பக்கங்கள்

ஞாயிறு, 8 நவம்பர், 2015

உலகளாவிய மொழிப் போராட்டங்களும் அதன் விளைவுகளும்










மொழிப்போராட்டம் என்பது நதிக்கரை நாகரிகம் அழியத்துவங்கிய காலகட்டத்திற்கு பிறகு ஏற்பட்டது, காரணம் மனித வாழ்விட விரிவாக்கம் தொடர்பான போராட்டம் போரில் துவங்குகிறது. இங்கு வலிமையான இனக்குழு செய்யும் முதல் காரியம் தோல்வியடைந்த இனக்குழுவின் மொழியை சிதைத்து அழிப்பது தான். மேலும் உலகில் பேசப்படும் மொழி களைப் பின்வருமாறு குடும்பங்களாக வகுத்து நோக்க முடியும்.
1.    செமித்திய ஹமிட்டே மொழிக் குடும்பம்.
2.    இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம்.
3.    திராவிட மொழிக் குடும்பம்.
4.    மலாய - யோலீசியன் மொழிக் குடும்பம்.
5.    துரோனிய மொழிக் குடும்பம்.
6.    பாண்டூ மொழிக் குடும்பம்.
7.    சீன - திபேத்திய மொழிக் குடும்பம்.
8.    ஆசிய மொழிக் குடும்பம்.
முதலில் மொழி வரலாறு பற்றி சில தகவல்கள்
மனிதன் தனது உணர்வுகளை தேவைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள  உருவான மொழி முழுவடி வம் எழுத்து மற்றும் நடைவடிவம் பெற்றது கிமு25 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை இருக்கலாம் என்று கருது கின்றனர். ஆதிச்ச நல்லூரிலேயே பல சான்றுகள் உள்ளன. முக்கியமாக ஒவ்வோரு முதுமக்கள் தாழியிலும் சில எழுத்துக்குறியீடுகள் உள்ளன. அவை கிட்டத்தட்ட சிந்து சமவெளி எழுத் துக்கு ஒப்பாக அமைந்திருக்கிறது, ஆதிச்ச நல்லூர் நாகரிகம் கி.மு.10000 முதல் கி.மு. 7000 வரை என்கிறனர். அதாவது ஒரு நாகரிகமான நாகர்கள் இனம் 10000 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்தது என்றால் அவர்களின் மொழி யின் வளர்ச்சி 15 ஆயிரம் ஆண்டுகளாக இருக்கலாம் என்று கருதுகின்றனார். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கள் இந்தியத்தீபகற்பம் முழுவதும் பரவி வாழ்ந்தனர். இது நாகர் என்ற பெயரில் ஆரம்பிக்கும் ஊர்களின் மூலம் இன்றும் சான்றுகளோடு நம் முன் உள்ளது. எடுத்துக்காட்டாக நாகர் கோவில், நாகப்பட்டினம் (தமிழ்நாடு) நாகமங்களம் நாகனூர்(கேரளா) நாக்டானே, நாக்பூர்(மராட்டியம்) நாகேகோர், நாகரோர்(பாகிஸ்தான்) நாகமோதி, நாகாலாந்து என இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகள்  முழுவதும் சுமார் 8000 பெயர்களில் ஊர்கள் உள்ளது. இந்தியா முழுவதும் வாழ்ந்த நாகர்கள் காலம் செல்லச்செல்ல அவர்களில் மொழியில் சில மாற்றங்கள் பிற்காலத்தில் இந்த மொழிகளை திராவிடமொழிக்கிளை என்று அடையாளம் சூட்டப்பட்டது. வடக்கில் சென்ற திராவிடமொழிகள் மீண்டும் ஒன்றினைந்து பாலி என்ற ஒரு புதிய மொழியினை உருவாக்கியது, இது கிமு 1000-ங்களில் தமிழ் போல இலக் கணம் மற்றும் பொதுச்சொற்களுடம் பரவலாக பேசப்பட்டுவந்த மொழியா கும். தட்சசீலத்திலும் நாலந்தாவிலும் செயல்பட்டுவந்த பல்கலைக்கழக நூல்கள் அனைத்தும் பாலியில் தான் இருந்த்ன, பாலி இலக்கணம் இலக்கியம் என செழித்து இருந்தது, பவுத்த சமண நூல்கள் அனைத்தும் பாலியில் தான் இயற்றப்பட்டன. அசோகர் காலத்து மிகவும் உயரிய இடத்தில் இருந்தது பாலிமொழிதான். வேதகாலம் துவங்கிய பிறகு இந்திய தீபகற்பபகுதிகளில் கலாச்சாரம் மற்றும் மொழித்தொடர்பான போராட்டம் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் மிகவும் குறுகிய காலகட்டத்தில் சமணமும் பவுத்தமும் தமிழகத்தில் வலுவாக கால் ஊன்றக்காரணமும் பாலியின் சொற்கள் பல நமது தமிழுக்கு நெருக்கமாக இருந்த தால் தான்,

கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, பவுத்த ஜைன மதத்தினர் செல்வாக்கு இழந்து, பிராமணர்கள் செல்வாக்குப் பெற்ற காலத்தில், பிராகிருத மொழி களுக்குச் செல்வாக்குக் குறைந்து சமஸ் கிருத மொழியின் ஆதிக்கம் ஏற்பட்டது.
பிற்காலச்சோழர்காலத்தில் தமிழ் எழுத்தில் திடீர் மாற்றம் காணப்பட் டது. சோழர்களின் பேராதரவுபெற்ற பார்ப்பனர்கள் தமிழை வடமொழி வடிவில்.எழுத ஆரம்பித்தனர். இக்காலகட்டத்தில் மிகவும் தந்திரமாக பல்வேறு சமஸ்கிருத வார்த்தைகளை தமிழில் கொண்டுவந்தனர். எடுத்துக் காட்டு வணக்கம் இந்த இடத்தில் நமஸ்காரம் சோழன் காலத்தில் தான் பரவலாக பேசப்பட்டது.
புழக்கத்தில் இருந்த வட்டெழுத்துக் களை மாற்றி, புதிய வடமொழிவடிவில் தமிழ் எழுத்துக்கள் எழுதப்பட்டன. சோழ அரசர்கள் கி.பி. 10ஆ-ம் நூற்றாண் டில் கிரந்தத் தமிழ் எழுத்தைப் பாண்டி நாட்டில் புகுத்தியதற்கு, குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோவில் சாசனங்களே சான்று என்று கூறும் மயிலை சீனி.வேங்கடசாமி,  பழைய வட்டெழுத்தில் எழுதப்பட்ட சாசனங்களைப் புதிய எழுத்தில் பெயர்த்து எழுதி ராஜராஜன் அமைத் தான் என்று கூறுகின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறார். இந்திய வரலாற்று அறிஞர் டி.டி. கோசாம்பி, தனது பண்டைய இந்தியா என்ற நூலில், கி.பி.150இ-ல் தான் முதன் முதலாக சமஸ்கிருத மொழி எழுதப் பட்ட கல்வெட்டுகள் கிடைத்ததாகக் குறிப்பிடுகிறார். கி.பி. 2-ஆம் நூற்றாண் டுக்கு முன், சமஸ்கிருத மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. அந்தக் காலத்திய கல் வெட்டுக்கள் எதிலும் சமஸ்கிருத எழுத்துக்கள் இல்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. பிராமி, கரோஷ்டி முறைகள் இன்று நடைமுறையில் இல்லை. பிராமி எழுத்து முறையில் இருந்து பல்வேறு விதமான எழுத்து முறைகள் தோன்றி இருக்கின்றன. குறிப்பாக, தென்னிந்தியாவில் இது வட்டெழுத் தாக உருவானது. வடமாநிலங்களில் கோண வடிவில் எழுதப்படுவதாக மாறியிருக்கிறது.
பிராகிருதம் என்பது பண்டைய இந்தியாவில் பேசப்பட்டு வந்த மொழி களையும் அதன் வழக்கு களையும் குறிக்கிறது. பிராகிருதம் என்பது ஒரு மொழி அல்ல; அது ஒரு மொழிக் குடும்பம். இந்த மொழிக் குடும்பத்துக் குள் நிறையக் கிளைகள் இருக்கின்றன. பிராகிருதம் வெகுமக்களால் பேசப் பட்டு வந்த ஒன்றாகும். பேச்சுவழக்கில் இல்லாத செம்மொழியாகவே சமஸ் கிருதம் இருக்கிறது. இந்த மொழி லத்தீன் போலவே வழிபாட்டுக்குரிய மொழியாகவும் கருதப்படுகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியில் நீதி பதியாகப் பணியாற்றுவதற்காக வங்காளத்துக்கு வந்த வில்லியம் ஜோன்ஸ் லத்தீன், கிரேக்கம் இரண்டையும் தெளிவாகக் கற்றவர்.
இந்தியச் சட்டங்களை அறிந்து கொள்வதற்காக சமஸ்கிருதம் படிக்கத் தொடங்கினார். லத்தீன் மொழிக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருப்பதை உணர்ந்தார். அதுபற்றி தொடர்ந்து ஆய்வுகள் செய்து இவை ஒரு பொது மொழியை வேராகக்கொண்டவை என்ற கருத்தை முன்மொழிந்தார். இந்தக் கருத்தாக்கம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்யப்பட்டு, இந்திய - ஐரோப்பிய மொழிக் குடும்பம் ஒன்றில் இருந்துதான் இந்த மொழிகள் தோன்றி இருக்கக்கூடும் என்ற நிலைப் பாடு உருவானது.
சுமேரிய மொழிப் போராட்டம்
கிமு மூன்றாயிரம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், சர்கன் (Sargon) என்பவனால் மெசொபொதேமியாவில் அகேத் (Agade) அல்லது அக்காத் (Akkad) என்னும் அரசவம்சம் நிறுவப்பட்டது. அப்போது தான் முதன்முறையாக முழுப் பிரதேசமும் ஒரு மய்ய அரசின் ஆட்சியின் கீழ் ஒருமைப்படுத்தப்பட்டது. அக்காத்தியர் செமிட்டிக் இன மக்களாவர். இவர்கள் பற்றிய குறிப்பிடத்தக்க அக்காத் மொழி ஆவணங்கள் கி.மு 2300 இலிருந்து கிடைக்கின்றன. சுமேரிய மொழி நிர்வாகம் மற்றும் இலக்கியங்களுக்கான மொழியாகத் தொடர்ந்து வந்தபோதும், மற்றெல்லா வகைகளிலும் அக்காத் மொழியே ஆதிக்கம் செலுத்தியது. இவ் வம்சம் கி.மு 2000 வரை தொடர்ந்தது.
மெசபடோமியா, சுமேரியர், அக்காத்தியர், பாபிலோனியர் மற்றும் அசிரியர் போன்றோரின் நாகரிகங் களையும் உள்ளடக்கிய பல பண்டைய நாகரிகங்கள் வளர்ந்தோங்கிய ஒரு இடமாகும்
ஆனால், அவர்களுக்குள்ளான தொடர் போர்கள் காரணமாக அவர் களின் கலாச்சாரம் அழிந்ததுடன் மொழிவளமும் முற்றிலுமாக அழிந்து போனது. .
இவைகளுள் மிகப் பழமைவாய்ந்த மொழிகளாக
1. எபிரேயம், 2. வல்காத்து (Valagath) 3. ஷிட்டா, 4. அரமைக், 5. சால்ட்டியம்.
மொழிப்போராட்டத்தில், தோல்வியடைந்த மொழிகள்
மொழிப்பொராட்டத்தில் தோல்வி யடைந்த மொழிகள் என்றால் அது முதலில் சம்ஸ்கிருதம் என்றே கூறலாம்.  காரணம் குறிப்பிட்ட இனத்தவர் தங்களுக்கு என்று மாத்திரம் சொந்த மாக வைத்து அதை மதங்களின் பயன் பாட்டிற்கு மாத்திரம் பயன்படுத்தியது. முக்கியமாக அலக்சாண்டர் துவங்கி ஆங்கிலேயர்கள் வரை தொடர் வரவால் சமஸ்கிருதம் மிகவும் சுருங்கி செத்துப்போன மொழிவரிசையில் இணைந்துகொண்டது. காரணம் சமஸ்கிருதம் பொதுப்பயன்பாட்டிற்கு ஏற்கும் வகையில் இல்லை.
கிரேக்கம் மற்றும் லத்தீன்
கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழி கள் இன்று வழக்கில் இல்லை என் றாலும் காலஓட்டத்தில் அவை பரிணாம வளர்ச்சி பெற்று இன்று இத்தாலி, ஜெர்மன், ஆங்கிலம், பிரான்ஸ், ஸ்பானிஸ் மற்றும் போர்ச்சு கல், என பல்வேறு வடிவங்களில் பரிணாமம் பெற்றுத் திகழ்கிறது, அரமைக் மற்றும் சுமேரிய மொழிகள் கீரேக்கத்துடன் கலந்து ருஷ்ய, லித்தி வேனியான், போன்றவையும், எபிரேயம் அரபி ஹிப்ரு, துருக்கிய மொழியாகவும் புதிய பரிமாணம் எடுத்தது.
புதிய பரிணாமத்தில் வாழும் மொழிகள்
அரபி: அரபி மொழியின் வரலாறு சுமேரிய நாகரிகம் அழிவுற்றதில் இருந்தே துவங்குகிறது, அரமைக் என்ற மொழியின் ஆரம்பவடிவம் சிதையாமல் இன்று அரபியாக மாறி இருக்கிறது என்று மொழியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காரணம் சுமேரியர் களின் பல்வேறு அறிவியல் கண்டு பிடிப்பு வார்த்தைகள் அரபிச் சொற்களோடு ஒத்துப்போகிறது. பல்வேறு கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு முகமது நபிகள் அவர்களால் சீர்திருத்திற்கு உட்பட்டு இன்று மத்திய ஆசியா, கிழக்கு மற்றும் சஹாரா பாலைவன நாடுகளில் பரவலாகப் பேசப்பட்டு வரும் மொழி யாக அரபி திகழ்கிறது, சீனம்: சீன மொழியும் நம் தமிழ் போல் நீண்ட தொரு வரலாற்றைக் கொண்டது. 1987-ஆம் ஆண்டில் ஹாங்காய் நகர விரிவாக்கத்தின் போது ஒரு கிடைத்த ஆமை ஓட்டு எழுத்துப் படிவத்தை ஆய்வு செய்த போது அது 5ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட் டவையாக இருந்த்து, சுமார் 130 பல்வேறு மொழிகளாக இருந்த மொழிக்குழுமத்தை ஒன்றாக மாற்றிய பெருமை சீன மன்னர் ஷீன் என்பவரைச்சாரும் இவரின் காலம் கிமு 3000. இவரது மறைவிற்கு பிறகு தான் மன்னரின் பெயரே சீன் என்றும் மொழிக்கு சீனமொழி என்று பெயர் வந்தது, உலக மொழிப்போராட்டம் என் பதுமே தமிழ் தான் முதலில் நினை விற்கு வரும் தமிழ் தொன்று தொட்டு வடமொழியுடன் போராடி வந்தது. சோழப்பேரரசு காலத்தில் தமிழில் அளவிற்கு அதிகமாக வடமொழிச் சொற்கள் உட்புகுந்தது மாத்திரமல் லாமல் தமிழின் போக்கையே மாற்றி யமைத்தது, நல்வாய்ப்பாக சாமானியர் களை அந்த வேத மொழிஉருமாற்றம் ஒன்றும் செய்யவில்லை. இதன் தாக்கத்தால் ஏற்பட்ட பெரிய பாதிப்பு தமிழையே அழிவு நிலைக்கு கொண்டு சென்று விட்டது. நீதிக் கட்சியில் பெரியாரின் நுழைவிற்கு பிறகு தமிழ் புதிய பரிணாமத்துடன் வட மொழிக்கு எதிராக ஒரு பெரும் போராட்டத்தை முன்னேடுத்தது. சுமார் இரண்டு தலைமுறையாக நடந்த இந்தப்போராட்டத்தின் பலனால இன்று தனித்தமிழ் சீருடன் திகழ்கிறது, உலக மொழிப்போராட்டத்தில் எந்த ஒரு மொழியும் இவ்வகைப் போராட் டத்தை முன்னேடுத்துச்சென்றதில்லை.
டன்கன் பி ஃபொரச்டெர் (Forrester, Duncan B.)  என்ற கொலம்பிய பல்கலை கழக வரலாற்றுப்பேராசிரியர் தனது  "The Madras Anti-Hindi Agitation” என்ற நூலில் குறிப்பிட்டதாவது, ஒரு மொழி நீண்ட பாரம்பரியத்தை வரலாற்றை கலாச்சாரத்தை உயரிய இலக்கியத்தை கொண்ட மொழிக்காக ஒட்டுமொத்த தமிழினமே திரண்டது உலக வரலாற்றில் மொழிப் போராட் டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய உந்துசக்தியாகும் என்று எழுதியுள்ளார்.   தமிழ் காலத்தால் வென்று நிற்கும் மொழி நீண்டகாலப்போராட்டத்தின் விளைவு தனித்தமிழாய் நிற்கிறது.
சீனம் அரபி தமிழ் போன்ற மொழி கள் தொன்மையானதெனக் கருதப் படுவதோடு, வாழும் தன்மையுள்ளதாக வும் கருதப்படுகின்றன.இம்மொழிகளின் இன்னுமொரு தன்மை என்னவெனில், தேவையேற்படின் வேறு மொழிச் சொற்களையும் தன்னுள் உள்வாங்கிக் கொள்ளும் தன்மையுள்ளதாகும்.
யூனஸ்கோ ஆய்வின்படி உலகில் சில மொழிகள் அழிந்து விட்டன. அதாவது, செட்டிடே, எஸ்ருக்கன் ஆகிய மொழிகள் வழக்கிழந்து இல்லாமல் போய்விட்டன.
சுமேரியன், ஒல்லாந்து, அரமை ஆகிய மொழிகள் வேறு மொழிகளாக உருமாறித் தங்களை அழித்துக் கொண் டுள்ளன. சில மொழிகள் அழிவடையும் நிலையில் உள்ளன
இம்மொழியின் அழிவோடு இம் மொழிகளில் உள்ள கலை, கலாசாரம் என்பனவும் அழிந்து விடும்.மொழி மனிதனின் கண்களுக்குச் சமமானது. மனிதனை அழிக்க வேண்டுமென்றால் அவர்களின் தாய் மொழியை சிறுகச் சிறுக அழித்தால் போதும் எனகிறார் அறிஞர் பெர்னாட்ஷா.
இன்று பேசப்படும் பிரபல மொழிகளின் எழுத்து எண்ணிக்கை
தமிழ் எழுத்து _ 247; சீனம் _ 216; பாரசீகம் _ 31; ஸ்பாநியம் _ 27; ஆங்கிலம் _ 26; இத்தாலி _ 22; துருக்கி _ 28; பிரஞ்சு _ 26; கிரேக்கம் _ 24; சமஸ்கிருதம் _ 48; அரபி _ 28; ஜேர்மன் _ 26; இலத்தீன் _ 27; ரஸ்யன் _ 33; ஜப்பான் _ 22
தென் அமெரிக்க மொழிகளின் அழிவு என்பது அவர்களின் ஒற்றுமை யின்மை மற்றும் அதிதீவிர மூட நம்பிக்கையே ஆகும்.
உலகிலேயே அதிகமாக பழங்குடி யின மொழிபேசும் மக்கள் ஆப்ரிக்கா வில் மாத்திரமே உள்ளனர். ஆப்பிரிக் காவில் மொத்தம் 1700 வகை பொதுப் பிரிவு பழங்குடி மொழிகளும் அதன் உட்பிரிவாக பல்வேறு மொழிகளும் உள்ளன. இவற்றிற்கு எழுத்து வடிவம் கிடையாது. தான்சானியாவில் குடேக் என்ற பழங்குடியின மொழியைப் பேசும் மக்கள் வெறும் 8 பேர்கள் தான் இன்று உயிருடன் உள்ளனர். ஆப்பிரிக் காவின் காலனிஆதிக்கம் ஆப்பிரிக்க கலாச் சாரத்தை மாத்திரம் அல்லாமல் அதன் மொழியினையும் முற்றிலுமாக சிதைத்து அழித்து விட்டது. இந்தியாவில் இந்தியின் ஆதிக்கத் தால் ஹரியானி, ராஜஸ்தானி, போஸ்பூரி, மடேக், மார்வாடி, மற்றும் போனி போன்ற மொழிகள் முற்றிலும் அழிந்துவிடும் நிலையில் உள்ளன. முக்கியமாக தனித்து எழுத்து வடிவம் பெற்ற போஜ்புரியும் மராட்டியும் இந்தி எழுத்துருவை இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் எடுத்துக்கொண்ட்து. இதன் விளைவாக மராட்டிய நகரங் களில் அழிந்து கிராமங்களில் மாத் திரமே வாழ்கிறது. தற்போதைய தலை முறை போஜ்பூரியை புறக்கணித்து விட்டது.  மொழிப் போராட்டத்தில் பரிணாம மாற்றங்களை தன்னுள் எடுத்துக் கொண்டு தன்னுடைய தனித் தன்மையை விட்டுக்கொடுக்காத மொழியே அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும். இல்லையென்றால் சமஸ்கிருதம் போன்று வழக்கொழிந்து செத்துப் போய்விடும்.
- சரவணா இராஜேந்திரன்
-விடுதலை ஞா.ம.9.8.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக