முன்னுரை
நாடகம் மற்றும் நாட்டியம் என்றாலே கொஞ்சம் கற்பனை; கொஞ்சம் ஒப்பனை; கொஞ்சம் நடிப்பு; கொஞ்சம் கவர்ச்சி ;சேர்ந்தது என்று தமிழ் நாட்டில் உள்ள பள்ளிச் சிறுவனுக்குக் கூடத் தெரியும். இந்த ஒபபனைக் காவியம், மற்றும் கற்பனை கலந்த புராணக் கதைகள் மூலம் ஆரியர் களின் மதத்தையும், தெய்வங்களையும் பரப்ப எழுதப்பட்ட அய்ந்தாவது வேதமாம், நாட்டிய சாஸ்திரா எனும் நூல். கற்பனைகளுக்கு உண்மை வடிவம் தர எழுதப்பட்ட நாட்டிய சாஸ்திராவின் அடிப்படையில் சங்க கால இலக்கியங்களான தொல்காப்பியம், சிலப்பதிகாரம் மற்றும் இதர நூல்கள் எழுதப்பட்டன என்று டாக்டர் நாகசாமி தனது Mirror of Tamil and Sanskrit என்ற நூலில் தெரிவித்துள்ளார். இதன் மையக் கருத்துக்கள் கீழே உள்ளவாறு விவாதிக்கப்படுகிறது.
நாட்டிய சாஸ்திராவின் நோக்கம்
ஆரியர்களின் மத வேதங்களான ரிக், யஜூர், சாம அதர்வண ஆகியவற்றைப் பெண்கள் (மக்கள் தொகையில் 50 விழுக்காட்டினர்), சூத்திரர்கள் (மக்கள் தொகையில் 97 விழுக்காட்டினர்) ஆகியோர் படிக்கத் தகுதி இல்லாத வர்கள் என ஆரியர்கள் தெரிவித்து வந் தனர். இந்த நிலை உலகம் தோன்றியது முதல் வேத கால இறுதிக் கட்டம் வரை நடைமுறையில் இருந்து வந்தது. சூத்திரர்கள் அனைவரும் உல்லாச மாகப் பொழுதைப் போக்க நாட்டிய சாஸ்திராவைப் படைத்து இந்திரனிடம் தந்தனர். இந்திரன் பரதமுனிவரிடமும், அவரது 100 மகன்களுக்கும் தந்தார். நாட்டிய சாஸ்திரம் கிடைத்த பின் பெண்களும், சூத்திரர்களும் வேதங் களைப் படிப்பதை மறந்து விட்டு உல் லாசமாகப் பொழுதைப் போக் கினார்கள்.
வட இந்திய நாட்டியக் கலை
வட இந்தியாவில் ஜம்மு, காஷ்மீர், பஞ்சாய், அரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீஹார், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில், நாட்டியக்கலை பல்வேறு படை யெடுப்புகளால் பாதிக்கப் பட்டது. நாட்டியக் கலையில் மாற்றங்கள் ஏற்படக் காரணமாக இருந்த மன்னர் களில் முதன்மையானவர்கள் மவுரி யர்கள், குப்தர்கள், முகலாயர்கள், இறுதியில் ஆங்கிலேயர்கள் ஆவர். இந்தப் பேரரசுகள் ஆதரவினால் வளர்ந்த நாட்டியக் கலை பன்முகத் தன்மை உடையதாக இருந்தது. நாட்டிய சாஸ்திரா வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட போதிலும், அது மவுரியர் மற்றும் குப்தர்கள் காலத்தில் தான் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்தது. வட இந்திய நாட்டியக் கலையின் சிறப்புக்கள் கீழே தரப் பட்டுள்ளன.
- வட இந்திய நாட்டியக் கலையில் சிறந்து விளங்குவது கதக் நடனம் ஆகும். இந்தப் பெயர் கதைகள் சொல்லப்படும் நாட்டியங்களுக்குப் பெயராக அமைந்தது. முகலாயர் ஆட் சிக்கு முன்னர் கதைகளை நாட்டியம் மூலம் சொல்லும் இனத்தவர்கள் வாழ்ந்தார்கள். இவர்கள் கதக்கார் என்று அழைக்கப் பட்டார்கள். ஆரம்ப காலத்தில் இராமாயண, மகாபாரதக் கதைகள் சொல்லப்பட்டன. எனவே கதக் நடனம், மதம் சம்பந்தப்பட்ட விழாக்களிலும், அரசர் சம்பந்தப்பட்ட தர்பார் நிகழ்ச்சிகளிலும், பெரிதும் நடத்தப்பட்டன. முகலாயர் ஆட்சிக் காலத்தில இந்து-வேத மதக் கதைகளுக்கு வரவேற்பு மங்கியது.
- முகலாய காலத்தில் புராணக் கதைகளுக்கு முக்கியத்துவம் குறைந்து, மகிழ்ச்சி தரக்கூடிய நாட்டிய வகைகள் தோன்றின.
- நாட்டியம், சங்கீதம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பெண்கள் பாய் என்று அழைக்கப்பட் டனர். உதாரணம் மீராபாய், பன்னிபாய்.
- முகலாயர் காலத்தில் பர்தா அணியும் முறை பின்பற்றப்பட்டதால் பெண்கள் அதிக அளவில் கலந்து கொள்வது குறைந்தது.
- நாட்டிய சாஸ்திராவில் பெண் கள்தான் பாடலுக்குச் சிறந்தவர்கள் என்று கூறியபோதும், பாடுவதற்குப் பெண்கள் முன்வரவில்லை.
- ஆரம்ப காலங்களில் கதக் நாட்டியம், கிராமங்களில், நாட்டுப்புறக் கதைகள் சொல்லுவதற்குப் பயன்பட் டது. இதன் தோற்றம் 2000 ஆண்டு களுக்கு முந்தையது ஆகும்.
- இந்தியாவில், வட இந்தியா கி.பி. 1300-1600 காலக் கட்டங்களில் வைணவ மதம் வளர ஆரம்பித்தது. பக்தி இயக்கம் வளரத் தொடங்கியது. ராதாகிருஷ்ண லீலைகள் சொல்லும் கதக் நாட்டியங்கள் பரவின.
- முகலாயர் காலத்தில் நாட்டியம் ஆடும் முறை மாற்றம் அடைந்தது. வேக மாக ஆடுதல், சுழன்று ஆடுதல் பெரிய அளவில் சேர்க்கப்பட்டன.
- முகலாயர் காலத்தில் நாட்டியத் தில் Ada and Nazaket’ (காதல், அழகு, வெட்கம்) போன்ற பகுதிகள் அதிகரித் தன. கதக் நிகழ்ச்சிகளில், துமரி, கஜல், தத்ரா வகைகள் முக்கியத்துவம் பெற்றன. இந்திய உடைகளான சோளி மற்றும் பாவாடை நீக்கப்பட்டு, பிஸ்வாஸ் மற்றும் சுரிதார் சேர்க்கப்பட்டன.
- கதக் நாட்டியத்தின் பெரும்பகுதி நாட்டிய சாஸ்திராவில் சொல்லப்பட்ட விதிகளைக் கடைப் பிடிக்கப்படவில்லை.
தென் இந்தியாவில் நாட்டியக் கலை
- தென்னிந்தியாவில் கோவில்கள் கட்டும் பணிகள் குப்தர் காலம் முதல் தொடங்கின. இந்தக் கோவில் திருவிழாக் களில் ஆடும் நடனத்திற்கு ஆகம நடனம் என்று பெயர். இது கோவிலின் உட்பகுதியில் நடைபெறும். இத்தகைய நடனத்தை நாட்டிய சாஸ்திரா மார்சி நடனம் அல்லது ஆன்ம விடுதலைக் கான நடனம் எனக் குறிப்பிடுகின்றது. உல்லாசப் பொழுது போக்கிற்காகச் செய்யப்படும் மற்ற நடன வகைகள் தேசி நடனங்கள் என்று அழைக்கப்பட்டன.
- அரசர் அவைகளில், சாஸ்திரிய சங்கீதத்துடன் நடத்தப்படும் நடனங்கள் கர்நாடகம் என அழைக்கப் பட்டன. இந்தப் பெயர் வட இந்திய - அன்னிய இசையில் இருந்து வேறுபடுத்திக் காட்ட உதவியது.
- தென்னிந்தியாவில் நாட்டிய சாஸ்திராவில் சொல்லப்பட்ட விதி களுக்கு உட்பட்ட நடன வகைகளை சாஸ்திரிய நடனங்களாக சங்கீத நாடக அகடமி அங்கீகரித்துள்ளது. அவை (1) பரதநாட்டியம் (தமிழ்நாடு) (2) கதக்களி (கேரளா) (3) குச்சிப்புடி (ஆந்திரா) (4) மோகினியாட்டம் (கேரளா). இதைத் தவிர கதக், மணிப்புரி (மணிப்பூர்), சத்திரியா (அஸ்ஸாம்), ஒடிசி (ஒரிஸ்ஸா) அகில இந்திய அளவில் அங்கீகரிக் கப்பட்ட 8 நடன வகைகளில் 4 நடன வகை தென்னாட்டில் (திராவிட நாட்டில்) அமைந்து சிறப்பானது.
- மேற்கண்ட 8 வகைகளில் தென்னாட்டில் கோவில் நடனங்கள் என நாட்டிய சாஸ்திராவில் குறிப் பிடப்பட்டுள்ள நடனம் பரதநாட்டியம் மட்டும்தான். மற்றது ஒடிசி ஆகும்.
- பழங்கால சதிராட்டம்தான் 20 ஆம் நூற்றாண்டில் திருத்தியமைக் கப்பட்டு பரதநாட்டியம் என அழைக்கப்பட்டது.
பரத நாட்டியத்தின் வரலாறு:
- பரதநாட்டியத்தின் வளர்ச்சியில் முக்கிய கட்டங்கள் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன.
- நாட்டிய சாஸ்திரா தோன்றிய காலத்தில் கோவில்கள் இல்லை. குப்தர்கள் காலத்தில் (கிபி 320-620) கோவில் கட்டும் கலை தோன்றியது. எனவே கோவில்களில் நடத்தப்படும் நடன வகைகள் கிபி 620 வரை தோன்றவில்லை.
- தென்னிந்தியாவில் கடைப்பிடிக்கப் பட்ட தேவதாசி முறை பரதநாட்டியக் கலையை வளர்க்கப் பெரிதும் உதவியது.
- குப்தர்கள் காலத்தில் கோவில் களில் நடனமாடும் பெண்கள் இருந்த தாகக் காளிதாசனின் மேகதூதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கிபி 600 ல் தேவதாசி முறை தொடங்கியதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த முறையில் பெண்கள் கோவில் தெய் வத்திற்கு தேவன்-தேவிக்கு திருமண மாகவோ, அர்ப்பணிப்பாகவோ கொடுக்கப்படுவார்கள். சோழர்கள் காலத்தில் தஞ்சைப் பெரிய கோவிலில் 400 பேர் (ஆண்கள் உள்பட) இறை வனுக்கு அர்ப்பணிக்கப் பட்டார்கள். ஒரிஸ்ஸாவில் மஹரி தேவதாசி முறை, பூரி ஜகந்நாதர் கோவிலில் நடை முறைக்கு வந்தது. இந்த தேவதாசி முறை திருவாங்கூர் மன்னராட்சியில் இருந்தது.
- 20_ஆம் நூற்றாண்டில் கோவில்கள் வட இந்தியாவில் உடைக்கப்பட்டன. இந்து அரசர்கள் ஆட்சியை இழந்தார்கள். இதனால் தேவதாசி முறை வீழ்ந்தது. தேவதாசி முறையை ஒழிக்க, பம்பாய் மாநிலத்தில் 1934 இல் சட்டம் இயற்றப்பட்டது. இறுதியில்தேவதாசி முறை 1988 இல் ஒழிக்கப்பட்டது.
தேவதாசிகள், விபச்சாரம், வறுமை, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதுதான் காரணம். - நாகசாமியும் நாட்டிய சாஸ்திராவும் (2)
- நாட்டியத்திற்கு அணியப்படும் நகைகள் தமிழகத்தில புகழ் பெற்ற கோவில்களில் கடவுள் சிலைகளுக்கு அணிவிக்கப்படும் நகைகளின் வடிவத் தில் தயாரிக்கப்பட்டவை. வட இந்தி யாவில் கடவுளர் சிலைக்கு நகை அணி விக்கும் பழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பரதநாட்டித்திற்கு இசைக்கப்படும் இசை தமிழ் நாட்டில் பயன்படுத்தும் கர்நாடக இசை ஆகும்.
- நாட்டியத்திற்குப் பயன்படுத்தும் பக்க வாத்தியங்களான மிருதங்கம், நாகஸ்வரம், புல்லாங்குழல் (குழல் இனிது, யாழ் இனிது என வள்ளுவர் 2043 ஆண்டுகளுக்கு முன்னரே கூறி யுள்ளார்.) வயலின், வீணை (இராவணன் வீணை இசைப்பதில் வல்லவர்) போன்றவை தென்னிந்தியாவில் உரு வானவை. திருவள்ளுவர் காலத்துக்குப் பின்தான் நாட்டிய சாஸ்திரா இயற்றப்பட்டது.
- பரதநாட்டியம் நடத்தப்படும் மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் ஆகும். சமஸ்கிருதம் அறிந்தோர் வெகு சிலரே. ஆரியர்கூட திருவையாறு இசை விழாவில் தெலுங் குக் கீர்த்தனைகள்தான் பாடுகிறார்கள். ஆரியர்கள் ஒருபோதும் தங்கள் தாய் மொழியான சமஸ்கிருதத்தில் பாடுவ தில்லை. ஸ்ரீ ரங்கநாதரை மணந்த ஆண்டாள் இறைவனை மயக்கிய பாடல்களைப் பாடிய நீசமொழி என்று ஆரியர்களால் அழைக்கப்படும் தமிழ் மொழியில்தான் என்பதை ஆரியர்கள் உணரவேண்டும்.
- பரதநாட்டியம் என்ற சொல் புரந்தரதாசரால் (1484-1564) பயன் படுத்தப்பட்டது.
- இன்று கர்நாடக இசையில், பாடல்களுக்கு பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று வரிசைப் படுத்துவது போல் சங்க காலத்தில், கலிப் பாடல்கள் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்ற பகுதிகளைக் கொண்டிருந்தன. இந்த முறையில் கலித் தொகை அமைக்கப்பட்டிருக்கின்றது. தமிழர்கள் இசைக்கு செய்த சேவைகளைப் பரதமுனிவரே தனது நாட்டிய சாஸ் திராவில் கீழ்க் கண்டவாறு கூறுகிறார்.
தக்ஷிணாத்யாஸ் வாத்யா கைசிகீ பிராயா சதுர மதுர லலித அங்கா பிநயாஸ்க. எனவே நாட்டிய சாஸ்திரா என்ற நூல் தமிழரின் ஆடற்கலை உருவான பின்தான் உருவானது என அய்யமறக் கூறலாம்.
- மேலும் பரத முனிவர், தமிழர் னகரத்தை அதிகம் பயன்படுத்து கின்றார். னாகம் என்ற ஒலியை (n Sound) சமஸ்கிருதம் தமிழ் மொழி யிடம் இருந்துதான் கடன் வாங்கியது என T. Burrow போன்ற சமஸ்கிருத அறிஞர்கள் கூறுகிறார்கள்.
நாட்டிய சாஸ்திரம் உருவான காலம்:
- குரு, பாஞ்சால, அஸ்தினாபுரம் அரச வம்சங்கள் வீழ்ச்சியடைந்த பின் மகதப் பேரரசு உருவானது. மவுரியப் பேரரசின் தலை சிறந்த பேரரசர் அசோகரைப் பற்றி, வரலாற்று ஆசிரியர் இராதா கமல் முகர்ஜி கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார்.
இந்தியக் கலாச்சாரத்தை முதன் முதலாக ஒன்று படுததியது மட்டும் அல்லாமல், உலக சமாதானத்தையும், அமைதியையும் விளக்கும் செய்திகளை, தனியாட்சி நடத்திய திராவிடர்களின் அரசுகளுக்கும், ஆசியாவில் இருந்த கிரேக்க அரசுகளுக்கும் பரப்பினார்கள்.
இது மவுரியர்கள் காலத்தில் திராவிடர்கள் தன்னாட்சியுடன் நாட்டை ஆண்டார்கள் என்பதனை வெளிப்படுத்துகிறது. இந்த மகத நாட்டில்தான், யஜூர் வேதம், காயத்ரி மந்திரம் இயற்றப்பட்டது. விசுவாமித் திரர் (கவுசிகர்) ஞானம் பெற்று கவுசிக உபநிஷதம் எழுதப்பட்டது. யக்ஞவல் கியர் சுக்லய்ஜூர் வேதம் எழுதினார். மகரிஷி கவுதம் நியாய சாஸ்திரம் இயற்றினார். பாணினி, சமஸ்கிருத நூலை எழுதியவர், பாடலிபுத்திரத்தில் ஒரு மாணவனாக இருந்தார்.
இத்தகைய மகத நாட்டில் கலை களும் நடனங்களும் சிறப்புப் பெற்றி ருந்தன. மகத நாட்டில் வளர்ச்சி யடைந்த நடனம் மற்றும் இசையை உள்ளடக்கிய இந்திய நாடு முழுமைக் கும், பொதுவான நாட்டிய சாஸ்திரம் உருவானது. நாட்டிய சாஸ்திரம் பற்றி மகத நாட்டு வரலாற்றில் கீழ்க் கண்டவாறு குறிக்கப்பட்டுள்ளது.
“ The study of the practice of music, dance and theatre in the regions of entire sub-continent led to the composition of the monumental treatise, the Natya Sastra” என்ற மைய அரசின் நூலில் காணப்படுகின்றது .இந்த நாட்டிய சாஸ்திரா நூல் தொல்காப்பியர் காலத்து நாடக, நாட்டிய, இசை பற்றிய விவரங்களை உள்ளடக்கித்தான் நாட்டிய சாஸ்திரா எழுதப்பட்டிருக்கிறது என்பதனை அறியலாம்.
- நாட்டியக் கலை, வசன நாடகம், இசை நாடகம், நடன நாடகம் ஆகிய மூன்றும் ஒருங்கே இணைந்ததுதான் நாட்டியம் ஆகும். இந்த நாட்டியத்தின் முதன்மைக் குறிக்கோள், கதை சொல்லுவது. இந்தக் கதை சொல்லும் பழக்கம் வேத, இதிகாச, புராண காலத்திற்குப் பின்னர்தான் நாட்டியக் கலை உருவானது என்பதனை அறியலாம். நாட்டியம் என்பது பல்வகை நாடகங்களை உள்ளடக்கியது.
- இந்த நாடகக் கலை பற்றி வேதங்களில் பேசப் படவில்லை.
- நாட்டிய சாஸ்திரா எழுதிய பரதமுனிவரின் காலத்தைத் திட்டவட்டமாகக் கூறுவதற்கில்லை. இது வடமொழி இலக்கிய வரலாறு என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- வடமொழி இலக்கிய வரலாறு கீழ்க் கண்டவற்றை உள்ளடக்கியது.
(அ) வேதம் (ஆ) பிரமாணங்கள் (இ) ஆரணியகம் (ஈ) உபநிஷதம் (உ) இதிகாசம் (ஊ) காவியம் (எ) புராணம் (ஏ) தருமசாஸ்திரம் (அய்) நாடகம் (ஒ) சமய சாத்திரம் (ஓ) ஸ்தோத்திரம்
மேற்கண்ட பட்டியலில் கண்டவாறு நாடகம், இதிகாசம், காவிய, புராண காலங்களுக்குப் பின்னரே தோன்றியது என்பதனை அறியலாம்.
- பாணினி அஷ்டத்யாயி (கி.மு. 300-250) என்ற நூலை எழுதினார். இவர் வேதமொழிக்கு இலக்கணம் எழுதி பாஷா என்று பெயரிட்டார். இதை சமஸ்கிருதம் என அழைத்தனர். சமஸ்கிருதப் பெயர் உருவான காலம் தெரியவில்லை. இந்த இலக்கண நூலில் பாணினி நாட்டிய சாஸ்திராவைப் பற்றி எதுவும் கூறவில்லை. ஆனால் சிலா லின், கிரிச்சவா என்ற நாடக ஆசிரியர் களின் பெயர்கள் குறிப்பிடப்பட் டுள்ளன.
- பாணினிக்குப் பின் நாடகக் கலைக்குச் சிறப்புச் சேர்த்தவர்கள், அஸ்வகோசர் (கிபி 100) பாஸர் (கிபி 300), காளிதாசர் (கிபி 300-_500). இவர்கள் நாட்டிய சாஸ்திராவைப் பற்றி எதுவும் கூறவில்லை.
- நாட்டிய சாஸ்திரா என்ற நூல் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டது என்று டேவிட் கோர்ட்னி என்ற அய்ரோப்பியர் கூறுகிறார்.
நாட்டிய சாஸ்திராவும் தொல்காப்பியமும்: நாட்டிய சாஸ்திராவிலிருந்து தொல்காப்பியம் உருவானதாக டாக்டர் நாகசாமி அவர்கள் கூறுகின்றார்.
இதற்கு மறுப்புரை கீழே தரப்பட் டுள்ளது.
- தொல்காப்பியரும் அகத்தியரும் கபாடபுரத்தில் அமைந்த இரண்டாம் சங்கத்தைச் சார்ந்த புலவர்கள். இவர்களின் காலம் கிமு 700_400- வரை என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தொல்காப்பியத்தின் நோக்கம், நாட்டிய சாஸ்திராவில் இருந்து மாறுபட்டது. தொல்காப்பியம் இடைச் சங்க காலத்திற்கு முன்பு தமிழகத்தில் வழங்கி வந்த இலக்கியங்களின் மற்றும் இலக்கண நூல்களின் அடிப்படையிலும், புதிய இலக்கண நூலை தமிழ் சமுதாயத்திற்குத் தருவது. இதன் முடிவில் கிடைப்பது இலக்கணம் எனும் பருப் பொருள். நாட்டிய சாஸ்திராவிற்கு நோக்கம் வாழ்க்கையில் நடந்த அல்லது கதைகளில் கற்பனை யாக, வரலாறு சம்பந்தப்பட்ட நிகழ்வு களை, நடிகர்களுக்கு ஒப்பனை செய்து உண்மைக் கதை போல இசையுடன் இணைத்து தரப்படும் நிகழ்ச்சி. இத னால் கிடைப்பது தோன்றி மறையும் காட்சிகள்.
- தொல்காப்பியம் ஆதாரங்களின் அடிப்படை யானது. வருங்கால மக்களுக்கு ஆதாரமான இலக்கண விதிகளைச் சொல்வது. நாட்டிய சாஸ்திராவுக்கு ஆதாரம் எதுவும் தேவையில்லை. நாட்டியம் நாடகம் போன்றவைகளைத் தொகுத்துத் தரும் நாடகங்களை, நடனங்களை ஆதார மாகக் கையாள முடியாது.
- தொல்காப்பியம் நேற்றும், இன்றும், நாளையும் அழியாதது. நாட் டிய சாஸ்திரா காட்டும் நாடகங்களும், நடனங்களும் ஒப்பனை கலைந்தவுடன் கண் பார்வையில் இருந்து மறைந்து விடும்.
- தொல்காப்பியத்தின் பயன்பாடு தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு மட்டும் பயன்படும். நாட்டிய சாஸ்திரா இந்தியாவில் உருவான நடனங்களும், நாடகங்களும் பொதுவான இலக் கணங்களைக் கொண்டது.
- தொல்காப்பியம் மதம் சாராதது. நாட்டிய சாஸ்திரா வேத மதத்தைச் சார்ந்தது.
- தொல்காப்பியம் வர்ணபேதத்தை வளர்க்க வில்லை. நாட்டிய சாஸ்திரா வர்ணபேதத்தை அடிப்படையாகக் கொண்டது.
- தொல்காப்பியம் நூல் ஒருவரால் எழுதப்பட்டது. நாட்டிய சாஸ்திரம் பலரால், பலகாலம் எழுதப்பட்டது.
- தொல்காப்பியம் மனிதனால் உருவாக்கப் பட்டது. நாட்டிய சாஸ்திரா பிரம்மனால் இந்திரனுக்குத் தரப்பட்டு, பின்னர் அவனால் பரதமுனிவருக்கும், அவரது 100 மகன்களுக்கும் தரப்பட்டது.
- தொல்காப்பியம் அனைவரும் படிக்க இயற்றப்பட்டது. நாட்டிய சாஸ்திரம், நால்வகை வேதத்தினை படிக்கத் தடை விதிக்கப்பட்ட பெண் களுக்கும், தாழ்ந்த குலமான சூத்திரர் களும் படிப்பதற்கு அய்ந்தாவது வேதமாக படைக்கப்பட்டது.
- தொல்காப்பியம் தமிழ் கற்பவர் களுக்கு எழுதப் பட்டது. நாட்டிய சாஸ்திரா இந்தியாவில் உள்ள மக்கள் உல்லாசமாக இருக்க தெய்வங்கள் அளித்த அருட்கொடை.
- தொல்காப்பியத்தால் பெண்கள் மேம்பாடு அடைந்தார்கள். நாட்டிய சாஸ்திராவினால் தேவதாசி முறையும், பெண்ணடிமைத்தனமும், விபச்சாரமும் வளர்ந்தன. இதனால் இந்திய அரசு தேவதாசி முறையை ஒழித்தது.
- நாட்டிய சாஸ்திரத்தில் அகம், புறம், முல்லை, நெய்தல், மருதம், பாலை திணைகள் குறித்த செய்திகள் காணப் படுவதாகவும், அதன் அடிப்படையில் தான் தொல்காப்பியம் உருவானதாக நாகசாமி கூறுவது சரியல்ல. நாட்டிய சாஸ்திரத்தில காணப்படும் அகம், புறம் பற்றிய செய்திகள் எங்கிருந்து பெறப்பட்டன? நாட்டிய சாஸ்திரா விற்கு மூலதனமான வேதத்தில் இருந்து பெறப்பட்டனவா? இதை நாகசாமி அவர்கள் விளக்கவேண்டும்.
- சமஸ்கிருத வரலாற்றினை எழுதிய சமஸ்கிருத அறிஞர்கள் வேதத்தில் தமிழ்ச் சொற்களும், பாரசீகச் சொற் களும் பரவலாகக் காணப்படுகின்றன எனக் கூறுகிறார்கள். இந்நிலையில் சமஸ்கிருத மொழி உண்மையிலேயே ஆரியருக்குச் சொந்தமானதா? சமஸ் கிருதத்திற்கு முன் எழுதப்பட்ட வேதங்கள் உருவானது வேதமொழியில் என்று கூறுவது எவ்வாறு?
- இராமாயணத்தைப் பற்றி முதன் முதலாகக் கூறப்பட்டது சங்க கால தமிழ் இலக்கியத்தில்தான் என சமஸ்கிருத அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது. இத்தகைய சிறப்புடைய சங்க இலக்கியங்களை எழுத நாட்டிய சாஸ்திரா உதவி செய்தது என்பதினை ஏற்க இயலாது.
- நாட்டிய சாஸ்திராவில் குறிப்பிடப்படும் சில சொற்றொடர்கள் வால்மீகி இராமாயணத்தில் சுந்தர காண்டம் மற்றும் யுத்த காண்டத்தில் வருகின்றன.
இராமாயணம் வால்மீகி உருவாக்கியது. ஆனால் நாட்டிய சாஸ்திரா பிரம்மாவினால் உருவாக்கப் பட்டது. இதனால் நாட்டிய சாஸ்திரா எழுத பிரம்மாவுக்கு வால்மீகி உதவினார் என்று நாகசாமி கூறுவாரா?
- தொடரும்
- தொடரும்
- பொறியாளர் ப. கோவிந்தராசன்
- நாட்டிய சாஸ்திராவில் முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலைத் திணை வகைகள் கூறப் பட்டுள்ளன. இதைப் பார்த்து தொல்காப்பியர் திணைகளை உருவாக்கினார் என்று நாகசாமி கூறுகிறார். இது தவறு. ஏனேன்றால் ஆரியர்கள் கிமு 1500 ல் இந்தியாவுக்குள் நுழையும் முன்பே, அய்ந்து திணைகள் இருந்தன.ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த பகுதி சப்த சிந்துக்கள். சிந்து என்ற பெயர் நெய்தல் நிலத்தைச் சேர்ந்த பகுதி. சிந்து என்ற பெயரால் அழைக்கப்படும் நதியும் கடலும் கலக்கும் இடத்தில் உள்ள நிலப் பகுதிக்கு தமிழர்கள் இட்ட பெயர் சிந்து என்பதாகும். இது தமிழ் அகராதி தரும் நிலவியல் வரலாறு; தமிழர் நாகரிக வரலாறு ஆகும்.
- எனவே நாகசாமியின் கண்ணாடி (Mirror) காட்டுவது பிம்பம் (Error). இது உண்மையல்ல; மாயத் தோற்றம்.
- மத அடிப்படையில் உருவாக்கப் பட்ட சமஸ்கிருதம் வழக்கு ஒழிந்தது என வரலாற்று அறிஞர் ரோமிலா தாப்பர் கூறுகிறார். எனவே மத அடிப் படையில் உருவாக்கப்பட்ட நாட்டிய சாஸ்திரா வழக்கு ஒழிவது தவிர்க்க முடியாதது.
தொல்காப்பியரும் தமிழர்களின் சிறப்பும்:
வில்லியம் ஜோன்ஸ் (1746-1804), சமஸ்கிருதம் இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது எனக் கண் டறிந்தார். இதன்பின் சமஸ்கிருதத்தின் சிறப்புகளை ஆராய்ந்தவர்கள், பாணி னியின் அஷ்டாத்யாயி (கி.மு. 350-250) உலகின் முதல் இலக்கண நூல் என்று கூறப்பட்டது. பிறகு கால்டுவெல் (கி.பி.1856_இல்) திராவிட மொழிகளின் சிறப்புகளை உலகுக்கு வெளிப்படுத் தினார்.
இதன் பின்னர் 1901இல் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, Linguistic Survey of India மொழியியல் கணக்கீடு எனும் நூல் வெளியிடப்பட்டது.
இதில் ஈடுபட்டவர் ஜார்ஜ் ஆபிரஹாம் கிரியர்சன் ஆவார். இந்த ஆராய்ச்சிகளின்படி திராவிட மொழி களின் சிறப்புக்கள் வெளிவந்தன. அவை கீழ் வருமாறு:
- பர்ரோ, எமனோ என்ற அய் ரோப்பிய மொழி அறிஞர்கள், இந்திய நாகரிகமும் ஆரியமும் திராவிடமும் கலந்தது என்றாலும், அதன் மூல ஊற்று திராவிடமே என்று வெளியிட்டார்கள்.
- இந்திய மொழிப் பேரறிஞர், சுனித்குமார் சட்டர்ஜி என்பவர் கூறியது, இந்திய மொழிகளில் நிஷாபதம், திராவிடம், கிராதம், ஆரியம் என நான்கு என்பர் பண்டைக் காலத்தில். இவை தற்காலத்தில், ஆஸ்ட்ரிக் - திராவிடம்; திபெத்-சீனம்; இந்தோ அய்ரோப்பியம் என வழங்கப்படு கின்றன. இவர் தனது நூலில் இந்திய நாட்டின் பண்பாட்டின் அடித்தளம் ஆரியமன்று; வட மொழியிடமிருந்து திராவிட மொழிகள் பெற்றதை விட திராவிட மொழிகளிலிருந்து ஆரிய மொழி பெற்றது: அதிகம் எனக் கூறினார்.
- மவுரியர்கள் காலத்தில், குரு, பாஞ்சால, அஸ்தினாபுரம், மிதிலா நாடுகளைச் சார்ந்த ஆரியர்கள் பலம் இழந்து காணப்பட்டார்கள். மகத நாடு பலம் பெற்று இருந்தது. இந்த காலத்தில், அஷ்டமாகதியிலும், பாலி மொழியிலும், சவுரசேனி மொழியிலும் பல நூல்கள் எழுதப்பட்டன. சமஸ்கிருதம் பிரா மணர்களின் வழக்கு மொழியாகவும், வேதமொழியாகவும் இருந்தது.
மக்கள் மொழியாக பாலி விளங்கியது. பின்னர் குப்தர் காலத்தில்தான் கல்வெட்டுகள் சமஸ்கிருதத்தில் எழுதப் பட்டன. இக்காலத்தில் சமணர்களும், பவுத்தர் களும் ஆரியர்களுடன் சமரசம் செய்து கொண்டு சமஸ்கிருதத்தில் நூல்கள் எழுதத் தொடங்கினார்கள். பிராகிருத நூல்கள் சமஸ்கிருதத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டன.
முடிவுரை:
தமிழர்களின் நிலப்பரப்பினை, முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை என அய்ந்திணையாகப் பிரித் தது, நாட்டிய சாஸ்திராவில் தெரி விக்கப்பட்ட கருத்துக்களின் அடிப் படையில்தான் என்று டாக்டர் நாகசாமி கூறியிருப்பது தவறு. இதனை விளக்கத் தமிழ் அகராதி தரும் பொருள்கள் கீழே தரப்படுகின்றன.
சிந்து சங்கமம் - கடலும் ஆறும் பொருந்து முகம்
சிந்துநாடன் - நெய்தல் நிலத்தார்
சிந்து சாரம் - உப்பு, லவணம்
சிந்துத் தீவிபன் - சிந்து தேச அரசன் (தீவு அரசன்)
சிந்துநாதன் - கடற்கரை நாயகன்
சிந்தூரத்தான் - கடற்கரைப் பட்டினத்தில் வசிக்கும் ஆறுமுகன்.
இந்த சொற்களும் அதன் பொருள்களும், சிந்து நதி நெய்தல் நிலத்தில் உள்ளது என்பதனைத் தெரிவிக்கின்றன. இந்த சிந்து நதி என்பது ஆரியர்கள் வரும் முன் தமிழர்களால் இடப்பட்ட பெயர். இந்த அடிப்படையில் நாகசாமி அவர்கள் தங்களின் தவறான தகவல்களைத் திரும்பப் பெறவேண்டும்.
மேலும் வடமேற்கே சிந்து நதி உள்ளது. இந்தியாவின் தென் கிழக்கே திருச் செந்தூர் (திரு+ சிந்து + ஊர்) உள்ளது. இதில் காணப்படும் சொற்களுக்கு பொருள், ஆரியரான தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத அய்யர் அவர்கள் அணிந்துரைசெய்த மதுரைத் தமிழ்ப் பேரகராதியில் உள்ளவாறு தரப்பட்டுள்ளது.
நியூயார்க்கைச் சேர்ந்த Haskall Publications , History of Sanskrit என்ற நூலை வெளியிட்டுள்ளது. இதில் ருடால்ப் ரோத் மற்றும் டாக்டர் ப்யூக்லர் போன்ற சமஸ்கிருத மொழி அறிஞர்களின் ஆய்வுகளை வெளியிட்டுள்ளது.
இந்த நூலில், வேத இலக்கியங்கள், வரிக்கு வரி அவெஸ்தன் மொழியிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்றும் அவெஸ்தன் மொழியில் உள்ள அணி மற்றும் உவமைகள் கையாளப் பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இத்தகைய வேத இலக்கியங்களிலிருந்து தமிழ் இலக்கியங்கள், அணி, உவமை (Alankara, Opama) முதலானவற்றைப் பெற்றுள்ளதாகக் கூறுவது என்பது சிறிதும் பொருத்தமற்றது.
நாட்டிய சாஸ்திரா கற்பனையாக எழுதப்பட்ட இதிகாச புராணங்களை மக்களிடையே பரப்பப் பயன்பட்டன. இதற்கு உதாரணம் இதுவரை கலியுகத்தில் தோன்றாத 10 ஆவது அவதாரமான கல்கி அவதாரத்திற்கு முத்திரை, முகபாவம், ஒப்பனை, அரங்க அமைப்பு எல்லாம் நாட்டிய சாஸ்திராவில் தரப்பட்டுள்ளது.
கற்பனைகளும் ஒப்பனைகளும் கொண்ட நாட்டிய சாஸ்திரா தொல்காப்பியத்தில் மற்றும் சங்க இலக்கியங்களில் காட்டப்பட்டுள்ள அகம், புறம், அய்ந்திணை வாழ்க்கை முறைகளை மக்களுக்கு எடுத்துச் சென்றது என்பதனையும் அதை மக்கள் கடை பிடித்தார்கள் என்று நாகசாமி கூறுவதை ஏற்க இயலாது.
-விடுதலை ஞா.ம.10.11.12
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக