தருமபுரி, செப்.30 இந்தியர்கள் தங்கள் வாழ்வில் நடக்கும் எதை யும் ஆவணப்படுத்தி வைக்க வேண்டும் என்று சிந்தனை இல் லாதவர்களாக உள்ளனர் என 1835ஆம் ஆண்டு மெக்காலே கூறியதை பொய்யாக்கும் வகை யில் செப்புப் பட்டயம் ஒன்று கிடைத்துள்ளதாக தருமபுரி அரசுக் கல்லூரி வரலாற்றுத் துறை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
தருமபுரி அரசு கலைக்கல்லூரி யின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் சி.சந்திரசேகரன். இவர் நீண்ட காலமாக பழங்குடி மக்களின் வாழ்க்கை நிலை, வரலாறுகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும், தருமபுரி மாவட்டம் சித்தேரி மலையில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடுகள் குறித்து முனைவர் பட்ட ஆய்விலும் ஈடுபட்டு வருகிறார்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மெக்காலே, இந்தியர் களுக்கு வரலாற்று உணர்வும், ஆவணப் படுத்துதல் பழக்கமும் இல்லை என்று கூறியதைப் பொய்யாக்கும் வகையில் தனது சமீபத்திய ஆய்வில் செப்புப் பட்டய ஆதாரம் கிடைத்திருப் பதாக இவர் கூறுகிறார்.
இதுகுறித்து அவர் கூறியது:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த மலையாண்டஅள்ளி கிராமத்தின் அருகே தோட்டிப்பாறை என்ற குக்கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் 80 வயதைக் கடந்த சின்னதம்பி என்பவரிடம் செப் புப் பட்டயம் ஒன்று இருப்பதாக அறிந்து தேடிச் சென்றோம். பெரும் முயற்சிக்குப் பிறகு இந்த பட்டயத்தைப் பார்க்க முடிந்தது.
1820-ஆம் ஆண்டில் எழுதப் பட்ட இந்த செப்புப் பட்டயம் குருமன் பழங்குடியின மக்களின் வாழ்க்கை பற்றியதாக உள்ளது. பட்டயத்தில் குருமன் என்ற சொல் இல்லை என்றாலும் எக்கடி என்னும் சொல் குருமன் இனத்தின் உட்பிரிவான கெடி குருமன் என்பதன் மருவிய வடிவம் ஆகும். 30 வரிகள் அடங்கிய இந்த செப்பேடு, சில கன்னட சொல் கலப்புடன் பேச்சு வழக்கு தமிழில் எழுதப்பட் டுள்ளது.
பழங்குடி மக்களின் குல தெய்வம், ஊர் மணியக்காரர் யார், திருவிழாவின்போது யாருக்கு என்ன உரிமைகள், குழந்தை களுக்கு தலைமுடி எடுக்கும் விழா, தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட வழக்கம் மற்றும் உரிமைகள் பற்றிய தகவல்களை உள்ளடக்கி யதாக இந்தச் செப்பேடு உள்ளது.
1835-ஆம் ஆண்டு மெக்காலே, இந்தியர்களிடம் வரலாற்று உணர்வு பெரிய அளவில் இல் லை, அவர்கள் தங்கள் வாழ்வில் நடக்கும் எதையும் ஆவணப் படுத்தி வைக்க வேண்டும் என்ற சிந்தனை இல்லாதவர்களாக உள்ளனர் என்று கூறியுள்ளார். இந்த மதிப்பீடு தவறு என்பதை உறுதி செய்ய ஆவணங்கள் கிடைத்துக் கொண்டே இருக் கின்றன.
எங்களது ஆய்வில் கிடைத்துள்ள 1820-ஆம் ஆண்டைச் சேர்ந்த பட்டயத்தைப் போன்று எத்தனையோ வரலாற்று ஆவ ணங்கள் பல்வேறு சூழல் களால் அழிந்தும், சிதைந்தும் போயுள் ளன. சில பகுதிகளில் கோயில் கட்டும்போது, கருவறை அமை யும் இடத்தில் மண்ணுக் கடியில் பழங்கால செப்புப் பட்டயங் களைப் புதைத்ததாக கூறியுள் ளனர். அந்தப் பட்டயங்கள் வர லாற்றின் என்னென்ன தகவல் களுடன் புதைந்து கிடக்கிறதோ தெரிய வில்லை.
மொத்தத்தில் 1820ஆ-ம் ஆண் டிலும் அதற்கு முன்பும் என, தாங்கள் வாழும் சூழலில் வாய்த்த வசதிகளைக் கொண்டு வாழ்வையும், பழக்க, வழக்கங் களையும், உரிமைகளை யும், விழாக்களையும் முடிந்த வரை ஆவணமாக்கிச் சென்றுள்ளனர்.
எனவே இந்தியாவின் மீதான மெக்காலேவின் தவறான மதிப் பீட்டுப் பிம்பத்தை மாற்றி யமைக்க இதுபோன்ற வரலாற்று ஆவணங்களின் தேடல் அவசிய மாகிறது.
அரசு இதுபோன்ற ஆய்வு களுக்கு கூடுதல் ஊக்கமும், முக்கியத்துவமும் அளிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
இவ்வாறு கூறினார்.
-விடுதலை,30.9.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக