பக்கங்கள்

திங்கள், 9 நவம்பர், 2015

ஒமனில்: தமிழ் - பிராமி எழுத்துகள்



ஒமனில்: தமிழ் - பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டெடுப்பு ஒமன் நாட்டில் கோர் ரோரி என்னும் பகுதியில் தமிழ் -_ பிராமி எழுத்துக்கள் கொண்ட ஒட்டுச் சில்லு ஒன்று கண்டெடுக்கப்பட் டுள்ளது.
ண--_ந்_தை கீ_ர_ன் என்பதே அவ்வெழுத்துகள்
கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓடு அது  என ஆராயப்பட்டுள்ளது. அதாவது 1900 ஆண்டுகளுக்கு முந்தையது.
இந்து மாக் கடலில் அக்காலக் கட்டத்தில் நடைபெற்ற வணிக முறையைக் காட்டுவதாக இது அமைந்துள்ளது.
எதிர்பாரா வகையில் இந்த ஓடு கிடைத்தது எனலாம். அண்மையில் கேரளாவில் உள்ள பட்டணம் என்னும் இடத்தில் இந்து மாக்கடல் வணிகம் மற்றும் கல்வெட்டு தொழில் நுட்பம் என்பதைப்பற்றிய கண்காட்சி ஒன்று நடைபெற்றது.
கேரள வரலாற்றுத் துறை ஆராய்ச்சிப் பிரிவும். இலண்டனில் உள்ள பிரிட்டிஷ் தொல் பொருள் நிலையமும் சேர்ந்து அக்கண் காட்சியை நடத்தின. இந்திய மாக் கடலைச் சார்ந்த பல நாடுகளில் இருந்து கொணரப்பட்ட பானை ஒடுகள் அக்காட்சியில் வைக்கப்பட் டிருந்தன. அத்தகைய கண்காட்சியில் தான் இவ்வோடு கண்டெடுக்கப் பட்டது. 2006 ஆம் ஆண்டு ஒமன் நாட்டு கோர் ரோரி பகுதியில் செய் யப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது இவ்வோடு கண்டெடுக்கப்பட்டது.
இந்த ஒட்டில் சாம்பல் படிந்த தற்கான அடையாளம் காணப்படுவ தால், இவ்வோடு பயன்பட்டி ருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனுடன் மணிகளும், நாணயங் களும் கண்டெடுக்கப்பட்டிருப்பது இதில் இந்தியாவிற்குள்ள தொடர் பைக் காட்டுகிறது.
இவ்வோட்டில் உள்ள ண_ந்_தை_கீ_ர_ன் எனும் எழுத்துகள் தனிப்பட்ட ஒருவரை குறிப்பனவாக இருக்கலாம். ணந்தை என்பது மரியாதைக்குரிய அடைமொழியாக இருக்கலாம். கீரன் என்பது அவரின் பெயராக இருக்கலாம்.
சங்க காலத்தில் கீரன் என்ற பெயரைக் கொண்ட இருபதுக்கும் மேற்பட்ட புலவர்கள் இருந்திருக் கின்றார்கள். ஆக மொத்தத்தில் கீரன் என்கிற அந்தப் பெயர் ஒரு வணிகரின் பெயராகவும் இருக்கலாம்.
இதன் மூலம் தமிழ்நாடு, சங்க காலத்தில் ரோமர்களோடு வணிகம் புரிந்ததுபோல அரபு நாடுகளுடனும் வணிகத் தொடர்பை வைத்திருந்தது என அறிந்து கொள்ளலாம்.
எகிப்துடன் செய்த வணிகமும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலும் தமிழ் பிரம்மி எழுத்துகளுடன் கூடிய ஓடுகள் கண்டெடுக்கப்பட்டதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இசுலாமியச் சமயம் தோன்றுவ தற்கு முன்பே கோர் -_ ரோரி துறைமுகம் புகழ் பெற்றதாக விளங்கியிருக்க வேண்டும்.
செங்கடல், தென் அரேபிய நாடுகள், மெசபடோமிய கடற்கரை நாடுகளுடன் தமிழகம் இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முன்பே வணிகத் தொடர்பைக் கொண்டி ருந்தது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இதைப் பற்றிய ஆராய்ச்சி தொடராமல் போனது வருந்தத்தக்கது என டாக்டர் செரியன் என்னும் அறிஞர் கருதுகிறார்.
இதனோடு தொடர்பு கொண்ட மேலும் பல சான்றுகள் இனி வரப் போகும் காலக் கட்டத்தில் ஆராயப்படும் எனும் நம்பிக்கை கொள்வோமாக.
- பாலா
-விடுதலை ஞா.ம.,3.11.12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக