வரையறுத்துக் கூற முடியாத தொன்மை வாய்ந்த உலகப் பந்து தோன்றியபோது இருள் சூழப்பட்டு எங்கும் நைட்ரஜன் பரவி, நெருப்புக் கோளமாகி, மிதமிஞ்சிய வெப்பத்தால் பேரொலியுடன் வெடித்து சிதறிய தாகவும், சிதறிய துண்டங்கள் பல கோடிக்கணக்கான ஆண்டுகள் எரிந்து பெரிதும் சிறிதுமான நட்சத்திரங் களாகின எனவும் அவற்றின் நடுநாயக மாக சூரியனும் அதனைச் சுற்றி பூமி, வீனஸ், மார்ஸ், ஜூபிடர், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என பல கோள்கள் ஏற்பட்டதெனவும் ஆராய்ச் சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதோடு பல லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு 10 ஆயிரம் டிகிரி செல்சியசாக இருந்த பூமியின் வெப்பம் 150 செல்சியசாக குளிர்ந்து நிலப்பரப்பும், நீர்ப்பரப்புமாக மாறியது என்பர்.அதில் ஏராளமான எரிமலைகளும், பூகம்ப பள்ளத்தாக்குகளும் நீர் நிலைகளும் நிறைந்திருந்தன எனவும் அறிய வருகிறது.
காலச்சுழற்சியில் ஓர் அணு உயிரிகள் தோன்றி பலவாறாகப் பெருகின. புல்லாகி, பூவாகி பூண்டாகி, செடியாகி, கொடியாகி, மரமாகி, புழு வாகி, பூச்சியாகி பரிணாம வளர்ச்சியில் குரங்காகி மனிதனாகி வளரத் தொடங்கின. அவ்வாறு மனித இனம் முதலில் தோன்றியது ஆப்பிரிக்காவின் சவானா காடுகளில் தான்என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மனிதனோடு விலங்குகளும் தோன்றி பாகுபாடு இன்றி வளர்ந்து பசித்த போது காடுகளில் கிடைத்த இலை, தழை, காய், கனிகளை உண்டு வாழ்ந் தது. எதுவுமே தெரியாத மனித இனம், இடி, மின்னல், மழை, புயல், பூகம்பம், நெருப்பு ஆகிய இயற்கை சீற்றங்களைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்தன. நமக்கு மீறிய சக்திகளாக எண்ணி அவைகளை வணஙக ஆரம்பித்தனர். அவர்களுக்கு பேசத் தெரியாது. மனம் போன போக் கில் ஒலி எழுப்பியும், சைகைகளை காட்டியும் தங்களின் உள்ளுணர்வு களை வெளிப்படுத்தினர். அவையே மொழியாக உருவெடுத்து வழக்கத்திற்கு வந்தது. எழுதத் தெரியாத மனித இனம் சித்திரங்களால் தரையிலும், மரத்திலும், மரப்பட்டைகளிலும், ஓலைகளிலும், இறந்த விலங்குகளின் காய்ந்த தோல் களிலும் தாம் இயற்கையாக கண்ட காட்சிகளை கிறுக்கிப் பார்த்தது. அதுவே வளர்ச்சி பெற்று வரிவடிவங் களாகின. மொழியும் எழுத்தும் சிறிது சிறிதாக பல்வேறு மாற்றங்களைப் பெற்று தற்போதுள்ள நடைமுறைக்கு வந்துள்ளன. இக்காலத்திலும் எழுத் தில்லா மொழிகளும், பேச்சு வழக் கில்லா மொழிகளும் உலகில் பல பாகங்களிலிருக்கின்றன. லத்தீன், பிரா கிருதம் சமஸ்கிருதம் போன்ற வழக் கொழிந்த மொழிகளுமிருக்கின்றன.
இன்றைய தமிழ்நாடு பன்னெடுங் காலத்துக்கு முன் ஆப்பிரிக்கா கண்டத் துடன் இணைந்த ஒரே நிலப்பரப்பாக இருந்ததாகவும், அவை லெமூரியாக் கண்டம், குமரிக்கண்டம் என வழங்கப் பட்டதாகவும் 18 அல்லது 15 கோடி ஆண்டுகளுக்குப்பின் கடலால் பிரிவு பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதுபோல கிழக்கிந்திய தீவுகள் ஆஸ்திரேலியா இந்தியா ஆகியவையும் இணைந்த நிலப்பரப்பாக இருந்து கொண்ட்வானா என்ற பெயருடன் விளங்கி காலப் போக்கில் கடல் கோளால் பிரிவுபட்ட பகுதிகளாகின எனவும் தெரியவருகிறது. பூம்புகார் பட்டினம் கடலுக்குள் மூழ்கியிருப்பதும் ஆய்வுகளால் வெளிப்படுத்தப்பட்டுள் ளது. வடக்கே சிந்து மாகாணத்தில் லாக்கானா என்ற வட்டத்தில் 70 அடி உயரமுள்ள மண்மேட்டை அகழ்ந்து பார்த்தபோது கிடைத்த மண்பாண்ட ஓடு தான் மொகஞ்சோதாரோ நகரத்தை வெளிக்கொணர்ந்தது. அதுபோல் ஹரியூபீயா என்ற வழங்கப்பட்ட நகரம் தான் அரப்பா எனத் திரிந்து நமக்கு தெரிய வந்தது. 3000 மைல்கள் நீளமும் 1000 மைல்கள் அகலமும் கொண்ட சஹாரா பாலைவனத்தில் நின்ற கடல் 16000 மைல்கள் நீளமுள்ள தமிழ கத்தையே விழுங்கி விட்டது. பாகிஸ் தானில் சிந்து வெளிப்பகுதியில் நம் தமிழ் நகரங்களான கொற்கை, வஞ்சி, தொண்டி என்பவை இன்றும் இருப்ப தாக ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரி விக்கிறார். சீன நாட்டிலும் ரோமானிய நாட்டிலும் கிடைத்த புதைப் பொருள் களில் தமிழ் எழுத்துகளிருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படி பரந்து விரிந்து புகழ்பரப்பிய தமிழ் மண் இயற்கை சீற்றங்களாலும், கால மாற்றங்களாலும் சிதைந்து குறுகிய வட்டத்துக்குள் அடங்கிவிட்டது.
ஒரு நாட்டின் நாகரிகத்திற்கும், மக்களின் பண் பாட்டு நெறி முறைகளுக்கும் அளவுகோலாக இருப்பது அங்கே பேசப்பட்ட மொழி யின் வளமேயாகும். நம் தாய்மொழி தமிழ் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் என்ற பெருமைக்குரியது. தமிழ் என்ற சொல்லிலேயே வல்லினம், மெல்லினம், இடையினம் இருக்கிறது. முக்கடல் சூழ் குமரி கண்டத்திலும் அவ்வகை வரம்புள்ளது. நாட்டின் பெருமையையும் நாகரிகத்தின் பழமையையும் பறை சாற்றும் நகரங்கள் புதைந்து போனா லும் சிதைந்து போனாலும் எஞ்சியவை நினைவுச் சின்னங்களாக இருந்து நம்மை எழுச்சி பெற செய்கிறது. அவைகளை படம் பிடித்திடுவது போல் நம் முன்னோர்கள் தமிழ்ப் பெரும் புலவர்கள் எண்ணற்ற நீதி நூல் களையும் மருத்துவம், வானவியல், கட்டிடக் கலை சார்ந்த பல்வேறு நூல்களையும் எழுதி வைத்துள்ளனர். அவற்றுள் தொல்காப்பியம் - புறநானூறு பதிற்றுப் பத்து -_ அகநானூறு _ பரிபாடல் என சிற்றிலக்கியங்களும் பேரிலக்கியங்களும் எழுதப்பட்டி ருந்தன. இயற்கை சீற்றங்களால் எதிரிகளின் படையெடுப்பால் எரிந்து சாம்பலானவை பலப்பல, பாதுகாப்பு இல்லாமல் பறிபோனவை, கரையான் களால் அரிக்கப்பட்டவை, எதிரிகளால் மறைக்கப்பட்டவை, மாற்றி எழுதப் பட்டவை, சிதைக்கப்பட்டவை, சீரழிக் கப்பட்டவை என நம் அரிய கருவூ லங்கள் பறிபோயின.
முத்தொள்ளாயிரம் எனும் நூலின் 2700 பாடல்களில் 200 மட்டுமே எஞ் சியுள்ளன. புறநானூறுப் பாடல்களில் 398 தான் உள்ளன. பரிபாடல் 22 பாடல்களே மீதம். இப்படி விரித்துக் கொண்டே போகலாம். எனவே இழந் ததை எண்ணி வருந்தாமல் இருப் பதைக் காப்பது தமிழர்களாகிய நமது கடமையாகும். அய்யாயிரம் ஆண்டுகள் தாய்மொழி தமிழை செம்மொழி தரத்துக்கு உயர்த்தி நடுவண் அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டது. நாம் அறிந்ததே, ஆனால் அதன் தொன்மைச் சிறப்பை சுமார் 1500 ஆண்டுகளுக்குள் தோன்றிய சமஸ்கிருத மொழியுடன் ஒப்பிட்டு குறைத்தே மதிப்பிட்டிருந்தது. தமிழ் வளம் மிக்க மொழி -_ எண்ணற்ற இடையூறுகளைக் கடந்து நலிவுறாது சீரிளமைத் திறம் வியந்து பாடக்கூடிய அளவில் வளர்ந் துள்ளது. தென்பாண்டிய மன்னர்கள் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச் சங்கம் என அமைப்புகளை உருவாக்கி வளர்த்தனர். ஆனால் பிறமொழி மோகங்கொண்டு பல மன்னர்கள் தமிழுக்கு இழைத்த தீங்கினையும் நாம் நினைவு கூரத்தான் வேண்டும். உதாரணத்திற்காக சிலவற்றைக் கீழே விரித்துள்ளேன்.
சோழ மன்னன் முதலாம் இராசேந் திரன் 11ஆம் நூற்றாண்டில் தென்னாற் காடு மாவட்டத்தில் எண்ணாயிரம் என்ற ஊரில் சமஸ்கிருதக் கல்விக் கழகம் அமைத்து 14 ஆசிரியர்களை நியமித்து 340 மாணவர்கள் படிக்க உதவித் தொகையோடு நெல் அளந்தும் கொடுத் தான். இங்கு தமிழ் கற்பிக்கப் படவில்லை.
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் மத்தவிலாசம் என்ற நாடகத்தை சமஸ்கிருத மொழியில் தானே எழுதி பரப்பினான். தமிழுக்கு அங்கு வாய்ப்பில்லை. மூன்றாம் குலோத்துங்க சோழன் திருவெற்றியூரில் மட்டும் 3 சமஸ்கிருதக் கல்லூரிகளை ஆரம்பித்து 340 மாணவர்களுக்கு சமஸ்கிருத இலக்கணம் கற்பிக்கச் செய்தான். தமிழ் புறக்கணிக்கப்பட்டது. இவை தவிர, திருமுக்கூடல், திருவாவடுதுறை, பாகூர் - பெருவள்ளூர் - காம்பள்ளூர் -_ ஆனியூர் (ஆனூர்) ஆகிய இடங்களி ல்லாம் பள்ளிகள் அமைக்கப்பட்டு நான்கு வேதம் _ ஆறுசாஸ்திரம் _ மகாபாரதம் _ இராமாயணம் _ மனுநீதி மீமாம்சை, வியாகரணம் பாஷ்யங்கள் என 18 வகையான வித்தைகள் சமஸ்கிருத மொழியில் கற்றுத் தரப் பட்டன. சமஸ்கிருதம் சொல்லி கொடுக் கப்ட்டது. தமிழ் மறுக்கப்பட்டது.மதுரை நாயக்கர் காலத்தில் 10,000 பார்ப்பன மாணவர்களுக்கு வேதக் கல்வியும், சமஸ்கிருதமும் பயிற்றுவிக்கப்பட்டது தமிழர்களுக்கல்ல. பல்லவர் காலத்தில் காஞ்சியில் கடிகை என்ற உலகப் புகழ் பெற்ற வடமொழிக் கல்லூரி உருவாக் கப்பட்டு 400 வருடங்கள் சிறப்பாக நடைபெற்றது. இப்படி புறக்கணிக் கப்பட்ட தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ந்து போற்றிப்புகழ மேலை நாட்டு அறிஞர்கள் வந்தனர். அவர்களில் ஒரு சிலரது தமிழ்த் தொண்டினைப் பாராட்டி நன்றி செலுத்த வேண்டு மல்லவா! அந்த அறிஞர்களை கீழே தொகுத்துள்ளேன்.
இத்தாலி நாட்டில் வெனீஸ் நகரில் 1680இல் பிறந்த கான்ஸ்டென்டைன் ஜோசப் பெஸ்கி என்பவர் 1710இல் இந்தியா வின் கோவாவுக்கு வந்து, திரு. சுப்ரதீபக் கவிராயர் என்ற தமிழ் அறி ஞரிடம் இருபது ஆண்டுகள் மாணவ ராக தமிழ் பயின்று தேம்பாவணி என்ற தமிழ் நூலை எழுதி மதுரை தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றிய போது வீரமாமுனிவர் என்ற விருதினை தமிழ்ப் புலவர்கள் அவருக்கு வழங்கி கவுரவித்தனர். உலகப் பொது மறையாம் திருக்குறளின் அருமையுணர்ந்து அறத்துப்பாலையும், பொருட்பாலையும் லத்தீன் மொழியில் மொழி பெயர்த்தார். இதுவே திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பு அக்காலத்தில் தமிழில் அகராதி என்னும் அமைப்பு இல்லை. நிகண்டு எனும் பெயரில் தான் இயங்கி வந்தது. அதனை பெயர் - பொருள், தொகை, தொடை என நான்கு அதிகாரங்களைக் கொண்ட சதுரகராதி என உருவாக் கினார். தமிழ் எழுத்துக்களில் ஏ ஒ எனும் நெட்டெழுத்துக்களை வழக் கிற்குகொண்டு வந்தார். இப்படி எண்ணற்ற தமிழ்த் தொண்டாற்றினார்.
இங்கிலாந்து நாட்டில் 1820இல் பிறந்து ஜியார்ஜ்யுக்ளோ என்று வழங் கப்பெற்ற ஜி.யு. போப் 1839இல் தமிழகத் திற்கு வருகைபுரிந்து இராமானுஜ கவிராயர் என்ற தமிழறிஞரிடம் தமிழ் கற்றுத் தேர்ந்தார். தமிழ்ச் செய்யுட் கலம்பகம் எனும் நூலை வெளியிட் டார். ஆங்கிலம் _- தமிழ் தமிழ் _ ஆங்கிலம் அகராதியை தயாரித்தார். 40 ஆண்டுகள் திருக்குறளைப் படித்தறிந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ந்து 1886இல் முகவுரையுடன் வெளியிட் டார். 1884இல் மறைநூல் அறிஞர், வேதசாஸ்திரி எனும் பட்டங்களைப் பெற்றார். தன் கல்லறையில் ஒரு தமிழ் மாணவன் என்று பொறிக்கப்பட வேண்டும் என்று கூறிச் சென்றார். தமிழ்மீது அவர் கொண்ட பற்று நம்மை வியக்க வைக்கிறது.
அய்ரோப்பாவின் அயர்லாந்தில் 1815இல் பிறந்த கால்டுவெல் 1838இல் சென்னைக்கு வந்தார். தமிழ் மொழியை பிழையறக்கற்று தஞ்சை திருச்சி, சிதம்பரம், நீலகிரி, கோவை, மதுரை ஆகிய ஊர்களுக்கெல்லாம் சென்று இறுதியாக இளையான் குடியில் தங்கி தமிழைப் பரப்பினார். கிறித்துவ வேத நூல்களான பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு ஆகியவற்றை தமிழில் மொழி பெயர்த்தார். தமிழ் மொழியுடன் தொடர்புடைய தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவைகளின் ஒப்பியல் களை ஆராய்ந்து திராவிட மொழி களின் ஒப்பிலக்கணம் எனும் நூலை உருவாக்கினார். தமிழ்த்தாயின் தவப்புதல்வர் என்றும் தமிழ்ப் பாது காவலர் என்றும் சிறப்பிக்கப்பட்டார். தமிழ் மொழிக்காகவே வாழ்ந்த கால்டுவேல், தன் நாட்டுக்கு திரும்பாமல், இந்தியாவில் தான்உயிர் துறப்பேன் என்று கூறியவாறே, கொடைக்கானலில் மறைந்தார்.
இவர்களைப்போலவே ஜெர்மனி நாட்டில்பிறந்த இரேனியஸ், சீகன் பால்கு, இத்தாலி நாட்டின் ராபர்ட்டி நோபிலி, ஆங்கில நாட்டில் பிறந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் ஆகியோர் நம் தாய்மொழி தமிழை வளர்க்க அரும்பாடுப்பட்டனர். ஆனால் நம் மன்னர்கள் டர்கீஸ் மொழி - _ ஈரானிய மொழி _ பர்மியன் மொழி ஆகிய வற்றின் கூட்டமைப்பில் உருவாகி, செப்பனிடப்பட்டது என்று பொருளை தரக்கூடியதுமான சமஸ்கிருதத்தையே வளர்த்தனர்.
தந்தை பெரியார் தமிழ் இலக்கி யங்கள் பெரும்பாலானவற்றை படித் தும், பிறரைப் படிக்கச் சொல்லிக் கேட் டும் அவற்றுள் பொதிந்துள்ள நல்ல கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும் எழுதவும் செய்தார். அதே நேரத்தில் மனித வாழ்வுக்கு ஊறு விளைவிக்கும் கற்பனைக் கதைகளை யும், பொய்மை உரைகளையும், மனிதநேயமற்ற மதச் சடங்குகளையும், ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தும் சாதி மத பேதங்களை வலியுறுத்தும் புராண இதிகாசங்களையும், கடவுளர்களின் கண்மூடித்தனமான, இயற்கைக்கு ஒவ் வாததுமான செயல்களைக் கூறும் நூல்களையும் வெறுத்து ஒதுக்கினார். பிணத்தை ஆய்வு செய்யும் மருத்து வரைப்போல ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து நல்லவை கொண்டு அல்லவை தவிர்த்தார். கடவுள் பெயரைச் சொல்லி கயமைத்தனம் செய்யும் சமுதாய விரோதிகளைக் கண்டித்தார். மக்களிடையே சமத்துவம் வளரவும், சன்மார்க்கம் தழைக்கவும் சாதிகள் மடியவும், தாழ்வு மனப் பான்மை மறையவும், கல்வி அறிவு பெற்று மக்கள் உயரவும் பெண்களின் அடிமைத்தனத்தைப் போக்கவும் தன்வாழ்நாளை அர்ப்பணித்த பெரியார் அவைகளை நிறைவேற்ற திருக்குறள் ஒன்று தான் சிறந்ததென தேர்ந்தார். தேடிய நூல்கள் தேர்ந்த தமிழறி ஞர்களின் புத்தக அலமாரிகளில் இருப்புக் கணக்கைக்காட்ட முடக்கி வைக்கப்பட்டிருந்ததே தவிர மக்களுக்கு பயன்படச் செய்யவில்லை. புலவர்களின் பாராமுகம் திருக்குறளை இருட்டடிப்பு செய்தது. கம்பராமாயண சொற் பொழிவுகளும், மகாபாரத உபன்யாசங் களும், சிலப்பதிகார பட்டிமன்றங்களும், திருப்பாவை திருவெம்பாவை மாநாடு களும் நடத்தி தங்களின் ஆய்வுத் திறமையைக் காட்டி வந்த தமிழறி ஞர்கள் சமுதாயத்தை நினைக்கவில்லை. தங்களின் புலமையை மற்ற ஆராய்ச்சி யாளர்கள் பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்று நினைத்து செயல் பட்டார்களேயொழிய நாம் சார்ந்துள்ள தமிழ்ச் சமுதாயம் விழிப்புணர்வு பெற்று எழுச்சி பெற வேண்டும் என்று எண்ணவில்லை. சமுதாய அக்கறை கொண்ட பகுத்தறிவுப் பகலவன் பெரியார்தான் முடங்கி கிடந்த குறளுக்கு குரல் கொடுத்தார்.
மனிதநேயத்தை வலியுறுத்தும் திருக்குறளை எழுதியவர் யார்? எந்த மதத்தைச் சார்ந்தவர்? எங்கே பிறந் தவர்? அவரது சமகாலப் புலவர்கள் யாவர்? எப்படி நூல் அரங்கேற்றம் செய் யப்பட்டது? பத்துபாடல்கள் கொண்ட அதிகாரங்களாக பாகுபடுத்தியதுயார்? என்று கேள்விகளைக் கேட்டு விடை காண விரும்பவில்லை பெரியார். தமிழ் மொழியில் எழுதப்பட்டு உலகமாந்தர் எல்லோராலும் ஒத்துக் கொள்ளக் கூடிய பெரும்பாலான கருத்துக்களை உள்ளடக்கிய நூல் என்பதை மட்டுமே மனதில் கொண்டு அதனை முன்னி லைப்படுத்தினார். எனினும் கால வரம்பை நிலைநாட்ட வேண்டிய கட் டாயம் தமிழர்களுக்கு உண்டு என்பதால் 530 தமிழறிஞர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1929 மார்ச் 11ஆம் நாளில் ஒன்றுகூடி தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமி நாதர் தலைமையில் விவாதித்தனர். 10 புலவர்கள் விளக்க உரையாற்றியும் எந்த முடிவுக்கும் வர முடியாத நிலையில் பசுமலைப் பாரதி என்றழைக் கப்பட்ட அறிஞர் சோமசுந்தர பாரதியார் பதினோராவதாக தன் கருத்துக்களை பிற நூல்களுடன் ஒப்பிட்டுக் காட்டி ஆதாரங்களை அடுக்கி விளக்கம் தந்தார். அதன் வழி ஏசு கிறிஸ்து பிறப் பதற்கு 31 ஆண்டுகள் முன்னதாக திருவள்ளுவர் பிறந்தார் என்ற முடிவு கூட்டத் தலைவரின் இசைவோடு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்படி ஆங்கில ஆண்டோ 31 ஆண்டு களைச் சேர்த்து திருவள்ளுவர் தொடர் ஆண்டு கணக்கிடப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
தந்தை பெரியார் அத்தோடு நில்லாமல் தமிழ் அறிஞர் பெரு மக் களைக் கூட்டி ஆய்வு செய்து கலந் துரையாடச் செய்தார். மக்களின் மன நிலை ஓரளவு பகுத்தறிய தொடங்கும் வரை பிரச்சாரம் செய்து விழிப் புணர்வை ஊட்டினார். 1949ஆம் ஆண்டில் ஜனவரி 15_16 தேதியில் சென்னை பிராட்வே டாக்கீசுக்கு அடுத்த மைதானத்தில் திருக்குறள் மாநாடு நடத்தி அறிஞர்களையும் மொழி ஆர்வலர்களையும் பேச வைத்து இன உணர்வையும், சுயமரி யாதை சிந்தனையையும் வளர்த்தார். பாராமுகமாக விருந்த பாவலர்கள் பெரியாரின் முயற்சிகளைப் பாராட்டத் தொடங்கினர். பைபிளைப் படிப்பவர் கிறித்துவராகலாம், குரானைப் படிப்பவர்கள் முகமதியராகலாம். கீதையைப் படிப்பவர் இந்துதவாகலாம் எல்லாமே மதம் சார்ந்தவை. ஆனால் திருக்குறளைப் படிப்பவர்கள் மனித நேயமிகுந்த மனிதராகலாம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முது மொழிக்கு உயிர்ப்பைக் கொடுக்கலாம் என்ற உணர்வு அறிஞர்களிடம் பரவத் தொடங்கியது.
உலகமாந்தர் எல்லோ ரும் ஓர் குலம் ஓர் இனம் என்ற மனித நேயப்பண்பு வளரத் தொடங்கியது. மேடையில் முழங்கும் அறிஞர் பெருமக்கள் திருக்குறளைச் சொல்லியே ஆரம்பிக்கவும் முடிக்கவும் பழகிக் கொண்டனர். ஏராளமான திருக்குறள் மன்றங்கள் தோன்றின. திருக்குறள் விளக்கப் பேரவைகள், பேரணிகள் ஆய்வுக் கூட்டங்கள் என பரந்து விரிந்து செயல்படத் தொடங்கின பெரியாரின் கொள்கைகளை மக்களின் மனதில் பதிய வைக்க திருக்குறள் நெறி முறைகள் படிக்கட்டுகளாக அமைந்தன. பழமை எண்ணங்களின் தாக்கம் குறைய ஆரம்பித்தது. புதிய அறிவியல் சிந்தனையின் நோக்கம் வளரத் தொடங்கியது. தந்தை பெரியாரின் தன்னலமற்ற தொண்டு தமிழ் சமுதாயத்தை மட்டுமல்லாமல் மனித இனத்தையே வாழ வைக்கும் மனித நேயத்தை வளர்க்கும் தொண்டு. அதற்கு முதற்படியாக வள்ளுவத்தை வாழ்வியலாக்குவோம், வளம் பெறுவோம் -_ நலம் பெறுவோம் வாருங்கள். பெரியார் குறளுக்குக் குரல் கொடுத்து வழிகாட்டியுள்ளார். அறிஞர்கள் பாதைகளை அமைத்துள் ளனர். அவைகளைப்பற்றி மன உறுதியோடு நடப்போம். தடையி ருப்பின் தகர்ப்போம். வாழ்வினிலே உயர்வோம்.
ஆக்கம்: பெரியார் அண்ணா கலை விருதுகள் பெற்ற நாடகச் செம்மல் கு.ப. செயராமன்
பாபநாசம்
பாபநாசம்
-விடுதலை ஞா.ம.,18.10.14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக