பக்கங்கள்

சனி, 27 ஜனவரி, 2018

ஆரியரும், தமிழ்த் தொண்டும்




ஆரியப் பார்ப்பனர்கள் என்பதால்,பரிதிமாற்கலைஞர், இராமச்சந்திர தீட்சதர்,கே.வி. சுப்பிரமணிய அய்யர், உ.வே.சா.,பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்றஇவர்களைப் புறக்கணிக்க முடியுமா?இவர்கள் தமிழ்த் தேசிய ஒற்றுமைக்குஅடியெடுத்துக் கொடுத்தவர்கள். எனவே,பெரியாரின் ஆரிய எதிர்ப்பு தவறானதுஎன்கிறார் குணா.


விதிவிலக்குகளைப் பொதுக்கருத்தாக்கி வாதிடுவதோ, முடிவிற்குவருவதோ கூடாது என்று அடிப்படைஅறிவுகூட இன்றி பெரியாரின் ஆரியஎதிர்ப்பு தவறு என்பது பெரும் பிழைஆகும்.

பரிதிமாற் கலைஞர் என்கிற சூரியநாராயண சாஸ்திரியார் தான் தமிழ்செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும்என்று குரல் கொடுத்தார். ஆனால் 99.9சதவீதம் ஆரியப் பார்ப்பனர்கள் அதைஏற்கவில்லையே இன்றளவும்ஏற்கவில்லையே. செம்மொழி என்றவார்த்தை எங்கிருந்தாலும் அதைச்செதுக்கி எடுக்கிறார்கள்; மறைத்துப்பதுக்குகிறார்கள். இதுதானே  நடைமுறை.  ஒரு சூரிய நாராயண சாஸ்திரியாருக்காகஆரியப் பார்ப்பனர்கள் அனைவரையும்ஏற்றுக் கொள்ள முடியுமா?

உ.வே.சா. தமிழ்ப் பணியாற்றினார்என்பது எந்த அளவிற்கு உண்மையோஅதே அளவிற்கு அவர் ஆரியப் பற்றுஅதிகம் பெற்று விளங்கினார் என்பதும்உண்மை. அவர் ஆரியப் பார்ப்பனர்களின்ஆதிக்கம் கொண்ட தமிழ் தேசியத்திற்கேதுணை நின்றார். அது மாபெரும் கேடுஅல்லவா?

தமிழர் மரபு என்னும் தலைப்பில்1941ஆம் ஆண்டு வானொலியில் பேசியஉ.வே.சா. ஓர் ஏழை வேலைக்காரனைப்பார்த்துச் சோறு தின்றாயா? என்றுகேட்கலாம். ஆனால் ஒரு கனவானைப்பார்த்து அவ்வாறு கேட்டுவிடக்கூடாது.போஜனம் ஆயிற்றா? என்றே வினவிடல்வேண்டும். அதுதான் தமிழ் மரபு என்றும்,அந்தணர்களைப் பார்க்கும்போது,நிவேதினம் ஆயிற்றா? என்றும்,துறவிகளிடம், பிக்ஷ்சை ஆயிற்றா? என்றும்வினவ வேண்டும் என்கிறார்.

(ஆதாரம் : உ.வே.சா. தமிழர் மரபு,செந்தமிழ்ச்செல்வி, 1941, சிலம்பு. க. பரல்உ.)

இதுதான் தமிழ்ப் பற்றா? தமிழைஉயர்த்துவது இதுதானா?

தமிழ் என்பது வேலைக்காரனிடம்பேசப்பட வேண்டும். உயர்நிலையில்உள்ளவர்களிடமும், ஆரியப் பார்ப்பனர்களிடமும் சமஸ்கிருதத்தில் பேசவேண்டும் என்கிறார்.

அவர்தான் பேசினார் என்றால் அதைஅப்படியே தணிக்கை செய்யாதுவானொலி ஒலி பரப்பியது. காரணம்இவரும் அவாள், அவர்களும் அவாள்கள்.இதைத் தவிர வேறு என்ன?

உ.வே. சாமிநாத அய்யரின் இந்தஉரையைக் கண்டித்து, கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்கள் எது தமிழ் மரபு?என்னும் தலைப்பில் செந்தமிழ்ச்செல்வியிலே கட்டுரை எழுதினார்.

முதலில், தமிழர் என்பதன்அடையாளத்தைச் சரியாக வரையறுத்துக்கொண்டு தமிழ்த் தேசியம் பேச வேண்டும்.

சம உரிமை, தன்மானம், ஜாதி, மதபேதமற்ற மனிதநேயம், பிறப்பொக்கும்எல்லா உயிர்க்கும் என்ற கொள்கை சமவாய்ப்பு, மாற்றார் உணர்வுகளை மதித்தல்,வீரம், காதல், விருந்தோம்பல் என்றஇயல்புகளை உள்ளடக்கியதே தமிழ்த்தேசியம். இவையில்லாது வெறும்எல்லையும், மொழியும் தமிழ்த் தேசியம்என்று எண்ணிச் செயல்படுகின்றவர்கள்எதையும் சாதிக்காது, எதிரிக்குஇடங்கொடுத்து ஏமாந்து போவதோடு,தமிழர் மேம்பாட்டையும்கெடுத்தொழித்தவர்கள் ஆவர். இதைத்தமிழர்கள் அனைவரும் உணர வேண்டும்,தமிழ்த் தேசியம் பேசுவோரும் உணரவேண்டும்.

ஆரியப் பார்ப்பனீய எதிர்ப்பு இல்லாததமிழ்த் தேசியம் என்பது இல்லவே இல்லைஎன்பதே உண்மை. காரணம், தமிழன்மண்ணைத் தொலைத்தது, கல்வியைஇழந்தது, சிந்தனை இழந்தது, மற்றதைத்தொலைத்ததும், மொழியின் தூய்மையைஇழந்ததும் ஆரியத்தால்தான். எனவே,எதிலெல்லாம் ஆரிய மேலாண்மையும்,ஆரிய கலப்பும் உள்ளதோ அவற்றைஅகற்றுவதே தமிழ்த் தேசிய உணர்வுக்கானஅடிப்படை பணி. இன்று தமிழ்த் தேசியம்பேசுவோர் எவராயினும் பெரியாரின்இப்பணியால் விழிப்பு பெற்றதன்விளைவால் எழுச்சி பெற்றோரே என்பதைஎவரும் மறுக்கவும் இயலாது; மறக்கவும்கூடாது.

பாரதியார் தமிழ்ப்பற்று உடையவர்என்றாலும், அவரிடமும் ஆரியப் பற்றுஇருந்தது. ஆரிய நாடு என்று இந்தியாவைஅழைத்தார். இலங்கையை சிங்களத் தீவுஎன்றார். தமிழர்க்குரியதை மாற்றினார்.தமிழை வாழ்த்தும்போது பாரதியார் தன்ஆரியப் பற்றோடே தமிழைத் தரம்தாழ்த்திப் பாடுகிறார். தமிழ்த்தாயேதன்னைப் பற்றிக் கூறுவதாய், உயர்ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் என்றுபாடினார். ஒரு செத்த மொழியைப் போல,தமிழ் வாழ்ந்ததாய்ச் சொல்வதுதமிழுருக்குக் கேவலமல்லவா?

தமிழ் போல ஆரியம் என்றுசொன்னால்கூட மன்னிக்கலாம். ஆனால்,உயர் ஆரியம் போல வாழ்ந்தேன் என்றுதமிழ் சொல்வதாய் சொல்கிறார். இதுதான்ஆரியப் புத்தி!

அவர் மூடநம்பிக்கைகளை முற்றிலுமாகவிலக்கி வெளியில் வந்து விடுதலைக்குச்சரியான வழி காட்டவில்லை.

தனக்குக் காணிநிலம் தேவைக்குபராசக்தியிடம் கேட்கிறார்

லெனின் பாடுபட்டு, போராடி புரட்சிசெய்து படைத்த சமதர்மத்தை மாகாளிமனசு வைத்ததால் ருஷ்ய புரட்சி வெடித்ததுஎன்றார். ஏன் மற்ற இடங்களில் மாகாளிமனசு வைக்கவில்லை என்ற எளியசிந்தனைகூட அவருக்கு ஏற்பட வில்லை.இப்படிப்பட்ட சிந்தனைகளால் தமிழ்த்தேசிய உணர்வு வருமா? இந்தச்சிந்தனைகள் அந்த உணர்வைத்தூண்டுமா? மாறாகச் சீர்குலைக்கும்,நீர்க்கச் செய்யும்.

உண்மை என்னவென்றால் தமிழ்உணர்வோடு, ஜாதியை எதிர்த்துச்செயல்பட்டார்கள் என்பதற்காக பாரதியார்,வைத்தியநாத அய்யர் போன்றோரைஆரியப் பார்ப்பனர்கள்தான்புறக்கணித்தனர்; நாம்புறக்கணிக்கவில்லை.

பாரதியார் இறுதி ஊர்வலத்தில்அய்ந்தாறு பேர்தான் கலந்துகொண்டார்கள் என்றால், எந்த அளவிற்குப்பார்ப்பனர்கள் அவரை வெறுத்துப்புறக்கணித்துள்ளனர் என்று பாருங்கள்!வைத்தியநாத அய்யர் வீட்டில் முன்னாள்அமைச்சர் மாண்புமிகு கக்கன் அவர்கள்தங்கிப் படித்தார். வைத்தியநாத அய்யரும்தன் பிள்ளையாகவே ஆதி திராவிடவகுப்பைச் சேர்ந்த கக்கனை நடத்தினார். 23.02.1955 இல் வைத்தியநாத  அய்யர்இறந்தார். அவர் பெற்ற பிள்ளைகள்மொட்டையடித்துக் கொண்டபோது,கக்கனும் மொட்டையடித்துக் கொண்டார்;பிள்ளைகளோடு பிள்ளையாய் தானும்நின்றார்.

இதை ஆரியப் பார்ப்பனர்கள் தீவிரமாய்எதிர்த்தனர். பிராமணன் வீட்டுச் சடங்கைஆதி திராவிடன் செய்வதா? கொதித்தனர்.ஆனாலும், வைத்தியநாத அய்யரின்குடும்பத்தார் கக்கனைச் சேர்த்துக்கொண்டே இறுதிக்கடனைச் செய்தனர்.இதனால் ஆரியப் பார்ப்பனர்கள் எதிர்ப்புத்தெரிவித்துக் கலைந்து சென்றனர்.விதிவிலக்காக ஒருவர் வந்தாலும்அவர்களை ஆரியப் பார்ப்பனர்கள்எதிரியாகத்தான் பார்த்தனர். எனவே,விதிவிலக்கை வைத்து வாதம்பேசக்கூடாது. ஆரிய இனத்தின்தலைவர்போல் செயல்பட்ட சங்கராச்சாரிஎன்ன செய்தார் என்று பார்க்க வேண்டும்.அவர் செயல்பாடுகள்தான் ஆரியஇனத்தின் அடையாளம்.

தன்னுடைய பூசை வேளையில் தமிழ்என்னும் நீச பாஷையில் பேச மாட்டேன்என்று அடம்பிடித்துத் தமிழைக்கேவலப்படுத்தியவரல்லவா? இன்றளவும்அதுதானே நடைமுறை.

சங்கராச்சாரி வாயில் தமிழ் வழிப்பாட்டுநேரத்தில் வரக் கூடாது; கோயிலில்பூசையின்போது தமிழ் வரக்கூடாது.தமிழன் வீட்டுத் திருமணத்தில் கூட தமிழ்வரக்கூடாது என்றும், அது இழிமொழி, அதுதீட்டுடையது என்றும் இன்றளவும் ஆரியப்பார்ப்பனர் கூறுவதெல்லாம்குணாக்களுக்குத் தெரியாதா? ஏதோஉளச்சான்றோடு ஓரிரண்டு பார்ப்பனர்கள்நியாயமாக நடந்தால், தமிழுக்காகத்தொண்டாற்றினால் அதைவைத்துக்கொண்டு ஆரியர்களைஎதிர்ப்பது தவறு என்பது, தமிழர்களைஏமாற்றி, ஆரியத்திற்கு ஆதரவளிக்கும்நிலையல்லவா? அதற்குப் பெயர்அயோக்கியத்தனமல்லவா?குணாக்களைத்தான் கேட்கிறேன்!

நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 

- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக