பக்கங்கள்

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

பொங்கலையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தமிழ் கலாச்சார மாதம் கனடா நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்


ஒட்டாவா, அக்.12 ஆண்டுதோறும் ஜனவரிமாதத்தைத்தமிழ் கலாச்சார மாதமாக கொண்டா டப் போவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. இத னால் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாககனடா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு கட்சி பாகுபாடு இன்றி அனைத்து உறுப்பினர்களும் (283)அமோகஆதரவுஅளித் தனர். ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதை யடுத்து, அனைவரது கைதட் டல்களுக்கு நடுவே இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறை வேறியது.

எம்-24 என்று பெயரிடப்பட்ட இந்தத் தீர்மானத்தில், “வரும் 2017ஆ-ம் ஆண்டு முதல் ஒவ் வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை தமிழ் கலாச்சார மாதமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. கனடா சமுதாயத்துக்காக கனடா வாழ் தமிழர்கள் ஆற்றி வரும் பங்களிப்பையும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் பாரம்பரியத்தையும் அங்கீ கரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

கனடாவின் ஸ்கார்பரோ-ரோக் பார்க் நாடாளுமன்ற தொகுதிஉறுப்பினரானகேரி ஆனந்தசங்கரீஇந்தஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத் தில் இந்தத் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதுகுறித்து கடந்த மே 20, செப்டம்பர் 29 ஆ-ம்தேதிகளில்விவாதம் நடைபெற்றது. கடந்த 5-ஆம் தேதி இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து ஆனந்தசங்கரீ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கனடாவில்வாழும்தமிழர் கள் ஆற்றிவரும் பங்களிப்பை அங்கீகரிக்கும்வகையில் இந்தஅறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்’’ என கூறப்பட்டுள்ளது.

கடந்த 1983- இல் கனடாவில் வெறும் 150 தமிழர்கள் மட் டுமே வசித்தனர். இந்த எண்ணிக்கை இப்போது 3 லட்சத்தைத் தாண்டி விட்டதாக புள்ளி விவரம் கூறுகிறது. அறுவடைத் திருநாளான பொங்கல் ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இதன் அடிப்படையில் ஜனவரி மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
-விடுதலை,12.10.16

சனி, 29 அக்டோபர், 2016

1820ஆம் ஆண்டின் செப்புப் பட்டயம் கண்டுபிடிப்பு


தருமபுரி, செப்.30 இந்தியர்கள் தங்கள் வாழ்வில் நடக்கும் எதை யும் ஆவணப்படுத்தி வைக்க வேண்டும் என்று சிந்தனை இல் லாதவர்களாக உள்ளனர் என 1835ஆம் ஆண்டு மெக்காலே கூறியதை  பொய்யாக்கும் வகை யில் செப்புப் பட்டயம் ஒன்று கிடைத்துள்ளதாக தருமபுரி அரசுக் கல்லூரி வரலாற்றுத் துறை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
தருமபுரி அரசு கலைக்கல்லூரி யின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் சி.சந்திரசேகரன். இவர் நீண்ட காலமாக பழங்குடி மக்களின் வாழ்க்கை நிலை, வரலாறுகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும், தருமபுரி மாவட்டம் சித்தேரி மலையில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடுகள் குறித்து முனைவர் பட்ட ஆய்விலும் ஈடுபட்டு வருகிறார்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மெக்காலே, இந்தியர் களுக்கு வரலாற்று உணர்வும், ஆவணப் படுத்துதல் பழக்கமும் இல்லை என்று கூறியதைப் பொய்யாக்கும் வகையில் தனது சமீபத்திய ஆய்வில் செப்புப் பட்டய ஆதாரம் கிடைத்திருப் பதாக இவர் கூறுகிறார்.
இதுகுறித்து அவர் கூறியது:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த மலையாண்டஅள்ளி கிராமத்தின் அருகே தோட்டிப்பாறை என்ற குக்கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் 80 வயதைக் கடந்த சின்னதம்பி என்பவரிடம் செப் புப் பட்டயம் ஒன்று இருப்பதாக அறிந்து தேடிச் சென்றோம். பெரும் முயற்சிக்குப் பிறகு இந்த பட்டயத்தைப் பார்க்க முடிந்தது.
1820-ஆம் ஆண்டில் எழுதப் பட்ட இந்த செப்புப் பட்டயம் குருமன் பழங்குடியின மக்களின் வாழ்க்கை பற்றியதாக உள்ளது. பட்டயத்தில் குருமன் என்ற சொல் இல்லை என்றாலும் எக்கடி என்னும் சொல் குருமன் இனத்தின் உட்பிரிவான கெடி குருமன் என்பதன் மருவிய வடிவம் ஆகும். 30 வரிகள் அடங்கிய இந்த செப்பேடு, சில கன்னட சொல் கலப்புடன் பேச்சு வழக்கு தமிழில் எழுதப்பட் டுள்ளது.
பழங்குடி மக்களின் குல தெய்வம், ஊர் மணியக்காரர் யார், திருவிழாவின்போது யாருக்கு என்ன உரிமைகள், குழந்தை களுக்கு தலைமுடி எடுக்கும் விழா, தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட வழக்கம் மற்றும் உரிமைகள் பற்றிய தகவல்களை உள்ளடக்கி யதாக இந்தச் செப்பேடு உள்ளது.
1835-ஆம் ஆண்டு மெக்காலே, இந்தியர்களிடம் வரலாற்று உணர்வு பெரிய அளவில் இல் லை, அவர்கள் தங்கள் வாழ்வில் நடக்கும் எதையும் ஆவணப் படுத்தி வைக்க வேண்டும் என்ற சிந்தனை இல்லாதவர்களாக உள்ளனர் என்று கூறியுள்ளார். இந்த மதிப்பீடு தவறு என்பதை உறுதி செய்ய ஆவணங்கள் கிடைத்துக் கொண்டே இருக் கின்றன.
எங்களது ஆய்வில் கிடைத்துள்ள 1820-ஆம் ஆண்டைச் சேர்ந்த பட்டயத்தைப் போன்று எத்தனையோ வரலாற்று ஆவ ணங்கள் பல்வேறு சூழல் களால் அழிந்தும், சிதைந்தும் போயுள் ளன. சில பகுதிகளில் கோயில் கட்டும்போது, கருவறை அமை யும் இடத்தில் மண்ணுக் கடியில் பழங்கால செப்புப் பட்டயங் களைப் புதைத்ததாக கூறியுள் ளனர். அந்தப் பட்டயங்கள் வர லாற்றின் என்னென்ன தகவல் களுடன் புதைந்து கிடக்கிறதோ தெரிய வில்லை.
மொத்தத்தில் 1820ஆ-ம் ஆண் டிலும் அதற்கு முன்பும் என, தாங்கள் வாழும் சூழலில் வாய்த்த வசதிகளைக் கொண்டு வாழ்வையும், பழக்க, வழக்கங் களையும், உரிமைகளை யும், விழாக்களையும் முடிந்த வரை ஆவணமாக்கிச் சென்றுள்ளனர்.
எனவே இந்தியாவின் மீதான மெக்காலேவின் தவறான மதிப் பீட்டுப் பிம்பத்தை மாற்றி யமைக்க இதுபோன்ற வரலாற்று ஆவணங்களின் தேடல் அவசிய மாகிறது.
அரசு இதுபோன்ற ஆய்வு களுக்கு கூடுதல் ஊக்கமும், முக்கியத்துவமும் அளிக்க  வேண்டும்.
இவ்வாறு கூறினார்.


-விடுதலை,30.9.16

2500 ஆண்டுகள் பழமையான உலோக தொழிற்கூடம் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை அருகே 2500 ஆண்டுகள் பழமையான உலோக தொழிற்கூடம் கண்டுபிடிப்பு
புதுக்கோட்டை, செப்.30 புதுக் கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டை அருகே 2500 ஆண்டுகள் பழமையான செம்புராங் கற்படுகை உலோக தொழிற்கூடத்தின் உருக்கு உலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் மணிகண்டன் தெரிவித்திருப்பது:கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் அருகே அட்டிகா என்னுமிடத்தில் கி.மு. 483-அய்ச் சார்ந்த வெள்ளித் தாதுக் களைப் பிரிக்கும் பழங்கால தொழிற்சாலை அமைந்துள் ளதை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆர் மேனியாவில் கி.மு.300-அய் சேர்ந்த உலோகத்தாது பிரிக்கும் அமைப்பு கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. இதுவே, மத்திய கிழக்கு நாடுகளில் கண்டறியப் பட்டுள்ள உலோகப் பிரிப்பு அமைப்புகளில் பழமையானது என தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள ஆதிச் சநல்லூர், ஆழ்வார் திருநகரி, கொடுமணல் உள்ளிட்ட இடங் களில் கண்டெடுக்கப்பட்டுள்ள உலோகப் பிரிப்பு மற்றும் உருக்கு ஆலைகள் பெரும் பாலும் மண் மற்றும் செங்கல் கட்டுமான அமைப்புகளாகவே உள்ளன. தமிழகத்தில் செம்பு ராங் கற்படுகையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள முதல் உருக்கு உலையாக இது உள்ளது. இதற்கு முன்னதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள உருக்கு உலைகள் தனியான கட்டுமான அமைப்பிலோ அல்லது மட்பாண்ட கலன் களிலோ இருந்துள்ளன.
தற் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலையானது பாறையை துளை யிட்டு உருவாக்கப்பட்டிருப்ப தால் இதனை சர்வதேச அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் சின்ன மாகக் கருதலாம்.
செம்புராங் கற்படுகையில் வெட்டப்பட்டுள்ள குழிகள் சுமார் இரண்டரை அடி ஆழம் உள்ளன. முழு வட்ட வடிவம் நீள் வட்ட வடிவம் என இரு வகைகளில் உள்ளன. உருக்கு உலை வட்ட வடிவத்துடன் அமைந்துள்ளதோடு, ஒரு அடி ஆழத்தில் நான்கு செ.மீ விட்ட முடைய துளையும் காணப் படுகிறது.
அதன் நேர் எதிராக மாடக்குழி போன்ற அமைப் பும், அதற்கு சற்று கீழாக வரி சையான நான்கு சிறு துளை களையும் காணமுடிகிறது, இத் துளையமைப்பானது காற்றை உலைக்குள் செலுத்துவதற்கான குருகு துருத்தியை பொருத்துவ தற்கானவை என்பதை ஊகிக்க முடிகிறது. நீள்வட்ட குழிகளில் உலோகத் தாதுக்களை உருக்கு வதற்கு முன்னதாக அடர்ப் பிக்கப் பயன்படுத்தப்பட்டி ருக்கவேண்டும்.
உலைக் குழிகளுக்கு மய்யத் திலுள்ள உருளை வடிவ குழி ஆழம் குறைவாகவும், அதிக விட்டத்துடன் முனைப்பகுதி கள் குறுகலாகவும் உள்ளது. இது தாதுக்களிலிருந்து பிரிக்கப் பட்ட உலோக கட்டிகள், ஆயுதம் உள்ளிட்ட வார்ப்புப் பொருட்களை குளிர்விக்கும் நீர்க்கலவை தொட்டியாக இருக் கலாம்.
ஏனைய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உருக்கு உலைகள் மூலம் இதை உணர முடிகிறது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் இரும்பை யும், அலுமினியத்தையும் கொண்ட லேட்டரைட் கற்கன் எனப்படும் செம்புராங்கல் (அயர்ன், அலுமினியம், சிலிக்கேட்) இப்பகுதியில் மிகுதி யாக காணப்படுகிறது. மேலும், குவார்ட்சைட் எனப்படும் வெண்மைநிற சீனிக்கற்களும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகுதியாகக் காணப்படுவதன் மூலம் உலோக உருக்கு ஆலை இப்பகுதியில் அமைந்துள்ளதை நிறுவ முடிகிறது.
சங்ககால மண் மற்றும் பெரிய வடிவ செங்கற்களால் அமைக்கப்பட்ட பொற்பனைக் கோட்டைக்கு வடபுறமாக இது அமைந்துள்ளது. இங்கு சங்க காலத்தை சார்ந்த தமிழிக்கல் வெட்டுகளும் கண்டெடுக்கப் பட்டுள்ளது. இதை ஆய்வு செய்துள்ள தொல்லியலாளர் கள் கி.மு. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என தகவல் பகிர்ந் துள்ளனர். அதனடிப்படையில் இந்த பழங்கால தொழிற் கூடத்தை 2500 ஆண்டுகள் பழமையானதாக கருதலாம்.
மட்பாண்ட உருக்கு உலைகளே 3000 ஆண்டுகள் பழமை யானதாக கருதப்படும் நிலை யில் முழுவதும் செம்புராங் கல்லில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பானது செம்பு காலத்தை சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது, எனினும் பல்வேறுபட்ட வயதுகணிக்கும் நவீன தொழில்நுட்ப ஆய்வுகள் மூலம் இந்த உருக்கு உலையின் காலத்தை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்றார்.
இந்த ஆய்விற்கு கல்வெட்டு ஆய்வாளர்கள் முத்துக்குமார் பாண்டியன், சமூக ஆர்வலர் பழ.குமரேசன், அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் பொன்.கருப்பையா, ஆசிரியர்கள் கஸ்தூரி ரெங்கன், மலையப்பன், புதுகை செல்வா, சீ.அ.மணிகண்டன் உள்ளிட்டோர் உதவியாக இருந்துள்ளதாகவும் கல்வெட்டு ஆய்வாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
-விடுதலை,30.9.16

கி.பி. 5ஆம் நூற்றாண்டு கல்வெட்டு திருவாரூரில் கண்டுபிடிப்பு


சென்னை, செப். 27- திருவாரூரில், கி.பி., 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பிராமி எழுத்து மற்றும் வட்டெழுத்து கலந்த கல் வெட்டு, கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
திருவாரூர், தியாகராஜ சுவாமி கோவில், கமலாலயம் செல்லும் வழியில், அனந்தீஸ்வரர் தியான மண்டபத்திற்கு, தெற்கு புறமுள்ள மதில்சுவரில், தமிழ் பிராமி மற்றும் வட்டெ ழுத்து கலந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லுரியின் தமிழ்த் துறை பேராசிரியர், சோ.கண்ண தாசன், தஞ்சை, பொந்தியாகுளம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், தில்லை கோவிந்த ராஜனும் இதை கண்டுபிடித்து உள்ளனர்.
இதுகுறித்து, தில்லை கோவிந்தராஜன் கூறியதாவது: தமிழில், தனிச்சிறப்பு வாய்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் சங்க காலத்திலேயே இருந்தன. பின், தமிழ் எழுத்து, பிராமி எழுத்தில் இருந்து வட்டெழுத் துக்கு உருமாறியது. பிராமியில் இருந்து, முழுமையாக வட்டெ ழுத்துக்கு மாற, எடுத்துக் கொண்ட காலகட்டத்தில், பிராமி எழுத்தும், வட்டெழுத் தும் கலந்தே எழுதப்பட்டன.
அந்த காலகட்டத்தைச் சேர்ந்த எழுத்தை தான், தற் போது, திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் கண்டு பிடித்துள்ளோம். இவை, பிராமி, வட்டெழுத்துக்களுக்கு இடைப்பட்ட, கி.பி., 5ஆம் நுற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இதில், எட்டு, ஏழு என்ற எண்ணிக்கையில், இரண்டு வரிகளில், 15 எழுத் துக்கள் உள்ளன.
அவற்றில், ‘ற, எ, ஒ, ழ’ ஆகிய எழுத்துக்கள் மட்டும், படிக்கும் நிலையில் உள்ளன; மற்றவை, தொல்லியல் அறி ஞர்கள் ஆய்வு செய்தால் அடை யாளம் காணலாம். தமிழகத் தில், ஈரோடு மாவட்டம் அரச் சலுர், சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி மற்றும் மதுரை மாவட்டம் மாங்குளத்தில் மட் டுமே, இந்த காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
கல்வெட்டு ஆய்வாளர், எஸ்.ராமச்சந்திரன் கூறுகை யில், ‘’ற, த போன்ற எழுத்துக் கள் தெளிவாக தெரிகின்றன. மேலோட்டமாக பார்த்தால், இவை எழுத்தாகவோ, குறியீ டாகவோ இருக்க, சம வாய்ப் புகள் உள்ளன; முழு ஆய்வுக்கு பிறகே, இறுதி முடிவு எடுக்க முடியும்,’’ என்றார்.
-விடுதலை,27.9.16

வெள்ளி, 28 அக்டோபர், 2016

கீழடி அகழ்வாய்வு-"கீழடி நோக்கி ஓரடி" பயன்மிகு கால வெளிப்பயணம்

திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் ஏற்பாட்டில்
"கீழடி நோக்கி ஓரடி" பயன்மிகு கால வெளிப்பயணம்
திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் ஏற்பாட்டில் 23.10.2016 அன்று ஒரு நாள் 'கால வெளிப்பயணம்', பயன்தரும் வகையில் பல்வேறு தொன்மச் செய்திகளை அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்திய அரசின் தொல்லியல்துறை இரண்டு ஆண்டு களுக்கும் மேலாக மதுரைக்கு அருகில் - சிவகங்கை மாவட்டப் பகுதியில் அமைந்துள்ள கீழடி எனும் சிற்றூரில் மேற்கொண்டு வந்த அகழாய்வுப் பணிகள் தமிழர்தம் தொன்மையான வாழ்வியல் சின்னங்களை வெளி உல கிற்கு தெரிவித்திடும் வகையில் அமைந்துள்ளது. அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்ட இடத்தினை பார்வையிடுகின்ற வகையில் "கீழடி நோக்கி ஓரடி" எனும் கால வெளிப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் முழுவதுமிருந்து 40 ஆர்வலர்கள் கால வெளிப்பயணத்தில் பங்கேற்றனர்.
முதற்கட்ட, இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்று மூன்றாம் கட்டத்தினை ஆய்வர்கள் எதிர் நோக்கியுள்ள நிலையில் பயணக்குழுவினர் கீழடி சிற்றூருக்குச் சென்றனர்.
அகழாய்வுப் பணியின் அதிகாரப் பூர்வ முடிவுகள், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வெளியிடப்படாத நிலையில் ஆய்வுப் பணி நடைபெற்ற இடத்தினைப் பயணக்குழு பார்வையிட்டது. தமிழர் நாகரிகம் குறித்த பல்வேறு செய்திகளை, தொன்மச் சிறப்புகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது.
இது வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளில் வாழ்விடம் சார்ந்த தொன்மையான ஆய்வு கீழடியில் தான் அமைந்துள்ளது. இதுவரை நடைபெற்ற அகழாய்வு இடங்களான நதி முகத்துவாரம், கடல் சார் பகுதி, இடுகாட்டுப் பகுதி என்பதிலிருந்து நகர் சார்ந்த, கட்டட கட்டமைப்பு, சிறப்புமிக்க தொழிற்கூடங்கள் இருந்ததற்கான ஆதாரங்களை உள்ளடக்கியுள்ளது கீழடி அகழாய்வின் தனிச்சிறப்பாகும்.
கீழடி அகழ்வாய்வின் தனிச் சிறப்பான பெரிய அளவிலான செங்கல் கட்டடக் கலை கட்டமைப்புச் சின்னம்
கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் அங்கு வாழ்ந்த மக்களின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என கருதப்படுவதற்கு பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சங்க காலப் பாடல்கள் மூலம் தமிழர் வாழ்ந்த நாகரீகம் பற்றிய குறிப்புகள் இலக்கியப் பதிவுகளாக இதுநாள் வரை இருந்த நிலையிலிருந்து, தொல்லியல் ஆய்வு மூலம் அறிவியல் அடிப்படையில் அகழாய்வுச் சின்னங்கள் வலு சேர்த்திடும் விதமாக கிடைத்துள்ளன.
அந்நாளில் தமிழர்கள் அயல்நாடுகளில் வணிகம் செய்ததை  உறுதிப்படுத்திடும் தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக ரோமாபுரியில் புகழ்பெற்ற ரவுலட்டி வடிவமைப்புடன் கூடிய சுட்ட மண்ணில் செய்யப்பட்ட பானைகள் கிடைத்துள்ளன.
வட புலத்தில் குறிப்பாக இன்றைய குஜராத் பகுதியுடன் அன்று நிலவி வந்த வர்த்தகத் தொடர்பு - அங்கு பயன்படுத்தப்பட்ட மகளிர் அணியும் அணிகலன்கள் கிடைத்துள்ளன. பாண்டிய நாட்டுக்கே உரிய முத்துக்களால் உருவாக்கப்பட்ட பாசி மணிகள், தந்தத்தால் ஆன அணி கலன்கள் கிடைத் துள்ளன.
வைகை நதிக்கரையில் அமையப்பெற்ற கீழடியில் நடைபெற்ற அகழாய்வில்தான் செங்கல்லை வைத்து  கட்டப்பட்ட கட்டிடங்கள் மிகப்பெரிய அளவில் கிடைத் துள்ளன. கீழடி அகழாய்வின் சிறப்புகளில் முதன்மையான தாகவும் இந்தக்கட்டிடக்கலைக் கட்டமைப்பு அமைந் துள்ளது. இந்த இரண்டு கட்ட அகழாய்வுகளின் மூலம் கிடைத்த பொருட்களே பெரும் செய்திகளை, நாகரீகப் பண்பாட்டுக் கூறுகளை, வர்த்தகத் தொடர்புகளை வெளிப் படுத்துவதாக இருக்கையில் முழுமையாக, அடுத்த கட்ட ஆய்வுகள் நடைபெறும்  பொழுது மேலும் பல செய்திகள், ஆதாரங்கள் கிடைக்கின்ற வாய்ப்பு உள்ளது. அந்த வகை யில் கீழடி ஆய்வு தொடரப்பட வேண்டிய அகழாராய்வு.
கீழடிப் பகுதியின் பல இடங்களில் அகலமான குழிகள் தோண்டப்பட்டு அதில் கிடைத்திட்ட பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஆய்வுப்பணி முடிந்த நிலையில் தோண்டப்பட்ட குழிகள், பாதுகாப்புக் கருதியும், நில உரிமையாளர்கள் பயன்பாடு கருதியும் மூடப்பட்டு வருகின்றன. அகழாய்வுப் பணி பற்றிய செய்திகளை தொல்லியல் அறிஞர் முனைவர் மு.வேதாசலம் கால வெளிப்பயண குழுவினருக்கு  எடுத்துரைத்தார். அகழாய் வுப் பணிக்கு இடம் நல்கியயோர் பலர். அவர்களுள் பயண நாளன்று வருகை தந்த சந்திரன், பீர்முகமது ஆகியோருக்கு நன்றி தெரிவித்து திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பாக சிறப்பு செய்யப் பட்டது.
கால வெளிப்பயணத்தில் கலந்து கொண்டோர்: வீ.குமரேசன் (திராவிட வரலாற்று ஆய்வு மய்யம்), ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார் (கால வெளிப்பயண ஒருங்கிணைப்பாளர்), முனைவர் வா.நேரு (பகுத்தறிவாளர் கழகம்), இறைவி (மகளிர் பாசறை), வி. உடுமலை (பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை) ஓவியா (தமிழ்க்குரல்), வழக்குரைஞர் இராஜசேகரன் (கரூர்), கி.தளபதிராஜ் (தி.க.மயிலாடுதுறை), பேராசிரியர் சாகுல்அமீது அஜீஸ் (திருநெல்வேலி), அனிதா பன்னீர்செல்வன் (சென்னை) மற்றும் இயக்கத்தோழர்கள், பொது ஆர்வலர்கள் பலர். ஆர்வம் பொங்கும் உணர்வுகளோடு சென்ற கால வெளிப் பயணக் குழுவினர், கீழடி கிராமத்திலிருந்து அறிவார்ந்த, தொன்மைச் சின்னங்கள் சார்ந்த செய்திகளை அறிந்த நிலையில் திரும்பினர்.
கீழடிப் பயணத்திற்குப் பின்னர், மாலையில் ஒத்தக் கடையானைமலையின் - நரசிங்கம் பகுதி அடி வாரத் திலுள்ள சமணர் வாழ்ந்த இடங்கள் (கல் படுக்கைகள்), சமணர் எழுச்சிக்கு எதிராக கிளம்பிய பக்தி இயக்கத்தினரின் தொல்லியல் சின்னங்கள், குடைவறை கோயில்கள், புடைப்புச் சிற்பங்கள் ஆகியவற்றையும் கால வெளிப்பயணக் குழுவினர் சென்று பார்த்தனர்.
.விடுதலை,24.10.16
கீழடி அகழ்வாய்வு பணிகள் முடிந்தன
குழிகளை மூடும் பணி நிறைவு
திருபுவனம், அக்.25 சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதூரில் கடந்த 18 மாதங்களாக இந்திய தொல்லியல்துறை சார்பில் அகழ்வாய்வு பணிகள் நடந்தன.
வைகை நதிக்கரையின் இருபுறமும் சுமார் 203 இடங் களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். மதுரை அருகே சித்தர் நத்தம், திருப்பாச்சேத்தி அருகே மார்நாடு, திருபுவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை ஆகிய 3 இடங்களில் உள்ள தொல்லியல் மேடுகளை ஆய் வுக்கு தேர்வு செய்தனர். கீழடி தொல்லியல் மேட்டை அள வீடு செய்தபோது, சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் 4 கிமீ சுற்றளவில் அமைந்துள்ள இடங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர்.
2015, ஜனவரி முதல் செப்டம்பர் வரை முதல்கட்ட ஆய்வு நடந்தது. அதன் பின் 2016, ஜனவரி முதல் செப்டம்பர் வரை இரண்டாம் கட்ட அகழ்வாய்வு நடந்தது. இதில் 5 ஆயிரத்து 300 தொல்லியல் பொருட்கள் ஆவ ணங்களாக, சான்றுகளாக சேக ரிக்கப்பட்டன.
இதன் மூலம் நகர நாகரிகம் மிக்க மக்கள் கி.மு. 3ஆம் நூற்றாண் டிலேயே வாழ்ந்துள்ளனர் என ஆய்வாளர்கள் உறுதிப்படுத் தினர். அத்துடன் மொஹஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகத் திற்கு இணையான நாகரிகம் கொண்ட மக்கள் இங்கு வாழ்ந் துள்ளனர் என்றும் ஆய்வாளர் கள் உறுதி செய்தனர். மூன்றாம் கட்ட ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் 2017 ஜனவரி மாதம் கிடைக்குமென எதிர்பார்க்கப் படுகிறது.
இதையடுத்து, கடந்த 2 நாட்களாக கீழடியில் உள்ள அகழ்வாய்வு குழிகளை பொக் லைன் இயந்திரம் மூலம் மூடும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறு கையில், இன்றுடன் குழிகளை மூடும் பணி நிறைவடையும் என்றனர்.

.விடுதலை,25.10.16

சனி, 22 அக்டோபர், 2016

3,500 ஆண்டுகள் முந்தைய பானைக் குறியீடுகள் கண்டெடுப்பு


புதுக்கோட்டை, அக்.22 புதுக் கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே வில்லுனி ஆற்றங்கரையில் எழுத்துகள் தோன்றுவதற்கு முந் தைய பழைமையான பானைக் குறியீடுகள் கண்டெடுக்கப்பட் டுள்ளன.
இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணி கண்டன் கூறியதாவது:
வில்லுனி ஆற்றங்கரையில், ராமசாமிபுரம் மங்கலநாடு ஆகிய ஊர்களின் கிராம எல் லையில் 173 ஏக்கரில் இத்திடல் முட்புதர் காடாக உள்ளது.
சுண்ணாம்பு கூட்டுக் கலவை பொருளாலான சிறப்பு வாய்ந்த மேட்டுப் பகுதிகளில் தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே கருப்பு சிவப்பு பானை ஓடுகள் பரவிக் கிடக் கின்றன.
இத்துடன் உலோக உருக்குக் கழிவுகளும், உலோக வார்ப்பு மண் உருளைகளும், கண்ணாடி கற்களும் ஒருசில இடங்களில் காணப்படுகின்றன.
பானைக் குறியீடுகளில் குறிப்பிட்டுள்ள தலைகீழ் சூலம் போன்ற அமைப்பு போர்த் திறன்மிக்கவர் புதைக் கப்பட்டுள்ளார் என்பதைக் குறிப்பது என்பதே கிரேக்கத் தொல்லியலாளர்கள் கருத்து. இந்திய தொல்லியலாளர்கள் பலர் இந்தக் குறியீட்டை மட் பாண்டம் செய்பவரின் அடை யாளம் என்று கூறிவரும் நிலை யில், இதுபோன்ற குறியீடுகள் இலங்கை, கிரேக்கம், இந்தியா வின் பெருவாரியான பகுதியில் கிடைத்துள்ளதைக் கொண்டும், இதை உலகலாவிய மொழிக் குறியீடாகவே பார்க்க வேண்டி யுள்ளது.
மேலும், மண் அடுக்கை மட்டுமே வைத்து இதுபோன்ற குறியீடுகளின் காலக் கணிப்பை வெளியிடுவதும் சரியானதாக அமையாது.
இந்தக் குறியீட்டு எழுத்து கள், எழுத்து தோன்றுவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந் தவை என்பதாலும், பெருங்கற் கால குறியீடாகக் கருதப்படுவ தாலும், இவை 3,500 ஆண்டு களுக்கு முந்தையதாகவே கருத வேண்டியுள்ளது.
அதுமட்டுமன்றி தாழியின் மேற்புறத்தில் கிடந்த மண் கலையத்தில் சிறு பல் எலும்பு முழுமையாக கிடைத்துள்ள தால், இந்தக் குறியீட்டின் காலத்தையும் கதிரியக்க சோதனை மூலமாக ஓரளவு துல்லியமாக வெளிப்படுத்த முடியும். மேலும், வெப்ப ஒளிர்ம சோதனைகள் உள்ளிட்ட அறிவியல் பரிசோதனைகள் மூலம் உறுதியான காலவரைய றைக்கு வரமுடியும் என்றார்.
-
விடுதலை,22.10.16

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

வாழமங்கலத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு


புதுக்கோட்டை, ஆக.27 புதுக் கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் ஒன்றியம் வாழமங்கலம் கிராமத்தில் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காணிக்காவல் ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ஆ.மணிகண்டன் தெரிவித்திருப்பது:
புதுக்கோட்டை மாவட்டத் தில் 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோழர்களும் இறுதிப்பகுதியில் பாண்டியர் களும் ஆட்சிபுரிந்தனர். படிப் படியாக நிலையான ஒருங் கிணைந்த ஆட்சிமுறை மறை யத் தொடங்கியது. 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் அதிக நிலம் படைத்தவர்கள் அவ்வூரின் குறுநில மன்னர் களாக மாறினர்.
அவர்களே முறைப்படுத்திக் கொள்ளும் வகையில் வரி செலுத்தி பாடிகாவலை நிய மித்து வந்துள்ளது புதுக் கோட்டை சமஸ்தான கல்வெட் டுகள் மூலம் அறிய முடிகிறது, பாடி காவலுக்கு விளையும் பொருட்களின் அடிப்படையில் கோல் அளவீட்டு முறையில் நிதி பெறப்பட்டுள்ளது. நில மில்லாதவர்களிடம் ஆடு, மாடு மற்றும் கோழி, இறைச்சி, நெய், பால் அல்லது அதற்கு இணையான நிதி, கடமை என்ற பெயரில் வழங்குவது நடைமுறையில் இருந்துள்ளது. பிற்பகுதியில் கிராம பாடிகா வல் புரிவோர் குளம் வெட் டுதல், பாசனத்தை முறைப் படுத்தி வழங்குதல், கோயில் நிர்வாகம் உள்ளிட்ட பொது நிகழ்வுகளை முன்னெடுக்கும் உரிமை பெற்றனர்.
கீழைக்குறிச்சியை (தற்பொ ழுது கீழக்குறிச்சி என்று அழைக்கப்படுகிற) சேர்ந்த வர்கள் பாடிக்காவல் புரிந்ததை யும் கள்வர்களால் கவர்ந்து செல்லப்பட்ட பசுவை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்ததை யும் இச்செயலுக்காக பயன டைந்த கிராமத்தவரால் பாடி காவல் குழுவுக்கு விருந்து வழங் கப்பட்டதையும் புதுக் கோட்டை சமஸ்தான கல்வெட் டுகளான 688 மற்றும் 691 கூறுகிறது.
கிராமத்தை ஒரு குறிப்பிட்ட குழுவினர் காவல்காத்து வரு வதைத் தெரியப்படுத்தும் வகை யில் கல்வெட்டினை ஊரின் எல்லையிலோ, வயல்களிலோ, ஊரின் மத்தியிலோ, கோயி லுக்கு அருகிலோ, பாடிகாவல் புரியும் நிலப்பகுதியிலோ நட்டு வைத்திருப்பதை அறிய முடிகிறது. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட ஊரின் வரி வசூல் உள்ளிட்ட உரிமைகளை வெளிப் படுத்தும் கல்வெட்டே ஆசிரி யம் கல்வெட்டு எனப்படுகிறது. “ஸ்வஸ்தி ஸ்ரீ வட சிறுவாயி நாட்டு வாளுவமங்கலம் பகைத் தலைப்பாடியான கீழைக்குறிச் சியார் ஆசிரியம் விசையஞ்சாநல்லூர்’’ என்று கல் வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
அதாவது தற்போது வாழ மங்கலம் என்று அழைக்கப் படும் இவ்வூர் வடசிறுவாயி நாடு என்ற சோழ மன்னர்களால் பெயரிடப்பட்ட குறுநில நாட் டின் ஒருபகுதியாக இருந்துள் ளது. பின்னர் வாளுவமங்கலம் என்ற பெயரோடு வழங்கப் பட்டுள்ளதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. மேலும் இவ் வூரை கீழைக்குறிச்சியார் என்ற ஊர்ப்பெயரோடு அழைக்கப் பட்ட பாடிக்காவல் தலைவ னின் கட்டுப்பாட்டில் இவ்வூர் வந்ததையும்,
இவ்வூரின் பெயரை விசையஞ்சான் அல்லது விசையன் அஞ்சாதவன் என்ற பொருள்படும்படி தனது பெயரின் முன்னொற்றோடு விசையஞ்சாநல்லூர் என்று கல்வெட்டு நாட்டியிருப்பதும் தெரிகிறது. தற்போது வரை வாழமங்கலத்தில் வசிக்கும் குறிப்பிட்ட இனத்தவரின் உற வினர்கள் கீழைக்குறிச்சி கிரா மத்தினரோடு உறவு பேணி வருவதை இவ்வூரில் வசிப்ப வர்கள் அளித்த தகவல்கள் உறுதி செய்கின்றன என மணி கண்டன் தெரிவித்துள்ளார்.
-விடுதலை,27.8.16

303 ஆண்டுகள் பழைமையான ஓலைச் சுவடி!

-விடுதலை,15.8.16

சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாடு!-6.8.16

சென்னை பெரியார் திடலில் மொழி இனவுணர்வின் சங்கமம்
கலாச்சாரம் என்று சொல்லி நாட்டைப் பிளவுபடுத்துவதா?

மனுதர்மம் மீண்டும் ஆள அனுமதியோம் - எச்சரிக்கை!

கொட்டு முரசு கொட்டினர் கொள்கைச் சீலர்கள்
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். உடன் டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க.), இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், எழுத்தாளர் பழ.கருப்பையா, பேரா.சுப.வீரபாண்டியன்,  பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், உ.பலராமன் (காங்), புலவர் பா.வீரமணி, திராவிடர் கழகத் துணைத் தலைவர்  கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொருளாளர் டாக்டர் சு. பிறைநுதல் செல்வி உள்ளனர். (6.8.2016).


சென்னை, ஆக.7 புதிய கல்விக் கொள்கை என்று சொல்லி சமஸ்கிருதத்தையும், இந்துக் கலாச்சாரத்தையும் திணிக்கும் மத்திய பிஜேபி அரசின் திட்டத்தை எதிர்த்து முறியடிப்போம் என்று சூளுரைத்தனர் கல்வியாளர்களும், கொள் கையாளர்களும்.
மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள புதிய கல்வித் திட்டம் மற்றும் சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று மாலை கருத்தரங்கமும் மற்றும் மாநாடும் நடைபெற்றன-.

புதிய கல்விக்கொள்கை ஒரு பார்வை எனும் தலைப்பில் கருத்தரங்கம் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (6.8.2016) மாலை 4.30 மணியளவில் தொடங்கியது. சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை வரவேற்றார்.
திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் சாதிக் தலைமை வகித்தார்.
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள் மொழி, எழுத்தாளர் வே.மதிமாறன்,  அருட்சகோதரி ஆர்த்தி ஆகியோரின் உரையைத் தொடர்ந்து திமுக மாநில மாணவரணி செயலாளர் கடலூர் இள.புகழேந்தி சிறப்புரை ஆற்றினார்.
கருத்தரங்கின் முடிவில் திராவிடர் கழக மாநில மாணவரணி துணை செயலாளர் நா.பார்த்திபன் நன்றி கூறினார்.
சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாடு
தொடர் நிகழ்வாக சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாடு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இணைப்புரையை மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வழங்கினார்.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் வரவேற்புரையாற்றினார்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றினார்.

மறைமலையடிகள்
படம் திறப்பு

தமிழ்க்கடல் மறைமலையடிகள் படத்தைத் திறந்துவைத்து மேனாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் உரையாற்றினார்.

சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் உரை வீச்சாக பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பேசினார்கள்.

இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் உ.பல ராமன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன், எழுத்தாளர் பழ.கருப்பையா, பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், புலவர் பா.வீரமணி ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.
திராவிடர் கழகப் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி உரைவீச்சுடன் நன்றி தெரிவித்தார்.
திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரசு கட்சி, இந்திய யூனியன் முசுலீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகம்,  கிறிஸ்தவ நல அமைப்புகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு,தனித்தமிழ் ஆர்வலர்கள், தமிழறி ஞர்கள் என அரசியல் கட்சிகள், மதங்கள் பேதங் களின்றி தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டோம் என்று பெருந்திரளாகத் திரண்டு நிகழ்ச்சிகள் முடியும்வரை அறிஞர் பெருமக்களின் கருத்து வீச்சுகளை செவிமடுத்து உணர்ச்சிப் பிழம்பாயினர். மன்றம் நிறைந்து வெளியிலும் ஏராளமானவர்கள் நின்று கருத்துரைகளை செவிமடுத்தனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கிவீரமணி அவர்களின் தலைமையில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, தமிழர்களாக ஒன்றுபட்டு சமஸ்கிருத திணிப்பை எதிர்த்தும், புதிய கல்வித்திட்டத்தை எதிர்த்தும் தலைவர்கள் அறிஞர்பெருமக்கள் போர் முரசம் கொட்டி, வென்றே தீருவோம் என்று சூளுரைத்தார்கள்.
இந்திய மத்திய அரசு இந்தியைத் திணித்தபோது தந்தை பெரியார் தலைமையில் தமிழகம் திரண்டு எதிர்த்துப்போராடி இந்தித்திணிப்பை முறியடித்தது.
ராஜாஜியால் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டத்தை தந்தை பெரியார் கட்டளையின்பேரில் ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்த்து களம் கண்டு அத்திட்டத்தை முறியடித்தனர்.
தந்தை பெரியாருக்குப் பின்னர் இப்போது மீண்டும் இந்தி, சமஸ்கிருதம் திணிப்புகள், நவீன குலக்கல்வித் திட்டமாக இந்துத்துவாக் கல்வித் திட்டம் ஆகியவற்றை தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் கட்சிகள், ஜாதி, மத பேதங்களின்றி முறியடித்து வெற்றி பெறுவோம் என்று தமிழர்கள் ஒன்றுபட்டு போர் முரசம் கொட்டி உணர்ச்சிப்பிழம்பாக திரண்டுவிட்டார்கள்.
அதன் ஒரு கட்டமாக அனைத்துக்கட்சிக்கூட்டம் 28.7.2016 அன்று சென்னை பெரியார் திடலில் கூடியது. 

அனைத்துகட்சிக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நாளை (8.8.2016) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டின் தலைமையுரையில் தமிழர் தலைவர் அவர்கள் பல்வேறு தகவல்களுடன் சிறப்புரையாற்றினார். அவர் உரையில்: மத்திய அரசுக்கு எச்சரிக்கையாக சமஸ்கிருதத் திணிப்பு, புதிய கல்வித்திட்டம் என்பதன்பெயரால் பண்பாட்டுப் படையெடுப்பு என்பது நாட்டின் ஒருமைப்பாட்டைக் கேள்விக்குறியாக்கிவிடும் என்றார். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் திணிக்கப்படும் ஒன்றை, இந்துக் கலாச்சாரத்தை ஒருபோதும் அனுமதியோம் என்றும் எச்சரித்தார்.
நூல்கள் வெளியீடு

இந்தி ஆதிக்க எதிர்ப்பு வரலாற்றை விளக்கும் நூல்கள் மற்றும் சமஸ்கிருத ஆதிக்கத்தை, பண்பாட்டுப் படையெடுப்பை விளக்கும் நூல்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டன.  திமுக அமைப்புச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட எழுத்தாளர் பழ.கருப்பையா பெற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து பார்வையாளர்கள் பகுதியிலிருந்து பலரும் மேடையில் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர்.

1937ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் வரலாற்றை விளக்கும் நூலான தமிழன் தொடுத்தப் போர், 1948ஆம் ஆண்டு இரண்டாம் இந்தி எதிர்ப்புப்போரின்போது நடைபெற்ற மாநாட்டில் அறிஞர்பெருமக்களின் சொற்பொழிவு திரட்டு நூலான இந்திப் போர்முரசு, இந்தி ஆட்சிமொழியாக ஆதிக்கம் செலுத்தினால் ஏற்படும் ஆபத்துகளை விவரிப்பதுடன், இந்தி ஆதிக்க எதிர்ப்பு வரலாற்றை விளக்கும் நூலான   மொழி உரிமை ஆகிய நூல்களும், மொழிக்கலப்பு, பண்பாட்டுப்படையெடுப்பு, தமிழர் வாழ்வியல், விழாக்களில் சமஸ்கிருத ஆதிக்கம் ஆகியவற்றை விளக்கும் நூலான சமஸ்கிருத ஆதிக்கம், செத்த மொழியான சமற்கிருதம் இல்லாமல் தமிழ்மொழிக்கு தனித்து இயங்கும் ஆற்றல் உண்டு, இணைப்பு மொழிக்கான தகுதி சமஸ்கிருதத்துக்கிடையாது என்பதை விளக்கும் நூலான சமஸ்கிருதம் இணைப்பு மொழியா? சமஸ்கிருதம்பற்றி தந்தை பெரியாரின் ஆய்வுக்கட்டுரை தாங்கிய ஒரு சிறு நூல் உள்ளிட்ட நூல்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டன. ரூபாய் 300 மதிப்புள்ள நூல்கள் ரூபாய் 250க்கு மாநாட்டில்  வழங்கப்பட்டன.
நூல்களைப் பெற்றுக்கொண்டவர்கள்
மேனாள் பச்சையப்பன் கல்லூரி முதல்வர் ப.அரங்கசாமி, பகுத்தறிவாளர் கழகம் தங்க.தனலட்சுமி, மருத்துவர் தேனருவி, தமிழறிஞர் திவாகரன்,  மேனாள் மேயர் சா.கணேசன், சென்னை மண்டல திராவிடர் கழக செயலாளர் வி.பன்னீர்செல்வம், புதுச்சேரி மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி, புதுச்சேரி உள்ளிட்ட தமிழக மாநில பகுத்தறிவாளர் கழக  செயலாளர் மு.ந.நடராசன், கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், சேரலாதன், பசும்பொன் செந்தில்குமாரி, தாம்பரம் இலட்சுமிபதி, காஞ்சி கதிரவன், வி.வளர்மதி, தாம்பரம் மோகன்ராஜ், விழுப்புரம் மண்டல தலைவர் க.மு.தாஸ், மேனாள் நீதிபதி பரஞ்சோதி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் வா.நேரு, வடசென்னைமாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால் உள்பட ஏராளமானவர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட நூல்களை வாங்கி பயன்பெற்றனர்.

கலந்துகொண்டவர்கள்

திராவிட இயக்க வரலாற்று ஆய்வாளர் எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, கவிஞர் வேழவேந்தன், கவிஞர் காசி மாணிக்கம், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, பெண்ணியலாளர் ஓவியா, ஊடகவியலாளர் கோவி.லெனின், கழக மாநில அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி, மேற்கு மண்டல அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், மருத்துவர் கவுதமன், பேராசிரியர் ப.காளிமுத்து, திராவிட இயக்க தமி£ர் பேரவை மாறன், கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், வழக்குரைஞர்கள் ஆ.வீரமர்த்தினி,  சு.குமாரதேவன், ந.விவேகானந்தன், வேலூர் மண்டல செயலாளர் கு.பஞ்சாட்சரம், வேலூர் மாவட்டத் தலைவர் சிவக்குமார், போளூர் பன்னீர்செல்வம்,  பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.டி.வீரபத்திரன், எம்.பி.பாலு, தி.வே.சு.திருவள்ளுவன், வெ.மு.மோகன், தாம்பரம் ப.முத்தய்யன், தென்சென்னை இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, தே.ஒளிவண்ணன், கும்மிடிப்பூண்டி செ.உதயக்குமார், திண்டிவனம் கழக மாவட்டத் தலைவர் மு.கந்தசாமி, செயலாளர் நவா.ஏழுமலை, பா.தென்னரசு, என்னாரெசு பிராட்லா உள்பட தென்சென்னை, வட சென்னை, ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு கழக மாவட்டங்களிலிருந்து கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

மலையாள மொழியில் இயக்க நூல்கள்

இயக்க வெளியீடுகளான தந்தை பெரியார் சுயசரிதை (ஆத்ம கதா) மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய புட்டபர்த்தி சாய்பாபா...? பெரியாரும் அம்பேத்கரும் ஆகிய நூல்களை மைத்ரி பதிப்பகத்தின் சார்பில் மலையாளத்தில் வெளியிட்ட லால்சலாம் நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் அளித்து லால்சலாம் மகிழ்ந்தார்.
மாநாட்டில் கலந்து கொண்டோரின் ஒரு பகுதி
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் படத்தினை  தமிழர் தலைவர் தலைமையில் முனைவர் அவ்வை நடராசன் திறந்து வைத்தார். உடன் டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க.), பேரா. சுப. வீரபாண்டியன், பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், எழுத்தாளர் பழ. கருப்பையா, உ. பலராமன் (காங்), புலவர் பா. வீரமணி, திராவிடர் கழகத் துணைத் தலைவர்  கவிஞர் கலி. பூங்குன்றன்,  கழகப் பொருளாளர் டாக்டர் சு. பிறைநுதல் செல்வி உள்ளனர். (6.8.2016).
சமஸ்கிருதம் எதிர்ப்புத் தொடர்பான இயக்க நூல்களை டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. வெளியிட எழுத்தாளர் பழ. கருப்பையா பெற்றுக் கொண்டார். (6.8.2016)
திராவிடர் கழகத்தின் வெளியீடுகளான 'புட்டபர்த்தி சாய்பாபா'..?, பெரியார் எழுதிய சுயசரிதை மற்றும் பெரியார் பற்றி பெரியார், பெரியாரும் -- அம்பேத்கரும் ஆகிய மூன்று நூல்களை கேரள மாநிலத்தில் உள்ள மைத்ரி பப்ளிகேசன் சார்பில் லால்சலாம் அவர்கள் மலையாளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த நூல்களை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை -6.8.2016)
-விடுதலை,7.8.16

சனி, 15 அக்டோபர், 2016

திருக்குறள் தொடர்பான செய்திகள்:





திருக்குறள் தொடர்பான செய்திகள்:
-------------------------------------
1. திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் தை முதல் நாள்.
2. திருவள்ளுவர் ஆண்டை அறிவித்தவர் மறைமலை அடிகள்.
3. திருவள்ளுவர் ஆண்டுக்கு அரசக்கட்டளை வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்.
4. திருக்குறளுக்கு முதலில் உரை வரைந்தவர் மணக்குடவர்.
5. திருக்குறளுக்குப் பத்தாவதாக உரை எழுதியவர் பரிமேலழகர்.
6. திருக்குறளுக்கு வழங்கப்படும் பெயர்கள் நாற்பத்து நான்கு.
7. திருக்குறளுக்கு உரை எழுதிய பெருமக்கள் இருநூற்று ஆறு.
8. திருக்குறளுக்கு வந்துள்ள மொழிபெயர்ப்புகள் நூற்று ஆறு.
9. திருக்குறளை இலத்தீனில் வழங்கியவர் வீரமாமுனிவர்.
10. திருக்குறளை ஆங்கிலத்தில் அருளியவர் போப்பையர்.
11. திருக்குறளுக்காக முதலில் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்.
12. குமரியிலிருந்து தில்லி வரை செல்லும் தொடர்வண்டியின் பெயர் திருக்குறள் விரைவான்.
13. குமரிக்கடலில் நிற்கும் திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி.
14. நெல்லையில் அமைந்துள்ளது திருவள்ளுவர் ஈரடுக்கு மேம் பாலம்.
15. சென்னை நுங்கம்பாக்கத்தில் நிறுவப்பட்டது வள்ளுவர் கோட்டம்.
16. திருக்குறள் சோவியத்து நாட்டில் கிரெம்ளின் மாளிகையின் நிலவறையில் உள்ளது.
17. திருக்குறள் இலண்டனில் விவிலியத் திருநூலுக்கு இணையாக வைக்கப்பட்டுள்ளது.
18. திருக்குறளை அண்ணல் காந்திக்கு அறிமுகம் செய்தவர் சோவியத்து எழுத்தாளர் தால் சுதாய்.
19. திருக்குறளுக்குத் தங்கக்காசு வெளியிட்டவர் எல்லீசர்.
20. திருக்குறள் உரை வேற்றுமை வழங்கியவர் பேராசிரியர் இரா. சாரங்கபாணி.
21. நரிக்குறவர் பேசும் வக்கிரபோலி மொழியில் திருக்குறளைத் தந்தவர் கிட்டு சிரோன்மணி.
22. திருக்குறளின் பெருமையினை உலக அறிஞர் ஆல்பர்ட்டு சுவைட்சர் போற்றிப் புகழ்ந்துள்ளார்.
23. வெண்பா யாப்பில் என்றும் பயன் தரும் செய்தியை வழங்குவதால், திருக்குறள் வெள்ளிப்பையில் இட்ட தங்கக்கனி என்பர்.
24. திருக்குறளை 1812 ஆம் ஆண்டு முதலில் அச்சிட்டு வழங்கியவர் ஞானப்பிரகாசன்.
25. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாராட்டியவர் பாரதியார்.
26. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாராட்டியவர் பாரதிதாசன்.
27. திருக்குறளின் முதற்பெயர் முப்பால்.
28. திருக்குறளில் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் உள்ளன.
29. திருவள்ளுவர் நட்பு பற்றி 171 பாக்கள் உள்ளன.
30. திருக்குறளில் கல்வி பற்றி 51 பாடல்கள் உள்ளன.
31. திருக்குறளில் இடம் பெறாத உயிரெழுது ஔ
32. திருக்குறளில் இல்லாத எண் ஒன்பது.
33. திருவள்ளுவர் கடவுளை இறைவன் என்கிறார்.(மனிதப் பண்பை குறிப்பிடுகிறார். கடவுளை அல்ல!-செ.ர.பார்த்தசாரதி)
34. திருக்குறளுக்கு உரிய சிறப்புப் பெயர் உலகப் பொதுமறை.
35. திருக்குறளில் உயிரினும் மேலானதாகப் போற்றப்படுவது ஒழுக்கம்.
36. காலமும் இடமும் கருதிச் செயலாற்றினால் உலகை வெல்லலாம்.
37. திருக்குறளை அனைத்துச் சமயங்களும் ஏற்றுப் போற்றுகின்றன.
38. திருக்குறள் தமிழ்த்தாயின் உயிர்நிலை என்பார் கவிமணி.
39. திருவள்ளுவமாலை திருக்குறளுக்கு எழுந்த புகழ்மாலை.
40. திருக்குறள் பொய்யில் புலவன் பொருளுரை எனப் போற்றப்படுகிறது.
41. திருக்குறளை முதலில் பயிற்றுவித்தவர் வள்ளலார் இராமலிங்கம்.




திங்கள், 10 அக்டோபர், 2016

போடியில் கற்திட்டைகள் கண்டுபிடிப்பு 2,500 ஆண்டு பழைமையானவை


போடி, ஜூலை 14 போடி அருகே அணைக்கரைப்பட்டி மரக்காமலை மலைப்பகுதியில் 2,500 ஆண்டு களுக்கு முந்தைய கற்திட்டைகள் எனப்படும் கல்லறைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டம், போடி சி.பி.ஏ., கல்லுரி வரலாற்றுத் துறையின் கீழ் தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு மய்யத்தின் மூலம் முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் பேராசிரியர்கள் ஞானசேகரன், மாணிக்க ராஜ், கபேஷ், கருப்பசாமி , அணைக் கரைப்பட்டி அருகே மரக்கா மலை சுற்றுப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு முடிவு குறித்து தொல் லியல் ஆய்வாளர் மாணிக்கராஜ் கூறுகையில்: தமிழகத்தில் அரிதாக கிடைக்கக் கூடிய 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கற் திட்டைகள் இங்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இப்பகு தியினர் இதனை பாண்டியர் திட்டு, பாண்டியர் குகை, பாண்டியர் வீடு என பாண்டிய மன்னர்களோடும், பாண்டவர் களோடும் தொடர்புபடுத்தி பேசுகின்றனர். கற்திட்டை என் பது பெருங்கற்காலத்தை சேர்ந்த ஈமப்புதை குழி அல்லது கல் லறையாகும். பெருங்கற்காலத் தில் மலைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் இறந்தவர்களின் உடல் களை அடக்கம் செய்ய சிறிய, பெரிய பாறை கற்களை வட்ட மாகவோ, சதுரமாகவோ அடுக்கி, மய்யப்பகுதியில் உடலோடு, ஈமப்பொருட்கள் (இறுதிச் சடங்கு பொருட்கள்), அவர் பயன்படுத்திய பொருட்களை வைத்து, நான்கு புறமும் கற் பலகைகளை செங்குத்தாக நிறுத்தி மேல்பகுதியில் பலகை கற்களை கொண்டு மூடிவிடு வர். ஒரு புறம் மட்டும் நுழைவு வாயில் போன்று உள்ள அமைப்பு கற்திட்டையாகும். இது போன்று நான்கு கற்திட் டைகள் ஒரே இடத்தில் காணப் படுகின்றன.
மூன்று கற்திட்டைகள் சேதம் அடைந்துள்ளன. இவை 4 அடி நீளமும், 3 அடி அகல மும் கொண்டுள்ளன. மழை, காற்று, மனிதர்கள், விலங்குக ளிடம் இருந்து உடல்களை பாதுகாக்க 8 அடி அகலத்தில் கற்கள் வட்ட வடிவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவை எதிரிகளுடன் நடந்த போரில் வீரமரணம் அடைந்த நான்கு வீரர்களுக்காகவோ அல்லது சமூகத்தின் தலைவர் இறந்த பின் அவர் நினைவாகவோ அமைக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது. பெருங்கற் கால கற்திட்டையாக அமைந் துள்ளதால் இப்பகுதியில் மக் கள் வாழ்ந்துள்ளதும், அவர்களது கட்டடக் கலை, கட்டுமான நாக ரிகத்தையும் வெளிக் காட்டி தேனி மாவட்டத்தின் வரலாற்று சான்றாகவும் இவை உள்ளன.
-விடுதலை,14.7.16

வடமொழி என்ற சமஸ்கிருதம் என்றும் பேசப்படாத மொழி - திணிக்க வேண்டாம்

ஆரிய பிராமணர்கள் எந்த மாநிலத்தில் குடியேறி னாலும் அம்மாநில மொழிகளையே தாய்மொழியாக வீட்டிலும் வெளியிலும் பேசியும், எழுதியும் வருகின்றனர். சமஸ்கிருத மொழி இலக்கிய, இலக்கண அறிஞர்களின் மொழியாகும். கிரேக்கம், இலத்தீன், பாரசீகம் போன்ற மொழிக் குடும் பத்தை சார்ந்ததாகும். பாரசீக மொழியில் உள்ள புனித நூலான ஜந்த் அவஸ்தா நூலும் வட மொழியில் உள்ள ரிக்வேதமும் பல வகையில் ஒத்துப் போகின்றன. பாரசீகர் களின் மதமான ஜொராஷ்டிரம் ஜொராஷ்டிரர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. ஆய்வாளர்கள் பாரசீகர்களின் மதமும், இந்து மதமும் அடிப்படையில் ஒன்றே என்று கூறுவர். பல வட மொழி சொற்கள் பார்சி மொழியில் உள் ளதை இன்றளவும் காணலாம். எடுத்துக்காட்டாக, புத்ரா, புத்ரி போன்ற சொற் களை கூறலாம். ஆக, வடமொழிக்கும், பார்சி மொழிக்கும் நெருங்கிய இரத்த உறவை ஆய்வு முடிவில் காணலாம்.
அதைப்போல் இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஜெர்மன் மொழிகளில் உள்ள இலக்கணமும், சொற்களும் சமஸ்கிருத இலக்கண, சொற்களை ஒத்திருப்பதைக் காணலாம். அதாவது, சமஸ்கிருதம் என்பது செம்மைப் படுத்தப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட மொழி என்பதே உண்மை. இம்மொழி எவராலும், எக்காலத்திலும் பேசப்பட வில்லை என்பது வரலாற்று உண்மை. இப்படி நடைமுறை வரலாறு இருக்கும்போது சமஸ்கிருத மொழியை ஆரிய-பிராமணர்களின் செல்வாக்கால், அரசியல் ஆளுமையால் இந்திய தேசிய மொழியாக சமஸ்கிருதத்தை அறிவிக்க எத்தனிப்பது மொழிவழி தேசிய இனத்தவர்களுக்கு எதிரிடையான செயலாகும். வடமொழி என்ற சமஸ்கிருதம் மக்களால் பேசப்பட்டிருந்தால் ஆரிய பிராமணர்கள் வேதத்தை இன்றுவரை மனப்பாடமாக பலநூறு ஆண்டுகளாக கொண்டு வந்திருப்பதைப்போல் தங்களது மொழியான வடமொழியை பேச்சு மொழியாக நடை முறைப்படுத்தி இன்றளவும் நிலைபெறச் செய்திருப்பார்கள். இம்மொழி பேசும் மொழியாக இல்லாததால்தான், இவர்கள் குடியேறிய மாநிலங்களில் நிலவிய மொழிகளை தங்களது பேசும் மொழியாக ஏற்றுக்கொண்டு இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர். எனவே, மக்கள் நாவில் வாழும் மொழி களையே அதாவது அரசியல் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் உள்ள 23 மொழிகளை இந்திய ஆட்சி மொழிகளாக அறிவிப்பதே இந்திய ஒருமைப்பாட்டிற்கும், மக்களின் அமைதிக்கும், ஜனநாயகத்திற்கும், சமய சார்பற்ற தன்மைக்கும், சமத்துவத்திற்கும் ஏற்புடைய செயலாகும்.
இந்தி மாநிலங்களில் மறைக்கப்பட்டுள்ள மொழிகளின் மகத்துவம் 
வட இந்தியாவில் பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், ஆகிய மாநிலங்கள் இந்தி மாநிலங்கள் என்று ஒட்டுமொத்தமாக கூறப்படுவது தவறு என்பதை அங்கு நிலவி வரும் பல்வேறு மொழிகள் உணர்த்துகின்றன.
எப்படி தென்னிந்திய திராவிட மொழிகள் வடமொழி களிலிருந்து வேறுபட்டு உள்ளனவோ அதைப்போல் வடமாநிலங்களிலிருந்தும் பல்வேறு இன மொழிகள் நின்று நிலவி வருகின்றன.
கிருத்து பிறப்பு கி.பி.1900-க்கு முன்னும், பின்னும் அய்ரோப்பாவின் கிழக்கிலும், மேற்கிலும் பல்வேறு மொழிவழி தேசிய இன நாடுகள் தோன்றின. ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து, ஸ்பெயின், ஹங்கேரி, போலந்து தோன்றின. அதேநேரத்தில் பல்வேறு இனங்களைக் கொண்ட அய்க்கிய சோவியத் நாடு, யூகோஸ்லேவியா, இந்தியா போன்ற நாடுகள் தோன்றின. சோவியத் நாடு பின்னர் பல தேசங்களாக சிதறியது. அதைப்போல் யூகோஸ்லேவியாவும் பிரிந்து விட்டது. இவ்வாறு உலகில் பல்வேறு நாடுகள் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளாக விடுதலை பெற்றுள்ளன.
இந்நிலையில் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட, மொழிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த நாடாக இந்தியா இன்று விளங்குகின்றது. இந்நிலையில் இந்தி ஒன்றே ஒரே தேசிய மொழி என்றோ, ஒரே ஆட்சி மொழி என்றோ கூறுவது இந்திய ஒருமைப்பாட்டிற்கு பொருந்தாது. இங்கு பல்வேறு தேசிய இனமொழிகளை ஆராயும்போது பல புதிய தகவல்கள் வருகின்றன.
போஜ்புரி மொழி
இம்மொழியை பதினைந்து கோடி மக்கள் பேசுகின்றனர். அதாவது, பீகார் மாநிலத்தில் 8 கோடி பேரும், உத்திரப் பிரதேசத்தில் 7 கோடி பேரும் பேசுகின்றனர். ஆக, பீகாரிலும், உத்திரப் பிரதேசத்திலும் அதைச் சார்ந்த பகுதிகளிலும் இம்மொழி பெரும் பாலான மக்களால் பேசப்பட்டு வருகின்றது. ஜார்கண்ட் வடக்குப் பகுதியிலும், நேப்பாளத்தின் தெற்கு பகுதியிலும், தேரை என்ற பகுதியிலும் இம்மொழி பேசப்படுகிறது. இம்மொழியின் எழுத்து இந்திமொழியின் எழுத்து அல்ல. இவை இந்தி மொழியின் உட்பிரிவு என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மொழி 8-ஆவது அட்டவணையில் சேர்க்கப் படவில்லை. என்றாலும், இம்மொழி தனித்த இலக்கியத்தையும், மொழி வரலாற் றையும் கொண்டுள்ளது. இம்மொழி கைத்தி என்ற எழுத்து வடிவத்தைக் கொண்டுள்ளது. 16-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு வரை இந்த எழுத்து வடிவம் பயன்படுத்தப் பட்டுள்ளது. போஜ்புரி மொழி கைத்தி, நாஸ்தாலிக் போன்ற எழுத்து வடிவங்கள் இம்மொழிக்கு உண்டு. இம்மொழியின் எழுத்து வடிவம் பாரசீக எழுத்து வடிவத்தை மாற்றிவிட்டது. நீதித் துறையிலும், அலுவலகங் களிலும் 1880-க்குப் பிறகு கெய்த்தி எழுத்து வடிவமே மேற் கொள்ளப்பட்டுள்ளது. இம்மொழிக்கே வடக்கு எல்லை தலைமை மாநில மொழி என்று பெயர் (North-East Frontier Presidency Languages).
ஆங்கில ஆட்சி போஜ்புரி எழுத்து வடிவத்தை செம்மைப்படுத்தியது. இம்மொழிதான் தொடக்கப் பள்ளிகளில் பயிற்று மொழியாக வழங்கப்பட்டது. இந்த மொழி எழுத்து 1960 வரை பயன்படுத்தப்பட்டது. பின்னர் 1994-இல் அதன் இடம் தேவநாகரி எழுத்திற்கு கொடுக்கப் பட்டது.
பாபுராம் ஸ்வரன்லால் 1898-ல் கெய்த்தி எழுத்தில் கதைகள் எழுதினார். பத்மசிறீ சாரதா சின்ஹா பழங்குடிப் பாடல்களைப் பாடினார். பீகாரி தாக்கோர் என்பவர் போஜ்புரி நாடக உலகில் ஷேக்ஸ்பியர் என்று அழைக்கப் பட்டார். ராகுல் சாங்கிருத்தியாயன் தனது சில கருத்துக்களை போஜ்புரி மொழியில் எழுதினார். ஸ்வாமி சதானந்தா சரஸ்வதி போஜ்புரியில் மிக உயர்ந்த கிசான் தலைவராகவும், தலைசிறந்த பேச்சாளராகவும் விளங் கினார். மேலும் இந்தி அல்லாத அய்ந்து செய்தித்தாள்களை கொண்டிருந்தது. சன்டே இந்தியன் என்ற இதழ் போஜ்புரி மொழியில் வெளிவந்தது. மகுவா, ஹமார் போன்ற தொலைக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. வெப்சைடு விக்கிபிடியா இம் மொழியில் உள்ளன. போஜ்புரியில் திரைப்படங்கள் உள்ளன. நவீன இந்தி மொழி போஜ்புரி மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட் டுள்ளது. உண்மையில் இந்த இந்தி எழுத்துக்கள் போஜ்புரி மொழியிலிருந்து பெறப்பட்டவை.
மகதி பீகாரி மொழியாகும். இதனை இரண்டு கோடி மக்கள் பேசுகின்றனர். அதாவது, பீகாரி மொழிகள் 3 ஆகும். அதாவது, போஜ்புரி, மகதி, மைதிலி. இம்மூன்று மொழிகளும் மிகப்பெரிய மொழிகளாகும். ஜார்கண்ட் மாநிலம் பிரிந்த பின்னர் இம்மொழிகள் எல்லா பகுதிகளிலும் பேசப்பட்டு வருகின்றன.
மைதிலி மொழி
இராமயண கதைப்படி மைதிலி அல்லது சீதை மிதிலா நகரத்தில் அதாவது பீகார் மாநிலத்தில் பிறந்தார் என்பது செய்தி. இம்மொழியை 4.5 கோடி மக்கள் பேசுகின்றனர். மக்கள்தொகை 2001-இன் கணக்குப்படி 1.22 கோடி என்றா லும் அம்மொழியை பெரும்பாலான மக்கள் பேசி வருகின் றனர். மக்களின் கோரிக்கைப்படி 2003-இல் இம்மொழி 8-ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. இம்மொழி தனித்த எழுத்து வடிவம் கொண்டுள்ளது. இம்மொழிக்கு மிதிலக்சர், திர்குதா, கைத்தி போன்ற எழுத்து வடிவங்கள் உள்ளன. சில மொழிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்து வடிவங்களைக் கொண்டுள்ளன. எப்படி பொங்கனி மொழி கன்னடம், மராத்தி, தேவநாகரியில் எழுதப்படுகிறதோ, அதைப்போல் மைதிலி மொழியும் பல்வேறு எழுத்து வடிவங்களில் எழுதப்படுகின்றன. நவீன இலக்கணத்தை ஜார்ஜ் ஆப்ரகாம் கிரயர்சன் எழுதியுள்ளார். இது தொடர்பு மொழிக்கு பயன்படுகிறது. சாகித்ய அகாடமி மைதிலி மொழிக்கு சன்மானம் கொடுத்துள்ளது. இது இந்தியில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இம்மொழி தனக்கே உரிய வளத்தையும், பழைமையும் கொண்டுள்ளது. இம்மொழியில் வர்ண ரத்தின கரம் (1824 கி.பி.) எழுதிய ஜோதிஸ்வர் தாக்கூர், வித்யாபதி போன்ற புலவர்கள் புகழ் பெற்றவர்கள்.  இன்றும் அவர்களுக்கு பாடல்கள் பாடப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வித்யாபதி சமோரோ விழா கொண் டாடப்படுகிறது. இவரது புகழ் பீகார், மேற்கு வங்காளம் போன்றவற்றில் பரவியுள்ளது.
1911-12-இல் பீகார் மாநிலம் வங்காளத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இப்பிரிவு மொழிவழி தேசிய இன அடிப் படையில் ஏற்பட்டது. பீகாரை வங்காளத்தில் இருந்து பிரிப்பதற்கு அடிப்படைக் காரணம் இநதி மொழி பேசுபவர் களுக்கு தனி மாநிலம், நிர்வாகம் கொடுக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். மொழி அடிப்படையில் அதாவது இந்தி மொழி அடிப்படையில் இந்தியாவில் முதன்முதலில் அமைக்கப்பட்ட (1911) மாநிலம் பீகார் ஆகும். இப்பிரிவினை லார்டு ஹார்டின்ஸ் காலத்தில் ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் தோன்றிய பின்னர் பீகார் மாநிலம் தோன்றுவதற்கு இந்தி மொழி காரணமாகும். தர்பங்கா பகுதியின் ராஜாவாக இருந்த நிர்வாகத்தின் கீழ் சமஸ்கிருதத் திற்குப் பதிலாக இந்தியை அலுவல் மொழியாக ஆக்கினர். இதற்கு வித்யாபதி (1350-1450) காரணமாக இருந்தார்.
(தொடரும்)
நேற்றையத் தொடர்ச்சி...
பேரா.முனைவர் வெ.சிவபிரகாசம்
உத்திரப்பிரதேசத்தில் அவதி என்ற மொழி 2 கோடி மக்களாலும், கனோஜ் என்ற மொழி ஒரு கோடி மக்களாலும் பேசப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் கடைக்கோடி கிழக்கு பகுதியில் போஜ் புரியும், மேற்குப் பகுதியில் அவதியும், பிறகு உத்தரப்பிரதேசத்தின் மத்தியப் பகுதியில் கனோஜ் மொழியும் பேசப் படுகின்றன. உத்திரப்பிரதேசத்தின் தொலைதூர மேற்குப் பகுதியில் பிராஜ் பாஷா, பிராஜ், அவதி போன்ற இலக்கிய மொழிகள் பேசப்படுகின்றன. இம் மொழிகள் இலக்கிய வரலாறு கொண்ட பலமிக்க மொழிகளாகும். பல சுய இலக் கியப் படைப்புகளை கொண்டுள்ளன.
வட இந்தியாவில் இம்மொழிகள் சிறப்புமிக்க மொழிகளாகும். இம்மொழி கள் இந்தி மொழிக்கு முன்னோடி மொழிகளாகும். அதாவது, போஜ்புரி, மைதிலி போன்ற மொழிகள் இல்லாமல் இந்தி மொழி இல்லை என்பதே உண்மை. உண்மையில் இந்தி மொழி, உருது போன்ற மொழிகளுக்கு போஜ் புரி, மைதிலி போன்ற மொழிகளின் எழுத்துக்கள் இந்தி மொழி வடிவில் தொடர்பு மொழியாக உருவெடுத்துள் ளது. துளசிதாஸ், சூர்தாஸ், குருதாஸ் போன்றவர்களுடைய பக்திப்பாடல் களும், அமிர் குஸ்ரு அவர்களின் சுஃபி பாடல்களும் இம்மொழியில் எழுதப் பட்டுள்ளன. இவைகள் இந்தி மொழி யில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் கிருஷ்ண பராத்மாவின் மாமா கம்சா இருந்த பகுதியை பிராஜ் பூமி என்று தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை உள்ளது. அதைப்போல் பாரத்பூர், தவல்பூர் ஆகியவைகளைக் கொண்ட தெற்கு அரியானா, டில்லி மதுரா சாலை இவற்றை உள்ளடக்கியதே பிராஜ் பூமியாகும்.
மாயாவதியினுடைய கட்சி பண் டல்கன்ட் மாநிலப்பிரிவை ஆதரிக்கிறது. தெற்கு உத்தரப்பிரதேசம் அதாவது ஜான்சி முதல் பாண்டா வரை அதை யொட்டிய மத்தியப்பிரதேச பகுதிகள் அதாவது பண்டரி மொழி பேசும் பகுதியைக் கொண்டு தனி இந்தி மாநிலம் என்ற கோரிக்கையும் உள்ளது. இறுதியாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவையில் அம்மாநிலத்தை நான்கு மாநிலங்களாக பிரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து பிரிவுகளும் மொழியின் அடிப்படையில் என்பதை மறக்க இயலாது.
உத்தர்காண்ட் மாநிலம்
இந்தி பேசும் 3 மாநிலங்களை 6 மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. எப்படி ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக் கப்பட்டதோ அதைப்போலவே மற்ற மாநிலங்களையும் பிரிக்க வேண்டுகின் றனர். எடுத்துக்காட்டாக, உத்தர்காண்ட் உத்தரப்பிரதேசத்தில் இருந்து பிரிக்கப் பட்டது. 2001-இன் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 85 லட்சம் மக்கள் தொகையில் 40 லட்சம் மக்கள் கார்வாலி மொழி பேசுகின்றனர். இவர்கள் பெரும் பாலும் அம்மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ளனர். 1998 புள்ளி விவ ரப்படி 24 லட்சம் மக்கள் குமானி மொழியை பேசுகின்றனர். இவர்கள் இம்மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ளனர். இதர மக்கள் பகாடி மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளைப் பேசுகின்றனர். அவை ஒவ்வொன்றும் தனி மொழிகளாகும். எடுத்துக்காட்டாக, குமானி மொழி தனி எழுத்தைக் கொண் டுள்ளது. இது இரண்டாவது அலுவல் மொழியாக உள்ளது. இவர்களிடையே கல்வி அறிவு 58 விழுக்காடு உள்ளது. இவர்களது எழுத்து வடிவம் இந்தி மொழி அல்ல.
சத்திஸ்கர் மாநிலம்
2000 ஆம் ஆண்டில் சத்திஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. இம் மாநிலம் மத்தியப் பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இதில் இந்திய ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த சத் திஸ்கார்கி மொழி பேசப்படுகிறது. இம்மாநிலம் முழுவதும் இம்மொழி உள்ளது. இதன் மக்கள்தொகை 2 கோடி ஆகும். 1.15 கோடி மக்கள் சத்திஸ்கார்கி மொழியைப் பேசுகின்றனர். இந்தியுடன் இம்மொழி அலுவல் மொழியாக உள் ளது. இதை தனிமொழியாக மொழி யாளர்கள் கூறுகின்றனர். இம்மொழி 8 வகை எழுத்து வடிவங்களைக் கொண் டுள்ளது. ஏனைய மக்கள் பழங்குடி மொழிகளைப் பேசுகின்றனர். இதில் சில மொழிகள் திராவிட மொழிகளாகும்.
அதாவது, தெலுங்கு, முண்டா போன்ற மொழிகளின் கலப்படம் உள்ளது. ஆக மொத்தம் 90 வகைப்பட்ட எழுத்துக்களைக் காணலாம். இந்த மாநிலம் பழங்குடி பாடல்களை மிகச் சிறப்பாகக் கொண்டுள்ளன. இதில் ஹபிப் தன்வீர் புகழ்பெற்ற பாடகராவார்.
ஜார்கண்ட் மாநிலம்
இம்மாநிலம் பல்வேறு பழங்குடி களின் மொழிகளையும், ஆதிவாசி களின் போராட்டங்களையும் கொண் டுள்ளது. ஜார்கண்ட் என்றால் காடு களைக் கொண்டது என்று பொருள். இம்மாநிலம் 2000-த்தில் பீகாரிலிருந்துப் பிரிக்கப்பட்டது. இம்மாநிலத்தில் மலை சாதியினர் 28 விழுக்காடும், தாழ்த் தப்பட்டோர் 12 விழுக் காடும் உள்ளனர். இதில் எஸ்.டி. பிரிவினர் 32 விழுக் காடாகும். 1200 ஆம் ஆண்டு முதல் மலைசாதியினர் தனக்கென்ற ஆட்சிக் கொண்டுள்ள வரலாறு இருந்துள்ளது. சாந்தாலி, முண்டா மலைஜாதியினரின் ராஜாக்கள் உள்ளனர். 1765 ஆம் ஆண்டு முதல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியரால் இவர்கள் கட்டுப் படுத்தப்பட்டனர். 2.7 கோடி மக்களின் 70 விழுக்காட்டினர் ஜார்கண்டி மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளைப் பேசுகின்றனர்.
அதாவது, சாந்தாரி, முண்டாரி, ஹோ போன்றவற்றுடன் திராவிடமொழிக் குடும்பத்தைச் சார்ந்த ஓரன், கோர்வா போன்ற மொழிகளும் அடங்கும். இதில் சாந்தாரி மொழி நவீன ஒல்சிக்கி எழுத்து வடிவத்தை தற்காலத்தில் பயன்படுத் துகிறது. அதைப்போல ஹோ மொழி வாரன்சிட்டி எழுத்து வடிவத்தைப் பயன்படுத்துகிறது. ஓரன் மொழியானது தோரன்சிக்கி எழுத்து வடிவத்தை தயாரித்துள்ளது. ஆனால் இது அதிக பயன்பாட்டில் இல்லை. இவர்களில் 10 விழுக்காடு மக்கள், வங்காளம் அருகில் இருப்பதால் வங்காள மொழி பேசுகின் றனர்.
எனவே, இந்தியாவில் பல்வேறு இனங்கள், மொழிகள், எழுத்து வடிவங் கள், பண்பாடுகள் இருக்கும்போது ஒரே மொழி தேசிய மொழி சமஸ்கிருதம் அல்லது இந்தி மொழி என்று கூறுவது எதிர்காலத்தில் தீராத தொல்லையை கொடுக்கும் என்பதே இந்திய மொழி களின் வரலாறு காட்டும் உண்மை யாகும்.
இந்தி மொழியும்,  பிற மொழிகளும்
இந்தியாவில் இந்தி பேசும் மாநி லங்கள் அனைத்தையும் இந்தி மாநி லங்கள் என்று கூறுவது உண்மைக்கு புறம்பாகும். அதாவது, தற்சமயம் உத்திரகாண்ட், ஜார்கண்ட், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள் ளன. அதேநேரத்தில் ஒவ்வொரு மாநி லங்களும் தனித்தனியே மொழிகளை யும், இலக்கியங்களையும் கொண்டுள் ளன. தனி எழுத்துக்களும் உள்ளன.
மைதிலி என்ற மொழி நான்கு கோடி மக்கள் பேசுகின்றனர். சாந்தலி என்ற மொழியை இந்திமொழி பேசும் மாநி லங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. அம்மொழிக்கு அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் 2003 இல் தனிமொழி அந்தஸ்து கொடுக்கப்பட் டுள்ளது. இன்னும்பிற மொழிகள் அந்த இடத்தைக் கோரி வரிசையில் உள்ளனர்.
போஜ்புரி என்ற மொழி வடக்கில் 15 கோடி மக்களால் அதாவது, உத்திரப் பிரதேசத்திலும், பீகாரிலும் பெரும் பாலும் பேசப்படுகின்றன. இம் மொழிக்கும் தனிமொழி அந்தஸ்து உள் ளது. முற்காலத்தில் உத்தரப்பிரதேசம் அய்க்கிய மாநிலங்கள் என்று கூறப் பட்டது. மத்தியப்பிரதேசம் மய்ய மாநி லங்கள் என்று கூறப்பட்டது. இதில் மாநிலங்கள் என்று கூறப்பட்டதன் பின் னணி என்னவென்றால் பலமொழிகள் உள்ளன என்பதை அறிவிக்கும் பண் மைதான் மாநிலங்கள் என்ற சொல் குறிக்கிறது. கிழக்கிந்திய ஆங்கில கம் பெனி இந்தியாவில் நுழைந்தபொழுது இன்று நாம் அறியும் இந்தி என்ற மொழி அப்பொழுது இல்லை. பீகாரை அக் காலத்தில் வடக்கு எல்லை மாநிலம் என்பர். அம்மாநிலத்தில் குறைந்தது நான்கு மொழிகள் பேசப்பட்டன.
அதாவது, இன்றைய இந்திமொழி தோன்றுவதற்கு முன்பு அப்பழைய மொழிகளில் சில எழுத்துக்களை கொண் டுள்ளன. அதுமட்டுமல்ல, அரசியல் அலுவல் அந்தஸ்தையும் பெற்றிருந்தன. அரியானாவில் 2.1 கோடி மக்கள் (2001) அதாவது 70 விழுக்காடு ஹரியான்வி என்ற மொழியை பேசினர். இது இரண்டாவது மொழியாக உள்ளது. இதில் 68 விழுக்காடு இந்தி மொழியினர் என்று கூறுவதில் உண்மையில்லை. இதில் 55 விழுக்காடு இந்தி இல்லாத ஹரியான்வி பேசுவராவர்.
ராஜஸ்தானை அய்க்கிய மாநிலங் கள் என்று 1948 இல் கூறினர். இதன் இன்றைய மக்கள்தொகை 5.64 கோடி யாகும். இதில் 1.6 கோடி மக்கள் மார்வாரி மொழி பேசுகின்றனர். இது தனி எழுத்து வடிவம் கொண்டுள்ளது. மேவாரி என்ற மொழியை 52 இலட்சம் மக்கள் பேசுகின்றனர். பக்ரி என்ற மொழியை 20 இலட்சம் மக்கள் பேசுகின்றனர்.
மேலும், மேவாத்தி, செக்காவத்தி, ஹடோத்தி, துந்தரி இன்னும் பல மொழிகள் உள்ளன. இவைகள் தனித் தனி மாவட்ட அளவில் எல்லைகளைக் கொண்டு இம்மொழி பேசுவோர் உள் ளனர். பிராஜ் என்ற மொழி கிழக்கு இராஜஸ்தானிலும், கொண்டி, சவாரா, கோயா போன்ற மொழிகள் மலை வாசிகளால் பேசப்படுகின்றன. இமாச் சல் பிரதேசத்தில் பகாடி என்ற மொழிக் குழுவில் பல மொழிகள் உள்ளன. கன் னாரி என்ற மொழி ஒரு தனிப்பகுதியில் பேசப்படுகின்றது.
உத்தரப்பிரதேசம், மத்தியப்பிர தேசம், பீகார், இமாச்சல், டில்லி, அரியானா, இராஜஸ்தான் ஆகியவை இந்தி மாநிலங்கள் என்பர். இவற்றுடன் 2000-த்தில் உத்திராஞ்சல் அதாவது உத்திரகாண்ட், ஜார்கண்ட், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்கள் புதிய பெயர் களைப் பெற்றுள்ளன. இம்மாநிலங்கள் அனைத்தையும் ஒன்றுகூட்டி கூறும் பொழுது 2001-இல் அதன் மக்கள் தொகை 46 கோடி ஆகும்.  மேலும், 2001 மக்கள்தொகை கணக்குப்படி இந்தி மொழியை தாய்மொழியாக கொண் டவர்களின் தொகை 42 கோடி ஆகும். அப்படியென்றால், மீதமுள்ள மக்களின் தாய்மொழி என்ன? எனவே, அனைத்து மாநிலங்களையும் இந்தி பேசும் மாநி லங்கள் என்று கூறுவது உண்மைக்குப் புறம்பாகும்.
அதாவது, அரசாங்க வெளியீட்டின் படி இந்தியாவில் 1652 தாய்மொழிகள் உள்ளன. இந்திய அரசியல் சாசனத்தின் 8-வது அட்டவணையில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் மேலும் சில மொழிகள் சேர்க்கப்பட உள்ளன. இதுகுறித்து மேலும் பல தகவல்கள் உள்ளன. அவற்றை தனியே ஒரு கட்டுரை மூலம் வெளிப்படுத்தலாம். ஆக, இந்தி மொழியை தேசியமொழி என்று அறிவிக்க தமிழ்மக்கள் ஒரு போதும் அனுமதிக்க வரலாற்று உண் மைகள் சான்றளிக்கவில்லை.
(நிறைவு)
-விடுதலை,5,6.7.16