பக்கங்கள்

ஞாயிறு, 15 மே, 2016

வடமொழி விழுங்கிய தமிழ் நூல்கள்

முனைவர் இரா. மதிவாணன்
உலகத் தொன்மொழிகளில் முன் னணி இடம் பெறுவதற்காகக் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகச் சமற் கிருதம் என்னும் வடமொழி படாத பாடுபட்டு வருகிறது. அதன் இலக்கியப் பரப்பைக் காட்டி மேலை நாட்டாரை மருட்டி வருகிறது. அவை அனைத்தும்  தமிழிலிருந்து மொழி பெயர்த்துக் கொண்டவை என்பதை உலக மொழி நூலறிஞர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
கருநிற மக்களிடமிருந்தே பல துறை அறிவு நூல்களையும் ஆரியர் கற்றதாக இருக்கு வேதப் பாடல்கள் பலவும் உறுதிப்படுத்துகின்றன. கங்கைப் பகுதிக்கு வந்தபோது அக்காலத்தில் அங்கு நாடாண்ட திராவிட மன்னரை அண்டி மெய்யியல், ஒகம், மந்திரம் ஆகிய பல துறை நூல்களைக் கற்றுத் தமதாக்கிக் கொண்டனர்.  அவற்றை உடனுக்குடன் வேதாங்கம், உபநிடதம் என மொழிபெயர்த்துத் தமதாக்கிக் கொண்டனர் என்பதைThe Dravidian Languages - Social Historical Study
(2002) என்னும் நூலில் அதன் ஆசிரியர் இமானுவேல் தெளிவுபடுத்தியுள்ளார்.
மொழிபெயர்ப்பு எனத் தெரியக் கூடாது என்பதற்காக மூலத் தமிழ் நூல்களாகக் கிடைத்தன அனைத்தையும் தேடித் தேடி அழித்து விடும் திருப்பணியில் ஈடுபட்டனர். சிந்துவெளி நாகரிகம் அழிந்தபின் 700 ஆண்டுகளுக்குப்பிறகு தான் இருக்கு வேதம் பாடப்பட்டிருக் கிறது. அதாவது கி.மு. 12ஆம் நூற் றாண்டளவில் சிந்துவெளியில் இருந்த திராவிட மக்களின் ஓலைச் சுவடி களுக்கும் நெருப்பு வைத்து அழித்த செய்தியையும் இருக்கு வேதம் குறிப் பிடுகிறது. அப்பொழுது அம்மக்கள் அல்லா எலே எலே (அடடா அடடா) என ஓலமிட்டனர் என்றும் கூறுகிறது. கங்கைக் கரையில் குடியேறிய பின்னர் அழித்த நூல்கள் மேலும் அதிகம் எனலாம்.
கங்கைக் கரையிலிருந்தபோது பவுத்த சமணப் பரவலின் வேகத்தைத் தாக்குப் பிடிக்காமல் விந்திய மலையைத் தாண்டி குப்தர் காலத்தில் தெற்கே பரவத் தொடங்கினர். பல்லவர் காலத்தில் சிறிதும்  எதிர்ப்பில்லாத நிலையில் தமிழ்நாட்டில் குடியேறிய பின்னர் அனைத்துத் துறைத் தமிழ் நூல்களையும் வடமொழியில் விரைந்து மொழி பெயர்க்க இரு வகையில் திட்டமிட்டனர்.
முதலாவது தமிழிலுள்ள 30 எழுத் துக்களில் 25 எழுத்துக்களை அப்படியே எடுத்துக் கொண்டு வல்லெழுத்து களோடு புதிய வருக்க எழுத்துகளாகவும் வடமொழி சிறப்பெழுத்துகளாகவும் 26 எழுத்துகளைப் புதிதாகச் சேர்த்துத் தமிழுக்கும் சமற்கிருதத்துக்கும் பொது வான 51 கிரந்த எழுத்துகளைப் படைப்பது. இரண்டாவது ஏராளமான சமற்கிருதக் கல்லூரிகளை உருவாக்கிக் கிரந்த எழுத்து வாயிலாகப் பிராமணச் சிறுவர்களுக்கு மட்டும் சமற்கிருதம் கற்பிப்பது. இதன் நோக்கம் தமிழ் நூல்களைப் பொது எழுத்துவாயிலாக எளிதில் படித்து உடனுக்குடன் சமற்கி ருதத்தில் மொழிபெயர்த்துக் கொள்வது. இந்தச் சூழ்ச்சிகள் பல்லவ மன்னர் களுக்குப் புரியவில்லை. பிறகு வந்த தமிழ் மன்னர்களுக்கும் தெரியவில்லை.
எந்தெந்தத் துறைசார்ந்த நூல்கள் தமிழிலிருந்து சமற்கிருதத்துக்கு மொழி பெயர்க்கப்பட்டு மூலத் தமிழ் நூல்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன என்பதை ஒருவாறு கண்டறிய முடிகிறது.
தென்னாட்டு வரலாற்று மறைப்பு
வடமொழியில் எழுதப்பட்டுள்ள நூல்களில் தென்னாட்டு வரலாற்றை மறைப்பதற்குப் பெரிதும் பாடுபட்டி ருக்கிறார்கள். வடமொழி முதற்காப்பியம் எனப் படும் வால்மீகியின் இராமாயணத்தில் வாலி சுக்கிரீவன் குடும்பத்தார் பெயர்கள் கூறப்பட்டிருக்கின்றன. இராவணன் குடும்பத்தில் அனைவர் பெயர்களும் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ்நாட்டு மூவேந்தர் பெயர் ஒன்று கூட இடம் பெறாதது ஏன்? பொதிய மலை அகத்தியன்  ஒருவன்தான் தென்னாட்டில் குறிப்பிடத்தக்கவனா? பாண்டியனின் கவாடபுரத்துப் பொன்னும் மணியும் நகரப் பொலிவும் கூறப்படும் போது பாண்டியன் பெயரை என குறிப்பிடவில்லை? கங்கையைக் கடக்க குகன் உதவி பெற்றதுபோலக் கடலைக் கடக்கப் பாண்டியனின் கப்பல் படை உதவி பெற்றிருக்கலாம். பாலம் கட்ட வேண்டிய தேவையே இல்லை. பாண்டியனின் இசைவு பெறாமல் அங்குப் பாலம் கட்டும் வேலை செய்திருக்க முடியுமா?
மூவேந்தர் வரலாற்றை முழுமையாக மறைக்கும் முயற்சியை வால்மீகி மேற்கொண்டது ஏன்? ஆரியரின் சூழ்ச்சி என்பதன்றி வேறு விடை கூற முடியாது. மாபாரதத்தில் பாண்டியன் மகளை விசயன் மணந்தான் என்பது உண்மைக் கதையானால் பாண்டியன் பெயரைச் சொல்லியிருக்க வேண்டும். மாபாரதப் போரில் இரு திறத்துப் படைகளுக்கும் செஞ்சிலுவைச் சங்கம் போன்று சோறளித்த சேரன் வட நாட்டில் நாடாண்ட சேரனாக இருக்க வேண்டும். இச்சேரன் பெயரைப் புற நானூறு சொல்கிறது. மாபாரதம் ஏன் குறிப்பிடவில்லை.
இரகுவம்சம் என்னும் நூல் எழுதிய காளிதாசன், வடநாட்டுப் பாண்டியன் ஒருவன் இரகு மன்னனுக்குத் திறை செலுத்தினான் என்கிறான். அந்த வடநாட்டுப் பாண்டியன் பெயரைக் குறிப்பிடவில்லை. இரகு என்பவன் தசரதனுக்குப் பாட்டன். ஆரிய மரபில் 54ஆவது மன்னன். இவனுக்கு முந்தைய 53 தலைமுறை சூரிய மரபு அரசர்களில் ஒருவர் பெயரைக்கூட காளிதாசன் குறிப்பிடவில்லை. சூரியமரபு என்பது சோழர் மரபின்பெயர் என்பதால் அந்த 53 தலைமுறையில் முன்னோர் பெரும்பாலோர் ஆரியர் வடநாட்டில் புகுவதற்கு முன்பு வடநாடாண்ட தமிழ் மன்னராய் இருந்திருத்தல் வேண்டும். மாபாரதத்திலும் தருமன் நிலா மரபின் 64ஆவது மன்னன்.
இவனுடைய முன்னோரில் ஆரியர் வடநாட்டில் புகுவதற்கு முன்பு ஆரியர் வடநாட்டில் ஆட்சி புரிந்த பாண்டியரின் நிலா (சந்திர) மரபைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். மாபாரதக் கண்ணன் பிறந்த நாளைக் கூடச் சரியாகக் குறித்திருப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள்.. தருமனுக்கு முந்தைய தலைமுறை மன்னர்களில் ஒருசிலர் பெயர்களைக்கூட ஏன் சொல்லவில்லை. அவர்கள் பாண்டியரின் நிலா மரபைச் சார்ந்தவர்கள் என்பதால் வரலாற்று மறைப்புச் செய்திருக்கிறார்கள். இருக்கு வேதத்தில் யமுனைக் கரைப் பாண்டி யனாகிய நார்மாறன், பல்பூதன் போன் றவர்கள் ஆரியருக்குக் கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இருக்கு வேத காலத்திற்குப் பிறகு தமிழர் வரலாறு மறைக்கப்பட்டது புலனாகிறது.
வடமொழியில் பெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள்
வடமொழியில் ஓரிலக்கத்துக்கு மேற்பட்ட பாடல்களைக் கொண்ட மூன்று நூல்கள் உள்ளன. கந்த புராணம், மகாபாரதம், ஆயுர்வேத மருத்துவ நூல்கள் என்பன அவை. வடநாட்டிலும் முருக வழிபாடு பரவலாகப் பெருமை பெற்றிருந்ததை இது காட்டுகிறது. மூலத் தமிழ் நூல் அழிக்கப்பட்டது. மாபாரதம் முதலில் வெறும் 6000 பாடல்களைக் கொண்டி ருந்தது. இந்தியப் பெரு நில முழுவதும் தமிழர்களின் நாட்டுப்புறக் கதைகளாக (பஞ்ச தந்திரக் கதை) வழங்கியவற் றையும் பல்வேறு அறநூல் கருத்துக் களையும் பல நூற்றாண்டுகளாகத் தொகுத்து மொழி பெயர்த்து நடுநடுவே புகுத்தி ஓரிலக்கத்துக்கும் மேற்பட்ட தாக மாபாரதச் செய்யுள் எண்ணிக் கையைப் பெருக்கி விட்டனர். மூலத் தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டு விட்டன.
தமிழ் அறிவர்(சித்தர்)களின் பல் வேறு வகைப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் நூல்கள் பல்லவர் காலத்தில் சமற் கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டன.
அவை முற்றிலும் தமிழ் மருத்துவ நூல்களின் மொழிபெயர்ப்பான ஆயுர் வேத வடமொழி நூல்கள் என்பதை நுணுகி ஆராய்ச்சி மேற்கொள்வோர் எவராலும் நிறுவிக் காட்ட முடியும்.
மருத்துவத்திற்குப் பயன்பட்ட நெய்தல் பூவைச் சமஸ்கிருதத்தில் எப்படி மொழிபெயர்ப்பது எனத் தெரியவில்லை. நெய்தல் பூ என்பதில் நெய் என்னும் சொல்லை மட்டும் கிருதம் எனச் சமற்கிருதச் சொல்லாக்கி இறுதியில் நெய்தல் பூவுக்கு கிருதப் புஷ்பம் எனக் கற்பனையாகப் பொய் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்கள். இத்தகைய சொல்லாட்சிகளே தமிழ் மருத்துவ நூல்களைச் சமற்கிருதத்தில் மொழி பெயர்த்துக் கொண்டு மூலத் தமிழ் நூல்களை அழித்துவிட்ட சூழ்ச்சியைப் புலப்படுத்துகிறது.
தமிழிலிருந்து மொழிபெயர்த்த நூல் வகைகள் (சற்றொப்ப 4000 நூல்கள்)
அறநூல் (தரும சாத்திரம்), முறை நூல் (நியாய சாத்திரம்), அணுக் கொள்கை (சாங்கிய நூல்), மெய்யியல் (தத்துவம் _ உபநிடதம்), ஓகம் (யோகம்), ஊழ்கம் (காட்சி, ஞானம்), தொன்மம் (புராணம்), வானநூல் (நட்சத்திர வித்யாக்கோள சாத்திரம்), கணியம் (சோதிடம்), ஏரணம் (தருக்க சாத்திரம்), கணக்கு (கணித சாத்திரம்), உருவம் (சிற்ப சாத்திரம்), மறம் (போர்க் கலை), கனிமக்கலை (லோகசாத்திரம்), கோவில் வழிபாடு (ஆகம சாத்திரம்), மாரணம் (சாவிப்பு மந்திரம், அதர்வணம்), ஒவியம் (சித்ரகலா), யாப்பு (சந்தம்), அணி (அலங்காரம்), காப்பியம் (சம்பு) காவிய வகை அவிநயம்,நாட்டிய நன்னூல் (பரதம்), இசை (சங்கீதம்), காமத்துப்பால் (காமசூத்திரம்), இறைக்கோட்பாடு (தந்திரம்), அடுகலை, சமையல் (பாக சாத்திரம்), கட்டடக் கலை (மயன் நூல்) (வாஸ்து சாத்திரம்), மருத்துவம் (வைத்திய சாத்திரம்), தோற்ற இலக்கணம் (சாமுத்திரிகா லட்சணம்), கைவரை இலக்கணம் (ஹஸ்த ரேகா சாத்திரம்), அரசியல் நூல், பொருள் நூல் (அர்த்த சாத்திரம்), இலக்கண நூல் (லட்சண சாத்திரம்), நாவாய் நூல் (நாவிகா சாத்திரம்)
ஆரியர் வடநாட்டில் இருந்தபோது ஒகம், மெய்யியல், மந்திரம், தவம் ஆகியவற்றில் மட்டும் கருத்துச் செலுத்தி அங்கிருந்த வட தமிழ் நூல்களை வடமொழியில் மொழி பெயர்த்துக் கொண்டார்கள். விந்திய மலையைத் தாண்டித் தென்னாட்டுக்கு வந்த பிறகு முப்பதுக்கும் மேற்பட்ட துறைகளில் அய்யாயிரத்துக்கும் மேற் பட்ட நூல்களை வடமொழியில் மொழி பெயர்த்துத் தம் நூல்களை போலக் காட்டிக் கொண்டனர்.
வானநூல் என்பது கடலோடி களான தமிழர்களால் வளர்ந்த கலை, கணித நூல் வணிகர்களால் வளர்ந்த கலை, கால்நடை வளர்த்த தமிழர் களால் முதலில் தொடங்கப்பட்ட மருத்துவக் கலை மாந்தரின் நோய்களை நீக்கும் மருத்துவமாகவும் வளர்ந்தது தமிழ் நாட்டில்தான். இத்தகைய நாகரிகப் படிமுறை வளர்ச்சியின் பின்னணி நாடோடிகளாகத் திரிந்த ஆரியர்க்கு என்றும் இருந்ததில்லை. இலைக் குடில்களில் (பர்ணகசாலை) வாழ்ந்த ஆரியர்க்கும் எழுநிலை மாடங்களில் வாழ்ந்த பழந்தமிழர் கட்டடக் கலை (வாஸ்து சாத்திரம்) எப்படிச் சொந்தமாகும்.
மருத்துவம் செய்வதைச் சூத்திரத் தொழிலாகக் கருதிய வேத ஆரியர்களி டையில் ஏழு பெருந் தொகுப்புகள் கொண்ட சாரகசம்கிதை எப்படித் தோன்றியிருக்க முடியும்?
பாணர், துடியர், கூத்தர், வயிரியர், விறலியர் என்போர் பல்லாயிரம் தலை முறைகளாகத் தமிழரிடை இசையும் நாட்டியமும் வளர்த்தனர். இவ்வாறு இசையையும் நாட்டியத்தையும் தனித் தனியாக வளர்த்த குடிமரபினர் எக் காலத்திலாவது ஆரியக் குடியிருப்பு களில் இருந்திருக்கிறார்களா? தமிழர் களின் சிவன், திருமால், காளி ஆகிய தெய்வங்களைத் தமக்குரிய தெய்வங் களாக ஏற்றுக் கொண்ட ஆரியர் தாம் தமிழர் சமயத்துக்கு மதம் மாறியவர்கள் என்பதை ஏன் வெளிப்படையாக நன்றியோடு ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழரின் வழிபாட்டு நெறிகளை வடமொழியில் ஆகமம் என மொழி பெயர்த்துக் கொண்டு எல்லாம் வட மொழியில் உள்ளதாக இந்திய அரசியல் சட்டத்துக்கே அறைகூவல் விடுவது உலகத்தையே ஏமாற்றுவது ஆகாதா? மேலை நாட்டார் ஆரிய ஏமாற்றுகளை அம்பலப்படுத்தும் நாள் வந்தே தீரும்.
சமற்கிருதத்தில் எல்லாம் இருக் கிறது என்பது இந்த நூற்றாண்டுக்கு ஏற்காது. பேசப்படாத மொழியில் இருப்பது யாருக்கும் பயன்தராது. அவை ஏற்கெனவே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு விட்டன. ஆதலால் உயிரில்லாத பொம்மையாகச் சமற்கிருதம் மாறிவிட்டது. அருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டுப் பார்வைப் பொருளாவதே பொருந்தும். சமற்கிருத வளர்ச்சிக்கு அரசு செய்யும் செலவு அத்தனையும் வீணாகிறது. இத் தொகை முழு வதும் வளரும் இந்திய மொழிகளுக்குச் செலவிடப்படுவதே ஏற்றதாகும்.
--விடுதலை,10.1.15

1 கருத்து:

  1. மதிப்பிற்குரிய ஐயா தங்களது கருத்து ஒன்று கூட ஏற்புடையதாக இல்லை. தாங்கள் குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர்களோ யாரும் சரிவர நமது வரலாற்றை படித்ததாக தெரியவில்லை எல்லாம் அறிவே கற்றுத் தனமாக உள்ளது

    பதிலளிநீக்கு