பக்கங்கள்

புதன், 11 ஜூலை, 2018

நாடோடி மக்கள் பேசும் மொழிகளைவிடக் குறைவாகப் பேசப்படும் மொழி சமஸ்கிருதம்


நாடோடி மக்கள் பேசும் மொழிகளைவிடக் குறைவாகப் பேசப்படும் மொழி சமஸ்கிருதம்




புதுடில்லி, ஜூலை 5  நாடோடி மக்கள் பேசும் மொழிகளைவிடக் குறைவாகப் பேசப்படும் மொழி சமஸ்கிருதம் என்பதை மத்திய அரசே ஒப்புக்கொள்ளும் புள்ளிவிவரம் இதோ:

இந்திய மொழிகளில் இந்தியை 52,83,47,193 பேரும், சமஸ்கிருதத்தை 24,821 பேரும் பேசுகின்றனர் என்கிறது 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக் கெடுப்பு. புள்ளி விவரங்களின்படி. மைதிலி மொழியை 1,35,83,464 பேரும், சந்தாலி மொழியை 73,68,192 பேரும் பேசுகின்றனர். இங்கு இந்தி என்பது மக்கி, போஜ்பூரி, கான்பூரி, பனாரசி, அரியான்வி மற்றும் பல வட இந்திய வட்டார  மொழிகள் (இவைகளுக்கு பெயர் இல் லாத அல்லது மறைக்கப்பட்ட) போன்ற வற்றைச் சேர்த்து இந்தி மொழி பேசு பவர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். எடுத்துக்காட்டாக கரிபோலி மொழி மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் நகரங்களைத் தவிர்த்து கிராமம் மற்றும் சிற்றூர்களில் அதிகம் பேசும் மொழி ஆகும். ஆனால், இதையும் இந்தி என்று குறிப்பிட்டுள் ளனர். (ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லை).

மிகக் குறைந்த மக்களால் பேசப்படும் மொழி




சமஸ்கிருதம்தான், இந்தியாவில், பட்டியலிடப்பட்ட 22 மொழிகளில் மிகக் குறைந்த மக்களால் பேசப்படும் மொழி என தெரியவந்துள்ளது.

சமஸ்கிருதம் பண்டைய மொழி எனக் கூறப்படுகிறது. வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதவிப் பிரமாணம் செய்தபோது சமஸ்கிருதத்தில் அதை செய்தார். ஒரு குறிப்பிட்ட முன் னேறிய ஜாதி பிரிவின் வட்டத்தில் புழங்கும் மொழியாக உள்ள சமஸ் கிருதத்தை மத்திய அரசும், முடிந்த அளவுக்கு மேலே தூக்கிவிடும் வேலை களில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது. பள்ளி களில் சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக கற்றுத்தரும் வாய்ப்பு வழங்கப்பட் டுள்ளது.

ஆனால், 2011 ஆம் ஆண்டு எடுக் கப்பட்ட மக்கள் தொகை புள்ளி விவ ரப்படி, சமஸ்கிருதம் பேசுவோர் 24,821 மட்டுமே உள்ளனர். இவர்கள்தான் தங்கள் தாய் மொழி என சமஸ்கிருதத்தை குறிப்பிட்டுள்ளனர். (இந்த எண்ணிக் கைக்கூட அன்றாட பேச்சு வழக்கில் கிடையாது. கோவில்களில், சடங்கு களில், மத விடயங்களில் மட்டுமே குறிப்பிட்ட சிலரால் உச்சரிக்கப்படுகிறது).

மற்றும் டோக்ரி, சிர்சி, மகதி போன்ற சில ஆயிரம் நாடோடிமக்கள் பேசும் மொழியைவிடவும், சமஸ்கிருதம் பேசு வோர் எண்ணிக்கை மிகவும் குறைவே யாகும்.

-  விடுதலை நாளேடு, 5.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக