மதுரை, ஏப்27_ சென் னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் நீதிபதி ஆர்.மகாதேவன் அளித் துள்ள தீர்ப்பில் பள்ளிகளில் திருக்குறள் கட்டாய தனிப்பாடமாக கற்பிக்க வேண்டும் என்றும், திருக்குறளை அனைத்து பள்ளி வாகனங்களிலும் எழுதிட வேண்டும் என் றும் தமிழக அரசுக்கு உத் தரவிட்டுள்ளார்.
திருக்குறள் நூலிலி ருந்து சில பகுதிகளை மட்டும் பாடங்களின் ஒரு பகுதியாக கொண்டிராமல், ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை திருக் குறளை தனிப்பாடமாகவே வைத்திடவேண்டும் என்று கோரி தூத்துக்குடி மாவட் டத்தில் வணிகவரித் துறை அலுவலராகப் பணியாற்றி, பணி ஓய்வு பெற்றவரும், கோவில்பட்டியை சேர்ந்த வருமான ச.இராசரத்தினம் வழக்கு தொடுத்துள்ளார்.
அம்மனுமீதான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத் தின் மதுரைக் கிளையில் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரணை மேற்கொண் டார். பள்ளிகளில் திருக்குற ளைப் பரப்பவேண்டிய பணிகளை செயல்படுத்தா மல் இருந்துவருகின்ற பள்ளிக்கல்வி இயக்குநரகம், தமிழ் வளர்ச்சித்துறை ஆகிய அரசுத் துறைகளுக்கு மனுவில் குறிப்பிட்டுள்ள படி உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரியுள் ளார்.
மனுவில், இளைய சமு தாயம் மிகவும் சீரழிந்து வருவதாகவும், அவர்களை நல்வழிப்படுத்த, திருக்குற ளை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். மேலும், தற்போது மனப்பாட பகுதி யாக உள்ள திருக்குறளை முழு பாடத்திட்டமாக மாற்றவும் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
வழக்கு விசாரணையில் நீதிபதி கூறும்போது, Òகுழந் தைகள் திருக்குறளை விரி வாகப் படிக்க வேண்டியது மிகவும் அத்தியாவசியமா னது. பழைமைவாய்ந்த இலக்கியத்தில் அரசாட்சி முறை, அறநெறிகள், மனித வாழ்வுக்கு தேவையான அனைத்து நெறிமுறை களையும் அளிக்கின்ற நூல் திருக்குறள்’’ என்று குறிப் பிட்டுள்ளார்.
தமிழக அரசு பள்ளிப் பேருந்துகளில் திருக்குற ளை எழுதவேண்டும். வரும் கல்வி ஆண்டு முதல், 6ஆ-ம் வகுப்பில் இருந்து 12ஆ-ம் வகுப்பு வரை திருக்குறளை தனிப்பாட மாக கற்பிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது.
இந்த மனுவை விசா ரித்த நீதிபதி மகாதேவன் இளைய சமுதாயத்தின் சீரழிவை தடுக்க, திருக்குற ளில் இன்பத்துப் பாலைத் தவிர, மற்ற எல்லாப் பகுதி யையும் கட்டாய தனிப் பாடமாக கற்பிக்க உத்தர விட்டார்.
வரும் கல்வி ஆண்டு முதல், 6-ஆம் வகுப்பில் இருந்து 12ஆ-ம் வகுப்பு வரை திருக்குறளை தனிப் பாடமாக அமல்படுத்த தமிழக அரசிற்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் உத்தர விட்டார். மேலும், திருக் குறளை மாணவர்கள், புரித லோடு கற்றுக் கொள்வது அவசியம் என்று தெரி வித்தார்.
மனுதாரர் தம் மனுவில் குறிப்பிடும்போது, சமூகத் தில் இளைய தலைமுறை யினர் சீரழிந்து வருவது கண்கூடு. அண்மைக்காலங் களில் இளைஞர்கள் ஒழுங்கு, கட்டுப்பாடு, அடுத்தவர்களை மதித்து நடப்பது என்று அனைத்து நெறிமுறைகளும் இல் லாமல் இருக்கின்றனர். குடும்ப பிரச்சினைகள் அதி கரித்தவண்ணம் உள்ளன. முதியோர் இல்லங்கள் காளான்கள்போல் பெருகு கின்றன.
முதியோர்களைத் தாக்கிவிட்டு, கொள்ளை யடிப்பது, அச்சுறுத்துவது பெருகிவிட்டது. எவரே னும் தாக்கிவிடுவார்களோ என்கிற அச்சம் உள்ளது. முதியவர்கள் பயணம் செய்வது பாதுகாப்பற்றதாக வே மாறிவிட்டது. மூத்த குடிமகன் என்கிற முறை யில் நானே என்னுடைய வீட்டின் கதவைத் திறப்ப தில்கூட அச்சத்துடன் இருக்கின்றேன். அறிமுக மில்லாதவர்களுக்கும் உணவளிப்பது, தங்குவதற்கு இடம் கொடுப்பது என்கிற காலம் மலையேறிவிட்டது.
2011 ஆம் ஆண்டில் குற்றசெயல்களில் ஈடுபட்ட, 2083 சிறுவர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள் ளார்கள். அவர்களில் தொடக்கக் கல்வி பயில் பவர்கள் 1,170 பேர். 617 பேர் நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைக்கல்வி பயின்று வருபவர்கள். 56 பேர் மேல் நிலைக் கல்வியை முடித்து விட்டவர்கள்., 240பேர் கல்வி பெறாதவர்கள்.
சமூகத்தில் இது போன்றவர்களிடையே சீர்திருத்தம் செய்ய வேண் டிய அவசியம் உள்ளது. அவர்களிடையே மாற்றத் தை ஏற்படுத்தி, அவர்களை சீர்திருத்தும் ஒரே வழி, திருக்குறள் நெறிகளை பின் பற்றச் செய்வதேயாகும். அதற்கான தத்துவங்களை உள்ளடக்கியதுதான் திருக்குறள். கலாச்சாரம், மதம், இனம் என்கிற எவ்வித வேறுபாடுகளும் இல்லாமல் அனைவரையும் இயற்கையின் அடிப்படை யில் நெறிப்படுத்தக்கூடியது திருக்குறள்’’ என்று ச.இராச ரத்தினம் தம் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
-விடுதலை,27.4.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக