாள் வரும் பொங்கல்தான் தமிழர்களின் திருநாள் - தை முதல் நாள்தான் தமிழர் புத்தாண்டு என்பதை திராவிட இயக்கம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறது.

பொங்கல் விழாவை புதுப்பொலிவுடன், தமிழர் பண்பாடு மறுமலர்ச்சிக் கண்ணோட் டத்தோடு புதுத்திருப்பத்தைக் கொடுத்ததும் நம் இயக்கம் தான். இதன் மூலம் தீபாவளிக்கு என்று இருந்த மகிமை இருளில் தள்ளப் பட்டது. உலகம் பூராவும் அறுவடைத் திருவிழாக்கள் கொண்டாடப்படுவதுண்டு. அதுபோன்ற தமிழினத்தின் தனிப் பெரும் விழா பொங்கலாகும்.

இதிலும்கூடப் பார்ப்பனர்கள் தங் களுக்கே உரித்தான புராண சரக்குகளை வேண்டிய மட்டும் திணித்துள்ளனர். தந்தைபெரியார் இதுகுறித்தும் ஆழமான கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.  அதனையும் இந்த இடத்தில் எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

ஒரு பொங்கல் நாளில் தந்தை பெரியார் எழுதி யுள்ள அந்தக் கருத்து தமிழர்களின் சிந்தனைக்கு இங்குத் தரப் படுகிறது.

பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலி யவை எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் தேதி என்பதாகத் தை மாதத்தையும் முதல் தேதியையுமே ஆதாரமாகக் கொண் டதாகும்.

இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்தப் பாகத்திற்கும் எந்த மக்களுக்கும் உரிமை யுள்ள பண்டிகையாகும். என்றாலும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண் டாடப்படுவதாகும்.

இக் கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன வென்றால், விவசாயத்தையும் வேளாண்மை யையும் அடிப்படையாகக் கொண்டு அறு வடைப் பண்டிகையென்று சொல்லப்படு வதாகும். ஆங்கிலத்தில் ஹார்வெஸ்ட் பெஸ்டிவல் என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுதான்.

என்றாலும், பார்ப்பனர் இதை மத சம்பந்தம் ஆக்குவதற்காக விவசாயம், வெள்ளாண்மை, அறுவடை ஆகிய கருத்தையே அடிப்படையாகக் கொண்டு இதற்கு இந்திரன் பண்டிகை என்றும் அதற்குக் காரணம் வெள்ளாண்மைக்கு முக்கிய ஆதாரமான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன் ஆதலால் இந்தி ரனைக் குறிப்பாய் வைத்து, விவசாயத்தில் விளைந்து வெள்ளாண்மையாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு வைத்துப் படைத்து பூசிப்பது என்றும் கதை கட்டி விட்டார்கள்.

- கி. வீரமணி

(விடுதலை 13.1.1970)

- விடுதலை ஞா.ம. 13.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக