பக்கங்கள்

செவ்வாய், 24 ஜூலை, 2018

உலகம் முழுவதும் 26 இடங்களில் ‘தமிழ் வளர் மய்யங்கள்’: அமைச்சர் தகவல்

புதுடில்லி, ஜூலை 20  மோரீசியஸ், பிஜி தீவுகள் உள்பட 26 இடங்களில் தமிழக அரசு சார்பில் தமிழ் வளர் மய்யங்கள் அமைக் கப்படவுள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டி யராஜன் தெரிவித்தார்.

புதுடில்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில் தமிழ் மொழி, தமிழ் இசை, பரதநாட்டிய வகுப்புக்களின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு கலாச்சார வகுப்புகளைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது:

டில்லி தமிழ்நாடு இல்லத்தில் அடிப்படைத் தமிழ், பரதநாட்டி யம், தமிழிசை வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மாண வர்கள் பெரும் ஆர்வத்துடன் இந்த வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளனர். மாணவர் களுக்கு தஞ்சாவூர் தமிழ் பல் கலைக் கழகம் மூலம் சான்றிதழ் வழங்கப்படும்.

உலகத் தமிழர்கள், தமிழ் நாட்டுக்கு வெளியே வசிக்கும் தமிழர்கள் ஆகியோரிடம் தமிழ் பண்பாட்டின் மேன்மையை எடுத்துச் செல்லும் வகையில் உலக அளவில் 26 இடங்களில் தமிழ் வளர் மய்யங்கள் அமைக் கப்படவுள்ளன.

இந்தி பிரச்சார சபாவுக்கு இணையாக, இந்தியாவுக்குள் 10 இடங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 16 இடங்களிலும் இந்த மய்யங்கள் அமையவுள்ளன. இந்தியாவில் டில்லி, மும்பை, கொல்கத்தா, போபால் உள்ளிட்ட 10 இடங்களிலும், இந்தியாவுக்கு வெளியே பிரான்சு, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, மோரீசியஸ், டிரினிடாட் -டொபோகோ, பிஜி தீவுகள் உள்ளிட்ட16 இடங்களில் இந்த மய்யங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்தத் தமிழ் வளர் மய்யங்கள் அந்தந்த பிரதேசங்களில் உள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து தமிழ் வளர்சிக்காக பாடுபடவுள்ளன.

இந்த மய்யங்கள் மூலம், உலகிலுள்ள தமிழ் மாணவர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறோம். இது தொடர்பாக பிரான்சு, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நான்கு நாடு களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளோம். வெளிநாடுகளில் உள்ள இந்தியர் களில் 42 சதவீதம் பேர் தமிழர்கள்.

அவர்களின் நலனுக்காக இந்த தமிழ் வளர் மய்யங்கள் அமைக்கப்படவுள்ளன என்றார் அமைச்சர் கே.பாண்டியராஜன்.

- விடுதலை நாளேடு, 20.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக