புதுக்கோட்டை, பிப்.19, கடந்த நூற்றாண்டு வரை மக்கள் பயன்படுத் தியது தமிழ் எண்களே என்பதற்கான சான்று - 1849 ஆம் ஆண்டு நடப்பட்ட தமிழ் எண் மைல் கற்கள் செங்கிப் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. தஞ்சாவூர் செங்கிப்பட்டியில், திருச்சி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே பயணியர் விடுதியின் சுற்றுச்சுவரின் அருகே தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட இரண்டு மைல்கற்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. வித்தியாச மான எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கல் கிடப்பதாக கந்தர்வ கோட்டை ஒன்றியம் குரும் பூண்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மூ.சேகர் அளித்த தகவலைத் தொடர்ந்து, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறையினர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் திருச்சி, தஞ்சாவூர் இடையே 1849 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சாலை மேம் பாட்டு பணியின் போது நடப்பட்ட தமிழ் எண்களுடன் கூடிய மைல் கல் என அடையாளம் கண்டுள்ளனர்.
இது குறித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லறி வியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது: தமி ழகம் முழுவதும் பத்துக்கும் மேற் பட்ட இடங்களில் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் எமது குழுவினரால் புதுக் கோட்டை மாவட்டத்தில் கூழியான் விடுதி, ஆதனக்கோட்டை, அன்ன வாசல், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கவுதமபுரி, தஞ்சாவூர் மாவட்டம் மாப்பிள்ளை நாயக்கன் பட்டி, செங்கிப்பட்டி கீரனூர் விலக்குச்சாலை ஆகிய இடங்களில் அடையாளம் கண் டுள்ளோம், தற்போது செங்கிப்பட்டியில் மேலும் இரண்டு மைல்கல் கண்டுபிடிக்கப் பட்டிருப் பது கூடுதல் முக்கியத்துவம் பெறு கிறது.
மைல் கல் நடப்பட்ட காலம்
ஆங்கிலேயர் காலத்தில், திருச்சியிலிருந்து திருவெறும்பூர் வழியாக, தஞ்சாவூருக்கு செல்லும் ஏழாம் எண் சாலை, 1849 ஆம் ஆண்டு போடப் பட்டது என்றும், இது கப்பிச் சாலையாகவும், பாலத்துடனும், நல்ல நிலையில் இருந்ததாக லீவிஸ் மூர் என்ற ஆங்கிலேயர் 1878 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதியிட்ட “மேனுவல் ஆப் தி திருச்சினாப்போளி டிஸ்டிரிக்ட்” என்ற புத்தகத்தில் தெரிவித்துள் ளார்.இந்தச்சான்றின் மூலம் மைல்கல் நடப்பட்ட ஆண்டை உறுதிசெய்ய முடிகிறது.
தமிழ் எண் மைல் கல் கல்வெட்டு
தற்போது கண்டுபிடிக்கப்பட் டுள்ள இரண்டு மைல்கற்களும் வெவ்வேறு இடங்களில் நடப்பட் டவை என்பதை பொறிக்கப்பட்டுள்ள தூரத்தை அடிப்படையாகக் கொண்டு உறுதி செய்ய முடிகிறது. முதலாவது மைல் கல் தற்போதைய செங்கிப்பட்டி பிரதான நெடுஞ்சாலையிலும், இரண்டாவது மைல்கல் துவாக்குடி அருகேயும் நடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. முதலாவது மைல்கல்லில், தஞ்சாவூர் 16 என அரபு எண்ணிலும், ய என்று தமிழ் எண்ணிலும் , தொடர்ச்சியாக திருச்சினாப்பள்ளி (திருச்சிராப் பள்ளி) 18 மைல் என்பதை, ய என தமிழ் எண்ணுடனும் குறிக்கப் பட்டுள்ளது. இரண்டாவது மைல் கல்லில் தஞ்சாவூர் 21 என அரபு எண்ணிலும் 'உயக' என தமிழ் எண் ணிலும், திருச்சிநாபள்ளி (திருச்சி ராப்பள்ளி) 13 என அரபு எண்ணிலும், ய? தமிழ் எண்ணிலும் குறிக்கப் பட்டுள்ளது. இந்த இரண்டு கல் வெட்டிலும் முதலாவதாக ஆங்கிலத் தில் ஊர்ப்பெயரும் , அதன் கீழே அரபு எண்ணில் தூரமும், இரண் டாவதாக தமிழ் எழுத்தில் ஊர்ப் பெயரும் அதன் கீழே தமிழ் எண்ணில் தூரமும் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ் எண்கள் பொதுமக்கள் பயன் பாட்டில், எந்தக்காலம் வரை இருந்தது, என்பதற்கான முக்கியத் துவமான சான்றாக உள் ளது.
தமிழ் எண் மைல்கல் ஆய்வு
எமது குழுவினரால் மாப்பிள்ளை நாயக்கன்பட்டியில் கண்டுபிடிக்கப் பட்டு, தமிழ் பல்கலைக்கழக அருங் காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட் டுள்ள மைல்கல் கல்வெட்டில், ஆதனக்கோட்டை ‘ய சா’ அதாவது 16 மைல் என்றும், தஞ்சை அருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆதனக்கோட்டை ‘யஅ ’ அதாவது 14 மைல் என்றும் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வரு பவர் களுக்காக குறிப்பிட்ட இடை வெளிகளில் நடப்பட்டுள்ளதை உறுதிசெய்தோம். தற்போது அடை யாளம் காணப்பட்ட மைல்கற்களின் எழுத்தமைதி எழுத்துருக்கள், ஒருபக்கம் மட்டுமே பொறிக்கப்பட் டுள்ள தன்மை , கல்லின் வடிவம் ஆகியவற்றை ஒப்புநோக்கும்போது இம் மைல்கற்கள் ஒரே காலத்தி லானவை என்றும், தஞ்சையில் தமிழ் மற்றும் அரபு எண்களும், புதுக் கோட்டையில் தமிழ் மற்றும் ரோமன் எண்களும், இருப்பது நோக்கத்தக்கது. இதன் மூலம் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ் ரோமன் எண்கள் அலுவலக பயன்பாடு களில் முதன்மை பெற்றிருந்ததும், தஞ்சை, திருச்சி ஆளு கைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ் அரபு எண்கள் முன்னிலைப் பெற்றிருந்திருப்ப தையும், அறிந்துகொள்ள முடிகிறது.
தமிழ் எண்களின் பயன்பாடும் வீழ்ச்சியும்
நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ரோமன் மற்றும் அரபிய எண்கள் வெளிநாட்டவருக்கான எண்ணாகவும், மக்கள் பயன்பாட்டில் தமிழ் எண்கள் மட்டுமே இருந் துள்ளதை வெளிப்படுத்தும் மிக முக்கியமான தொல்லியல் சான்றாக, தமிழ் எண் மைல்கல் கல்வெட்டுகள் உள்ளன.
தமிழ் எண்கள் சமீப காலமாகத் தான் மக்கள் பயன்பாட் டிலிருந்து வழக்கொழிந்து போயிருக்கிறது என்பதை உணர முடிகிறது, என்றார்.
-விடுதலை நாளேடு, 19.2.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக