பக்கங்கள்

புதன், 2 ஆகஸ்ட், 2017

கருநாடக மாநிலத்தில் தொடரும் இந்தி எதிர்ப்பு! பள்ளிகளிலிருந்து இந்தி வெளியேற்றப்பட வேண்டும் இரு மொழித்திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும்

கருநாடகா முன்னேற்ற அமைப்பு வலியுறுத்தல்



பெங்களூரு, ஆக. 2- கருநாடக மாநிலத்தில் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பெயர்ப் பலகைகளில் இந்தி இடம் பெற்றிருப்பதற்கு அம்மாநில மக்கள் கிளர்ந்தெழுந்து பெரும் போராட்டத்தை நடத்தி வரு கிறார்கள். முதலில் மெட்ரோ ரயில் நிலைய பெயர்ப்பலகை களில் இந்தி எழுத்துகளின்மீது தார் பூசி அழித்தார்கள். அதன் பின்னர் மத்திய அரசின் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் கடந்த ஆண்டிலேயே அதற்கான சுற்ற றிக்கையை அனுப்பியதை வெளிப் படுத்தி போராட்டத்தைத் தீவி ரப்படுத்தினார்கள்.

மேலும், போராட்டக்குழு வினர் ஒன்றிணைந்து, இந்தி பேசாத மாநிலங்களின் பிரநிதிகளுக்கு கடிதங்கள் எழுதியும், நேரில் சந்தித்தும் இந்தி மொழி யைத் திணிக்கின்ற மத்திய அர சுக்கு எதிரான மொழிப் போராட் டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு கோரினார்கள்.

தமிழ்நாடு, புதுவை, ஆந் திரப்பிரதேசம், தெலங்கானா, மகாராட்டிரம், கேரளா, அசாம், ஒடிசா மற்றும் இந்தி பேசாத வடகிழக்கு மாநிலங்கள் உள் ளிட்ட பல்வேறு மாநிலங்களின் ஆதரவுடன் அம்மாநிலங்களின் பிரதிநிதிகளைக்கொண்டு, வட்ட மேசை மாநாடு கூட்டி இந்தி மொழித் திணிப்பைக் கண்டித்து தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். கருநா டக மாநில முதலமைச்சர் இந்தி மொழித் திணிப்பைக் கண்டித்து, பிரதமருக்கு கடிதம் எழுதியுள் ளார்.

அடுத்தகட்டத்தில் கருநாடக மொழிப்போர்

இந்நிலையில் மொழிப் போராட்டம் மேலும் கருநாடக மாநிலத்தில் தீவிரம் அடைந் துள்ளது. இதுவரை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பெயர்ப் பலகைகளிலிருந்து இந்தி மொழி அகற்றப்பட வேண் டும் என்று போராடி வந்த கரு நாடக மக்கள் தற்போது அம் மாநிலத்தில் உள்ள பள்ளிகளி லிருந்தும் அகற்றப்பட வேண் டும் என்று கோரி போராட் டத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மெட்ரோ ரயில் நிலையங் களில் இந்தித் திணிப்பைக் கண்டித்து பிரதமருக்கு மாநில முதல்வர் கடிதம் எழுதவேண் டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது கருநாடகா முன்னேற்ற அமைப்பு.

தற்போது கருநாடக மாநி லத்தில் மும்மொழிக்கொள்கையை மாற்றி, இரு மொழிக்கொள் கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அதன்மூலமே இந்தி மொழித் திணிப்பை மாநிலத்திலிருந்து அப்புறப் படுத்த முடியும் என்றும் கரு நாடகா முன்னேற்ற அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சேத்தன்குமார், பி.வி. சிவ சங்கர் கூறும்போது, கருநாடக மாநிலத்தில் இந்தித்திணிப்பை எதிர்த்து நடைபெறுகின்ற போராட்டத்துக்கு ஆதரவளிப் பவர்கள் பலருடன், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர் களும் இந்திக்கு எதிரான பரப் புரையில் பங்கேற்று வருகின் றனர் என்று கூறினார்கள்.

கருநாடகா முன்னேற்ற அமைப்பின் தலைவர் எஸ்.ஜி. சித்தராமையா கூறியதாவது:

மெட்ரோ இந்தி எதிர்ப்பு போராட்டம் நேர்மறையான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பள்ளிகளிலி ருந்தும் இந்தி மொழியை வெளி யேற்றுவதற்கான நடவடிக் கைகளில் ஈடுபடப்போகிறோம். மூன்றாவது மொழி என்கிற  பெயரால் இந்தி மொழியைத் திணிப்பதை மாற்றி, இரு மொழிக்கொள்கையே மாநிலத் துக்கு பொருத்தமானது என் பதை வலியுறுத்துகிறோம்.

மெட்ரோ ரயில் நிலைய பெயர்ப்பலகைகளில் இந்தி மொழித்திணிப்புக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கி நடத்தி வந்தவர்கள் பனவாசி பாலகா உள்பட பலரும் இரு மொழிக்கொள்கையை ஆதரிக் கின்றனர். மொழிகளுக்கான சமத்துவம் மற்றும் உரிமை களுக்கான பரப்புரை அமைப்பு (Campaign for Language Equality and Rights-CLEAR)   மற்றும் ஏராளமான எழுத்தாளர்கள், அறிஞர்பெருமக்கள் அனைவ ரும் இரு மொழிக்கொள்கைக்கு ஆதரவளித்துள்ளனர்.

ஆனந்த் என்பவர் கூறும் போது, “மும்மொழிக்கொள் கைக்கு அரசமைப்புரீதியிலான அங்கீகாரம் கிடையாது. மாநி லத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையில் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தமாகத்தான் மும்மொ ழிக்கொள்கை இருந்து வருகி றது. இந்தி பேசுகின்ற மக்களை அல்லது இந்தி மொழியை படிக்கின்றவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், மூன்றாவது மொழியாக இந்தி மொழியை மாணவர்களிடம் படிக்கவேண்டும் என்று கூறிக் கொண்டு, தேவையில்லாமல் இந்தி மொழி திணிக்கப்படுவ தாகவே நாங்கள் கருதுகிறோம். அனைத்து மொழிகளுக்குமான சமத்துவம் மற்றும உரிமைக ளுக்கான பரப்புரையின் மூல மாக மெட்ரோ மற்றும் பள்ளி களிலிருந்து இந்தி அகற்றப் படும் வரை பெரிய அளவில் போராட்டத்தை தீவிரப்படுத்தி போராடுவோம்’’ என்றார்.

கடந்த சில ஆண்டுகளாகவே வலியுறுத்தப்பட்டு வந்த நிலை யில், தற்போது கருநாடக மாநிலத்தில் கன்னட மொழி  அனைத்து பள்ளிகளிலும் கட் டாயம் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. 2007ஆம் ஆண்டில் கன்னட முன்னேற்ற அமைப் பின் அப்போதைய தலைவரான சித்தலிங்கய்யா, அனைத்து பள்ளி களிலும் எந்த பாடத்திட்டமாக இருந்தாலும் கன்னட மொழி கட்டாயம் ஆக்கப்பட வேண் டும் என்றார்.

அதேபோல், இளநிலை மற்றும் முதுநிலைக்கல்வி  மற் றும் தொழிற்கல்வி பயிற்றுவிக் கப்படுகின்ற அனைத்து கல்லூ ரிகளிலும் கன்னட மொழி கட் டாயமாக்கப்பட வேண்டும் என்று கன்னட முன்னேற்ற அமைப்பு பல்கலைக்கழகங்க ளின் துணை வேந்தர்களை சந் தித்து வலியுறுத்தி வந்துள்ளது.

பெங்களூருவில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் பெயர்ப்பல கைகளில் இந்தித் திணிக்கப்பட் டுள்ளதற்கு எதிரான போராட் டங்கள் வெடித்தன. கன்னட ஆதரவு அமைப்புகள் ஏராள மாக ஒன்றிணைந்து போராடின. கடந்த வாரத்தில் மெட்ரோ ரயில் வேத் துறையில் கருநாடகாவில் கன்னடர்களைத்தவிர பிறரை நீக்கிட வேண்டும் என்றும் கன் னட முன்னேற்ற அமைப்பின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

-விடுதலை,2.8.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக