பக்கங்கள்

ஞாயிறு, 8 நவம்பர், 2015

அமெரிக்கா - நியூஜெர்சியில் தமிழர் சங்கமம் மாநாடு!

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு தமிழீழமே தீர்வு!
பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் முழக்கம்
இலங்கைத் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன், தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் நாஞ்சில் பீட்டர், தமிழ்ச்சங்கத் தலைவர் சுந்தர் குப்புசாமி, ரவி சுப்பிரமணியம், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், உயிர் வளி செல்வராஜ், பேராசிரியர் சங்கரபாண்டி ஆகியோர் பங்கேற்று உயை£ற்றினார்கள்.
இலங்கை தமிழ் சங்கம், அமெரிக்கத் தமிழர் அரசியல் பேரவை, உலகத் தமிழர் அமைப்பு ஆகியவற்றின் சார்பில் தமிழர் சங்கமம் மாநாடு 6.11.2015 முதல் 8.11.2015 முடிய அமெரிக்கா _ நியூஜெர்சி மன்றோ நகரியம் கிரவுன் பிளாசாவில் நடைபெற்றது.
7.11.2015 சனி காலை 9 மணி வரை பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுடன் நிகழ்ச்சிகள் நடந்தன. காலை 11 மணியளவில் உலகத் தமிழர் அமைப்பின் அமர்வில் துணைத் தலைவர் இரவி சுப்பிரமணியன் தலைமை யில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந் திரசேகரன் பேருரை நிகழ்த்தினார்.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரனிடம் கோவிந்த் மோகன்தாஸ் 500 டாலர் நன்கொடை வழங்கினார். பேராசிரியர் சங்கரபாண்டி, தமிழ்ச்சங்கத் தலைவர் சுந்தர் குப்புசாமி, பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன், தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் நாஞ்சில் பீட்டர் உடன் உள்ளனர்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் 1982 முதலே தொடர்ந்து பல்வேறு ஈகங்களை, கஷ்ட நஷ்டங்களை ஏற்றுக் கொண்டு பாடுபட்டு வரக்கூடிய இயக்கம் திராவிடர் கழகம் என்பதையும், ஈழத் தமிழர் கண் (ணீர்) காட்சிகள் தமிழ்நாடு முழுவதும் தி.க. இளை ஞரணியினரால் நடத்தப்பட்டும், ஈழப் பேச்சாளர் காசி ஆனந்தன் அவர்களின் பரப்புரையை தமிழ்நாடு முழுவதும் பிரச்சார கூட்டங்களாக திராவிடர் கழகம் நடத்தியதுடன்,
மதுரையில் ஈழ விடுதலை ஆதரவு மாநாட்டை திராவிடர் கழகம் நடத்தி ஈழப் போராளி குமரி நாடனை கொண்டு ஈழக் கொடியை உயர்த்தியும், அமிர்தலிங்கம் போன்ற ஈழத் தமிழ்த் தலைவர்கள் அந்த மாநாட்டில் பங்கு கொண்ட சூழலையும், 7 முனைகளில் இருந்து வழி நடை பிரச்சார படைகளை நடத்தி ஈழத் தமிழருக்கு ஆதரவாக, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டுத் தமிழர்களை அணியமாக்கிய இயக்கம் திராவிடர் கழகமே என் பதையும் விளக்கிப் பேசினார்.
டெசோ அமைப்பை தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் உருவாக்கி இந்திய அரசுக்கு நெருக்குதலை கொடுத்த தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களாவார் என்று முழக்கமிட்டார். தமிழீழ மக்களுக்கான வாழ்வுரிமைக்கான ஒரே தீர்வு தமிழீழமே என்றும், தமிழீழ மக்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் என்றும் துணை நிற்பர் என்பதையும் சுட்டினார்.
அடுத்துப் பேசிய உயிர்வளி குறும்பட, ஆவண பட இயக்குநர் செல்வராஜ் முருகையா மரண தண்டனைக்கு மரண தண்டனை கொடுப்போம் என்றும், 7 பேரை பேரறிவாளன் உள்பட நீண்ட காலம் சிறையிலே வைத்திருப்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பதையும், டிசம்பர் 2ஆம் தேதிக்கு முன் வரும் தீர்ப்பு நல்ல தீர்ப்பாக இருக்க வேண்டும் என்றும் உருக்கமாக பேசினார்.
இலங்கை தமிழ்ச்சங்க தலைவர் டாக்டர் இராசா ராமன், நாடுகடந்த தமிழீழ பிரதமர் ருத்ரகுமாரன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன்,
அமெரிக்கத் தமிழர் அரசியல் பேரவை தலைவர் டாக்டர் காருண்யன், வடஅமெரிக்க தமிழ்ச் சங்க பேரவைத் தலைவர் நாஞ்சில் பீட்டர், வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்க தலைவர் சுந்தர் குப்புசாமி, உலகத் தமிழர் அமைப்பு துணைத் தலைவர் ரவி, பேராசிரியர் சங்கரபாண்டி, கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கேரி அனந்தசங்கரி, அமெ ரிக்க சட்ட வல்லுநர் பேராசிரியர் டெர்மாட் குரூம், பல்வேறு நாடுகளின் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்று பல்வேறு அமர்வுகளில் உரையாற்றினர்.
நியூஜெர்சி மோ.கோவிந்த் வழங்கிய
கழக வளர்ச்சி நிதி
அமெரிக்கா, நியூஜெர்சி தமிழர் மோ.கோவிந்த் _ டாக்டர் நிரஞ்சனா இணையர் கழக வளர்ச்சி நிதியாக 500 டாலரை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனிடம் 7.11.2015 சனியன்று வழங் கினார்.
பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன், வடஅமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை தலைவர் நாஞ்சில் பீட்டர், வாசிங்டன் வட் டார தமிழ்ச்சங்க தலைவர் சுந்தர் குப்புசாமி, பேராசி ரியர் சங்கரபாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.
-விடுதலை,8.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக