எழுத்திலக்கணம்
அசை இன்னதென்பது
அ
இது தமிழ் எழுத்துக்களின் வரிசையில் முன்னிருப்பது. வாயைத் திறப்பதனாலேயே தோன்றிவிடும்.
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்ற 18 மெய்யின் மேலும் தனித்தனி ஏறி, அவை களை க, ங - ன என்று ஆக்குகின்ற நிலையை எண்ணி இதை உயிர் என்று சொல்ல வேண்டும். மற்ற நேரத்தில் அ என்ற எழுத்து மட்டும் சொல்லுக.
க் + அ = க; ன் + அ = ன.
மெய் எழுத்து என்றால் உயிரில்லாத உடம்பு எழுத்து என்பது பொருள். இந்த மெய் எழுத்தைச் சொல்லிக் காட்ட முடியாது. உயிர் கூட்டித்தான் சொல்லிக் காட்ட முடியும்.
க் ங் முதலிய 216 எழுத்துக்களுக்கும் உயிர்மெய் எழுத்துக்கள் என்று பெயர், உயிரும் மெய்யும் கூடிப் பிறந்ததனால்!
அ என்ற எழுத்துக்கு மெய் எழுத்தை இயக்குவது தவிர வேறு இல்லை .
அவன், அவள், அவர், அது, அவை, அம் மனிதன், அப் பெண், அம் மனிதர், அக் கன்று, அக் குருவிகள் என்பவை சுட்டுப் பெயர்கள்.
ஒன்றைச் சுட்டிக் காட்டுவதால் இந்தச் சுட்டுப் பெயர்களில் எல்லாம் முதலில் ‘அ' இருக்கிறது.
எனவே இங்கு 'அ' என்ற எழுத்துச் சுட்டுப் பொருளில் வந்தது.
இப்போது அ என்ற எழுத்து உயிர் எழுத்தா? இல்லை. சுட்டெழுத்து.
அதனால்தான் அ ஒரு பொருளைச் சுட்டிக் காட்டும் போது சுட்டெழுத்து என்று சொல்லப்படும். சுட்டாதபோது ‘அ' என்ற எழுத்து என்றுதான் சொல்ல வேண்டும்.
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பன பாட்டின் ஆறு உறுப்புக்கள்.
அவற்றில் இது (அ) அசையாய் வரும். இது தனியாய் வந்தாலும், அசைதான். ஒரு மெய் எழுத்தைக்கூடச் சேர்த்துக் கொண்டு வந்தாலும் அசைதான். அ அல்லது அக், அங், அச், அஞ், அன் என்று இவைகளுக்கு நேரசை என்று பெயர்.
அச்சம் என்பதில் இரண்டு நேரசைகள் இருக்கின் றன. அச் ஒன்று, சம் ஒன்று. அ, அ இரண்டும் என்பதில் முதலில் உள்ள அ என்பதும் நேரசை.
மேலும் அ என்பது குற்றெழுத்து. குறில் என்றும் சொல்வதுண்டு. எனவே அ என்ற குறில் தனித்து வந்தாலும், ஒரு மெய்யைச் சேர்த்துக் கொண்டு வந்தாலும் நேரசை என்று நினைவில் வைத்துக் கொள்க.
இதுபோலவே அ, இ, உ, எ, ஒ என்ற எழுத்துக் களும் குற்றெழுத்துக்களே. இவைகளும் தனித்து வந்தாலும், மெய் எழுத்தைச் சேர்த்துக் கொண்டு வந்தா லும் நேரசைகளே.
எடுத்துக்காட்டு
அ, அச், இ, இச், உ, உஞ், எ, எம் - இந்த ஐந்து தவிர இன்னும் குற்றெழுத்துக்கள் இருக்கின்றன. அவை யாவன.
அ என்ற உயிரேறிய க் அதாவது க என்ற உயிர்மெய் எழுத்தும் குற்றெழுத்தே. மேலும் 18 மெய்யின் மேலும் 5 குறிலும் தனித்தனி ஏறத் தோன்றுகின்ற 90உம் குற் றெழுத்துக்களே என அறிக.
இப்போது நேரசை எவ்வளவு ஆகி விட்டது பாருங்கள்.
90 உயிர் மெய்க்குறிலும் 5 உயிர்க் குறிலும் தனித்தோ, மெய்யைச் சேர்த்துக் கொண்டோ வந்தால் அவை எல்லாம் அசை. அதாவது, குறிலசை.
மேலும் நேரசை.
அ ஓரசை, அம் ஓரசை, க ஓரசை, கண் ஓரசை, ப ஓரசை, பல் ஓரசை என்று நினைவில் கொள்க.
ஆ இதுவும் மெய்யெழுத்துக்கு உயிர் வரும்போது உயிர் எழுத்து எனப்படும்.
ஆ தனித்து வந்தாலும் ஒற்றடுத்து வந்தாலும் நேரசை எனப்படும்.
ஆ தனித்து வந்தது. ஆக், ஆங் ஒற்றடுத்து வந்தன. அ என்பதற்கும் ஆ என்பதற்கும் வேறுபாடு என்ன?
அ குறில்; ஆ நெடில். ஆ என்பது நீண்ட ஓசை உடையது அல்லவா. இனி,
ஆ ஏறியதால் உண்டாகும் கா முதலியனவும் நெட் டெழுத்துக்களே.
ஆ என்ற நெட்டெழுத்துக்கும் கா, நா முதலிய நெட்டெழுத்துக்கும் வேறுபாடு என்ன? ஆ உயிர் நெட்டெழுத்து கா, ஙா முதலியவை உயிர் மெய் நெட்டெ ழுத்துக்கள்.
பயிற்சி:
உயிர்க் குற்றெழுத்துக்கள் எவை?
அ, இ, உ, எ, ஒ ஆகிய 5.
உயிர்மெய்க் குற்றெழுத்துக்கள் எவை?
க, கி, கு, கெ, கொ, ந, நி, நு, ஙெ, ஙொ, ச, சி, சு, சொ முதலிய 90.
எனவே குற்றெழுத்துக்கள் 95.
உயிர் நெட்டெழுத்துக்கள் எவை?
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகியவை . உயிர்மெய் நெட்டெழுத்துக்கள் எவை?
கா, கீ, கூ, கே, கை, கோ, கௌ.
ஙா, ஙீ, ஙூ, ஙே, ஙை, ஙோ, ஙௌ
சா, சீ, சூ, சே, சை, சோ, சௌ
ஞா, தீ, தூ, ஞே, ஞை, ஞோ, ஞௌ.
18 + 7 = 126 என்க. இதனோடு உயிர் நெட் டெழுத்துக்களையும் சேர்த்து 133 என்க.
நெட்டெழுத்துக்கள் 133-ம், குற்றெழுத் துக்கள் 95ம் சேர்த்தால் 133 + 95 = 228 ஆகும். | இந்த 228 எழுத்துக்களும் தனித்து வந்தாலும், ஒற்றடுத்து வந்தாலும் நேரசைகள்.
அ தனித்து வந்த நேரசை.
அம் ஒற்றடுத்து வந்த நேரசை.
ஆ தனித்து வந்த நேரசை.
ஆம் ஒற்றடுத்து வந்த நேரசை என நினைவில் வைத்துக் கொள்க.
பயிற்சி:
அன்றில் என்பதில் அன், றில் என இரண்டு நேரசைகள் வந்தன. ஆண்பால் என்பதில் ஆண், பால் என இரு நேரசைகள் வந்தன. தாரா என்பதில், தா, ரா இரு நேரசைகள் வந்தன. காண்பார் என்பதில் காண், பார் என இருநேரசைகள் வந்தன. பார்க்க, என்பதில் பார்க், க என இரு நேரசைகள் வந்தன.
- ‘குயில்’, சென்னை (15.7.2018)
தொடரும்
- விடுதலை ஞாயிறு மலர்,28.7.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக