பக்கங்கள்

செவ்வாய், 3 ஜூலை, 2018

மலேசியா நாடாளுமன்றத்தில் 4 தமிழர்கள் உட்பட 5 இந்தியர்களுக்கு அமைச்சர் பதவி!!

வரலாற்றில் முதன்முறையாக

மலேசியா நாடாளுமன்றத்தில் 4 தமிழர்கள் உட்பட

5 இந்தியர்களுக்கு அமைச்சர் பதவி!!



மலேஷியா, ஜூன் 25  வரலாற்றில் முதன்முறையாக மலேசியா நாடாளுமன்றத்தில் 4 தமிழர்கள் உட்பட 5 இந்தியர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மலேசியா நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த மே மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்றது. இதில் மஹாதீர் முகமது தலைமையிலான பக்கட்டான் ஹரப்பன் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மலேசிய பிரதமராக மஹாதீர் முகமது 13 அமைச்சர்களுடன் ஆட்சி அமைத்தார்.ஆட்சிக்கு வந்தது முதலே பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற் கொண்டு வந்த அவர், தற்போது அமைச்சரவை விரிவாக்கத்திற்கு கூடுதலாக 15 பேரின் பெயர்களை வெளியிட்டுள்ளார். அதில் சீக்கியரான கோபிந்த் சிங் டியோ தொலை தொடர்பு அமைச் சராகவும், குலசேகரன் மனிதவளத்துறை அமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை தவிர சிவராசா ராசையாவுக்கு நீர் மற்றும் இயற்கை வளத்துறையும், வாய்தா மூர்த்திக்கு வெளியுறவுத் துறையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ராஜரத்தினம் என்ப வருக்கு, பிரதமர் அலுவலகத் துறையில் இந்திய விவகாரங்களை கவனிக்கும் அமைச்சரவை ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்தம் 28 பேர் கொண்ட அமைச்சரவையில், 4 தமிழர்கள் உள்பட ஐந்து இந்தியர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இது வரலாற்றில் முதன்முறையாகும்.

-  விடுதலை நாளேடு, 25.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக