சமஸ்கிருதம் எங்கே? இந்தி மொழி டில்லி, உ.பி., பீகார், அரி யானா, ராஜஸ்தான், சத்தீஷ்கர், ஜார்கண்ட், இமாச்சல்பிரதேஷ், உத்தராகண்ட், போன்ற மாநிலங்களில் பேசப்படுகிறது.
* அசாமி அசாம் மாநிலத்திலும், அதனை ஒட்டிய வடகிழக்கு மாநிலத்திலும் பேசப் படும் மொழி
* வங்க மொழி மேற்குவங்கம், மற்றும் அசாமில் பேசப்படும் மொழி,
* டோகிரி மற்றும் உருது ஜம்மூ-காஷ் மீரில் பேசப்படும் மொழி
* குஜராத்தி, குஜராத் மற்றும் வட மகாரஷ் டிராவில் சில இடங்களில் பேசப்படும் மொழி
* கன்னடம் கருநாடகம், மராட்டிய மாநி லத்தின் சிலபகுதிகளில் பேசப்படும் மொழி.
* கோங்கனி கோவா மாநிலத்தில் பேசப் படும் மொழி
* காஸி மேகாலயா மாநிலத்தில் பேசப் படும் மொழி
* மலையாளம் கேரளாவில் பேசப்படும் மொழி
* மராட்டிய மொழி மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பேசப்படும் மொழி
* மணிப்பூரி மணிப்பூர் மாநிலத்தில் பேசப்படும் மொழி
* மிசோ, மிசோராம் மாநிலத்தில் பேசப் படும் மொழி
* ஒரியா, ஒரிசா மாநிலத்தில் பேசப்படும் மொழி
* பஞ்சாபி மொழி, பஞ்சாப் மற்றும் அரியானாவில் பேசப்படும் மொழி
* தமிழ் மொழி தமிழ்நாடு, ஆந்திரா கேரளா மற்றும் கருநாடகா மாநிலங்களில் பேசப்படும் மொழி
* தெலுங்கு மொழி ஆந்திரா, தெலுங் கானா மற்றும் தமிழகத்தில் சில பகுதிகளில் பேசப்படும் மொழி
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வரையறுக்கப்பட்ட மக்கள் தொகையில் பேசும் மொழிகள் இங்கே எந்த இடத்திலும் சமஸ்கிருதம் இல்லை.
10 ஆண்டுகளுக்கான சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு என கோபாலகிருஷ்ணன் குழு கொடுத்துள்ள அறிக்கையின் ஒரு துளி
1. சமஸ்கிருத்தை பள்ளிகளில் கற்பிக்கும் போது ஆசிரியர் சமஸ்கிருத்திலேயே பேச வேண்டும். மாணவர்களுக்கு சமஸ்கிருதத் தில் பேசி அதற்கான விளக்கத்தை கொடுக்க வேண்டும்.
2. பள்ளிக்கூடத்தில் வகுப்பறை, ஆய்வு அரங்கம், விளையாட்டு மைதானம் போன்ற இடங்களிலும் சமஸ்கிருதம் பேசவேண்டும்
3. மாணவர்கள் பள்ளிகள் மட்டுமல்லாது வெளியிடங்களிலும் சமஸ்கிருதம் பேச வேண்டும்.
4. சமஸ்கிருதம் பேசுவதை கேலிசெய் தால் அதற்காக கோபப்படாமல் சமஸ்கி ருத்தை தொடர்ந்து பேசவேண்டும்
5. பொதுவிடங்களில் முக்கிய பொருள் குறித்து விவாதிக்கும் போது சமஸ்கிருதத்தி லேயே பேசவேண்டும்
6. சிறு சிறு குறிப்புகளை சமஸ்கிருதத்தில் எழுதப் பழகவேண்டும்.
7. பொதுவிடங்களில்(வங்கி, பேருந்து, பூங்கா) சமஸ்கிருதத்திலேயே உரையாடி அதற்கான விளக்கத்தை பிற மொழியில் கூறவேண்டும்.
8. எந்த ஒரு விண்ணப்பத்தையும் சமஸ் கிருதத்தில் தந்து அதற்கான விளக்கத்தை பொது மொழியில் தரவேண்டும்
- விடுதலை ஞாயிறு மலர், 11.8.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக