பக்கங்கள்

ஞாயிறு, 8 நவம்பர், 2015

இந்துத்துவா கொள்கையும் இந்தி மொழியும் - பொறியாளர் ப.கோவிந்தராசன்


இந்துத்துவா கொள்கையை உடைய பாஜக ஆளும் இந்தியாவிற்கு முகலாய மன்னர்கள் (கி.பி.1526இல்) தந்தது தான் இந்தி மொழி ஆகும். இந்த இந்தி மொழி பேச்சு வழக்கில் உருது மொழி மற்றும் இந்துஸ்தானி மொழி ஆகியவற்றை ஒத்தது ஆகும் .இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த போது உருது மொழி பாகிஸ்தானில் ஏகமனதாக தேசிய மொழியாக ஆக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் தேசிய மொழியை தேர்வு செய்ய கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. மகாத்மா காந்தி மற்றும் காங்கிரஸார் இந்துஸ் தானியை ஆதாரித்தார்கள். கண்ணியத் திற்குரிய காயிதேமில்லத் தமிழ் மொழியை ஆதரித்தார். இந்த மொழிச் சிக்கலைத் தீர்க்க வழக்கம் போல் ஒரு குழு அமைக்கப்பட்டது.
1. அய்யங்கார் முன்ஷி திட்டம் (1949)
இந்தத் திட்டத்தை உருவாக்கியது கோபால்சாமி அய்யங்கார் மற்றும் கே.எம் முன்ஷி ஆகியோர் அடங்கிய குழுவாகும். இந்த் திட்டத்தின்படி தேவநகரி எழுத்துடைய இந்தி அல்லது ஆங்கிலம் இந்தியாவின் அலுவலக மொழியாக விளங்கும். ஏனென்றால் அரபி எழுத்துக்களைக் கொண்ட இந்தி மொழி உருது மொழியாக மாறிவிடும். இதைத் தடுக்க சமஸ்கிருத சொற்களை இந்தியுடன் கலக்க வேண்டும் என்று இந்தக் குழு விரும்பியது. சமஸ்கிருதம் என்றாலே பாரசிக மொழியான அவெஸ்தன் மொழியுடன்பல இந்திய மொழிகள் கலந்து உருவான ஒரு கலவை மொழி என்று பொருள். இவ்வாறு அந்நியர்களான ஆரியர் களைத் திருப்திப்படுத்த ஆரியர்களை கொண்ட இந்த குழு இந்தியை ஆங் கிலத்துடன் அலுவலகமொழியாகப் பரிந்துரை செய்தது.
மேலும் இந்தி வளரச்சி அடைய 15 ஆண்டுகள் ஆகும். எனவே 1965க்குப் பின் இந்தி மட்டும் அலுவலக மொழி யாக விளங்கும் என கூறியது. ஆனால், தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் நடத்திய போராட்டங்களின் விளைவாக இன்று வரை ஆங்கிலம் அலுவலக மொழியாகத் தொடர்கின்றது.
தமிழ்நாட்டில் தரப்படும் ஆங்கில வழிக் கல்வியைக் கற்க இந்தியாவின் பல மாநிலங்களில் (இந்தி பேசும்) தமிழ் நாட்டுக்கு பெருமளவில் வருகிறார்கள். இது இந்தியின் தோல்வி ஆகும்.
2. சிங்கள மொழி இந்தியாவின் ஆட்சி மொழி ஆகுமா?
தற்போது இந்தியாவின் ஆட்சி மொழிகள் 22 ஆகும். அவற்றில் பல அந்நிய மொழிகளாகும். இதில் நேபாளி சிந்தி உருது சமஸ்கிருதம்இந்தி போன்ற மொழிகள் அடங்கும். ஆயிரக்கணக் கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே பாஜகவிற்கு நெருங்கிய நண்பர். இத்தகைய நெருங்கிய நட்பை பாராட்டும் வகையில் சிங்களமொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக வாய்ப்புள்ளது.
3.இந்தி தேசியமொழி இல்லை-நீதிமன்றம் (2010):-
குஜராத் நீதிமன்றம் ஜனவரி 2010இல் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதன்படி இந்தி மொழி இந்தியாவின் தேசியமொழி இல்லை. (ஹிந்து நாளிதழ் 25-.01.-2010) தீரப்பு வழங்கிய நீதிபதிகள் முக்கோ பாத்யாயா மற்றும் ஏ.எஸ்.தவேஆவார். மத்தியஅரசின் ஆவணங்கள் எதிலும் இந்தி ஒரு தேசிய மொழி என்று மத்திய அரசு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டதாக ஆதாரம் காணப்படவில்லை. தற்போது 8ஆவது அட்டவணையில் உள்ள 22 ஆட்சி மொழிகளும்---இந்தி உள்பட--- சம உரிமைப் பெற்றவைஎனவும் தீரப்பில் சொல்லப் பட்டிருக்கிறது. சிலநாடுகளில் எந்த தேசிய மொழியும் அலுவலக மொழியாகப் பயன்பட தகுதியற்ற வைகளாக விளங்கினால் சில மொழி கள் தேசிய மொழிகளாகவும் ஏதாவது ஒரு அந்நிய மொழி அலுவலக மொழியாகவும் ஏற்றுக் கொள்ளப்படும். உதாரணம்-- இந்தியாவில் அலுவல் மொழியாகஆங்கிலம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது
தற்போது தமிழ்நாட்டில் உயர்நீதி மன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக உத்தரவு கேட்டு கோரிக்கை வலுத்து வருகின்றது. ஒரு சில வழக்கு களில் உயர்நீதிமன்றம் தனது நடவடிக் கைகளை தமிழில் வழங்குகின்றது.
4. வங்கதேசமும் உலகத் தாய்மொழி தினமும்
சுதந்திரத்துக்குப் பின் பாகிஸ்தானில் இந்தி மொழியின் மற்றொரு வடிவமான உருது மொழி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் தங்கள் மொழியான வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க அரசிடம் 1948-ல் ஒரு கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு ஏற்க மறுத்தது. எனவே கிழக்கு பாகிஸ்தானில் வங்க மொழிக்கு ஆதரவாக பெரும் போராட்டம் 21.02.1952-ல் தொடங்கியது. இதில் டாக்கா யுனிவர்சிட்டி மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் ஆயிரக் கணக்கானோர் அரசுப் படையால் கொல்லப்பட்டனர். இந்த நாளை- பிப்ர வரி 21-ஆம் நாளை உலக தாய்மொழி தினமாக அனுசரிக்க ஐ.நாவின் யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்தது
5.இந்தியை பெரும்பாலானோர் பேசவில்லை
மொழி    இந்தி    வங்காளம் தெலுகு    மராத்தி தமிழ்    உருது
சதவீதம்.    41    8.1    7.19    6.99    5.91    5.01
மக்கள்  422    83.4    74    71.94    60.8    51.54
தொகை
(மில்லியன்)
மேற்கண்ட புள்ளி விவரங்கள் 2001-இல் எடுக்கப்பட்ட மக்கட் தொகை கணக்கெடுப்பின் போது பெறப்பட் டவை ஆகும். இதன்படி திராவிட மொழி பேசுவோர் எண்ணிக்கை இந்தி மொழி பேசுவோர் எண்ணிக்கையை விட அதிகம். பஞ்ச திராவிடர்கள் எனப் பழங்காலத்தில் அழைக்கப்பட்டவர்கள் .குஜராத்தியர் (4.48), மராத்தியர் (6.99), தெலுங்கர் (7.19), தமிழர் (5.91), கன்னடர் (3.69), துளு (0.1) மற்றும் மலையாளம் (3.21) ஆக 32 சதவீதம்ஆகும்
அதே இந்தி மொழிக்குக் கிடைத்த 41 சதவீதத்தில் பல இந்தி அல்லாத பல மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை (தனியே காண்க)
இந்தி மொழி பேசுவோர் எண்ணிக் கையிலிருந்து சுமார் 143.49 மில்லியன் எண்ணிக்கைக் கொண்ட இந்தி அல்லாத மொழி பேசுவோரை நீக்கி விட்டால் இந்தி மொழி பேசுவோர் சதவீதம் 41-லிருந்து 25 சதவீதமாகக் குறைந்துவிடும். மேலும் இந்தி கிழக்குப் பகுதி இந்தி மேற்குப் பகுதி இந்தி என்று இரு வகை உண்டு. இதன்படி இதன்படி இந்தி பேசுவோர் எண்ணிக்கை 15 சத வீதமாக குறைய வாய்ப்புள்ளது.
சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில் டில்லியைச் சுற்ற்யுள்ள மக்கள் பேசிய கரிபோலி மொழியே பிற்காலத்தில் இந்தி மொழிஆனது.
6. இந்துத்துவாவும் இந்தி மொழியும்:-
இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள் என்ற கருத்து செயற்கையாக உருவாக்கப்பட்டது ஆகும். ஆனால் இந்துக்களுக்கு முதன் முதலில் 1772-ல் சட்டம் இயற்றிய ஆங்கிலேயர் சமண பவுத்த சீக்கிய மதத்தைச் சார்ந்தவர்களும் மற்றும் முஸ்லீமாகவோ அல்லது கிறித்துவ ராகவோ அல்லது பார்சியாகவோ அல்லது யுதராகவோ இல்லாத இந்தி யர் என்று அறிவித்தார்கள். எனவே இந்துக்கள் பெரும்பான்மை மதத்தினர் கிடையாது.
எனவே இந்துக்களுக்கு பெரும் பான்மை கிடையாது. இதைப் போல் இந்திமொழிக்கும் பெரும்பான்மை கிடையாது. இதனால் இந்துத்துவா கொள்கை அடிப்படை அற்றது.
மொழிவாரி ராஜ்ஜியம் ஏன் தேவை?
சுதந்திரத்துக்குமுன் இருந்தபெரிய ராஜ்ஜியங்கள் கீழே தரப்பட்டுள்ளன. வங்காளம்--இதில் வங்காளம் பீஹார் வட்டார இந்தி ஒரியா மொழி பேசுவோர் பகுதிகள் அடக்கம்.
உத்தரபிரதேசம்-- _ இதில் இந்தி மற்றும் உருது மொழியின் வட்டார பிரிவுகளைப் பேசுவோர் அடக்கம். மத்திய பிரதேசம்- _ இதில் மராத்தி, இந்தி ஒரியாமொழிபேசுவோர் பகுதி கள் அடக்கம்
மதராஸ்-- இதில் தமிழ் தெலுகு ஒரியா மொழி பேசுவோர் பகுதிகள் அடக்கம். (மலையாளம் திருவாங்கூர் சமஸ்தானத்தில்) பாம்பே மராத்தி குஜராத்தி கன்னட மொழி பேசுவோர் பகுதிகளஅடக்கம்.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து நாட்டுப் பிரதமர் அட்லிபிரபுவும் மகாத்மாகாந்தியும் சுதந்திர இந்தி யாவில் மொழிவாரி ராஜ்ஜியங்கள் அமைக்கப் பட்டால் இந்தியா பிளவு படுவதைத் தடுக்கலாம் என முடிவு எடுத்தார்கள். இதன் அடிபடையில் மொழிவாரிமாநிலங்கள் அமைந்தன.
முடிவுரை:-
ஆங்கிலேயர் தந்த இந்தியா- _ இந்தி _ --இந்து- என்ற சொற்கள் ஏற்றுக் கொள்ளபட்டன.  இந்தியாவிற்குள் நுழைந்த சமஸ்கிருதம் மறறும் ஆரியம் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆங்கிலம் வேண்டாம் என்றால் ஆங்கிலேயர் தந்த இந்து என்ற பெயரை நீக்கவும். ஏன்றால் இந்து என்ற சொல் இந்திய மொழிகளில் அர்த்தமற்றது.
-விடுதலை ஞா.ம.,2.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக