பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசக்கூடாது. பேசினால் பாவம்
பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதி ஆப்கானிஸ்தானாக இருக்கிறது.
வேதத்தில் தான் தமிழ் கெட்ட பாஷை அதை பேசக்கூடாது என்றிருக்கிறது.
உன் தாய்மொழியை, உன் தாயை வேதம் கெட்டவள் என்கிறது.
தமிழ் கெட்டவர்களின் கெட்டபாஷை ? தமிழ் தள்ளி வைக்கப்பட்டதற்கு காரணம் என்ன ?
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 72
வைணவத்திலும் சரி... சைவத்திலும் சரி... தமிழ் இப்படி தள்ளி வைக்கப்பட்டதற்கு என்ன காரணம்? இதற்கு வேதங்களில் இருந்துதான் பதில் கிடைக்கிறது.
சுக்லயஜுர் வேதத்தில் ஒரு மந்த்ரம் பாருங்கள்.
“தஸ்மாது ப்ராம்மணேனநம்லேச்சித வைநம அபபாஷித வை...”
இந்த சின்ன வரிகள் தேக்கி வைத்திருக்கும் கருத்துகள் பெரியவை. அதாவது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் நடந்தது. இதில் நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.
நல்லவனை தேவன் என்றும் கெட்டவனை அசுரன் என்றும் வேதம் சொல்லியிருக்கிறது என்று. இதன்படி இந்த போரில் சமஸ்கிருத பாஷை பேசிய தேவர்கள் ஜெயித்தார்கள்.
மிலேச்சபாஷை... அதாவது சமஸ்கிருதம் அல்லாத பாஷை பேசிய அசுரர்கள் தோற்றார்கள்.
எனவே, தெய்வீகமான பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர மற்ற பாஷைகளெல்லாம் கெட்டவர்களின் கெட்ட பாஷை. மிலேச்ச பாஷை அதாவது தெய்வத் தன்மையற்ற பாஷை... என்கிறது வேதம்.
இப்படிப்பட்ட வேதத்தை எளிமைப்படுத்துவதற்காக அவதரித்த மநுவும் தன் பங்குக்கு சொல்கிறார். “...தயோ ரேவ அந்ததம் கிரியோஹாதேவ நதியோஹா யதந்தரம்தம்தேவ நிர்மிதம் தேசம்ஆரிய வர்த்தம் விதுர் புதாஹா...”
அதாவது... விந்திய மலை, இமயமலை இந்த இரண்டு மலைகளுக்கு இடையேயுள்ள பகுதியும்... கங்கை, யமுனை நதிகள் பாயும்... இந்த நதிகளுக்கு இடையே உள்ள பகுதியும் தான் ஆரியவர்த்தம் என அழைக்கப்படும். இங்குதான் தெய்வீகத் தன்மையும் சமஸ்கிருத பாஷையும் நிலைத்து நிற்கும்.
அதனால்... இந்த பகுதியை தவிர... மற்ற பகுதிகள் தெய்வீகத்தன்மை இல்லாதவை.
இதே நேரம்... மநு இன்னொரு கருத்தையும் சொல்கிறார் பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதிகளாக... வகுத்துச் சொல்லும் போது, ப்ரும்மா வர்த்தம், ப்ரும்மரிஷி வர்த்தம் என்றெல்லாம் இமய மலைச்சாரல் பகுதிகளைக் குறிப்பிட்டிருக்கிறார். இதுவெல்லாம் இப்போது ஆப்கானிஸ்தானாக இருக்கிறது.
மநு சொல்படி, வேதச் சொல்படி பார்த்தால்... பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசக்கூடாது. பேசினால் பாவம்.
மேலும், அவர்கள் இமயமலை, விந்தியமலை, கங்கை, யமுனை பகுதிகளில்தான் வசிக்கவேண்டுமே தவிர வேறெங்கும் வசிக்கக் கூடாது
முதலில் இவர்கள் வேதம் கூறுவதையாவது பின்பற்றுவார்களா?
- இராமானுஜ தாத்தாசாரியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக