நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே தில்லை யாடியில் பழைமையான உறை கிணறு, பானை, கத்தி உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.
தில்லையாடியில் தியாகி வள்ளியம்மை நினைவு மணிமண்டபம் பின்புறத்தில் பொறையாறு டி.பி.எம்.எல். கல்லூரியின் வரலாற்றுத்துறை மாணவர் கள், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இணைந்து தொல்லியல் பாட கள ஆய்வுப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
பொறையாறு கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கள ஆய்வில், திருச்சி கல்லூரி வரலாற்று பேராசிரியர்கள் சேவியர், செந்தில்குமார், ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது அப்பகுதியில் புதைந்திருந்த சுமார் 7 அடி உயரமுள்ள பானை வடிவிலான உறை கிணறு, பழைமையான துருப்பிடித்த கத்தி, இறுதிச்சடங்கின் போது பயன்படுத்தக்கூடிய பானை, எண்ணெய் கிண்ணம் உள்ளிட்ட பொருள்களும், மனித எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:
இந்த பொருள்கள் 2,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும், பொருள்களில் வலைப் பின்னல் போன்ற கலை நுணுக்க அச்சுகள் உள்ளன. உரிய ஆய்வுக்குப் பிறகு, இந்தப் பொருள்கள் தொல்லியல் துறையிடம் ஒப்படைக் கப்படும் என்றனர்.
-விடுதலை ஞா.ம.,22.4.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக