பக்கங்கள்

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

மகராஷ்டிராவிலும் மொழிப்போர் தொடங்கியது இந்தி மற்றும் குஜராத்தி மொழி எழுத்துகளை தார்பூசி அழித்தனர்



மும்பை ஆக.1 இந்திய பொருளாதாரத் தலைநலைநகரான மும்பையில் பெருவணிக நிறுவனங்கள் அனைத்தும் இந்திக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது என்றும், அதை நடத்தும் குஜராத்திகள் மராட்டிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க மறுக்கின்றனர் என்று கூறி இந்தி மற்றும் குஜராத்தி மொழி பலகைகளை தார்பூசி அழிக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பேசப்படும் மராட்டியமொழிக்கு என்று தனி எழுத்துரு உண்டு, இந்த எழுத்துருவில் தான் இன்றும் மராட்டிய மன்னர் சத்திரபதி சிவாஜியின் அரசாணை உள்ளது, ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு இந்தி ஊடுருவல் மற்றும் குஜராத்திய பார்சிய இனத்தவரின் செல்வாக்கு பெருகி யதால் மெல்ல மெல்ல மராட்டி எழுத்துறு மறைந்தது இந்தி எழுத்துறு ஊடுருவியது, 1950களுக்குப் பிறகு முழுக்க முழுக்க மராட் டியும் இந்தி மொழியிலேயே எழுதப்பட்டதால் 1960-களில் மராட்டிய எழுத்துரு அழிந்தே போனது.

இன்று பெயரளவிற்கு கூட மராட்டி எழுத்துரு பயன்படுத்தப்படுவதில்லை. 1950-ஆம் ஆண்டு மும்பையை மகாராஷ்டிர மாநிலத்துடன் இணைக்க நடந்த போராட் டத்தை முன்வைத்த மராட்டியர்கள் தங்கள் மொழியின் எழுத்துரு மறைந்துபோவதைக் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டார்கள். இதனால் இந்தி எழுத்துரு எங்கும் பரவியது, இந்திக்கு அடுத்து மும்பையில் குஜராத் திகள் அதிகம் வாழ்வதால் மகராஷ்டிர தலைநகரில் பெரும் வணிக நிறுவனங்கள் குஜராத்தி மொழியில் பெயர் பலகைகளை வைத்தன.

மேலும் மராட்டியர்களுக்கு வேலைகள் தராமல் ராஜஸ்தானிகள், அரியானா மாநிலத்து இளைஞர்களுக்கு தங்கள் வணிக நிறுவ னங்களில் முக்கியப் பணிகளை வழங்கி வந்தனர். மராட்டியர்களுக்கு அடிமட்ட வேலை களையே வழங்கி வருகின்றனர்.  மும்பை நகரின் அனைத்து பகுதிகளையும் குஜராத்திகள் ஊடுருவி விட்டனர்.  இந்த நிலையில் மகராஷ்டிர மொழிப்பாதுகாப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது, மும்பையின் நவநிர்மான் சேனா கட்சி மற்றும் மராட்டிய ஏக்தா சமாஜ் என்ற அமைப்பு சேர்ந்து மொழிப்பாதுகாப்பு முழக்கத்தை முன்வைத்து போராட்டத்தில் இறங்கியது, இதன் ஒரு பகுதியாக மும்பையின் மிகவும் முக்கிய பகுதியான தாதரில் உள்ள குஜராத்தி வணிக நிறுவனத்தின் முகப்பில் மிகபெரிய அளவில் இருந்த குஜராத்தி மொழிப் பதாகை தார்பூசி அழிக்கப்பட்டது,  இது தொடர்பாக மராட்டிய ஏக்தா சமாஜ் அமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று பெயர்ப் பலகைகளை தார் பூசி அழிக்கிறோம், மராட்டிக்கும், மராட்டியர்களுக்கும் உரிய மரியாதை கொடுக்காவிட்டால் குஜராத்திகளின் வணிக வளாகங்களின் முன்பு போராட்டம் நடத்துவோம் என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.

-விடுதலை,2.8.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக