மதுரை, ஜூலை 3 -மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சூலபுரம் கிராமத்தின் மேற்குப்பகுதியில் மலையடிவாரத்தில் சுமார் 2500ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத் தொல் பொருட்கள் மேற்பரப்பு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.
பாண்டிய நாட்டு வரலாற்றுஆய்வு மய்யத்தின் ஆய் வாளர் ரா.உதயகுமார், தி.முத்துப்பாண்டி, மதுரை காம ராசர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர் சி.பாண்டீஸ்வரன் மற்றும் பால்ராஜ் ஆகியோர் இவ்வாய்வை மேற்கொண்டனர்.
இவ்வூரின் மேற்குப்பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப் பளவில் பெருங்கற்காலத்தை சேர்ந்த கல் ட்டம் என்னும் ஈமச் சின்னங்களும், முதுமக்கள் தாழிகளும் பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றின் அருகிலேயே நன்கு மெருகேற்றப்பட்ட கருப்பு, கருப்புசிவப்புப் பானைகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.
குறிப்பிடத்தக்கனவாக சிறிய கருப்பு நிற கிண்ணங்கள், குடுவைகள், மூக்கு கெண்டிகள்,மண்கலயங்கள், தாங்கிகள் (பிரிமனைபோல), தட்டுகள் போன்றவை சேகரிக்கப்பட்டுள்ளன.தொல்லியல் ஆய்வாளர்கள் இவற்றின் காலத்தை சுமார்2,500 ஆண்டு கட்கு முற்பட்டவைஎன்றும் இரும்புக் காலம் (அ) பெருங்கற்காலம் என்றும் அழைக்கப்படும் காலத்தவை என்றும் கருதுகின்றனர்.
மதுரைக்கு அருகில் கீழடியில் மேற்கொள்ளப்படும் அகழாய்விலும் இத்தகைய பானைகள் கிடைப்பதால் சூலபுரம் கிராமமும் அதேபோன்ற பழைமையான நாகரி கத்தைக் கொண்டது எனக் கொள்ளலாம் என்றுபாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர் முனைவர் சி.சாந்தலிங்கம் கூறியுள்ளார்.
-விடுதலை,3.7.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக