தமிழ் உலகு

தமிழ் மற்றும் தமிழர் பெருமை

பக்கங்கள்

  • முகப்பு

ஞாயிறு, 5 மார்ச், 2023

ஹிந்தித் திணிப்புக்கு எதிராக மேற்கு வங்கத்தில் பேரணி!

 ஹிந்தித் திணிப்புக்கு எதிராக

    October 14, 2022 • Viduthalai

கேரளம் - ஆந்திரா - தெலங்கானா - கருநாடகா - அகில இந்திய விவசாயிகள் சங்கம் களத்தில் குதிப்பு: மேற்கு வங்கத்தில் பேரணி!

புதுடில்லி, அக்.14- ஒன்றிய அரசின் அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் அனைத்திலும் ஹிந்தி மட்டுமே அலுவல் மொழியாக இருக்கும் என்ற நரேந்திர மோடி அரசின் முடிவு நாடு முழுவதும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. 

இந்த எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. வழக்கமாக தமிழ்நாடு, கேரளா, கருநாடக மாநிலங்களில் மட்டுமே ஹிந்தித் திணிப்புக்கு எதிரான குரல்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது ஆந்திரா, தெலங்கானா தாண்டி மேற்குவங்கத்திலும் ஹிந்தித் திணிப்புக்கு எதிரான குரல்கள்  வேகமாக எழுந்துள்ளன. அங்கு போராட்டங்களும் துவங்கி யுள்ளன. 

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் கடந்த மாதம் அறிக்கை ஒன்றை  அளித்தது. அதில், ஒன்றிய அரசின் கல்வி நிறுவ னங்களான அய்.அய்.டி., அய்.அய்.எம்., எய்ம்ஸ்  போன்ற வற்றிலும், மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் ஹிந்தியே கட்டாய பயிற்று மொழியாக இருக்க வேண்டும்; ஆங்கிலம் உள்ள இடங்களில் ஹிந்தியை இடம்பெற செய்ய வேண் டும் என்று பரிந்துரை செய்தது.  இது ஹிந்தி பேசாத மாநிலங்களில் சலசலப்பை ஏற்படுத்தியதுடன், கடும் கண்டனங்களும் எழுந்தன. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு, கேரள முதல மைச்சர்கள் உடனடியாக தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

“பன்முகத்தன்மைதான், இந்திய துணைக் கண்டத்தின் பெருமையும், வலிமையுமாக இருக் கிறது. அப்படியிருக்க, ‘பாரத் மாதா கீ ஜே’  என்று நாடாளுமன்ற அவையில் அதனை ஓர்  அரசியல் முழக்கமாக்கி குரல் எழுப்பிக் கொண்டே ஹிந்திக்கு தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் புகட்ட  நினைப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு பேராபத்தை விளைவிக்கும்” என்று கூறிய தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஹிந்தியை கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்” என்று எச்சரிக்கை விடுத்தார். சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி சார்பில் அக்டோபர் 15 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஹிந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங் களுக்கும் அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது. 

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பிரதமர்  மோடிக்கு நேரடியாக கடிதம் ஒன்றை எழுதினார். 

“நமது நாட்டில் பல மொழிகள் உள்ளன. அப்படி இருக்கும்போது ஒரு மொழியை மட்டும் நாட்டின் மொழியாக அறிவிக்க முடியாது. உயர்கல்வி நிறுவனங்களில் ஹிந்தியை முக்கிய பயிற்றுமொழி ஆக்க முடியாது. இது வேலை தேடுவோர்களையும், மாணவர்களையும் பயத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே, ஒன்றிய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் வினாத்தாள்கள் அரசியல் சாசனத்தின் 8 ஆவது  அட்டவணையில் உள்ள எல்லா மொழிகளிலும்  இருக்க வேண்டும். இளைய தலைமுறையினர்  தங்கள் தாய்மொழி தவிர்த்து பிற மொழிகளைக் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தலாம். அதே  வேளையில் ஒரு மொழியை திணிக்கும் முயற்சி என்பது பொதுவாக மக்களிடமும், குறிப்பாக வேலை தேடுவோர் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி விடும். எந்த ஒரு குறிப்பிட்ட மொழியை யும் பயிற்றுமொழியாக்க முன்னுரிமை தரக் கூடாது.

அப்படி செய்வது திணிப்பாகவே பார்க்கப்படும். அது, நமது கூட்டுறவு கூட்டாட்சி முறைக்கு  நல்லதல்ல. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி  கூடிய விரைவில் தலையிட்டு, தேவையான, சரிப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்” என்று அந்த கடிதத்தில் அவர் வலியுறுத்தினார். 

தமிழ்நாடு கேரள முதலமைச்சர்களைத் தொடர்ந்து,  ஹிந்தி எதிர்ப்புக் களத்தில் குதித்த தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகரராவின் மகனும், அம்மாநில அமைச்சருமான கே.டி. ராமா ராவ், “இந்தியாவுக்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையாது. பிற அலுவல் மொழிகளுடன் இந்தி யும் ஒன்று. அய்.அய்.டி.களிலும், பிற ஒன்றிய அரசின்  வேலை வாய்ப்பு தேர்வுகளிலும், இந்தியை கட் டாயமாக திணிப்பதன் மூலம், பாஜக கூட்டணி  அரசு கூட்டாட்சி உணர்வினை மீறுகிறது. மொழியை தேர்வு செய்வதற்கு இந்தியர்களுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும். இந்தித் திணிப்பு கூடாது” என்று எச்சரித்தார். இதேபோல கருநாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.

மேற்கு வங்கம்

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பெங்கால் போக்கோ (ஙிணீஸீரீறீணீ ஜீஷீளீளீலீஷீ) எனும் அமைப்பு  ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக உடனடியாக பேரணி ஒன்றை நடத்தி, தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. வங்கமொழி இலக்கியவாதிகளான சிஷேந்து முகோபாத்யாய், கவிஞர் ஜெய் கோஸ்வாமி, கல்வியாளர் பவித்ரா சர்க்கார் போன்றோர் ஆதரவுடன் நடைபெற்ற இந்த பேரணியில், ஒன்றிய  அரசின் பணிகள், தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட வற்றில் ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தியை திணித்து ஹிந்தி தெரியாத மாநிலங்களை ஒன்றிய அரசு தண்டிப்பதாக முழக்கங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

மேலும், இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள், வங்கத்தின் காவலர் என்று அழைக்கப்படும் சித்தரஞ்சன் தாஸ், கன்னட தேசியக் கவிஞர் குவேம்பூர் ஆகியோரின் படங்கள் மட்டு மன்றி, தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர்கள்  அறிஞர் அண்ணா, கலைஞர், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் படங்களையும் ஏந்திச் சென்று தங்களின் ஹிந்தித் திணிப்புக்கு எதிரான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். 

பங்களா பக்சாவின் பொதுச்செயலாளர் கர்க் சட்டோபாத்யாய் அளித்துள்ள பேட்டியில்,  

“விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற வங்கதேச வீரர்கள், தங்களின் அடுத்த தலைமுறையினர் இந்திக்கு அடிமையாக வேண்டும் என்பதற்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார். 

மேலும், ஹிந்தித் திணிப் புக்கு எதிராக அக்டோபர் 16 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களி லும் போராட்டம் நடைபெறும்” என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்

மாநில மொழிகளைக் காவு கொடுத்து ஹிந்தியை தூக்கிப்பிடிப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கம், ஆங்கிலத்தை அகற்றிவிட்டு ஹிந்தியைத் திணிப்பதை அனுமதியோம் என்று எதிர்ப்பும்  தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அகில இந்திய விவசாயி கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

ஆர்எஸ்எஸ் இயக்கம், “ஹிந்தி, ஹிந்து,  ஹிந்துஸ்தான்” மற்றும் “கலாச்சார தேசிய வாதம்” என்கிற தன்னுடைய நிகழ்ச்சி நிரலை அமல்படுத்திட மோடி அரசாங்கத்தின் மூலம் நடவடிக்கை எடுத்திருப்பது, தேச விரோத மற்றும் அரசமைப்புச்சட்ட விரோதம் என்றும், இது நாட்டின் பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரத்துடன் ஒன்றுபட்டு வாழ்ந்துவரும் பண்பை அழித்துவிடும் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.  

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமையிலான ஆட்சி மொழி மீதான நாடாளு மன்றக் குழு, நாட்டிலுள்ள தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத நிறுவனங்கள் அனைத்திலும் பயிற்று மொழியாக, ஆங்கிலத்திற்குப் பதிலாக ஹிந்தி மட்டுமே கட்டாய மாக இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்குத் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

தொழில்நுட்ப நிறுவனங்கள் என்பதன் கீழ் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மெண்ட், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப்  டெக்னாலஜி மற்றும் ‘எய்ம்ஸ்’ ஆகியவை வருகின்றன. மத்தியப் பல்கலைக் கழகங்கள், கேந்திரியா வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா போன்றவை தொழில்நுட்பம் அல்லாத நிறுவனங்களின் கீழ் வருகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்திலும் ஹிந்தி பேசாத மக்கள் நுழைய முடியாதவாறு செய்திருப்பதோடு மட்டுமல்லாமல், இந்தக் குழு இவற்றுக்குத் தெரிவு செய்திடும் தேர்வுகளில் கட்டாயமாக ஆங்கில மொழிக் கேள்வித் தாள்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது.

இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் நாட்டு மக்கள் மத்தியில் காணப்படும் பல்வேறு வேற்றுமைப் பண்புகளிலும் உள்ள ஒற்றுமையை வளர்த்தெடுக்கப்படும் என்று அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள உறுதி மொழிகளையும், சுதந்திரப் போராட்டத்தின் பாரம்பரிய மரபுகளையும் மறுதலிக்கிறது. . இதர  மொழிகளைக் காவு கொடுத்து ஹிந்தியைத் தூக்கிப்பிடிப்பது தேசிய ஒருமைப்பாட்டின் மீதான நேரடித் தாக்குதலாகும். பாசிஸ்ட் ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட அமித்ஷா, இந்தியர்களை இப்படி மொழி அடிப்படையில் பிரித்தாள முயல்வதும், இதன்மூலம் நாட்டையே பிளவுபடுத்த முனைவதும் ஆச்சரியப்படக்கூடிய ஒன்று அல்ல.

மோடி அரசாங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையால் ஏற்கெனவே வேதனையை அனுபவித்துவரும் விவசாயிகள் குடும்பங்களுக்கு இந்த நடவடிக்கையானது கடும் பாதிப்பை ஏற்படுத்திடும். விவசாய நெருக்கடியால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள விவசாயக் குடும்பங்களில் உள்ள இளைஞர்கள், குறைந்த கட்டணத்தில் அரசு நிறுவனங்களில் கல்வி கற்று, அதன்மூலம் ஒன்றிய அரசாங்கத்தின்கீழ் உள்ள நிறுவனங்களில் வேலைக்குச் செல்லலாம் என்று கருதிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால், அவர்களின் எதிர்காலக் கனவுகள் தகர்ந்து தரைமட்டமாகிவிடும்.   ஆர்எஸ்எஸ்ஸின் பாசிஸ்ட் சூழ்ச்சியை முறியடித்திட நாட்டிலுள்ள ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டுப் போராட முன்வர வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவி அழைக்கிறது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தைத் தூக்கி எறிந்திட விடுதலைப் போராட்டத்தின் போது ஒன்றுபட்ட பல்வேறு தேசிய இன மக்களின் ஒற்றுமையையும் பாதுகாத்திட இது மிகவும் முக்கியமாகும். 

இவ்வாறு விவசாயிகள் சங்கத்தின் அறிக்கையில் கூறியுள்ளது.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:45 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: இந்தி எதிர்ப்பு, பேரணி, மே.வங்கம்

‘தமிழ்நாடு' எனும் வரலாற்றுப் பொன்னேடும் தந்தை பெரியாரின் அரும் பணியும்

 பதிலடிப் பக்கம்

       February 03, 2023 • Viduthalai

‘தமிழ்நாடு' எனும் வரலாற்றுப் பொன்னேடும்

தந்தை பெரியாரின் அரும் பணியும்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

பேராசிரியர் ப.காளிமுத்து எம்.ஏ.,பி.எச்.டி

‘தமிழ்நாடு' என்பது தமிழ் மக்களின் உணர்வோடும் உயிரோடும் ஒன்றிக் கலந்த உயிரோவியம்! அது தமிழர்களின் அடையாளச் சின்னம்! அது ‘தமிழகம்' என்றும் 'தமிழ்நிலம்' என்றும், ‘தமிழ்கூறும் நல்உலகம்' என்றும் ‘தென்னாடு' என்றும் தொன்று தொட்டு பல்வேறு சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் அதன் வரலாற்றுப் பெயர் ‘தமிழ்நாடு' என்பதுதான் என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

‘தமிழ்நாடு' என்னும் பெயர் நம் இன எதிரிகளுக்கு இன்று எரிச்சலூட்டும் பெயர்! அது மட்டுமா? ‘திரா விடம்', தமிழ், தமிழ்நாடு என நம்மை அடையாளப் படுத்தும் அனைத்தும் பார்ப்பனர்க்கு எரிச்சலூட்டுகின் றன. இவை நம் கோட்பாடுகளின் குறியீடுகள்! அத னால் அவர்களுக்கு எரிச்சல்!

1920இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 12 பிரிவு களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பின்னர் அதனை மொழி அடிப்படையில் 21 பிரிவுகளாகப் பிரித்தனர். அவ்வாறு பிரிக்கப்பட்டபோது ஆந்திர, கருநாடக, கேரளக் காங்கிரஸ் கமிட்டிகள் என்று பெயர் பெற்ற போது ‘சென்னை மாநிலக் காங்கிரஸ் கமிட்டி' என்றே தமிழகக் காங்கிரசிற்குப் பெயரிட வேண்டும் என்று பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்தனர். அப்போது காங்கிர சில் பார்ப்பனர் ஆதிக்கம் அதிகம்! இந்தச் சூழ்நிலை யில் பெரியார் 1919இல் தன்னைக் காங்கிரசில் இணைத் துக் கொண்டார். ஓராண்டுக் காலத்திற்குள் காங்கிரசில் அசைக்க முடியாத தலைவராகப் பெரியார் உருவெடுத்தார்.

இந்தச் சூழ்நிலையில் 1920இல் காங்கிரசுக் கமிட்டி யின் பெயர் மாற்றம் பற்றிய கருத்துக்கள் முன்வைக்கப் பட்டன. ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி' என்று பெயர் வைப்பதைப் பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 1920இல் மட்டுமல்ல, 1956லும் மொழிவழி  மாநிலங்கள் உருவாக்கப்பட்ட காலத்திலும் ‘தமிழ்நாடு' என்ற பெயரைச் சென்னை மாநிலத்திற்குச் சூட்ட விடாமல் பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்தார்கள் என்பதைப் பெரியாரின் அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.

1920இல் ‘தமிழ்நாடு' காங்கிரஸ் கமிட்டி என்ற பெயர் வைப்பதில் பெரியாரும் அவருடைய நண்பர் களும் வெற்றி பெற்றார்கள்!

ஓர் அரசியல் கட்சிக்குத் ‘தமிழ்நாடு' காங்கிரஸ் என்று பெயர் சூட்டப் பெற்ற முதல் நிகழ்வு இதுதான்.

ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்நாடு ‘சென்னை ராஜ்ஜியம்' என்ற பெயரைச் சுமந்து கொண்டிருந்தது. இதனை மாற்றக் கருதிய பெரியார் போகுமிடமெல்லாம் ‘தமிழ்நாடு' ‘தமிழ்நாடு' என்று வாய்வலிக்கப் பேசினார்! கைவலிக்க எழுதினார்! ‘தமிழ்நாடு' என்ற பெயரை வழக்காற்றில் கொண்டு வந்து மக்கள் உள்ளங்களில் ஆழமாக வேரூன்ற வைத்தார். ‘தமிழ்நாடு' என்ற இந்த ஒற்றைச் சொல்லால் தமிழ் மக்களை உயிர்த்தெழச் செய்ய முடியும் என்று பெரியார் உறுதியாக நம்பினார்.

2.5.1925இல் வெளிவந்த முதல் ‘குடிஅரசு' இதழ் ‘தமிழ்நாடு' என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்துவ தோடு அதனைத் ‘தாய்த் திருநாடு' என்று போற்றுவ தைக் காண்கிறோம். அதே இதழில் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் மறைவையொட்டி எழுதப் பட்ட இரங்கலுரையில் மூன்று இடங்களில் ‘தமிழ்நாடு' இடம் பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வந்த ‘குடிஅரசு'இதழ்கள் எல்லாவற்றிலும் ‘தமிழ்நாடு' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

1917இல் நீதிக்கட்சியினர் தொடங்கிய ‘திராவிடன்' நாளிதழ், அதன் பத்தாவது ஆண்டில் (1927) விற்பனை சரிந்து இதழ் நின்று விடும் நிலைக்கு வந்து விட்டது. இதனை அறிந்த பெரியார் பெரிதும் வருந்திப் பின் வரும் அறிக்கையை வெளியிட்டார்.

‘தமிழ்நாடு என்பதாக 10 ஜில்லாக்கள் கொண்ட ஒரு நாடு, தமிழ் மக்கள் - அதாவது பார்ப்பனர் அல்லாதார் என்பதாக 2 கோடி மக்களைக் கொண்ட ஒரு சமூகம் தங்கள் முன்னேற்றத்திற்கும் சுயமரியாதைக்கும் விடு தலைக்கும் என்பதாக ஏற்பட்ட ஒரு தமிழ் தினசரி பத்திரிகையை நடத்த முடியாமல் விட்டு விடுவ தென்றால் நமது சமூகத்தின் தாழ்ந்த நிலையைக் காட்ட இதைவிட வேறு ஆதாரம் வேண்டியதில்லை என்றே சொல்லுவோம்." (குடிஅரசு, 6.3.1937)

தமிழ்நாடு அப்போது (1927) பத்து மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. மக்கள் தொகை இரண்டு கோடிப் பேர், அதுவும் பார்ப்பனரல்லாத மக்களாக இரண்டு கோடிப் பேர் வாழ்கிறார்கள்! என்று வரை யறை செய்து தமிழ்நாட்டைப் பற்றிய ஓர் உருவக் காட்சியை நம் உள்ளத்தில் தோற்றுவிக்கிறார் பெரியார்.

தம் (சுய) நினைவின்றி வாழ்ந்த மக்களுக்கு அவர்தம் இனப் பெயரை எடுத்துரைத்துத் தாய்மொழி உணர்ச்சியூட்டி ‘தமிழ்நாடு உன் தாய்த்திருநாடு‘ என்று ஊர்தோறும் முழங்கி மக்கள் நெஞ்சில் தமிழ்நாட்டைப் பதிய வைத்த பெருமை தந்தை பெரியார் அவர்க ளையே சாரும். ‘தமிழ்நாடு' என்பதைப் பற்றி எவரும் பேசாத காலத்தில் பெரியார் தொலைநோக்குப் பார்வையோடு ‘தமிழ்நாட்டை' முன்னெடுத்து முழங்கி வந்தார்.

‘தமிழ்நாடு' என்ற சொல்லாட்சியைக் கேட்டதும் மக்களிடையே ஒரு புத்துணர்ச்சி ஏற்படுவதைப் பெரியாரும் அவர் உருவாக்கிய தலைவர்களும் உணர்ந்து மகிழ்ச்சியடைந்தனர். பெரியார் ஊன்றிய ‘தமிழ்நாடு' என்னும் உணர்ச்சி, முளைத்துச் செழித்து வளர்ந்து அவர் காலத்திலேயே பயன் தந்ததைப் பார்த்து மகிழ்ந்தார் பெரியார்.

1937இல் இராசகோபாலாச்சாரியார் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆச்சாரியார் பள்ளிகளில் ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார்.

ஹிந்தி ஆரிய மொழி; அதைக் கட்டாயமாக்கித் திணிக்க நினைப்பது மறைமுகமாக சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சிஎன்றும் இது திராவிட மக்கள் மீது ஆரியர்கள் நடத்தும் பண்பாட்டுப் படையெடுப்பு என்றும் பெரியார் கருதினார். தமிழ் மொழி, தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு ஆகியவை ஹிந்தியாலும் சமஸ்கிருதத்தாலும் சீரழிக்கப்பட்டு அழியும் நிலை உருவாகி விடும் என்பதைத் தொலைநோக்குப் பார்வையோடு உணர்ந்து கட்டாய ஹிந்தியை எதிர்த்துக் களம் அமைத்தார் பெரியார். பெரியாரின் அழைப்பை ஏற்று அலை அலையாகத் தமிழ் மக்கள் ஹிந்தி எதிர்ப்புப் போர்க் களத்தில் குதித்தனர்.

ஹிந்தியை எதிர்த்துத் திருச்சியிலிருந்து புறப்பட்ட தமிழர் பெரும் படையை வரவேற்கச் சென்னைக் கடற்கரையில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டம் நடை பெற்றது. ஓரிலக்கத்திற்கு மேற்பட்டோர் திரண்டிருந்த அக்கூட்டத்தில் பேசும் போதுதான் தந்தை பெரியார் "தமிழ்நாடு தமிழருக்கே" என்று முழங்கினார். பெரியாரின் உள்ளத்தில் அடக்கி வைக்கப்பட்டிருந்த உரிமை உணர்ச்சி அணை உடைத்துப் பாய்ந்த வெள் ளத்தைப் போலப் பீறிட்டுக் கிளம்பியதைக் கேட்ட மக்கள் "தமிழ்நாடு தமிழருக்கே" என்று விண்ணதிர முழங்கினார்கள்.

தமிழ்நாடு தமிழ்நாடு என்று முழங்குவது எதற்காக? இதோ தந்தை பெரியார் 1938இல் விளக்குகிறார்.

"தமிழ்நாட்டுத் தொழில்துறைகள் தமிழனுக்குப் பயன்படவில்லை. இரும்புத் தொழிலில் பம்பாய்க்காரர்; துணித் தொழிலை ஆமதாபாத்காரர்கள் கைப்பற்றிப் பயனடைகிறார்கள் தமிழ்த் தொழிலாளிக்கு இங்கு வேலையில்லை; லேவாதேவித் தொழிலை மார்வாரி நாட்டானும் குஜராத்தி நாட்டானும் ஏகபோக உடை மையாக்கி அவர்கள் கொண்டு போகும் செல்வம் கொஞ்சமா? அவை எப்படிப் போகின்றன என்பதைப் பார்த்தால், தமிழ்க் கூலிகள், தொழிலாளர்கள், ஏழைகள் ஆகியவர்களின் செல்வத்தைக் கையைத் திருகிக் கொண்டு போவதுபோல் மார்வாரிகள் கொண்டு போகிறார்கள். இவ்வாறு ஏமாற்றி வஞ்சித்துத் தேடும் செல்வம் அத்தனையும் பகற்கொள்ளை - வட்டிக் கொள்ளை என்று சொல்லப்படுவது போல் கோடி கோடியாய்ச் சிந்து மாகாணத்திற்குக் கடத்திச் செல்லப்படுகிறது. அதன் பயனாகத் தமிழ்நாட்டில் உள்ள பெரும் பெரும் வர்த்தகர்கள் மிக மோசமான நிலைக்கு வந்து விட்டார்கள். மணல்வீடு கட்டிச் சரிந்து மட்டமாவது போல் தமிழ் வியாபாரிகள் தினம் தினம் கடன்காரராகி - பாப்பராகி - இன்சால்  வென்டாகித் தற்கொலை செய்து கொள்வதும் நாட்டை விட்டு ஓடுவதுமான நிலையில் இருந்து வருகிறார்கள்."

எனவே தோழர்களே! உதைக்கும் காலுக்கு இதுவரை முத்தமிட்டுப் பூசை செய்கிறோம். மலத்தை மனதார முகருகிறோம், மானமிழந்தோம், பஞ்சேந்திரி யங்களின் உணர்ச்சியை இழந்தோம், மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம், இதற்குத் தானா தமிழன் உயிர் வாழ வேண்டும்? எழுங்கள்! நம்மை ஏய்த்து அழுத்தி நம் தலைமேல் கால்வைத்து ஏறி மேலே போக வடநாட்டானுக்கும் தமிழனல்லாதவ னுக்கும் நாம் படிக்கல் ஆகிவிட்டோம்.

இனிமேலாவது "தமிழ்நாடு தமிழருக்கே" என்று ஆரவாரம் செய்யுங்கள்.

உங்கள் கைகளில் ‘தமிழ்நாடு தமிழருக்கே' என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள்!

உங்கள் வீடுதோறும் ‘தமிழ்நாடு தமிழருக்கே' என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள்!

‘தமிழ்நாடு தமிழருக்கே‘ (குடிஅரசு, 23.10.1938)

தந்தை பெரியாரின் இப்போர் முழக்கம் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது! 1938 டிசம்பரில் சென்னையில் நடந்த தென்னிந்தியர் நல உரிமைச் சங்க (நீதிக்கட்சி) மாநாட்டில் வாசிக்கப்பட்ட பெரியாரின் உரையிலும் ‘தமிழ்நாடு தமிழருக்கே‘ என்ற முழக்கம் இடம் பெற்றிருந்தது. இதற்கு முதல் நாள் வேலூரில் நடந்த தமிழ் மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்திய சர்.ஏ.டி.பன்னீர்செலவம் ‘தமிழ்நாடு தமிழருக்கே‘ என்பதை விளக்கி உரை நிகழ்த்தினார்.

இதுகுறித்துப் பேராசிரியர் அன்பழகனார் 1947இல் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

"தமிழ்நாடு தமிழருக்கே என்ற குரல் இன்று பல திசைகளிலே கேட்கப் பட்டாலும் அதை முதலில் எழுப்பிய பெருமையும் எதிர்ப்புகளுக்கும் ஏளனங்க ளுக்குமிடையே வளர்த்த சிறப்பும் தமிழர் தலைவர் பெரியார் இராமசாமி அவர்களுக்கே உரியதாகும். தோழர் இராசகோபால ஆச்சாரியார் சென்னை மாகாண முதலமைச்சராக அமர்ந்து வடநாட்டு ஹிந்தியை வலுக்கட்டாயமாகத் தமிழ்ச் சேய்களின் வாய்களிலே திணிக்க முயன்றபோது அந்தக் கொடு மையை எதிர்த்துத் தமிழ்ப் பெருங்குடி மக்கள் நடத் திய பெரியதொரு போராட்டத்தில் சிறந்ததொரு விளைவாகத் "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற உரிமை யொலி அன்று எழுந்தது" (வாழ்க திராவிடம், 2017).

- தொடரும்

பதிலடிப் பக்கம்

      February 04, 2023 • Viduthalai

பேராசிரியர் ப.காளிமுத்து எம்.ஏ.,பி.எச்.டி

‘தமிழ்நாடு' எனும் வரலாற்றுப் பொன்னேடும்

தந்தை பெரியாரின் அரும் பணியும்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

நேற்றைய (3.2.2023) தொடர்ச்சி...

‘தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்தை எவருமே எதிர்க்கவில்லையா என்றால் எதிர்க்கத் துணிந்தவர்கள், ஏளனம் செய்தவர்கள் மிகச் சிலரே! பெரியாரே இதைத் தெளிவுப்படுத்துகிறார்:

"தமிழ்நாடு தமிழருக்கே என்பதில் யாருக்காவது அதிருப்தியோ அபிப்பிராய பேதமோ இருப்பதாக இதுவரை நமக்கு எவ்விதத் தகவலோ மறுப்போ வந்தது கிடையாது. பார்ப்பனப் பத்திரிகைகள் சிலவற் றிலும் அவர்களது கூலிகளின் வாய்கள் சிலவற்றிலும் ஏதோ பொருத்தமற்ற கூப்பாடுகள் இரண்டொன்றைக் காணவும் கேட்கவும் நேர்ந்தது. என்றாலும் அதுவும் மறுமுறை கிளம்பினதாகத் தெரியவில்லை. ஒரு பார்ப் பனப் பத்திரிகை மாத்திரம் ‘தமிழ்நாடு தமிழருக்கே' என்றால் ‘எலிவளை எலிகளுக்கே' என்று எழுதிற்று" (தமிழர், தமிழ்நாடு, தமிழர் பண்பாடு, 2011)

இவ்வாறு எலிகளைத் துணைக்கழைத்து ஏளனம் செய்தவர்களும் கேலிச் சித்திரம் தீட்டியவர்களும் எல் லோரும் பார்ப்பனர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் எதற்காக இவ்வளவு பாடுபட்டார்? தமிழ்நாட்டைத் ‘தாய்த்திருநாடு' என்றாரே ஏன்? ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தண்டனை பெற்றுச் சிறை செல்வதற்கு முன்பாக 30.11.1938 அன்று சென் னையில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் இதற்கு விளக்கம் அளிக்கிறார்:-

1938ஆம் வருடத் தென்னிந்தியர் நல உரிமை சங்க மாநாட்டிற்குப் பிறகு ‘சென்னை மாகாணம்', ‘தமிழ்நாடு' என்று பெருமை பெற்றதென்றால் அது தமிழர்களின் ஒற்றுமையால் என்றிருக்க வேண்டும், மானத்தைக் கருதுங்கள், சுயநலம், பெருமை, பதவி ஆசை முதலிய வைகளைக் கைவிடுங்கள்.

பெரியாரின் பேருரையைக் கேட்க முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தார்கள் என்று குடிஅரசு (11.12.1938) கூறுகிறது. சென்னை மாகா ணம் ‘தமிழ்நாடு' என்று தன்னால் பெருமை பெற்றது என்று கூறாமல் தமிழர்களின் ஒற்றுமையால் பெருமை பெற்றது என்று கூறவேண்டும் என்று தன்னடக்கத் தோடு தலைவர் பெரியார் குறிப்பிடுவதை உற்று நோக்குங்கள்!

இதன்பின்னர் 21.11.1939 தொடங்கி 25.11.1939 வரை அய்ந்து நாட்கள் ‘விடுதலை' இதழில் ‘தமிழ்நாடு தமி ழருக்கே' என்ற தலைப்பில் அய்ந்து தலையங்கங்கள் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் தமிழ்நாடு என்பதற்குத் திராவிட நாடு என்றுதான் பொருள். இது தமிழ்நாடு பிரிவினையைக் கருத்தில் கொண்டு அல்ல என்றும், திராவிட மக்களின் நாகரிகம், பண்பாடு, கலை, தொழில், இலக்கியம் முதலானவை ஆரியர்களின் நாகரிகப் பண்பாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை என் றும் பல்வேறு சான்றுகளோடு பெரியார் விளக்குகிறார். 25.11.1939ஆம் நாள் எழுதப்பட்ட தலையங்கத்தின் முடிவில் "தமிழ்நாடு தமிழருக்கே" என்று மும்முறை எழுதப்பட்டிருக்கிறது.

1956இல் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நேரத்தில் கூடத் தமிழ்மொழி வழங்கும் மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயர் வைக்கப்படவில்லை. இது பற்றிப் பெரியார் வருந்தி எழுதுகிறார்.

“சுமார் 3 கோடித் தமிழர்கள் வாழும் நாட்டிற்கு அதி காரப் பூர்வமாகத் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் இல்லை. இராஜ்ய சீரமைப்புக் கமிசன் (State - Reorganisation Commission)  அறிக்கை வெளிவந்தவுடன் நான் பதறிப்போய், பெயரிடு வது பற்றி 12.10.1955இல் விடுதலையில் அறிக்கை வெளியிட் டேன்.”

“திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு ஆந்திரர், கருநாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்புகூட மீதியுள்ள - யாருடைய ஆட்சேபனைக்கும் இடமில்லாத தமிழகத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் கூட இருக்கக் கூடாதென்று பார்ப்பானும் வடநாட்டானும் சூழ்ச்சி செய்து இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்துப் பிரி வினையில் ‘சென்னை நாடு’ என்று பெயர் கொடுத்திருப் பதாகத் தெரிகிறது.

“இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும். எந்தத் தமிழனும் அவன் எப்படிப்பட்ட தமிழன் ஆனாலும் இந்த அக்கிரமத்தைச் சகித்துக் கொண்டி ருக்க மாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்ற சொல்ல வேண்டிய வனாக இருக்கிறேன்.”

இதைத் திருத்த தமிழ்நாட்டு மந்திரிகளையும் சென்னை, டில்லி சட்டசபை, கீழ் மேல்சபை அங்கத்தினர்களையும் மிக மிக வணக்கத்தோடு இறைஞ்சி வேண்டிக்கொள்கிறேன்.”

“தமிழ் தமிழ்நாடு என்கிற பெயர்கூட இந் நாட்டுக்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றிபெற்று விட்டார்கள் என்கின்ற நிலைமை ஏற்பட்டு விடுமானால் பிறகு என்னுடையவோ எனது கழகத்தினுடையவோ என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை.”

மேற்காணும் அறிக்கை வெளிவந்த விடுதலையின் (11.10.1955) இரண்டாம் பக்கத்தில் ‘சென்னை ராஜ்யமல்ல. ‘தமிழ்நாடு’என்றே கூறுவோம்’ என்று பெரிய எழுத்தில் அச்சிட்டுக் காட்டியிருக்கிறார் பெரியார்! உலக நாடுக ளெல்லாம் மொழியை அடிப்படையாகக் கொண்டே அழைக்கப்படும்போது தமிழ் பேசப்படுகின்ற நாட்டைத் ‘தமிழ்நாடு’ என்று அழைக்காமல் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்றோ சென்னை நாடு என்றோ அழைப்பதற்குத் தமிழ் மக்கள் வெட்கப்பட வேண்டாமா?

“தமிழர்கள் இனிப் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் ‘தமிழ்நாடு’ என்றே வழங்கி வர வேண் டும். இயற்கையான, இன உணர்ச்சி, மொழிப்பற்று இல்லாவிட்டாலும் மற்றவர்களைப் பார்த்தாவது திருந்தக் கூடாதா? மற்ற நாடுகளைப் பார்த்தாவது மான உணர்ச்சி பெறக் கூடாதா?”

என்று பெரியார் கேட்கிறார். இது மட்டுமல்லாது தொடர்ந்து நடந்த மாநாடுகளில் எல்லாம் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற தீர்மானத்தைப் பெரியார் முன்மொழிந்து உரையாற்றியிருக்கிறார்.

“தமிழர்களே உங்கள் உடலில் இருப்பது ஆரிய இரத்தக் கலப்பில்லாத தனித் தமிழர் இரத்தம் என்று கருதிக்கொள்ளுங்கள். உடனே உங்களுக்குப் புதிய உணர்ச்சி வரும்; புதிய ஊக்கம் வரும்; உங்கள் அறிவு ஒளிபெற்று உங்கள் மனத்தில் படிந்துள்ள தும்பும் தூசியும் விலகி உங்கள் நரம்புகளுக்கும் நாடிகளுக்கும் முறுக்கேறும்; அப்பொழுதே நீங்கள் உண்மைத் தமிழராகி, தமிழ்நாடு தமிழருக்காகி தமிழர் வாழ்வு மானமும் உயர்வும் பெறும் என்று பணிவோடு விண்ணப்பித்துக் கொள்கிறோம்.” (பெரியார் கொட்டிய போர் முரசு)

பெரியாரின் இந்த அறிக்கையைப் படிக்கும் ஒவ்வொரு தமிழனும் வீறு கொண்டெழுவான் என்பது உறுதி.

தமிழ்நாட்டைத் ‘தாய்த் திருநாடு’ என்றும் ‘தமிழ்த் திருநாடு’ என்றும் பலமுறை குறிப்பிடும் பெரியார் தாய்த் திருநாட்டிற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்று. ‘வணங்கி வேண்டிக் கொள்கிறேன்’ என்றும், ‘வணக்கத்தோடு இறைஞ்சி வேண்டிக் கொள்கிறேன்’ என்றும் வணக்கத்தோடு கேட்டுக் கொள்கிறார். யாருக்கும் தலை வணங்காத பெரியார் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்பதற்காக வணங்கி இறைஞ்சி வேண்டிக் கொள்கிறார்!

தொடர்ந்து ‘தமிழ்நாடு’ என்பதைப் பற்றிப் பெரியார் எப்படிப்பட்ட அணுகுமுறைகளையெல்லாம் கையாண்டார் என்பதைப் பாருங்கள்.

“தமிழ்நாட்டின் பஞ்சப் பகுதியான இராமநாதபுரம் மாவட்டத்தைச் செழிப்படையச் செய்ய மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கே வீணாக ஓடிக் கொண்டிருக்கும் பம்பை யாற்றுத் தண்ணீரைக் கிழக்கே திருப்பிவிடும் முயற்சியைத் தமிழ்நாடு ஆட்சியினர் மிக விரைவாகச் செய்யுமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

“இலங்கையிலிருந்து துரத்தப்படுகிற தமிழ் மக்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கும்படி தமிழ்நாடு ஆட்சியாளரையும் மத்திய ஆட்சியையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.”

“பண்டைக் காலத்தில் உலகமே கண்டு வியக்கும் பேரரசாக விளங்கிய ‘தமிழ்த் திருநாடு’  தமிழ் நாட்டுக்குள் இன்று டில்லி ஹிந்தியைத் திணித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழுக்குரிய இடங்களையெல்லாம் ஹிந்தி ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.”

“தமிழ்நாடு 400 லட்சம் மக்களைக் கொண்டது...” (மன்னார்குடி மாநாட்டுத் தீர்மானங்கள்.)

“இன்று தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா?”

“தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பு,ஆதிக்கம் முழு வதும் தமிழர்களிடத்திலேதான் இருக்க வேண்டும். தமிழர் கள் என்பது இங்கு தமிழ்நாட்டிலுள்ள ஆரியர் அல்லாத - பார்ப்பனரல்லாதார் ஆகும்.”

இவ்வாறு ‘தமிழ்நாடு தமிழ்நாடு’ என்று போகும் இடமெல்லாம் முழக்கமிட்டு மக்கள் உள்ளங்களில் ‘தமிழ் நாட்டை’ ஆழமாக வேரூன்ற வைத்து வளர்த்தெடுத்தவர் தந்தை பெரியார். அதனால் மக்கள் வழக்காற்றில் மிக இயல்பான - இயற்கையான பேசு பொருளாகத் ‘தமிழ்நாடு’ அமைந்துவிட்டது. பெரியார் அரும்பாடுபட்டுத் ‘தமிழ்நாடு’ என்னும் பெயரை மக்கள் உள்ளங்களில் நிலைநிறுத்திய பிறகு சங்கரலிங்கனார் 12 கோரிக்கைகளோடு தமிழ்நாடு என்று பெயரிட வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்த்து உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார். அதன் பின்னர் அறிஞர் அண்ணா, மாநிலங்களவையில் பொதுவு டைமைக் கட்சித் தலைவர் புபேஷ்குப்தா, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து மிக விரிவாகப் பேசியிருக்கிறார். சென்னைச் சட்டமன்றத்திலும் ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அது ஏற்கப்படாமையால் எதிர்க் கட்சியினர் வெளிநடப்புச் செய்தனர். இதே காலத்தில் தமிழரசுக் கட்சித் தலைவர் ம.பொ.சி.யும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சி.பா.ஆதித்தனாரும் இதே கோரிக் கையை வலியுறுத்திப் பேசியுள்ளனர். ஆனால், இதற்காக அவர்கள் வேறு எத்தகைய போராட்டங்களையும் நடத்த வில்லை.

இவையெல்லாம், தந்தை பெரியார் 1920-களிலிருந்து ஏறக்குறைய நாற்பதாண்டுக் காலம் தமிழ்நாட்டைப் பண்படுத்தி விழிப்புணர்ச்சி உண்டாக்கிய பிறகு நடந்த நிகழ்வுகள். பெரியாரைப் பின்பற்றி அறிஞர் அண்ணாவும் தி.மு.கழகத் தலைவர்களும் ‘தமிழ்நாடு’ என்ற பெயரிட வேண்டுமென்று ஓயாமல் முழங்கி வந்தனர்.

‘தமிழரின் மறுமலர்ச்சி’ என்ற ஒரு சிறு நூலில் மட்டும் ஏறக்குறைய 40 இடங்களில் ‘தமிழ்நாடு’ என்ற பொன் னெழுத்துகளை அண்ணா பொறித்திருக்கிறார்! (எ.டு) 

“தமிழ்நாட்டிலே தமிழருடைய மொழியிலே தகாத மொழிகள் கள்ளிபோல் படர்ந்துவிட்டன.”

“தமிழ்நாட்டிலே தமிழனுக்கு வேலை கிடைப்ப தில்லை.”

“தமிழ்நாட்டிலே தமிழ்ப் பாடல் கிடையாது.”

“தமிழ்நாட்டிலே தமிழே இருத்தல் வேண்டும்.”

“தமிழ்நாட்டைப் போலவே எந்த நாட்டிலும் அந்த நாட்டின் மொழியல்லாத வேறு மொழியிலே சங்கீதம் பாடுவதைக் கேட்க முடியாது.”

“தமிழ்நாட்டிலே தமிழ்ப் பாடல்களை வளர்க்க வேண்டும்; தமிழ்ப் பாடல்கள் பாடுவோருக்கு ஆதரவு தர வேண்டும்.”

இவ்வாறு அண்ணாவின் நூல்களைத் திருப்பிய பக்கமெல்லாம்‘தமிழ்நாடு’ காட்சியளிக்கிறது.

1967 வரை தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரசுக் கட்சி, கடைசி வரையில் ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைப்பதற்கு முரண்பட்டு முற்றுப் பெற்றுவிட்டது. காங்கிரசின் இந்தப் பிடிவாதம் தமிழ்நாடு அரசியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திவிட்டது. 1967 தேர்தலில் காங்கிரஸ் தோற்றுப் போயிற்று. அறிஞர் அண்ணா முதல் அமைச்சர் ஆனார்.

1967 ஜூலை 18ஆம் நாள் சட்டப் பேரவையில் தீர்மானத்தை அண்ணா கொண்டு வந்தார். ‘மெட்ராஸ் ஸ்டேட்’ ((MADRAS STATE) என்ற பெயர் ‘தமிழ்நாடு’ என்று தமிழில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட தீர்மானம் எவரு டைய எதிர்ப்புமின்றி நிறைவேறியது. அப்போது உரை யாற்றிய அண்ணா,

“இந்த வெற்றி தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ் வரலாற்றுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி என்ற விதத்தில் நாம் அனைவரும் இந்த வெற்றியில் பங்குகொள்ள வேண்டும்.”

என்று குறிப்பிட்டார். அதன் பின்னர் ‘தமிழ்நாடு’ என்று உரத்த குரலில் அண்ணா முழக்கமிட அவை உறுப்பினர் அனைவரும் எழுந்து நின்று ‘தமிழ்நாடு வாழ்க!’ என்று முழங்கினர். மூன்று முறை ‘தமிழ்நாடு வாழ்க’ என்று அனைவரும் முழங்கினர். 1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதியன்று நாடாளுமன்றத்திலும் இத்தீர் மானம் எதிர்ப்பின்றி நிறைவேறியது.

‘தமிழ்நாடு அரசு - தலைமைச் செயலகம்’ எனும் புதிய பெயர்ப் பலகை வைக்கப்பட்டது. 1968 டிசம்பர் முதல் நாள் தமிழ் நாடெங்கும் பெயர் மாற்ற வெற்றி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சென்னையில் கலை வாணர் அரங்கில் (அப்போது அது பாலர் அரங்கம்) நடை பெற்ற விழாவில் அண்ணா கலந்து கொண்டு உரையாற் றினார். அடையாறு மருத்துவமனையிலிருந்து நேரடியாக விழா அரங்கிற்கு அண்ணா வந்து சேர்ந்தார்.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அந்த விழாவில் அண்ணா, “என் தாய்த்திரு நாட்டிற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டக்கூடிய இந்த நேரத்திலே இந்த விழாவிலே கலந்து கொள்ள வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால், என் தாய் நாட்டிற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டக் கூடிய இந்த விழாவிற்கு நான் வராமல் இருப்பதை விடக் கொடுமை வேறு இருக்க முடியாது. இந்த விழாவிற்கு வராமல் இருந்து இந்த உடல் இருந்து என்ன பயன்? இத்தகைய வாய்ப்பு வாழ்க்கையில் ஒரு முறைதான் வரும். பெற வேண்டும் என்று நினைத்ததைப் பெற்றிருக்கிறோம். அடைய வேண்டியதை நாம் அடைந்திருக்கிறோம்.”

என்ற உணர்ச்சி பொங்க அண்ணா உரையாற்றினார்.

இதனிடையில் ‘தமிழ்நாடு’ என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போது "TAMIL NAD’ ’ என்றுதான் எழுத வேண்டும்; TAMIL NAD’ ’ என்று எழுதக் கூடாது; ஆங்கில மரபை அப்படியே நாம் பின்பற்ற வேண்டும்; என்ற ராசகோபாலாச் சாரியார் ‘சுயராஜ்யா’ இதழில் தம் எதிர்ப்பை வெளிப்படுத்தி யிருந்தார். இதுகுறித்து சட்டப் பேரவையில் கேள்வி எழுப் பப்பட்டபோது அண்ணா சொன்னார்:- ‘அவர் ஆங்கில மரபைக் காப்பாற்ற நினைக்கிறார்; நான் தமிழ் மரபைக் காப்பாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.”

‘TAMIL NAD’ என்ற ஆச்சாரியாரின் கருத்தை மறுத்து ‘TAMIL NAD’  என்பதுதான் சரியென்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆச்சாரியாருக்குப் பதிலடி கொடுத்து விடுதலையில் எழுதினார். 1920களில் தொடங்கிய ‘தமிழ்நாடு’ பெயர்ப் போராட்டம் இன்றுவரை தொடர்கிறது. ஒன்றை மட்டும் நாம் தெளிவாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

தந்தை பெரியாரின் வேர்வைத் துளிகளாலும் ரத்தத் தினாலும் வரையப் பட்ட ‘தமிழ்நாடு’ எனும் வரலாற்றுப் பொன்னேட்டை மாற்றுவதற்கும் மறைப்பதற்கும் பீகார் பார்ப்பனர்களோ தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களோ செய்யும் முயற்சிகள், ஒற்றைத் தமிழன் உள்ளவரை ஒருபோதும் வெறி அடையா! அயலார் எம் தாய் நிலத்திற்குப் பெயர் சூட்டுவதை உயிரைக் கொடுத்தேனும் தடுப்போம்!

தந்தை பெரியார் வாழ்க! தமிழ்நாடு வாழ்க!

- முற்றும்


இடுகையிட்டது parthasarathy r நேரம் 5:51 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தமிழ்நாடு, பதிலடி, பெரியார்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

ஜெயமோகனின் பித்தலாட்டம்!

 

    November 26, 2022 • Viduthalai

 - கி.தளபதிராஜ்

அருஞ்சொல் எனும் இணைய தளத்தில்  பத்திரிகையாளர் சமஸ் அவர்களுக்கு  ஜெயமோகன் என்கிற ஒரு எழுத்தாளர் அளித்த பேட்டியில்,  ‘அறைகலன்’ என்ற வார்த்தையை தானே உருவாக்கி அதை தனது வெண்முரசில் பயன்படுத்தியதாக புளுகியதைக் கண்டு பலரும் முகம் சுளிக்கின்றனர். 

கடந்த சில நாட்களாக அவர்மீது கண்டனக்குரல்கள் முகநூல், வாட்ஸ்அப் போன்ற இணையதளப் பதிவுகளில் குவிந்த வண்ணம் இருக்கிறது. ஓரிருவர் இப்பதிவு கண்டு, ஜெயமோகன் மீது ஏன் இவ்வளவு வன்மம் என்றும் கேட்கிறார்கள். ஜெயமோகனின் தொடர் சங்கிப்போக்கை அறிந்தவர்களுக்கே இக் கண்டனக்குரல்களின் உணர்வை புரிந்துகொள்ள முடியும். 

இந்து தமிழ்திசை நாளிதழில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைப்பற்றிய கட்டுரை வந்த போது மாலன் வகையறாக்கள் எப்படி எதிர்வினையாற்றினார்கள் என்பது தெரிந்ததுதான். அப்போது இந்த ஆசாமி  இந்து நாளிதழை ‘பிஸ்கட்டிற்கு வாலாட்டும் நாய்கள்’ என்று எழுதினார். பத்திரிகையாளர்கள் ஆசைத் தம்பியையும்,செல்வபுவியரசனையும் ‘மொண்ணைகள்’ என்று கேலிசெய்தார். இப்படிப்பட்ட ஒருவருக்கு எதிராக கருத்துகள் எழும்போது, ‘அவரது எழுத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்‘ என சில அப்பாவிகள் சொல்வது அபத்தமாக இருக்கிறது. வைரமுத்து எழுதாததா? அந்த தார்மீகம் அப்போது எங்கே போயிற்று?

தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வே கிடையாது என்றவர்  ஜெயமோகன்!

“எம்.ஜி.ஆர், சிவாஜியை கிண்டல் செய்து எழுதினேன். அதை யாரும் ரசிக்கவில்லை. ஒருமுறை கேரளாவில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது இஸ்லாமியர் உருவர் தன் தராசை ஆற்றில் கழுவிகொண்டிருந்ததைப்பார்த்து உங்க ஆட்கள் நதியையும் விற்க ஆரம்பித்து விட்டார்களா? என்று கமென்ட அடிக்க எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தர்கள். அந்த உணர்வு இங்கே இல்லை.” என்றார்.

(தினமலர்)

எம்ஜி.ஆரையோ, சிவாஜியையோ  ஒரு இஸ்லாமியரையோ கிண்டலடிக்கும் இப்பேர்வழி சங்கராச்சாரிகளை - சங்கிப்பேர்வழிகளை எப்போதேனும் கிண்டலடித்ததுண்டா? இது சரியான துக்ளக்தனம் தானே? இவரை ‘சோ’மாரி என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?

வைக்கம் போராட்டத்தில் - “பெரியாரை அழைக்கும் அளவிற்கு, கேரளத்தில் தலைவர்கள் பஞ்சம் ஏற்படவில்லை!” 

என்று எழுதியவர்தான் இந்த மே(ல்)தாவி! 

வைக்கம் போராட்டத்திற்கு தலைமையேற்க பெரியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட சூழலை அறிவாரா இவர்!

1924 மார்ச் 30 வைக்கத்தில் போராட்டம் தொடங்குகிறது. போராட்டத்தில் கலந்துகொண்ட கேரளத் தலைவர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். தலைமையேற்க தலைவர்களை அனுப்பும்படி காந்தியாரிடம் வேண்டுகோள் வைக்கப்படுகிறது.

வைக்கம் போராட்டத்தை அகில இந்தியப் போராட்டமாக பெரிதுபடுத்த விரும்பாத காந்தியார் தலைவர்கள் யாரையும் அனுப்பவில்லை.

ஏப்ரல் 4ஆம் தேதி கேரளத்திலிருந்து கே.நீலகண்ட நம்பூதிரிபாத், உடனே புறப்பட்டு வரும்படி பெரியாருக்கு தந்தி கொடுத்தார்!

திருச்சி குளித்தலை மாநாட்டில் கலந்துகொள்ள இருந்ததால் அவரால் உடனே புறப்பட இயலவில்லை.

ஏப்ரல் 6 ஆம் தேதி ஜார்ஜ் ஜோசப்பிடமிருந்து அழைப்பு வந்தது.

ஏப்ரல் 12 ஆம் தேதி நம்பூதிரிபாத், “சத்தியாகிரகத்தின் நிலைமையைப் பற்றி யோசிக்க கூட்டம் கூடுவதால் நீங்கள் அவசியம் வரவேண்டும்!” என மீண்டும் பெரியாருக்கு தந்தி அடித்தார்.

அதே சமயம் கொச்சியிலிருந்தும் டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யர், “நீங்கள் இங்கு இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடனே புறப்பட்டு வாருங்கள்!” என பெரியாருக்குத் தந்தி அனுப்பினார்.

இரவு 7 மணிக்கு பெரியாருக்கு வந்த மற்றொரு தந்தியில், “வைக்கத்தில் நிலைமை பயங்கரமாக இருக்கிறது. தலைவர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்டு விட்டனர். நானும் வைக்கத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அங்கு நான் கைது செய்யப்படுவதும் நிச்சயம். இயக்கத்திற்கு தலைமை வகித்து நடத்த வாருங்கள். தந்தி மூலம் யோசனை கூறுங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த சூழலில்தான் பெரியார் வைக்கம் புறப்பட்டார்!

வைக்கம் போராட்டத்தில் பெரியாரும் - காந்தியாரும்!

வைக்கம் போராட்டம் தொடங்கிய காலத்தில் அங்குள்ள வைதீகர்களின் பேச்சைக்கேட்டு சத்தியாகிரகத்தை நிறுத்த ஆலோசனை வழங்கியவர் காந்தியார்!

போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருந்த ஜார்ஜ் ஜோசப்பை கிறிஸ்த்தவர் என்பதற்காக ஒதுங்கியிருக்கச் சொன்னவர் காந்தியார்.

சத்தியாகிரகிகள் உண்ணாவிரதம் இருந்தபோது அதை கைவிடக்கோரி போராட்டத்தின் வீரியம் குறைய காரணமாயிருந்தவர் காந்தியார்.

“கைது செய்யப்படப்போகிறேன். தலைவர்கள் தேவை!” என ஜார்ஜ் ஜோசப்பும், “எல்லா தலைவர்களும் கைதாகிவிட்டனர். தயவு செய்து யாரையாவது அனுப்புங்கள்!” என கிருஷ்ணசாமியும் காந்தியாருக்கு தந்தி அடித்த நேரத்தில் அதை அகில இந்திய இயக்கமாக மாற்ற மனமில்லாமல் சென்னை மாகாணத்தினர் பார்த்துக்கொள்வார்கள் என முட்டுக்கட்டை போட்டவர் காந்தியார்.

ஒரு கட்டத்தில் மதம் மாற உத்தேசித்தவர்களை கடுமையாக சாடியுள்ளார் காந்தியார்!.

போராட்டக்களத்தில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டபோது அகில இந்திய கமிட்டி உதவி செய்ய இயலாது என கை விரித்தவர் காந்தியார்! ஆனால் இந்தக் கோரிக்கை எழும் முன்பே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியோ பெரியார் மூலமாக 1000 ரூபாய் நிதி திரட்டி அனுப்பி வைத்தது.

காந்தியாருடைய ஒவ்வொரு ஆலோசனையும் அறிவுரையும் சத்தியாகிரகிகளின் கைகளை கட்டிப்போடுவதாகவே அமைந்தது.

இந்தச் சூழலில்தான் கேரளத் தலைவர்களால் பெரியார் அழைக்கப்படுகிறார்.

1924 மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய போராட்டத்தில் சரியாக 12 நாள் இடைவெளியில் ஏப்ரல் 13இல் வைக்கம் செல்கிறார் பெரியார்.

1924 மார்ச் இறுதியில் தொடங்கிய போராட்டம் 1925 நவம்பர் வரை கிட்டத்திட்ட இரண்டு ஆண்டுகள் நடைபெறுகிறது. தொடர்ந்து போராட்டக் களத்தில் இருந்த பெரியார் இடையில் இரண்டு முறை கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில் சிறைத்தண்டனை அனுபவிக்கிறார். கடைசி வரைப் போராடி அதன் வெற்றிக்கூட்டத்திலும் பங்கேற்றவர் பெரியார்.

அரசாங்கம் சமாதானம் பேச பெரியாரை ஏற்பாடு செய்யும்படி இராஜாஜிக்கு தூதுவிட இராஜாஜி சாதுர்யமாக அதில் காந்தியாரை நுழைத்துவிட்ட செய்தியும் உண்டு. பெரியாரை பஞ்சாயத்திற்கு விட்டால் அது கோயில் நுழைவில் கொண்டுபோய் விடும் என இராஜாஜி நினைத்திருக்கக் கூடும்!

போராட்ட செய்திகளில் பெரியாரை அப்போதே (1925) ‘வைக்கம் வீரர்’ என்றே எழுதுகிறது நவசக்தி!

வரலாறு இப்படி இருக்க பெரியார்  வைக்கம் வீரரா? என்று நக்கலடித்து பேனாவை நகர்த்தியவர்தான் இந்த பித்தலாட்டப் பேர்வழி!

இவரைப்பற்றி அறிந்தவர்களுக்கு, ‘அறைகலன்’ என்ற சொல் தன்னால் உருவாக்கப்பட்டது என்று இவர் சொல்வதைக்கண்டு ஆச்சரியப்பட வாய்ப்பில்லை.

அறைகலன் என்ற சொல் வழக்கில் வந்தது எப்போது?

ஆட்சிமொழிக் காவலர் என்று பாராட்டப் பெற்ற கீ.இராமலிங்கனார் எழுதிய “தமிழில் எழுதுவோம்“ என்ற நூலிலேயே அறைகலன் என்ற சொல்  உள்ளது. 1978ஆம் ஆண்டு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் இந்த நூல் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தவர் அன்றைய அமைச்சர்களில் ஒருவரான ஆர்.எம்.வீரப்பன்!  

அதன்பின் 90 களில் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட “ஆட்சிச் சொல்லகராதி” - மணவை முஸ்தபா வெளியிட்ட மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி - என பல நூல்களிலும் furniture என்ற ஆங்கில சொல்லுக்கு மாற்றாக ‘அறைகலன்’ என்ற  வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டு வணிக நிறுவனங்களிலும் இச்சொல் பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருப்பதை அறிவோம்.

இப்படி புழக்கத்தில் உள்ள ஒரு சொல்லையே தான் உருவாக்கியதாக ஜம்பமடிக்க முயலும் ஜெயமோகன் போன்றவர்களின் அறிவுநாணயத்தை என்னவென்று சொல்வது?

(கீ.இராமலிங்கனார் எழுதிய தமிழில் எழுதுவோம் நூல் பக்கம் 94)

                      

இடுகையிட்டது parthasarathy r நேரம் 5:34 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அறைகலன், ஜெயமோகன்

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

திருப்புகழ் பதிப்பு வரலாறு


இன்று நாம் போற்றிப்புகழும் திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த   24  வருட உழைப்பை நாம் அறிவோமா ? அதற்க்கு யார் காரணம் என்பதை  வரலாறு அறியுமா ?

அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர்அவர் அவர் முருகக் கடவுள் மீது இயற்றிய ஒரு பக்தி நூல்
திருப்புகழ் ஆகும்  திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன., அதாவது கிடைத்துள்ளன   இன்னமும் கிடைக்காதது பல நூறு ஆகும்  இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள்.திருப்புகழிலுள்ள இசைத்தாளங்கள் இசைநூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றவை 

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை .....என்றுதான் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் தனது அனைத்து சொற்ப்பொழிவுகளைத் தொடங்குவார் .அவர் மூலமே அடியேனுக்கும் திருப்புகழ் அறிமுகம் ஆனது .

அத்தகைய திருப்புகழ் நமக்கு கிடைக்க தனிப்பட்ட ஒரு அரசு அலுவலரின் தன்னலமற்றது தொண்டினாலும்  , ஆர்வத்தாலுமே காரணமாக அமைந்தது 
அந்த  போற்றுதலுக்குரிய  அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை ஆவார் .

திருப்புகழ் நமக்குக்கிடைக்கவும் சுவையான ஒரு காரணமும் உள்ளது .
.அவர் குறித்து  ஒரு கட்டுரையை தமிழ் இந்து 9/8/14 அன்று வெளியிட்டிருந்தது .
அதை இப்போதுப் பார்ப்போம்

வ.த.சுப்பிரமணிய பிள்ளை 1871-ம் ஆண்டு மஞ்சக்குப்பம் வழக்காடு மன்றத்தில் மாவட்ட முன்சீப்பாகப் பணிபுரிந்த காலம் அது. சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த வழக்கில் சாட்சிக் கூண்டில் நின்ற தீட்சிதர்கள் தங்களுடைய வாதத்தில் கோவில் உரிமை தீட்சிதர் களாகிய எங்களுக்கே என்று பொருள் தரக் கூடிய திருப்புகழ் பாடலை மேற்கோள் காட்டி வாதாடினர். அப்பாடலின் வரி;

“தாது மலர் முடியிலே வேத நன்முறை

வாளுவமே தினம் வேல்வி யாலிலில்

புனை மூவயீர வேட்டியர் மிகவே புகனை புரிகோவே

(கடவுளே வேத முறைகளில் கண்டிப்பாக இருந்தபடி பல்வேறு தியாகங்கள் செய்த மூவாயிரவர் என்ற பெருமை பெற்ற அந்தணர்களால் தினமும் துதிக்கப்படுபவரே நீங்கள்)

தீட்சிதர்கள் கூறிய வாசகத்தைக் கேட்டவுடன் வ.த. சுப்பிரமணிய பிள்ளை அவர்களுக்கு அக்கணமே பொறி தட்டியது. அருணகிரி நாதர் பாடிய பதினாறாயிரம் பாடல்களில் ஒரு ஆயிரம் பாடல்களையாவது சேகரித்து அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டார்.

தலங்கள் தோறும் சென்று செல்லேறிப் போன பல வழுக்கள் பொதிந்திருந்த திருப்புகழ் ஓலைச்சுவடிகள் பலவற்றைச் சேகரித்து ஒத்துப்பார்த்து, பாட பேதங்களைக் கண்ணுற்று வெவ்வேறு சுவடிகளில் காணும் வித்தியாசங்களைப் பண்டிதர்களைக் கொண்டு திருத்தி அச்சிட்டுப் புத்தக வடிவில் யாவரும் எளிதில் பெறுமாறு செய்த ஏந்தல் வ.த.சுப்பிரமணிய பிள்ளை.

அரசாங்கப் பணிகளுக் கிடையில் தமக்குத் தெரிந்த பல நண்பர்களிடம் தொடர்பு கொண்டுத் திருப்புகழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடத் தொடங்கினார். ஆங்காங்கு அவை கிடைக்கத் தொடங்கின. 1876-ம் ஆண்டு ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா-விடையில் திருப்புகழின் ஆறு பாடல்கள் இருந்தன. 1878-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று காஞ்சிபுரம் புத்தேரி தெரு அண்ணாமலை பிள்ளை என்பவரிடமிருந்து 750 பாடல்கள் கொண்ட ஏட்டுச்சுவடிகள் கிடைத்தன. அதே வருடம் பின்னத்தூர் சீனிவாச பிள்ளையிடம் 450 பாடல்களும், பின்னர் அவரிடமே 150 பாடல்களும் கிடைத்தன. 20.03.1881-ல் கருங்குழி ஆறுமுக ஐயர் என்ற வீர சைவரிடமிருந்து 900 பாடல்கள் திருப்புகழ்ச் சுவடிகள் கிடைத்தன. 1903-ம் ஆண்டு திருமாகறல் என்ற ஊரில் 780 பாடல்கள் கிடைத்தன.

உ.வே.சாமிநாதையர் தமிழகமெங்கும் தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்த காலம் அது. வ.த.சுப்பிரமணிய பிள்ளையவர்கள், உ.வே.சாவிடம் தொடர்பு கொண்டு திருப்புகழ் சுவடிகளைக் கண்டால் தெரிவிக்குமாறு வேண்டிக் கொண்டார். இதை உ.வே.சா, தனது ‘என் சரித்திரம்’ நூலில் பதிவுசெய்துள்ளார்.

ஓலைச்சுவடிகளின் குறை களைக் களைந்து சீர் செய்வ தற்கு மஞ்சக்குப்பம் பள்ளி ஆசிரியர் சிவசிதம்பர முதலி யார், சேலம் சரவணப்பிள்ளை, ஆனந்த ராம ஐயர் போன்றவர் கள் ஆற்றிய பங்கு பெரிது.

திருப்புகழ் முதல் பதிப்பை 05.06.1891 அன்று சிவசிதம்பர முதலியார் செப்பம் செய்து சீர்திருத்தி வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டார். 9.04.1895-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட திருப்புகழ் பாடல்களை அச்சிற்குப் பதிப்பிக்கக் கொடுத் தார். திருப்புகழ் கட்டம் செய்யப்பட்டு அழகிய வடிவில் அச்சில் பதிப்பித்து முதன்முதலாக புத்தக வடிவில் பிள்ளையவர்கள் அப்போது பணிசெய்து கொண்டிருந்த திருத்துறைப்பூண்டிக்கு அனுப்பப்பட்டது. புத்தக வடிவில் திருப்புகழைக் கண்ட பிள்ளையவர்கள் பேரானந்தம் அடைந்தார். அதே சமயம் ஓலைச்சுவடியிலிருந்து பெயர்த்து எழுதிச் செப்பம் செய்து தந்த சிவ சிதம்பர முதலியார் அச்சு வடிவத் திருப்புகழ் புத்தகத்தைக் காணாமலேயே இறந்துபோய் விட்டார்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் திருப்புகழைப் புத்தக வடிவில் கண்ட அன்று தனது டைரிக்குறிப்பில் 09.04.1895-ம் ஆண்டு இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். கடந்த 24 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட திருப்புகழ் பதிப்பு வேலை முடிய இவ்வளவு காலம் சென்றுள்ளது. இப்போதும் பாதி அளவே முடிந்துள்ளது என்று கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.

1909-ம் ஆண்டு சில திருத்தங்களுடன் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. அதே ஆண்டு ஏப்ரல்-16-ம் தேதி இரவில் படுக்கைக்குச் சென்றவர் நள்ளிரவில் உயிர்துறந்துவிட்டார். வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் புதல்வர்கள் வ.சு.செங்கல்வராய பிள்ளை மற்றும் வ.சு.சண்முகம் பிள்ளையும்புதிய பாடல்களை இணைத்து திருப்புகழினைத் தொடர்ந்து வெளியிடலாயினர்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் விருப்பப்படி அவருடைய சமாதி, திருத்தணி கோவிலை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.

நன்றி   தி இந்து 
படம்   அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை 
மற்றும் திருப்புகழ்
-சித்தர் அறிவியல் முகநூல் பதிவு

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:17 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: திருப்புகழ், பதிப்பு

ஞாயிறு, 22 ஜனவரி, 2023

தமிழ்நாடு என்கிற பெயர் எப்படி வந்தது?


1) மெட்ராஸ் ஸ்டேட் பிரசிடென்ஸி அதாவது சென்னை ராஜதானி என்கிற மாநிலத்தை இனி தமிழ்நாடு என்றே அழைக்க வேண்டும் என்று அழுத்தமாக ஓங்கி ஒலித்த முதல் குரல் பெரியாருடையது !

2) 1956 - 75 நாட்களுக்கும் மேலாக, தனித்து தீவிர உண்ணாநோன்பிருந்து இறந்து போனார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்கரலிங்கனார்.  ஊர் விருதுநகர்.  ஆட்சியிலிருந்தது காங்கிரஸ் அரசு.  முதலமைச்சர் காமராஜர்.  அவருடைய ஊர் ...

சங்கரலிங்கனாரின் பிரதானக் கோரிக்கை தமிழ்நாடு என்கிற பெயரை மெட்ராஸ் பிரசிடென்சிக்கு சூட்ட வேண்டும் என்பதுதான்.

ஆனால் இப்படி விரதம், கிரதம்ன்னு எங்கிட்ட பூச்சாண்டி காட்ட முடியாதுன்னேன் என்று காமராஜர் கறாராக, கல்லாக இருந்துவிட ;

துடி துடித்து செத்துப் போனார் தியாகி சங்கரலிங்கனார்.

காங்கிரஸ் கைவிட்டு விட, அன்று அவருடன் இருந்தது கம்யூனிஸ்ட் & திமுக.

காங்கிரஸ் தலைவர்களைத் தவிர ஏனையக் கட்சிகளின் அனைத்து தலைவர்களும், உண்ணாவிரதப் பந்தலுக்குப் போய் சங்கரலிங்கனாரை பார்த்துவிட்டு வந்தனர்.  அப்படி ஒருமுறை அண்ணா அவர்கள் போனபோது, அவருடையக் கைகளை அழுந்தப் பிடித்துக் கொண்டு சங்கரலிங்கனார், காங்கிரஸ்தான் என்னைக் கை விட்டுடுச்சி, நீயாவது என் ஆசையை நிறைவேத்து என்றிருக்கிறார்.  அண்ணா வெடித்து அழுதிருக்கிறார்.  அந்தளவு அந்த உடல் மோசமாகி இருந்தது !

சங்கரலிங்கனார் இறக்கும் சில நாட்களுக்கு முன்னர் கூட அவர் நாடகமாடுவதாக காங்கிரசார் மீட்டிங்கில் பேசினர்.  அதாவது கம்யூனிஸ்ட்கள் அவருக்கு ரகசியமாக உணவுகளை இரவு வேளையில் கொடுத்து வருவதாக !

நான் செத்துட்டா ஒரு காங்கிரஸ் பய எனக்கு அஞ்சலி செலுத்த வரக் கூடாது.  என் மேல காங்கிரஸ் கொடியைப் போர்த்தக் கூடாது.    என் உடலை கம்யூனிஸ்ட்கள்தான் எடுக்க வேண்டும்.  அவர்கள்தான் இறுதி காரியங்களைச் செய்ய வேண்டும்.

பொதுவுடமை கட்சியினர்தான் சங்கரலிங்கனாரின் இறுதி ஊர்வலம், சடங்கு, அஞ்சலியைச் சிறப்புற செய்தனர் !

3) 1957 - திமுகவின் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் முதன்முறையாக சட்டசபைக்குள் நுழைகின்றனர்.  சங்கரலிங்கனாரின் உயிர் தியாகத்தை மதிப்பதற்காகவாவது காமராஜர் செவிமடுப்பார் என நம்பி, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமென்கிற தீர்மானத்தை சட்டசபையில் வைத்தனர்.

அதன்மீது தர்க்கங்கள் நடந்தன.  இது ஒருவகையான அட்டென்ஷன் சீக்கிங் என்கிற புது வியாதி.  தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று உணர்ச்சி கொந்தளிக்கப் பேசிவிட்டால் மக்கள் மயங்கிவிடுவார்கள் என ஒரு சிறுகூட்டம் நம்புகிறது அல்லது அப்படி பேசி மக்களை ஏமாற்றுகிறது.  எத்தனை உயிர் போனாலும் பிரிவினைவாதக் கொள்கைகளை ஏற்க முடியாது என்றது காமராஜர் அரசு !

நம்புங்கள்.  அன்றைய காங்கிரஸ் கிட்டத்தட்ட இன்றையச் சங்கிகள்.  சத்தியமூர்த்தி, இராஜகோபால், ஆர் வெங்கட்ராமன்ல்லாம் இருந்த காங்கிரஸ் பின்ன என்னவா இருக்கும் ?

07/05/1957 அன்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் 42 (கம்யூனிஸ்ட் & திமுக.  அன்று எதிர்கட்சி கம்யூனிஸ்ட்தான்)

தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தவர்கள் 127.  சங்கரலிங்கனார் இறந்த பின்னரும் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது !

ஆச்சா ?

4) 1961 - சங்கரலிங்கனார் செத்து அஞ்சு வருஷமாச்சு.  திமுக தீர்மானம் கொண்டு வந்து நாலு வருஷமாச்சு.  இம்முறை சோசலிஸ்ட் கட்சிக்காரர் மீண்டும் தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டு வந்து, ஆளுங்கட்சியினர் தயைகூர்ந்து ஆதரித்து வாக்களிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

காமராஜர் உண்மையிலேயே தீர்க்கதரிசி என்றால், நிச்சயம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மிக எளிதாக, ஆமாம் அந்தளவு அவருக்கு நேருவிடம் செல்வாக்கு இருந்தது, தமிழ்நாடு எனப் பெயர் சூட்டி வரலாற்றில் இடம் பெற்றிருக்கலாம் !

நம்பமாட்டீர்கள்.  காந்தி & காமராஜர்.  இருவருமே பெரும் சர்வாதிகாரிகள்.  முரட்டுப் பிடிவாதம் கொண்டவர்கள்.  இதில் காந்தியார் ஒரு படி மேலே சென்று எதிர்ப்பைக் காட்ட உண்ணாவிரதம் என்கிற ஆயுதத்தை வேறு தூக்கிடுவார்.

பெரிய அக்கப்போரா போச்சே விடுங்க இனி கடிதப் போக்குவரத்தில் வேணா தமிழ்நாடுன்னு எழுதிக்கலாம் என சட்டசபையில் குறிப்பிட்டார்.  எதிர்கட்சிகள் சம்மதிக்கவில்லை.  பிறகென்ன, வழக்கம் போல இந்தத் தீர்மானமும் தோல்வி !

1962 - காங்கிரஸ் மாபெரும் வெற்றி.  மாறாக அண்ணாதுரை தோல்வி.  ஆனால் திமுகவின் பலம் முன்பை விட நான்கு மடங்கு அதிகமானது !

5) அண்ணாவை மாநிலங்களவைக்கு உறுப்பினராக்கி அனுப்பி வைத்தது திமுக.

அங்குதான் கம்யூனிஸ்ட் தனிநபர் மசோதாவாக தமிழ்நாடு கோரிக்கையை எழுப்புகிறது.

அண்ணா அதை ஆதரித்து அற்புதமான வாதங்களை எடுத்து பேசுகிறார்.

இலக்கியங்களில் தமிழ்நாடு என்று பெயர் வருமிடங்களைச் சுட்டிக் காட்டுகிறார்.

அதெல்லாம் சரிங்க, இப்ப தமிழ்நாடுன்னு மாத்திடறதால உங்களுக்கு என்ன லாபம் ? என்று ஒரு காங்கிரஸ் உறுப்பினர் கேட்கிறார்.

பார்லிமெண்ட் ஹவுஸ் என்றிருந்ததை லோக்சபா என்று நீங்கள் மாற்றினீர்களே உங்களுக்கு என்ன லாபம் வந்ததோ அதே லாபம் தமிழ்நாடுக்கும் வரும் என்றார் !

அண்ணா ஆங்கிலத்தில் பெரும்புலமை வாய்ந்தவர் என்பதால் அந்த அவையே வாய்பிளந்து அந்த உரையை ரசித்தது !

ஆனால் தீர்மானம் தோல்வி.

6) விடாது கருப்பு - சிவப்பு.

23/07/1963.

மீண்டும் திமுகவின் இராம.அரங்கண்ணல் தமிழ்நாடு தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வருகிறார்.  முதலமைச்சர் பக்தவச்சலம்.  தொழில் துறை அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன்.

7) தமிழ்நாடு என்றால் யாருக்குமே புரியாது.  குறிப்பாக வடக்கில் அனைவருக்குமே மெட்ராஸ்ன்னு நல்லா பழகிருச்சி.  ஃபாரின்காரன் வாய்ல தமிழ்நாடு நுழையவே நுழையாது, பெயரை திடுக்குன்னு மாத்தினா அவன் காண்ட்ராக்டை எல்லாம் கேன்சல் பண்ணிடுவான்.
எனவே மதராஸ் பிரசிடென்சி எனத் தொடர்வதே நமக்கு நல்லது என்று பேசினார் வெங்கட்ராமன்.

சங்கரலிங்கனார் இறந்து எட்டு வருடங்கள் ஆன பின்னரும் தீர்மானங்கள் தோற்றுக் கொண்டே இருந்தன !

8) 1967 - யோசிச்சு பாருங்க.  சொந்த மக்களிடத்திலேயே இவ்வளவு காழ்ப்புடன் ஓர் அரசு நடந்துக்கும்ன்னா, கூடவே அரிசிப்பஞ்சம், இந்தி எதிர்ப்பு போராட்டம், பதுக்கல் கொள்ளையர்கள் பெருக்கம், விளங்குமா ?  அப்ப போன காங்கிரஸ்தான்.  மக்களின் கோபம் காமராஜரையே பலி போட்டது.  ஆனால் இந்தச் சங்கி கூடையான்கள் காமராஜரையே தோற்கடிச்சிட்டானுகளேன்னு கதறுவாய்ங்க.  ஏன்னு இனிமேலாவது புரிஞ்சா சரி.

9) அண்ணா முதலமைச்சராகிறார்.  மூன்று அதிமுக்கியமான தீர்மானங்களை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்கிறார்.

i) இனி நம் நாடு தமிழ்நாடு என்றழைக்கப்படும் !

ii) தமிழ் & ஆங்கிலம் என்கிற இருமொழிக் கொள்கை மட்டுமே இங்கு இருக்கும்.  மும்மொழி என்கிற போர்வை போர்த்திக் கொண்டு கூட இந்தி நுழைய முடியாது !

iii) சடங்கு, சம்பிரதாயம், அக்னிசாட்சி, இடைத்தரகர் என்கிற எந்த இடையூறுகளுமின்றி நடத்தப்படும் சீர்திருத்த திருமணங்களும் செல்லும் !

10) 18/07/1967 - தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  சட்டமன்றத்தில் வென்ற தீர்மானம் என்பதால், ஒன்றிய அரசில் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்து, அது ஏற்றுக் கொள்ளவும் பட்டது !

சங்கரலிங்கனாருக்கு கொடுத்த வாக்குறுதியை 11 ஆண்கள் கழித்தும் மறவாமல் நிறைவேற்றிச் சாதித்தார் முதலமைச்சர் அண்ணா 🖤❤ 

தொகுப்பு:

Raja Rajendran Tamilnadu
இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:28 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தமிழ்நாடு

வெள்ளி, 4 நவம்பர், 2022

திருக்குறளில் உள்ள #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் #திருவள்ளுவர்_எழுதியது_இல்லை !

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02smZkmpF9EXEKZ4B8Jizi2BF2EncLLinYsapZjNRM5XuFwMVqFNBYvTacnxj8BQ6ul&id=100000324268158
திருக்குறளில் உள்ள #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் #திருவள்ளுவர்_எழுதியது_இல்லை !

இப்படி சொல்பவர் பெரியாரோ அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாத அறிஞர் ஒருவரோ அல்ல.

திருக்குறளை ஆய்வு செய்து திருக்குறளில் உள்ள இடைச்செருகல்களை ஆதாரங்களுடன் நிறுவியவர் #வ_உ_சி அவர்கள்.ஆம் இந்திய சுதந்திர போராட்ட தியாகி என புகழப்படும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களேதான். வ.உ.சி.கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

திருக்குறளில் #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் மட்டுமல்ல,#வான்_சிறப்பு, #நீத்தார்_பெருமை ஆகிய அதிகாரங்களும் திருவள்ளுவர் எழுதியவை அல்ல.அவை #இடைச்செருகல்களே என்று ஆய்வு செய்து கூறுகிறார் வ.உ.சி.“அவை திருவள்ளுவர் காலத்திற்குப் பிற்காலமும் முந்திய உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்காலமுமாகிய இடைக் காலத்துப் புலவர் ஒருவரால் பாடிச் சேர்க்கப் பட்டவையென்றும் யான் கருதுகிறேன்” என்று கூறுகிறார்.

பரிமேலழகர் என்பவர் எழுதிய திருக்குறள் உரை ஆரிய சார்பானதாக இருப்பதை ஏற்க மறுத்து (அப்போது சுயமரியாதை இயக்கமோ,பகுத்தறிவு கருத்துக்களோ வீரியமாக பேசப்படாத காலம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.) ஏற்கும்படி இருக்கும் மணிகுடவர் எழுதிய திருக்குறள் உரையிலிருந்து திருக்குறள் அறத்துப்பால் மணிக்குடவர் பதிப்பு எனும் தலைப்பில் 140 பக்கங்கள் கொண்ட நூலை 1917  ஆம் ஆண்டு பதிப்பித்தார் வ.உ.சி.

1930 - 1932 களில் வெளிவந்த ''தமிழ்ப் பொழில்'' (துணர் 5/மலர் 6) எனும் இதழில் பாயிர ஆராய்ச்சி எனும் தலைப்பில் (பக்கம்: 232-237)எழுதியுள்ள கட்டுரையில் வ.உ.சி.அவர்கள் இந்த ஆய்வுகளை தொடராக எழுதியுள்ளார்.

பாயிர ஆராய்ச்சி எனும் ஆய்வு கட்டுரையில் வ.உ.சி அவர்கள் திருக்குறளின் இடைச்செருகல்கள் குறித்து எழுதியுள்ள கருத்துக்களின் சாரம் :

திருக்குறளின் இம்மூன்று அதிகாரங்களும் தற்காலத்தில் மிகவும் புகழ் பெற்றவை. கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய இம் மூன்று அதிகாரங்களிலுள்ள முப்பது குறட்பாக்களையும் திருவள்ளுவர் எழுதியிருக்க முடியாது என்பதற்கு காரணங்களை முன் வைக்கிறார் வ.உ.சி.

1.            கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை பாடல்களில் பிற பாடல்களைப்போலச் சொற்செறிவும் பொருட்செறிவும் இல்லை.

2.            கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய பாடல்களின் பொருள்கள் பல தடைகளுக்கு இடம் கொடுக்கின்றன.

3.            மெய்யுணர்தல், துறவு என்ற தலைப்புகளில் நூலின் உள்ளே அதிகாரங்கள் இருப்பதால் இதற்கு முரணான தலைப்புகளான கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை ஆகியவற்றை நூலின் தொடக்கத்தில் அதாவது பாயிரத்தில் வைத்திருப்பது பொருத்தமானதல்ல.

4. மெய்யுணர்தல் எனும் தலைப்பிலுள்ள அதிகாரத்தில் கடவுளுக்குக் கூறியுள்ள இலக்கணங்களைக் கொண்டு பார்க்கும்போது அவற்றையும் இம்மூன்று அதிகாரங்களையும் ஒருவரே எழுதியிருக்க முடியாது. (வ.உ.சியின் இக்கருத்து விரிவான ஆய்வுக்குரியது).

5.            துறவு மற்றும் நீத்தார் பெருமை ஆகிய அதிகாரங்களில் உள்ள பாடல்களை ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டையும் ஒருவரே இயற்றியிருக்க முடியாது.

6.            மழையைச் ‘சிறப்பிற்றணிப்பாருமில்லை, வறப்பிற்றரிவாருமில்லை.” எனவே, ‘வான் சிறப்’பைக் கூறுவதால் பயன் ஒன்றுமில்லை.

7.  திருக்குறள் 10 என எண்ணிக்கையில் இருக்கும் போது 10ன் மடங்குகளாக 130 அதிகாரமும் 1300 குறள்கள் மட்டுமே இருந்திருக்க வேண்டும்.

---------------------------------------------------------------------------------

திருவள்ளுவரே கடவுள் வாழ்த்தை எழுதி இருக்கிறார் கடவுள் இருப்பதை ஏற்றுக்கொண்டார் என ஏமாற்றி வந்தவர்கள் இப்போது திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூச முயலும் அயோக்கியத்தனமான முயற்சியில் இறங்கியிருக்கும் இவ்வேளையில் கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகியவை திருக்குறளே அல்ல.அவை திருவள்ளுவர் எழுதியவையும் அல்ல.இந்த 3 அதிகாரங்களும் இடச்செருகல்களே என்கிற வ.உ.சி.அவர்களின் ஆய்வுக்கட்டுரையை நாம் மீள வாசிக்க வேண்டியதும் அதனை பரப்புவதும் அவசியமாகும்.
- பரிமள ராஜன் முகநூல் பக்கத்திலிருந்து.... ஆண்டு 2019
இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:33 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆய்வு, திருக்குறள், வ .உ. சி

2 ஆயிரம் ஆண்டு பழைமையான தமிழ் எழுத்துகள் பொறித்த பானை ஓடுகள் கண்டுபிடிப்பு



  November 04, 2022 • Viduthalai

காளையார்கோவில், நவ.4- காளையார் கோவில் பாண்டியன் கோட்டையில் 2 ஆயிரம் ஆண்டு பழைமையான தமிழ் எழுத்துகள் பொறித்த பானையோடு கண்டுபிடிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில்  பாண்டியன் கோட்டையில் 2 ஆயிரம் ஆண்டு பழைமையான தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு  சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா கூறியதாவது: பாண்டியன்கோட்டை பகுதியில் மேற்பரப்பில் கிடந்த ஓட்டை எடுத்து சுத்தம் செய்து பார்த்ததில் அது 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானையோடு என்பது உறுதி செய்யப் பட்டது. கீழடியில் வெட்டப்பட்டுள்ள அகழாய்வு குழிகளைப்போல, இதன் இரண்டு புறங்களிலும் மண் அடுக் குகளும் பானை ஓட்டு எச்சங்களும் உடைந்த நிலையில் அரைகுறையான பானைகளும் காணப்படுகின்றன.

இந்த வாய்க்காலில் தான் தமிழ் எழுத்து பொறித்த பானையோடு கிடைக்கப் பெற்றுள்ளது. தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓட்டில், கருப்பிலும் சிவப்பிலும் எழுத்துப்பொறிப்பு காணப்படுகிறது, பானை ஓட்டின் உட்புறம் முழுமையாக கரிய நிறமாக உள்ளது. இந்த ஓடு 7 செமீ அகலமும் ஏழரை செ.மீ உயரமும் உடையதாக உள்ளது. அய்ந்து எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன, மோ, ச, ர, ப, ன்   ஆகிய தமிழி எழுத்துகள் வெளிப்படையாக தெரிகின்றன.

எழுத்துகள் தெளிவுற வாசிப்ப தற்காக தொல்லியல் அறிஞர்களின் பார்வைக்கு அனுப்பப்பட்டதில் அவர்கள் அய்ந்து எழுத்துகள்  மோ, ச, ர, ப, ன்   போன்று வெளிப்படையாக தெரிந்தாலும் ர என்கிற எழுத்து ‘த’ வாக இருக்கலாம். சற்று ஒரு கோடு சிதைவுற்று இருக்கலாம். மோசதப[ன்] மோசிதப[ன்] என்று இருந்திருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் சங்க காலத்திலே மோசிகீரன் என்ற பெயர் வழக்கில் உள்ளதால் மோசிதபன் என்று கருதவும் இடம் உண்டு. முறையான அகழாய்வை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொண்டால் காளையார்கோவி லின் தொன்மையும், பாண்டியர்களின் கோட்டை கட்டுமானங்களும் தமிழ் நாட்டின் தொன்மையும் வெளிப்படும். இவ்வாறு கூறினார். காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் கிடைக்கப் பெற்ற தமிழ் எழுத்துப் பொறித்த பானை ஓட்டை, அதன் தொன்மை, பெருமை, பாதுகாப்பும் கருதி சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஒப் படைக்க சிவகங்கை தொல்நடைக்குழு முடிவு செய்துள்ளது.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:22 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தமிழ் எழுத்து, பானை ஓடு
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

திருவள்ளுவர்

திருவள்ளுவர்
குமரிக் கடலில்133 அடிஉயர சிலை

இந்த வலைப்பதிவில் தேடு

கருத்து களம்

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (4)
    • ▼  ஜூலை (2)
      • தாய்லாந்தில்2000 ஆண்டு பழைமையான ‘தமிழி’ முத்திரை ம...
      • உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகளில் சிந்த...
    • ►  ஜனவரி (2)
  • ►  2025 (9)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2024 (69)
    • ►  டிசம்பர் (3)
    • ►  அக்டோபர் (50)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (5)
    • ►  மே (2)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2023 (17)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (3)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (1)
  • ►  2022 (18)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (8)
  • ►  2021 (26)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (4)
  • ►  2020 (44)
    • ►  டிசம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (16)
    • ►  ஜனவரி (8)
  • ►  2019 (85)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (131)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (17)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (9)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (19)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (16)
  • ►  2017 (74)
    • ►  டிசம்பர் (7)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (61)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (13)
    • ►  அக்டோபர் (13)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (14)
  • ►  2015 (48)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (17)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (1)
    • ►  மார்ச் (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2014 (1)
    • ►  அக்டோபர் (1)

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

எனது வலைப்பதிவு பட்டியல்

  • விடுதலை வலைப்பூ

மொத்தப் பக்கக்காட்சிகள்

லேபிள்கள்

  • 10-ஆம் நூற்றாண்டு
  • அ. ச. ஞானசம்பந்தன்
  • அகத்தியம்
  • அகத்தியர்
  • அகரமுதலி
  • அச்சு
  • அண்ணா
  • அப்பாதுரையார்
  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அயல்நாடு
  • அரசு ஆணை
  • அரசுடமை
  • அரபி
  • அரபு
  • அரபு மொழி
  • அரியானா
  • அரேபியா
  • அவமதிப்பு
  • அளவைகள்
  • அறிவிப்பு
  • அறிவியல்
  • அறைகலன்
  • ஆ.ராசா
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆட்சிமொழி
  • ஆய்வு
  • ஆராய்ச்சி
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆஸ்திரேலியா
  • இசை
  • இடம்
  • இணையம்
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்திய எதிர்ப்பு
  • இந்திய மொழிகள்
  • இந்து மதம்
  • இராபர்ட் கால்டுவெல்
  • இரும்பின் தொன்மை
  • இரும்பு உருக்காலை
  • இரும்புக்காலம்
  • இலக்கணம்
  • இலக்கிய நூல்கள்
  • இலக்கியம்
  • இலக்குவனார்
  • இலங்கை
  • இழிமொழி
  • இழிவு
  • இறப்பு
  • இனம்
  • ஈகிகள்
  • உ.வே.சா.
  • உச்சர நீதிமன்ற தீர்ப்பு தமிழில்
  • உருக்கு இரும்பு
  • உருது
  • உலகம் முழுவதும் தமிழ்
  • உவேசா
  • ஊர்தி பயணம்
  • எகிப்து பிரமிடு
  • எண்கள்
  • எலும்புக்கூடு
  • எழுத்து
  • எழுத்து சீர்திருத்தம்
  • ஒற்றைப்பத்தி
  • ஒன்பது
  • ஓகம்
  • ஓமன்
  • கட்டாயம்
  • கடவுள்
  • கடவுள் வாழ்த்து
  • கடை
  • கண்ணகி
  • கம்போடியா
  • கருநாடகம்
  • கருப்பு
  • கல்திட்டை
  • கல்லூரி
  • கல்வெட்டு
  • கலவை மொழி
  • கலைஞர்
  • கவரி மான்
  • களவு
  • கனடா
  • கால்டுவெல்
  • கி வீரமணி
  • கி.வீரமணி
  • கிணறு
  • கிழமை
  • கீழடி
  • குடமுழுக்கு
  • குமரி அனந்தன்
  • கோபுரம்
  • கோயில்
  • சங்க இலக்கியம்
  • சங்ககாலம்
  • சங்கம்
  • சங்கராச்சாரி
  • சமசுகிருதம்
  • சமஸ்கிருதம்
  • சர்.ஏ. டி. பன்னீர்செல்வம்
  • சனாதனம்
  • சாதி
  • சிங்கப்பூர்
  • சிந்துவெளி
  • சிலப்பதிகாரம்
  • சிறப்பு
  • சீர்திருத்தம்
  • சீனா
  • செங்காந்தள்
  • செந்தமிழ்
  • செந்தமிழ் சொற்பிறப்பியல்
  • செம்மொழி
  • சொல் சிறப்பு
  • சொற்கள்
  • சொற்போர்
  • டி.ஆர்.பாலு
  • தந்தை பெரியார்
  • தமிழ்
  • தமிழ் ஆண்டு
  • தமிழ் இருக்கை
  • தமிழ் எண்
  • தமிழ் எழுத்து
  • தமிழ் கல்வெட்டு
  • தமிழ் காந்தி
  • தமிழ் சுவடி
  • தமிழ் தாய் வாழ்த்து
  • தமிழ் தேசியம்
  • தமிழ் நாடு
  • தமிழ் பயிற்சி
  • தமிழ் பாடம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் பெருமை
  • தமிழ் மரபு
  • தமிழ் மைல் கல்
  • தமிழ் மொழி
  • தமிழ்த் தாத்தா
  • தமிழ்த் தொண்டு
  • தமிழ்த்தாய் வாழ்த்து
  • தமிழ்தேசியம்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு நாள்
  • தமிழ்ப் பற்று
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் பெயர்கள்
  • தமிழக பரப்பு
  • தமிழர்
  • தமிழர் திருநாள்
  • தமிழர் மதம்
  • தமிழர் விழா
  • தமிழர்கள்
  • தமிழி
  • தமிழிசை
  • தமிழில் கையொப்பம்
  • தமிழில் பெயர்
  • தமிழின் பிள்ளைகள்
  • தமிழினம்
  • தனித்தமிழ்
  • தனித்தமிழ்நாடு
  • தாய்லாந்து
  • திங்கள்
  • திராவிட மொழி
  • திராவிடம்
  • திராவிடம்-தமிழ்
  • திராவிடர் - தமிழர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் பண்பாட்டு திருவிழா
  • திரு
  • திருக்குறள்
  • திருக்குறள் மாநாடு
  • திருத்தம்
  • திருப்புகழ்
  • திருமாவேலன்
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் விருது
  • திருவிக
  • திருவில்லிபுத்தூர்
  • தினமலர்
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துக்ளக்
  • துப்பாக்கி சூடு
  • துளு
  • தேசம்
  • தேவநேய பாவாணர்
  • தேவநேயப்பாவாண்ர்
  • தை
  • தை மாதம்
  • தைப்பொங்கல்
  • தொண்டு
  • தொல்காப்பியம்
  • தொன்மை
  • தொன்மை மொழி
  • தோற்றம்
  • நில அளவை
  • நினைவு சின்னம்
  • நீச பாசை
  • நீதிக்கட்சி
  • நீர்நிலைகள்
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூல்கள்
  • நோபல் பரிசு
  • பண்பாடு
  • பதிப்பித்தவர்
  • பதிப்பு
  • பதிலடி
  • பயிற்சி
  • பரிதிமாற் கலைஞர்
  • பல்கலைக்கழகம்
  • பழந்தமிழ்
  • பழந்தமிழர் முறை
  • பாகுபாடு
  • பார்ப்பன பனியா
  • பார்ப்பனர்
  • பார்ப்பான்
  • பாரதி
  • பாவாணர்
  • பானை ஓடு
  • பிராகிருதம்
  • புத்தகம்
  • புத்தாண்டு
  • புரட்சி கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புறநானூறு
  • பூங்கா
  • பெயர் பலகை
  • பெயர்ப்பலகை
  • பெரியார்
  • பெருஞ்சித்திரனார்
  • பேட்டி
  • பேரணி
  • பொங்கல்
  • பொள்ளாச்சி
  • ம்னிதன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மறைமலை அடிகள்
  • மனுதர்மம்
  • மாட்டிறைச்சி
  • மாநாடு
  • மின்சாரம்
  • முதல் நூல்
  • முதன்மை
  • முதன்மை மொழி
  • முதன்மொழி
  • முதுமக்கள் தாழிகள்
  • மும்மூர்த்திகள்
  • முருகன்
  • மூல மொழி
  • மே.வங்கம்
  • மைசூரு ஆய்வகம்
  • மைல்கல்
  • மொழி
  • மொழி புள்ளிவிவரம்
  • மொழி வெறுப்பு
  • மொழி-பெரியார்
  • மொழிகள் அழிவு
  • மொழிப்பயிற்சி
  • யாதும் ஊரே
  • யோகா
  • ராபர்ட் கால்டுவெல்
  • ராவணன்
  • வ .உ. சி
  • வ உ சி
  • வ.உ.சி.
  • வடமொழி
  • வடமொழிகள்
  • வணிகம்
  • வரலாறு
  • வருணாசிரமம்
  • வளர்ச்சி
  • வன்மம்
  • விருது
  • வேதம்
  • ஜாதி
  • ஜி.யு.போப்
  • ஜெயமோகன்
  • ஹிந்தித் திணிப்பு

பிரபலமான இடுகைகள்

  • "யாதும் ஊரே யாவரும் கேளிர்"- முழுமையான பாடல்
    பழமையான பாடல் ஒன்று... இன்று உலகம் முழுவதும் தேடப்பட்டு, உச்சரிக்கப்படுகிறது. அது, கணியன் பூங்குன்றனார் எழுதிய, "யாதும் ஊரே யாவரு...
  • தமிழ்ப் பதிப்பின் தலைமகன்
    ஆங்கிலேயர் வருகையாலும் அய்ரோப்பிய கிறித்தவப் பாதிரி மார்கள் முயற்சியாலும் நூல்கள் அச்சு ஊர்தியேறி உலா வந்தன. தமிழ்நூல் ஒன்றுதான் மு...
  • திருக்குறளை மலம் என்று விமர்சித்தாரா பெரியார்?
    'துக்ளக்கின்' கோணல் பார்வை.... கி.தளபதிராஜ் மயிலாடுதுறை நடைபெற்று முடிந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆட...
  • திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்
    இதழியல் தமிழ் "திராவிட இயக்கத்தின் போராட்டத்துக்கு இதழ்கள் கருவிகளாகப் பயன்பட்டன. எவரும் துப்பாக்கி தூக்கவில்லை; எழுதுகோல் தான் அவர்...
  • தந்தை பெரியாரின் தமிழ் தொண்டும், தமிழ் பற்றும்
    தந்தை பெரியாரின் தமிழ் தொண்டும், தமிழ் பற்றும் ஆதாரங்கள் இதோ : தந்தை பெரியார் மீது அவதூறு பரப்பும் அற்ப பேர்வழிகளுக்கான பதில்  ===========...
  • தமிழ்ப் பெண் குழந்தை பெயர்கள்
    தமிழ்ப் பெண் குழந்தை பெயர்கள்  உங்கள் பார்வை அ அகல்விழி , அருள்மொழித்தேவி , அழகுதெய்வாணை , அகநகை , அருளரசி , அழகுநங்கை , அகமுடைநங்கை , அ...
  • ‘யாயும் ஞாயும் யாரா‘கியரோ-குறுந்தொகை
    ‘‘யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் நீயும் யானும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சந்தாங்...
  • தமிழின் தனித்தன்மை
    தமிழ்மொழியின் தனித்தன்மையும் தனிமைத் தன்மையும் பகுதி II - தமிழின் தனித்தன்மை தவிர்க்க இயலாத தத்துவம் மாற்றம் என்பது மாறாத உல...
  • செங்காந்த மலர்
    காந்தள் , செங்காந்தள் , வெண்காந்தள் மலர் : ஓர் அலசல் .                 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ...
  • தொல்காப்பியத்தில் சாதி
    - ஊரன் அடிகள் தமிழில் தொல்காப்பியம் சிறப்பு, தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் சிறப்பு. எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களையுடையது தொ...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.