தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு யார் முன்னோடி?
தினமணி' ஆசிரியர் அய்ராவதம் மகாதேவன் அவர்கள் கல்வெட்டு ஆய்வாளர் - தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திலும் ஆர்வம் கொண்டவர் என்பதற்காக அவர்தான் பெரியாருக்கு முன்பாகவே தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தின் முன்னோடி என்று தினமணி' (27.11.2018) தலையங்கத்தில் எழுதியிருப்பது எத்தகைய மோசடி!
இன்று பரவலாகப் பெரியார் எழுத்து' என்று அழைக்கப்படும் எழுத்துச் சீர்திருத்தம் உண்மையில் அய்ராவதம் மகாதேவன் ஏற்படுத்திய இதழியல் சீர்திருத்தம், தமிழகத்தில் முதன்முதலில் எழுத்துச் சீர்திருத்தத்தை தினமணி' நாளிதழில் அன்றைய ஆசிரியராக இருந்த அய்ராவதம் மகாதேவன் தான் அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்துதான் அனைத்து இதழ்களும், எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தின என்பது உண்மை வரலாறு'' என்று இந்த 2018-லும் தினமணி' தலையங்கத்தில் தீட்டப்படுகிறது என்றால், இந்தப் பார்ப்பனர்கள் பொய்யென்று தெரிந்திருந்தும் கொஞ்சம்கூடக் கூச்ச நாச்சமில்லாமல் இப்படி ஒரு அண்டப் புளுகை, ஆகாயப் புளுகை அவிழ்த்துக் கொட்டும் கேடு கெட்ட தனத்தை என்னவென்று சொல்லுவது! தந்தை பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை செயல்படுத்தியது 1935 ஆம் ஆண்டிலேயே - இதோ ஆதாரம்:
உண்மை இவ்வாறு இருக்க, அய்ராவதம் மகாதேவன் தினமணி' ஆசிரியராகப் பணியாற்றியது 1987 ஆம் ஆண்டுமுதல் 1991 ஆம் ஆண்டுவரை நான்காண்டுகள்!
தினமணி'யின் கணக்கில் 1935 ஆம் ஆண்டு என்பது 1987-க்குப் பிந்தியதோ!
நமது காலத்தில் நம் கண்முன் நடைபெற்றதையே இப்படி மோசடியாகத் திரித்து வெளியிடுகிறார்கள் என்றால், கடந்த காலத்தில் எப்படியெல்லாம் தில்லுமுல்லு திருகு தாளத்தில் ஈடுபட்டு இருப்பார்கள்.
இந்த வெட்கக்கேட்டில் அய்ராவதம் மகாதேவன்தான் முதன் முதலில் தினமணி'யின் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது வரலாற்று உண்மையாம். பரவலாக பெரியார் எழுத்து' என்று அழைக்கப்படுகிறதாம். இப்படி எழுதுவதற்கு வெட்கப்பட வேண்டாமா தினமணி?
உடனடியாகத் திருத்தம் வெளியிடுவதுதான் ஆரோக்கியமானது.
அய்ராவதம் மகாதேவன் அவர்களுக்கு எவ்வளவோ சிறப்புகள் உண்டு. அவர் உடல்மீது பொய்யில் தொடுத்த ஒரு அழுக்கு மாலையைச் சூட்டுவது கூட மரணம் அடைந்த அவரைச் சிறுமைப்படுத்துவதாகும்.
- விடுதலை நாளேடு, 30.11.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக